ஷன்வாஸ் கே பவாக்குட்டி 2016ல் ரிலீஸ் ஆன கிஸ்மத் எனும் படத்துக்காக கேரளா அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதைப்பெற்றவர் . 3 வருடங்கள் கழித்து இவ்ரது இரண்டாவது படமாக தொட்டப்பன் ரிலீஸ் ஆகி உள்ளது 2013ல் இவர் இயக்கிய பிளாக் போர்டு எனும் குறும்படம் பாலக்காடு ஃபிலிம் ஃபெஸ்டிவலில் விருது பெற்றது . 2014ல் இவர் இயக்கிய கிணறு எனும் குறும்படம் சிறந்த டாகுமெண்ட்ரி ஃபிலிம் அவார்டைப்பெற்றது
இவ்ர் ஒரு விருதுப்பட இயக்குநர். அதனால் இவரது படம் தரமாக இருக்கும், ஆனால் மெதுவாகத்தான் காட்சிகள் நகரும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி சின்னக்குழந்தையா இருக்கும்போது நாயகியோட அப்பாவும், அப்பாவின் நண்பரும் திருடர்களா இருக்காங்க. எங்கே போனாலும் ரெண்டு பேரும் சேர்ந்துதான் போவர்கள் , வருவார்கள் . ஒரு கட்டத்தில் ஒரு திருட்டுக்கான அசைன்மெண்ட்க்காக நாயகியின் அப்பா தனியா போகிறார். அதுக்குப்பின் அவரைப்பற்றிய த்கவல் இல்லை. அதனால சின்னக்குழந்தையான நாயகியை அப்பாவின் நண்பர் தான் தத்து எடுத்து வளர்க்கிறார்
வளர்ப்புத்தந்தை என்றாலும் இருவருக்குள் இருக்கும் அப்பா மகள் பாண்டிங் மிகவும் நெருக்கமாக உருக்கமாகவே இருக்கிறது. ஒரு நாள்: ஒரு கல்யாண விழாவுக்கு நாயகியும், வளர்ப்புத்தந்தையும் போகிறார்கள் . அங்கே ஒரு பெரிய மனிதரின் தங்க்ச்சங்கிலி திருடு போய் விடுகிறது. அந்த திருட்டை நிகழ்த்தியது நாயகியின் வளர்ப்புத்தந்தைதான் என குற்றம் சாட்டபப்டுகிறார், அவமானப்படுத்தப்படுகிறார்
ஆனால் நிஜக்குற்றவாளி வேறு ஒரு திருடன். அவன் தான் நாயகன். நாயகன் நாயகியை விரும்பினாலும் நாயகி பெரிதாக நாயகனைக்கண்டு கொள்ளவில்லை . நாள்டைவில் நாயகியின் வளர்ப்புத்தந்தைக்கு நெருக்கம் ஆகும் நாயகன் இருவரும் கூட்டுக்களவாணிகளாக திருடப்போகும் அளவுக்கு க்ளோஸ் ஆனதும் வீட்டுக்கு வர போக இருப்பதால் நாயகிக்குப்பழக்கம் ஆகி இருவரும் காதலிக்கிறார்கள்
ஒரு கட்டத்தில் வளர்ப்புத்தந்தை ஊரார் முன்னிலையில் தன் மகளை நாயகனுக்குத்தான் கட்டிக்கொடுப்பேன் என அறிவித்து விடுகிறார்
அந்த ஊரில் ஒரு பெட்டிக்கடை நடத்திப்பிழைத்து வருபவர் வயதான நபர் ., அவர் விழி ஒளி இழந்தவர் . அவர் தன் துணைக்காக இள வயதுப்பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அந்தப்பெண்ணுடன் நாயகனுக்கு ஒரு கள்ளத் தொடர்பு ஏற்படுகிறது . இந்த விஷயம் அந்த கணவருக்கும் , வளர்ப்புத்தந்தைக்கும் தெரிய வருகிறது . திருமணம் நிறுத்தப்படுகிறது
இந்த கள்ளக்காதல் விஷயம் நாயகிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நாயகன் வளர்ப்புத்தந்தையைக்கொலை செய்து விடுகிறான். இதற்குப்பின் கதையில் ஏற்படும் திரு[ப்பங்கள் தான் திரைக்கதை
நாயகனாக வில்லத்தனம் மிக்க ரோலில் கப்பீலா நாயகன் ரோஷன் மேத்யூ நடித்திருக்கிறார். வஞ்சகத்த்னம் மிக்க சிரிப்பு இவரது ஸ்பெஷல் பிராண்ட். புகுந்து விளையாடி இருக்கிறார்
நாயகியாக புதுமுகம் ப்ரியம்வதா கிருஷ்ணன் பாராட்டத்தக்க புது வரவு . காதல் காட்சிகள் ஆகட்டும், சின்னப்பையன் கூட சேர்ந்து பெட்டிக்கடையில் திருடும் குறும்புத்தனம் ஆகட்டும் துள்ளலான நடிப்பு , அப்பா எது சொன்னாலும் அதை வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் கேரக்டர் டிசைன் அருமை
நாயகன், நாயகி இருவரை விட அதிக காட்சிகள் வருவதும், அதிகம் ஸ்கோர் செய்வதும் வளர்ப்புத்தந்தை வினாயகன் தான். அசால்ட்டான நடிப்பு , நம்ம ஊர் குணச்சித்திர நடிகர் பசுபதி போல ஒரு மாறுபட்ட பாணியில் நடித்திருக்கிறார். படம் முழுக்க இவரது ராஜ்ஜியம் தான்
மனோஜ் கே ஜெயன் ஒரு மாறுபட்ட காமெடி ரோலில் அசத்தி இருக்கிறார்
140 நிமிடங்கள் ஓடும் அளவுக்கு பட்த்தை ட்ரிம் செய்து எடிட் பண்ணி இருப்பவர் ஜிதின் மனோஹர்
ஏரியல் வியூஷாட், நைட் எஃபக்ட் ஷாட்ஸ் என ஒளிப்பதிவில் புகுந்து விளையாடி இருப்பவர் சுரேஷ் ராஜன்
லீலா எல் க்ரீஷ் குட்டன், ஜஸ்டின் வர்கீஸ் இருவரும்தான் இசை ., இரண்டு பாடல்கள் நல்ல மெலோடி. பிஜிஎம் குட்
மெலோ டிராமாவாகப்போகும் கதை க்ரைம் த்ரில்லர் டோன் அப்க்கு மாறிய பின் படம் சூடு பிடிக்கிறது
சபாஷ் டைரக்டர் ( ஷன்வாஸ் கே பவாக்குட்டி )
1 விழி ஒளி இழந்தவர் பெட்டிக்க்டையில் இருக்கும்போது திருடர்கள் வந்தால் பூனை மியாவ் சத்தம் கொடுத்து காட்டிக்கொடுப்பது . அதற்கு கருவாட்டை லஞ்சமாகக்கொடுத்து நாயகி காரியம் சாதிப்பது குட் ஒன்
2 க்ரைம் த்ரில்லராக பின் பாதியில் மாறினாலும் படம் முழுக்க பேசுபொருளாக அமைந்தது நாயகி - வளர்ப்புத்தந்தை பாசப்பிணைப்புதான்
ரசித்த வசனங்கள்
1 தீராத நோய்க்கு சிகிச்சை எடுப்பதை விட மரணிப்பதே மெல்
2 உலகம் முழுக்க திருடர்கள் நிறைந்திருக்கிறார்கள், எப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகத்தெரியும்
3 பணக்காரன் திருடுனாலும் சமூகம் அவனை சந்தேகப்படாது , ஆனா ஒரு ஏழை திருடலைன்னாலும் அவனை சந்தேகப்படும்
4 சாகப்போறோம்கற பயம் , மட்டும் இல்லைன்னா நாம என்ன வேணா செய்ய முடியும்
5 காயத்துக்கு மருந்து போடுவதை நான் எதிர்க்கிறேன், ஃபீல் த பெயின்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் வளர்ப்புத்தந்தைக்கு நாயகன் பற்றிய உண்மை தெரிந்ததும் அதை ஏன் நாயகியிட,ம் சொல்லவில்லை ? அதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை ., அப்பா சொன்னா சரிதான் என மகள் நட்ந்து கொள்வதை உயர்வு நவிற்சியாகக்காட்டவே அது யூஸ் ஆகிறது
2 விழி ஒளி இழந்தவர் காலை முதல் மாலை வரை பெட்டிக்கடையில் தான் இருக்கிறார். நாயகனும் வெட்டாஃபீஸ் தான் ., வீட்டில் யாரும் இல்லாத காலை 10 டூ மாலை 7 வரை கள்ளக்காதல் நிகழ்த்த வாய்ப்பிருந்தும் நாயக்ன் ஏன் மடத்தனமாக நைட் 8 மணிக்கு வீட்டுக்குப்போய் மாட்டிக்கொள்ள வேண்டும் ?
3 வளர்ப்புத்தந்தை ஒரு திருடன். நாயகனைப்பற்றிய உண்மையை மகளிடம் கூறப்போவதாக நாயகனிடம் சொல்வது மடத்தனமானது . ஆல்ரெடி கூறி விட்டேன் என சொல்லி இருந்தால் உயிர் தப்பி இருப்பார்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- அப்படி ஏதும் இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத்தக்க கண்ணியமான படம் தான் நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது
ரேட்டிங் 2.5 / 5
Thottappan | |
---|---|
Directed by | Shanavas K Bavakutty |
Written by | P.S. Rafeeque Francis Noronha |
Produced by | Devadas Kadancheri Shailaja Manikandan |
Starring | |
Cinematography | Suresh Rajan |
Edited by | Jithin Manohar |
Music by | Leela L. Girish Kuttan Justin Varghese |
Release date |
|
Running time | 140 minutes |
Country | India |
Language | Malayalam |