Showing posts with label THEERPPU (2022)-தீர்ப்பு ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்). Show all posts
Showing posts with label THEERPPU (2022)-தீர்ப்பு ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்). Show all posts

Monday, October 03, 2022

THEERPPU (2022)-தீர்ப்பு ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)@ டிஸ்னி ஹாட் ஸ்டார் பிளஸ்


யூகிக்காத  மாறுபட்ட  க்ளைமாக்ஸ்  சீன்  உள்ள  படங்கள்  3  இருக்கு 1  1  சொல்வதெல்லாம்  உண்மை 1997
2  OLD BOY 2003
3  THE SECRET IN THEIR  EYES *2009). 



இதுல  சொல்வதெல்லாம்  உண்மை  இயக்குநர்  நேதாஜி  விஜய்காந்த்தை  வெச்சு  எடுத்த  படத்தில்  எதிர்பாராத  ட்விஸ்ட்  வரும். உண்மை  செய்திகளை மட்டுமே  வெளியிடும்  ஒரு  செய்தி  நிறுவனம்  ஒரு  முறை எதிரியின்  சதியால்  அந்த  பத்திரிக்கை  எடிட்டரின்  மரணச்செய்தியையே  தவறுதலாக  வெளியிட்டு விடும். ஆனால்  ஆண்டாண்டு  காலமாய்  தன்  பத்திரிக்கை  உண்மையான  செய்திகளை  மட்டுமே  வெளியிடும்  என்ற  நல்ல  பெயரைக்காப்பாற்ற  அந்த  பத்திரிக்கை  எடிட்டர்  நிஜமாவே  அந்த  செய்தியை  உண்மையாக்குவார். ரொம்ப  அதிர்ச்சியா  இருந்தது ., இந்தப்படத்தோட  விமர்சனத்துல  இதைப்பற்றி  சொல்லக்காரணம்  இருக்கு , படம்  பார்த்தா  தெரியும் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 சம்பவம் 1  = ஒரு  தம்பதி  பீச்  ஓரமா  நின்னு  பேசிக்கிட்டு  இருக்காங்க , பால்ய  கால  நண்பன்  வர்றான்  இங்கே , அவனுக்கு  உதவி  செய்யனும். பழசை  எல்லாம்  மறக்கக்கூடாது  ப்ளா ப்ளா  அப்டினு  புருசன்  சொல்றான், அதுக்கு  சம்சாரம்  நக்கலா  இந்த  மூஞ்சியைப்பார்த்தா  நண்பனுக்கு  உதவி  பண்றவன்  மாதிரி  தெரியலையே , உண்மையைச்சொல்லுங்க,  உங்க  நண்பர்  கூட  யார்  வர்றாங்க ? என  கேட்க  அவன்  பம்மறான், பதிலே  சொல்லலை 

 சம்பவம் 2  - வேற  ஒரு  தம்பதி  கார்ல  வந்துக்கிட்டு  இருக்காங்க , அப்போ  ஒரு  ஆள்  குறுக்கிடறார். தம்பி , என்னை  யார்னு  தெரியுதா?னு  கேட்க  புருசன்  பம்மறான். அவன்  அதீத  உரிமை  எடுத்துக்கிட்டு  என்னென்னமோ  பேசிக்கிட்டு  இருக்கான், சம்சாரத்துக்கு  புது  ஆள்  சகவாசம்  பிடிக்கலை , ஏங்க  காரை  எடுங்க  போலாம்கறா.  கிளம்பும்போது  புருசன்  சம்சாரம்  கிட்டே  சொல்றான்.. இப்போ  இவனைப்பார்த்தமே, அந்த  விஷயத்தை  இப்போ  நாம  யாரைப்பார்க்கப்போய்க்கிட்டு  இருக்கமோ  அவன்  கிட்டே  சொல்லாத, ஏன்? எதுக்கு  என்ன  விபரம்னு  எதுவும்  என்னைக்கேட்காத  அப்டீங்கறான்

சம்பவம்  3  -  சம்பவம் 2ல்  வந்த  ஜோடி  சம்பவம்  1ல்  வந்த  ஜோடியை  சந்திக்கறாங்க  அவங்க  பங்களாவில். அது  ஒரு  அபூர்வமான  கலெக்சன்  கொண்ட  மியூசியம். பழங்கால    பொருட்கள்  , விஐபிகள்  யூஸ்  பண்ணுன  பல  அபூர்வ  பொருட்களின்  கலெக்சன்  இருக்கு. இந்த  2  செட்  ஜோடிகளும்  ஒரு  பிஸ்னெஸ்  டீல்  பேசுதுங்க .


சம்பவம் 4  - சம்பவம் 1ல்  பேசிய  ஜோடியில்  உள்ள  புருசன்  காரன்  சம்பவம் 2ல்  உள்ள  ஜோடியில்  உள்ள  சம்சாரத்தை  ஆல்ரெடி  10  வருசம்  முன்னே  பழக்கம்  , சேட்டிங்  எல்லாம்  நடந்திருக்கு , இப்போதான்  முதல்  முறையா  நேரில்  சந்திக்கறாங்க . இவங்க  ரெண்டு  பேருக்கும்  ஒரு  இல்லீகல்  காண்டாக்ட்  உருவாகப்போகுதுனு  அவங்கவங்க  துணைக்கு  தெரிஞ்சிடுது 

சம்பவம் 5    சம்பவம்2ல்  ஒரு  ஜோடி  கிட்டே  ஒரு  ஆள்  தகறாரு  செஞ்சாரே  அவரு  இப்போ  இந்த  பில்டிங்க்  உள்ளே  நுழையறாரு .  அவரு  வந்ததும்  இந்த  2  ஜோடிகளும்  பம்மறாங்க  . அவரு  எல்லாரையும் மிரட்டிட்டு  இருக்காரு . அப்போ  யாருமே  எதிர்பாராத  சம்பவம்  ஒண்ணு  நடந்துடுது 

  மேலே  சொன்ன  அஞ்சு  சம்பவங்கள்  போக  ஆறாவதா  ஒரு  சம்பவம்  ஃபிளாஸ்பேக்ல  நடந்திருக்கு , அதைச்சொன்னா  சுவராஸ்யம்  போய்டும்  .  மேலே  சொன்ன  அஞ்சு  சம்பவங்கள்  ,  வேணும்னே  சொல்லாம  விட்ட  ஆறாவது  சம்பவம்  இவை  எல்லாவற்றையும் இணைக்கும்  கோடுதான்  திரைக்கதை 

 
சம்பவம் 2ல்  தகறாரு  செய்யும்  ஆசாமி  தான்  ஹீரோ  பிருத்விராஜ். இவர்  நடிச்ச  எல்லாப்படங்களும்  மாறுபட்ட  கதை  அம்சம்  உள்ள  ப்டங்களே. 90%  படங்கள்  ஹிட்  தான் . இதில்  ஒரு  ஹீரோவுக்கு  உண்டான  போர்சன்  இல்லை  இவருக்கு , ரொம்ப  கம்மியான  ஸ்பேஸ்  தான், கிட்டத்தட்ட  ரெண்ட்ரை  மணி  நேரப்படத்தில்  இவர்  வருவது  முக்கால்  மணி  நேரம்தான்

 ஆனா  நடிப்பு  அடிபொலி  .ஆரம்பத்தில்  அவர்  வில்லன்  மாதிரி  தெரியும்   ஆனா  போகப்போக  அவர்  தான்  ஹீரோ  என  உணர்வோம் ,ஆனாலும்  அவரது  ரசிகர்களுக்கு  கொஞ்சம்  ஏமாற்றமாகத்தான்  இருக்கும் 

சம்பவம் 1ல்  வரும்  ஜோடியாக   விஜய்  பாபு  அண்ட்   இஷா  தல்வார் . கிட்டத்தட்ட  படத்தில்  ஒரு  ஹீரோவுக்கு  உண்டான  அதிக  போர்சன்  விஜய்  பாபுக்குத்தான், ஆனா  இவர்  ஆன்ட்டி  ஹீரோ  கம்  ”ஆண்ட்டி ” ஹீரோவும்  கூட . படம்  பூரா  முகத்தைக்கடு  கடு  என்றே  வைத்திருக்க  வேண்டிய  சூழல் 

 

 சம்பவம்  2  ல்  வரும்  ஜோடியாக  சைஜூ  க்ரூப்  அண்ட்   ஹன்னா  ரெஜி இருவருக்குமே  நடிக்க  நல்ல  வாய்ப்பு   குறிப்பா  ஹன்னா ரெஜியின்  ஆஜானுபாவகமான  உருவம்   அலை  பாயும்  கூந்தல்  கணவன்  அருகில்  இருக்கும்போதே  இன்னொருவருடன்  நெருங்கிப்பழகும்  தெனாவெட்டு  நடிப்பு   பயங்கரம் 


ஒரு  கொலை  நடந்த  பிறகு  அங்கே  ஆஜர்  ஆகும்   போலீஸ்  ஆஃபீசர்  கம் ஆண்ட்டி  ஹீரோவின்  பிஸ்னெஸ்  பார்ட்னராக   இந்திரஜித்  சுகுமாரன்  கனகச்சிதமான  நடிப்பு . இவர்  பெரும்பாலும்  போலீஸ்  ஆஃபீசராகவே  ரோல்ஸ்  பண்றார்  அப்ளாஸ்  அள்றார்


மேலே  சொன்ன   2  செட்  ஜோடி ,  பிருத்விராஜ் , இந்திரஜித்  ஆக  மொத்தம்  ஆறு  பேர்  தான்  அதிக  பட்ச    மெயின் கேரக்டர்கள்.  கதையின் 80%  காட்சிகள்  ஒரே  ஒரு  மாளிகையில் 


படத்தில்  குறிப்பிட்டுச்சொல்ல  வேண்டிய  முக்கியமான  விஷயம்  ஆர்ட்  டைரக்சன் . அந்த  மியூசியம்  லைட்டிங்  , செட்டிங்க்ஸ்  எல்லாம்  பிரமாதம் .  படத்தைப்பார்க்க  விருப்பம்  இல்லாதவர்கள்  கூட  அந்த  ஆர்ட் டைரக்சன்  செட்டை  மியூசியத்தை  ரசிச்சுட்டுப்போயே  ஆகனும், பிரமாதமான  ஒர்க் 




 சபாஷ்  டைரக்டர் 

1   பொதுவாக  மலையாளப்படங்களில்  படம்  போட்டு  முதல்  40  நிமிடங்கள்  மெயின்  கதைக்கு  வர  மாட்டாங்க ,  பஸ்  ஏறுவாங்க  , மீன்  வாங்குவாங்க, கட்டஞ்சாயா  குடிப்பாங்க . 41  வது  நிமிசம்தான்  கதை  சொல்ல  ஆரம்பிப்பாங்க , இதில்  முதல்  சீன்லயே  கதைக்கு  நேரடியா  வந்துட்டாங்க 

2    இயக்குநர்  ஷங்கர்  தன்  படங்களில்  ஃபிளாஸ்பேக்  சீன்  ரொம்ப  அழுத்தமா  வைப்பார் ,  குறிப்பா  இந்தியன்  , ஜெண்டில்மேன்  படங்களில்  மனதை  உருக்குவதாக  இருக்கும்  படத்தின்  வெற்றிக்கு  அது  முக்கியக்காரணி  ஆகும், அது  போல  இதிலும்  ஒரு  ஃபிளாஸ்பேக்  சீன்  உண்டு   ஆனா  ஒரே  சிட்டிங்கில்  அதை  சொல்லாமல்  நான்  லீனியர்  கட்டில்  படம்   பூரா  பொடிமாஸ்  மாதிரி  ஆங்காங்கே   தூவி  விட்டிருக்காங்க 


3  கதை  ஓட்டத்தில்  ஏதோ  கள்ளக்காதல்  சம்பவம்  அரங்கேறப்போகுது  என்பது  மாதிரி  லீட்  குடுத்துட்டு  திடீர்னு  கொலை  நடப்பதாக  காட்டுவது  அதை  மறைக்கப்போடும்  திட்டங்கள்  என  கதையே  ஒரு  யூ  டர்ன்  அடிக்குது 


4   படத்தின்  கதை  த்ரில்லர்  ஸ்டோரி  , ஆனா   பல  அரசியல்  சட்டையர்  வசனங்கள் , சமூக  அவலங்களை சாடும்  காட்சிகள்  உண்டு , பல  ரசிக்க  வைத்தன



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  பொதுவாக  மேரேஜ்  ஆன  ஆண்  தன்னை  விட  வசதியான  குறிப்பா  பல  மடங்கு  மேல்  தட்டு  ஆளை  சந்திக்க  தன்  மனைவியை  அழைத்துச்செல்ல  மாட்டான், அவனுக்கு  இருக்கும்  தாழ்வு  மனப்பான்மை  ஒரு  முக்கியக்காரணம், ஆனா  இதில்  அப்படி  நடக்கல 


2 திருமணம்  ஆன  ஒரு  பெண்  வேறொரு  ஆணிடம்  சேட்  பண்ணுவது  ஓக்கே   அவன்  கூட  மீட்டப்   வைக்கனும்னா  தனியா  அதை  பண்ணி  இருக்கலாம்,  புருசன்  கூடவே  வந்து  மீட்  பண்ணுவது  என்ன  வகை  துணிச்சல் ? 


3   கொலை  நடந்ததை  மறைக்க  போலீஸ்  ஆஃபீசரும், நண்பனும்  பேரம் பேசுவதும்  ஒரு  குறிப்பிட்ட  தொகை  கேட்பதும்  ஓக்கே , ஆனா  எந்த  பின்  புலமும்  இல்லாத  வீட்டு  வேலைக்காரன்  மாசா  மாசம்  50,000  ரூபாய்  தரனும்   என  மிரட்டுவது  என்ன  தைரியத்தில்? அதே  மாதிரி  தன்னையும்  போட்டுத்தள்ளிட்டா?  என  பயம்  இருக்காதா>?  அது  போக  பிளாக்  மெயில்  பண்ணும்போது  ஒரே  செட்டில்மெண்ட்டாதான்  பணம்  கேட்பாங்க . . தவணை  முறைல  கேட்கறாரே?  வசந்த்  அண்ட்  கோ  ஓனர்  ஃபிரண்டா? 


4   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  ஒரு  சர்ச்சைக்குரிய  விஷயம்  ,  கான்  கேர்ள்  படத்தில்  வருவது  போல  ஒரு  கொலை யில்  மாட்டி  வைக்க  ஐடியா  பண்ணாம  இப்படி  செய்வது  நம்பும்படி  இல்லை 



  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  இது  ஸ்லோவாகச்செல்லும்  த்ரில்லர்  மூவி . ஃபிளாஸ்பேக்  காட்சிகள்  அரை  மணி  நேரம்  கொஞ்சம்  ஜவ்வு  இழுப்பு  இழுக்கும். இதை  எல்லாம்  பல்லைக்கடிச்ட்டு  பொறுத்துக்கிட்டா  மாறுபட்ட  த்ரில்லர்  மூவி  கண்ட  திருப்தி  இருக்கும் . ரேட்டிங்  2.5 / 5 
Theerppu
Theerppu.jpg
Official Release Poster
Directed byRathish Ambat
Written byMurali Gopy
Produced byVijay Babu
Rathish Ambat
Murali Gopy
Starring
CinematographySunil K. S.
Edited byDeepu S. Joseph
Music bySongs:
Murali Gopy
Score:
Gopi Sunder
Production
companies
Friday Film House
Celluloid Maarg
Distributed byFriday Film House
Release date
  • 25 August 2022
CountryIndia
LanguageMalayalam