ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு நர்ஸ் . ஒரு கிராமத்தில் ஒரு 11 வயது ஆன சிறுமியைக்கண்காணிக்கும் பொறுப்பு அவருக்கு அளிக்கப்படுகிறது . நீண்ட தொலைவு பிரயாணம் செய்து குறிப்பிட்ட இடத்துக்கு நாயகி வந்து சேர்கிறார். தனது 11 வது வயது பிறந்த நாளில் இருந்து அந்த சிறுமி எதுவும் சாப்பிடுவதில்லை , ஆனால் சாப்பிடாவிட்டாலும் அவரது உடல் நலனில் எந்த பாதிப்பும் இல்லை ., இந்த செய்தி ஊர் உலகம் எல்லாம் பரவி அவர் ஒரு அதிசயமாகப்பார்க்கப்பட்டு தினசரி பலர் வந்து அவரைக்கண்டு செல்கின்றனர்
நம்ம ஊர்ல எல்லாம் நாட்டாமை இருப்பது போல அந்த ஊரில் ஊர்ப்பெரிய மனிதர்கள் அடங்கிய ஒரு கமிட்டி இருக்கிறது , அந்த கமிட்டி நாயகியிடம் சொல்வது என்ன வெனில் இரு வாரங்கள் நர்ஸ் ஆகிய நீங்களும் , இன்னொரு நபரும் ( கன்யாஸ்த்ரீ) அந்த சிறுமியைக்கண்காணிக்க வேண்டும் . அவள் நிஜமாகவே சாப்பிடாமல்தான் இருக்கிறாளா? அல்லது ரகசியமாக ஏதாவது சாப்பிடுகிறாளா?? என்பதை செக் பண்ண வேண்டும், அதே சமயம் அவளது உடல் நலனையும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
நாயகி பலரையும் விசாரித்து சில உண்மைகளைக்கண்டு பிடிக்கிறாள் . சிறுமியை செக் செய்ததில் அவருக்கு ஒரு ஆச்சரிய உண்மை தெரிகிறது . 4 மாதங்கள் சாப்பிடாமல் இருந்ததால் சிறுமிக்கு எந்த வித உடல் நலக்குறைவோ , பலவீனமோ ஏற்படவில்லை , இதற்கு சாத்தியமே இல்லை , ஏதோ மர்மம் இருக்கிறது இந்த விஷயத்தில் என நினைக்கிறார்
அந்த சிறுமியின் பெற்றோர் உட்பட ஊர் மக்கள் யாருக்கும் அந்த சிறுமியின் உடல் நலனில் அக்கறை இல்லை , அவர்கள் எண்ணமெல்லாம் சாப்பிடாமலேயே உயிர் வாழ முடியும் என அறிந்தால் நாமும் அதை ஃபாலோ பண்ணலாமே> என அந்த சிறுமியை ஒல்ரு ஆராய்ச்சிப்பொருளாகத்தான் பார்க்கின்றனர்
இதற்குப்பின் நாயகி அனைத்து மர்மங்களையும் கண்டு பிடித்து அந்த சிறுமியைக்காப்பாற்றுவது எப்படி என்பது தான் மீதி திரைக்கதை
நாயகி நர்ஸ் ஆக ஃப்ளாரன்ஸ் பஃப் பிரமாதமான நடிப்பு ,. சிறந்த நடிகைக்கான விருது வாங்கிய படம் வேற . இவரது காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கண்ணுக்கு நிறைவு , அந்தக்காலகட்டத்தில் நிகழும் கதை என்பதால் முழுக்கை சட்டை , கழுத்து வரை கவர் பண்ணும் ஜாக்கெட் என மிக கண்ணியமான ஆடை வடிவமைப்பு பெரிய பிளஸ்
சிறுமியாக கிலா லார்டு மிரட்டலான நடிப்பு . பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆக்ட்ரஸ்க்கான விருதை நூல் இழையில் தவற விட்டு விட்டார், ஆனாலும், அற்புதமான பங்களிப்பு , தனது 9 வது வயதில் நிகழ்ந்த ஒரு ரகசியத்தைக்கூறும் இடத்தில் அவரது முக பாவனைகள் அபாரம்
படத்தின் பெரிய பலமே பிரமாதமான ஒளிப்பதிவும் , திகில் ஊட்டும் மர்மமான பின்னணி இசையும் தான், மிக உயிர்ர்புடன் படத்தை தாங்கி நிற்கின்றன, ஆர்ட் டைரக்சனும் அருமை
ஏ சர்ட்டிஃபிகேட் படம் என்றாலும் குடும்பத்துடன் காணத்தக்க ஒரு கண்ணியமான படம் தான் , இது ஸ்லோபர்ன் சைக்கலாஜிக்கல் டிராமா ஃபிலிம் என்பதால் மிக மெதுவாகத்தான் காட்சிகள் நகரும்
நெட் ஃபிளிக்சில்ல் காணக்கிடைக்கிறது. ரேட்டிங் 2.75 / 5
ரசித்த வசனங்கள்
1 எல்லோருக்குள்ளேயும் சில கதைகள் இருக்கின்றன, அந்தக்கதைகள்தான் அவர்களைப்பற்றி நம்மைப்பேச வைக்கின்றன
2 எங்க ஊர்ல எல்லாம் குழந்தைகள் சாப்பிட அடம் பிடிச்சா அவங்களை வலுக்கட்டாயமா சாப்பிட வெச்சுடுவோம், உங்களை மாதிரி நாலுமாசம் வேடிக்கை பார்த்துட்டு இருக்க மாட்டோம்
The Wonder | |
---|---|
Directed by | Sebastián Lelio |
Screenplay by |
|
Based on | The Wonder by Emma Donoghue |
Produced by |
|
Starring | |
Narrated by | Niamh Algar |
Cinematography | Ari Wegner |
Edited by | Kristina Hetherington |
Music by | Matthew Herbert |
Production companies |
|
Distributed by | Netflix[1] |
Release dates |
|
Running time | 103 minutes[2] |
Countries |
|
Language | English |