இஸ்தான்ஃபுல்லில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாககொண்டு எழுதப்பட்ட திரைக்கதை இது . 3 பாகங்களாக எடுக்க திட்டம் இடப்பட்டிருக்கிறது , இப்போது ரிலீஸ் ஆகி இருக்கும் முதல் பாகத்தில் மொத்தம் 7 எபிசோடுகள் . ஒவ்வொரு எபிசோடும் 45 நிமிடங்கள் , ஆக மொத்தம் ஐந்தே கால் மணி நேரம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் பிரபலமான டெய்லர் . ஈரோட்டில் எப்படி எலிகெண்ட் டெய்லர் 1990 களில் செம ஃபேமஸோ அது போல . டெய்லர் என்றால் கோடீஸ்வரர் ரேஞ்சில் வாழ்பவர். மெஷர்மெண்ட் டேப் வைத்து அளக்க வேண்டியதில்லை , சும்மா கண்ணு பார்த்தா கை அளவுகளைக்குறிக்கும் அளவு செம டேலண்ட் . நாயகனின் அப்பா ஸ்வாதி முத்யம் ( சிப்பிக்குள் முத்து ) கமல் போல மன வளர்ச்சி குன்றியவர். தாரே ஜமீன் பர் ஹிந்திப் பட நாயகனின் மகன் போல குறைபாடு உள்ளவர் . அவரைப்பார்த்துக்கொள்ள பணி ஆள் நியமிக்க இருக்கிறார் நாயகன்
வில்லன் பெரிய தொழில் அதிபர் , நாயகனின் பால்ய கால நண்பன். இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது , மணப்பெண் அழகி , ஆனால் ஏழை . வில்லனின் சைக்கோத்தனம் நாயகிக்குப்பிடிக்கவில்லை . திருமணத்தில் விருப்பம் இல்லை
மணப்பெண்ணான நாயகிக்கு மணப்பெண் அலங்கார உடை ரெடி செய்ய நாயகன் வரவழைக்கப்படுகிறார். வில்லனின் குடும்ப வழக்கப்படி மணப்பெண்ணின் முகத்தை அந்நிய ஆண்கள் திருமண நாள் வரை பார்க்கக்கூடாது என்பதால் மகாபாரதத்தில் வரும் காந்தாரி போல விழிகளை கறுபுத்துணியால் கட்டிக்கொண்டு நாயகியைத்தொட்டுப்பார்த்தே நாயகன் அளவு எடுத்து ஆடையை வடிவமைக்கிறான். நாயகன் நாயகியை நேரில் பார்த்ததில்லை , ஆனால் நாயகிக்கு நாயகன் முகம் தெரியும் \
வில்லனின் பிடியில் இருந்து தப்பி நாயகி நாயகனின் இருப்பிடத்துக்கு வருகிறாள். நாயகனின் அப்பாவை கவனித்துக்கொள்ளும் நர்ஸ் வேலைக்கு வந்திருக்கிறாள். தேர்வாகியும் விடுகிறாள்
அங்கே நாயகியைக்காணாமல் வில்லனின் வீடு அலோலகல்லோலப்படுகிறது . நாயகியைத்தேடி ஆட்கள் கிளம்புகின்றனர் . வில்லனின் மணப்பெண் தான் நம்மிடம் இருக்கும் நர்ஸ் என்பது நாயகனுக்குத்தெரியாது . நாம் ஊரெல்லாம் தேடும் வருங்கால மனைவி நெருங்கிய நண்பன் வீட்டில் தான் இருக்கிறாள் என்பது வில்லனுக்குத்தெரியாது
இதற்குப்பின் நிகழும் சுவராஸ்யமான சம்பவங்களே திரைக்கதை
நாயகன் ஆக ககாலே உலுசே ஆத்மார்த்தமான அடக்கமான நடிப்பு , அவரது ஆடை வடிவமைப்பு அசத்துகிறது , பெண்கள் புடை சூழ தொழில் நடந்தாலும் கண்ணியம் காட்டும் லாவகம் அழகு .நண்பனுக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு , நாயகியை வில்லனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் எனற துடிப்பு அனைத்தும் அருமை
நாயகியாக சிஃபானர் கல் குழந்தைத்தனமான முகம் , இளவரசிக்கு உண்டான கம்பீரம் எல்லாம் கலந்த சுவராஸ்யக்கலவை . நாயகனின் அப்பாவை கவனித்துக்கொள்ளும் இடங்கள் எல்லாம் தாய்மையின் பிரதிபலிப்பு , நாயகனுடன் கொள்ளும் காதலில் நாசூக்கு எல்லாம் கவிதை
வில்லனாக சாலி பேடம்கி. லூஸ்தனமான கேரக்டர் , இவரது கேரக்டர் டிசைன் சரி இல்லாததால் இவர் மேல் நாயகிக்கு மட்டும் தான் பயம், வேறு யாருக்கும் பயம் இல்லை . படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் பயம் இல்லை . அதுதான் கேரக்டர் ஸ்கெட்ச்சில் ஒரு சறுக்கல்
நாயகனின் அப்பாவாக ஆல்கன் சிம்சேக் நல்ல நடிப்பு , குழந்தையாக வாழ்ந்திருக்கிறார்
ஓப்பனிங் சீனில் வரும் ஃபேஷன் ஷோ ஏற்பாடுகளில் ஆர்ட் டைரக்சன் , ஒளிப்பதிவு இரண்டும் அள்ளுகிறது
இயக்கம் செம் கார்கி . 2மணி நேரத்தில் சொல்லி விடக்கூடிய கதையை ஜவ் மிட்டாய் மாதிரி இழ்த்து விட்டார்
நாயகன் - நாயகி முத்தக்காட்சிகள் இரு இடங்களில் உண்டு , அவர்களுக்கிடையே அடல்ட் கண்ட்டெண்ட் எதுவும் இல்லை , டீசண்ட் வாட்ச்தான்
சபாஷ் டைரக்டர்
1 நாயகியின் பிரேஸ்லெட் விழுவதில் மாட்டிக்கொள்வதில் சிண்ட்ரெல்லா ரெஃப்ரென்ஸ் இருந்தாலும் ரசிக்கத்தக்க காட்சி
2 நாயகன் கண்கள் கட்டப்பட்டு இருக்கு ,, நாயகிக்கு நாயகன் தெரியும், நாயகனுக்கு நாயகி முகம் தெரியாது . இது இலக்கியத்தில் பிரபலமான கேரக்டரை நினைவு படுத்தினாலும் சுவரா0்ஸ்யமான திருப்பம்
3 க்ளைமாக்சில் நாயகன் - வில்லன் சோலோ ஃபைட் வைக்க வாய்ப்பிருந்தும் அதைத்தவிர்த்து நாயகனை அகிம்சை வழியில் நடத்தியது
4 நாயகனின் அப்பா - நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகள் கவிதை
ரசித்த வசனங்கள்
1 பெற்றோருக்கு தர்மசங்கடத்தைக்கொடுக்கும் எந்தக்குழந்தையையும் யாரும் விரும்ப மாட்டாங்க
2 குதிரைகள் அழகானவை , ஆனால் அவை அடுத்து என்ன செய்யும்னு யாராலும் யூகிக்க முடியாது
யூ ஆர் ராங். குதிரைகள் ஏன் அழகானவைன்னா அவை அடுத்து என்ன செய்யும்னு யாராலும் யூகிக்க முடியாது என்பதால் தான்
பெண்களும் அப்படித்தான்
3 விசித்திரமான ஒன்றை அணுக அலாதியான அமைதி தேவை
4 எப்போதும் நல்லதையே செய்யனும்க்றீங்க , ஆனா எது நல்லது ? எது கெட்டது?னு எப்படி கண்டுபிடிக்கறது?
உன் மனசைக்கேள் . அது சொல்லும்
5 ஒரு நேர்மையான மனிதன் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்ல மாட்டான்
6 எல்லார் உடைய வாழ்க்கைலயும் நல்லது நடக்கும், ஆனா அதுக்காக நாம் காத்திருக்கனும்
7 பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பது ஒரு வித மூஅ நம்பிக்கையே
8 எதிர்பாராத தருணங்களில் வாழ்க்கை நமக்கு சில ஆச்சரியங்களைக்கொடுக்கும்
9 ஒரு அழகான பெண்ணின் அருகில் இருக்கும் ஆணால் அவள் கண்களைப்பார்த்துகொண்டு சும்மா இருக்க முடியுமா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் அப்பா மேலே மாடியில் இருக்கிறார், வில்லன் ஆன மாப்பிள்ளை கீழே இருக்கிறார், நாயகியிடம் இருந்து ஃபோன் வருது , வில்லனுக்குத்தெரியாமல் பேசனும்னா மடச்சாம்பிராணி கூட மேலே இருந்து கீழே வந்து பேச மாட்டான், ஆனா இவரு பேசி மாட்றாரு
2 நாயகியை அந்நிய ஆண்கள் பார்க்கக்குடாதுன்னா நாயகியின் அளவு மாதிரி உடையைத்தந்து அதில் இருந்து ஆடை வடிவமைக்கலாமே? இப்படியா மணப்பெண்னை தடவ விடுவார்கள்?
3 இவ்வளவு மஞ்சள் மாக்கான் வில்லனை சமீபத்தில் பார்த்ததில்லை
4 நாயகன் - நாயகி - வில்லன் இந்த முக்கோண மோதலை மட்டும் சொன்னால் 2 மணி நேரத்தில் முடிக்கலாம், ஏகபட்ட ஃபிளாஸ்பேக் சீன்கள் வைத்து இழுத்து விட்டார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - நாயகன் - நாயகி க்குக்கூட அடல்ட் கண்ட்டெண்ட் காட்சிகள் இல்லை , ஆனால் நெட் ஃபிளிக்ஸ் தயாரிப்பு என்பதால் கம்பெனியின் கவுரவத்தை காப்பாற்ற, கட்டிக்காக்க ஓப்பனிங் சீனில் கதைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஓப்பனிங் சீன் இருக்கிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரொமாண்டிக் த்ரில்லர் பார்க்க விரும்பும் ரசிகர்கள் , நாயகியின் அழகைக்காண விரும்பும் ரசிகர்கள் பார்க்கலாம் ,. ரேட்டிங் 2.5 / 5
The Tailor | |
---|---|
Also known as | Terzi |
Genre | |
Written by |
|
Directed by | Cem Karci |
Starring | |
Music by | Fırat Yükselir |
Country of origin | Turkey |
Original language | Turkish |
No. of seasons | 3 (planned) |
No. of episodes | 7[2] |
Production | |
Producer | Onur Guvenatam |
Production company | OGM Pictures |
Release | |
Original network | Netflix |
Original release | 2 May 2023 |