Showing posts with label THE SUNDAY INDIAN. Show all posts
Showing posts with label THE SUNDAY INDIAN. Show all posts

Saturday, November 03, 2012

இந்தியாவின் கல்வியை மாற்றக்கூடிய 11 விஷயங்கள்


இந்தியாவின் கல்வியை மாற்றக்கூடிய பதினோரு விஷயங்கள்


அரிந்தம் சவுத்ரி, பிரதம ஆசிரியர் |
இந்தியாவின்  எதிர்காலம் இந்நாட்டின் கல்வியின் எதிர் காலத்தைப் பொருத்து அமையும்  என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன். நமது இந்திய இளைஞர்களின் தொகை குறித்துப் பெருமைப்படுகிறோம். ஆனால் நமது கல்வி அமைப்பால் இந்தப் பெருமை கானல்நீராகவே தொடரும். நீதித்துறையில் தாமதங்களைக் களைவது, சுகாதாரத்தில் அதிகபட்ச முதலீடு ஆகியவற்றோடு கல்வியிலும் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியம். அதுதான் நமது இளைஞர்கள் தொகையிலிருந்து நல்ல பலன்களை அடைவதற்கு வழிவகுக்கும். நம்மிடம் போதுமான அவகாசம்கூட இல்லை.



60 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி அடிப்படை உரிமை என இந்தியா உணர்ந்து அறிவித்திருக்கிறது. இது ஒன்று மட்டுமே நமது கல்வி அமைப்பை மாற்றிவிடும் என்று நம்பவில்லை. ஆனால் கல்விச் சீர்திருத்தங்களில் இது முக்கிய படிக்கல்லாக இருக்கும். 2001&ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திலிருந்து 14  வயதுக்குக் கீழ் உள்ள எல்லா இந்திய குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வியைப் பெறவேண்டும் என்ற நிலை படிப்படியாக உருவாகியுள்ளது.



 சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளிலும் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கவேண்டும் என்றும் சட்டம் உருவாகியுள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பள்ளிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர் களையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்றுகூட நடுநிலைப் பள்ளி அளவில் மூன்று லட்சம் வகுப்பறை களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. உயர்நிலைப் பள்ளி அளவில் 1.7 லட்சம் வகுப்பறைகள் தேவை. இந்தியாவில் உள்ள பாதி பள்ளிகளில் அடிப்படைக் குடிநீர், சுகாதார வசதிகள் கிடையாது. ஒரு குழந்தை அடிப்படைக் கல்வி முடித்து மேல்நிலைக் கல்விக்குச் செல் வதற்கு இந்த வசதிகள் மிகவும் அவசியம்.



நான் மேற்சொன்ன நடவடிக்கைகள் அனைத்தும் பகுதி அளவு பலன்களையே தரும். சமூகத்தின் ஒரு வகுப்பினருக்கே பயன்படும். இதை சரிசெய்ய கல்வியில் நிலவும் பாலின பாகுபாட்டை சரிசெய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்வியில் பிரம்மாண்டமான முதலீட்டைச் செய்ய வேண்டியது  இரண்டாவது முக்கிய படிக்கல்லாகும்.  உலகளாவிய அளவில் பெண்கள் கல்வி பெறும்போது சமூகப் பொருளாதார வசதிகளை அடையும்போது சமூகத்தில் தீமைகள் குறைகின்றன. நாடுகள் வளம்பெறுகின்றன. மனித வளர்ச்சிக் குறியீட்டில் கேரள மாநிலம் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அங்குள்ள பெண்கள் அதிக கல்வி அறிவைப் பெற்றிருப்பதே.



ஆசிரியர்கள் பற்றாக்குறை முழுமையாக கல்வி அமைப்பை சீர்குலைப்பதாக உள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற தொழில்முறை பயிலகங்கள் மட்டுமின்றி, உயர்கல்வி அமைப்பில்கூட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களுக்கு போதுமான கல்வியைக் கொடுப்பதுதான் மூன்றாவது பெரிய சீர்திருத்த படிக்கல்லாக இருக்கும். இந்தியாவில் ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளது. நமது கல்வி அமைப்பில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதையே கிளிப்பிள்ளை களைப்போல சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பாடத் திட்டங்கள் முழுவதும் காலத்துக்கு ஒவ்வாதவை. நவீன மாற்றங்கள் மற்றும் போக்குகளைக் கற்பிக்கும் முறைகளில் தொடர்ந்து அனுசரிக்க வேண்டும். இதன் மூலம்தான் வேலைத்திறன் உள்ள பட்டதாரிகளை நம்மால் உருவாக்க முடியும்.



ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பணித்திறனை மதிப்பிட அரசு வெளிப்படையான நேர்மையான முறை ஒன்றை அமல்செய்யவேண்டும். தற்போது தரம் இல்லாத சோம்பேறி ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதற்குமான வேலை உத்தரவாதத்தைப் பெற்று ஆண்டுதோறும் சம்பள உயர்வையும் பெற்று நிம்மதியாக இருக்கின்றனர். இந்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பேராசிரியருக்கு எந்த நிலையிலும் தனது வேலை பறிபோகாது என்று தெரியும். இச்சூழ்நிலையில் நேர்மையாக, கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள்தான் பலியாகின்றனர். அவர்கள் சோம்பேறி ஆசிரியர்களின் உழைப்பையும் சேர்த்து கொடுக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பணித்திறனை மாணவர்களும் பெற்றோர்களும் மதிப்பிட ஒரு முறைகூட இல்லையே ஏன்?



அடுத்த ஐந்தாவது படிநிலை முக்கியமானது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டங்கள் போன்ற திட்டங்களில் நாம் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் செலவழிக் கிறோம். இந்தத் திட்டங்களை உறுதியான பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள் கட்ட செலவழிக்கவேண்டும். தற்போது இத்திட்டங்களின் கீழ் நடக்கும் வேலைகள் எதுவும் சமூகத்திற்கு நீண்டகால பலன் தருவதாக இல்லை. இந்தத் திட்டங் களின்கீழ் பணிபுரிபவர்கள் தாங்கள் கட்டும் கட்டடங் களில் தங்கள் குழந்தைகள் படிக்கப்போவதை எண்ணிப் பார்த்தால் கூடுதல் பயனாக உணர்வார்கள்.



அடுத்த படிநிலை பிரம்மாண்டமான சீர்திருத்த மாகும். ஆரம்பக்கல்வி நிலையை ஒரு குழந்தை தாண்டி, அடுத்ததாக கல்லூரிக் கல்வியில் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சிக்குச் செல்கிறது. இது ஆறாவது படிநிலை. ஆரம்ப உயர்நிலைப்பள்ளி கல்வியோடு மேல்நிலைக்கல்வியிலும் தரத்தை உருவாக்க வேண்டியது அவசியம். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள நகரங்களிலும் சிற்றூர்களிலும் 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மதிப்பெண்கள் தொடர்பான அழுத்தத்தால் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதிப்பெண் மற்றும் சதவிகித முறையை மாற்றும் திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கிரேடு முறை மூலம்  தேவையற்ற அழுத்தத்தையும் போட்டிகளால் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் சங்கடங்களும் குறைந்துள்ளன.



இன்று பட்டப்படிப்போ, முதுகலைப் படிப்போ படிக்காவிட்டால் கல்வி முழுமையற்றது என உணரப்படுகிறது. அதனால் உயர்கல்வி அளவில் அதிகபட்ச சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும். சுதந்தரம் பெற்றபோது ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் தரமாக தொடங்கப்பட்டன. தற்போதைய நிலையில் மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கே அந்த நிலையங்கள் சேவை செய்கின்றன. அதனால் உயர் கல்விக்காக நிறைய கல்வி நிலையங்களை உருவாக்கவேண்டும். தேசிய அறிவு ஆணையத்தின் கணக்குப்படி நமக்கு இன்னும் ஆயிரம் பல்கலைக் கழகங்கள் தேவை. 500 பல்கலைக் கழகங்களே உள்ளன.



முந்தைய வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிவிட்டு கல்வியின் முழுமையான தரத்தை அதிகரிக்க தனியார்களை கல்வித்துறைக்குள் அனுமதிப்பது அவசியம். தனியார் துறையினரின் தேசக்கட்டுமான பங்கேற்பை ஊக்குவிப்பது அவசியம். இந்திய தொழில் முனைவோரை உயர்கல்வியில் அதிகம் முதலீடு செய்ய வைப்பது எட்டாவது படிநிலையாகும்.



ஏஐசிடிஇ போன்ற காலாவதியான அமைப்புகள் ஊழலின் பிறப்பிடங்களாக உள்ளன. அவற்றிற்கு எல்லையற்ற அதிகாரமும் தரப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களைக் களைந்து அனைத்தை யும் வெளிப்படையாக மாற்றவேண்டும். இது அடுத்த படிநிலை.  இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் லட்சக் கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதை தற்போதைய அரசு பரிசீலித்துவருகிறது.



கல்விக்கான மானியங்களில் அதிக கவனம் செலுத்துவது 10வது படிநிலையாகும். ஏழைப் பின்னணியுள்ள எத்தனையோ மாணவர்கள் தரமான படிப்புகளில் சேரமுடியாமல் உள்ளனர். அரசுக்கு நல்ல எண்ணங்கள் இருப்பினும் வங்கிகள் அவர்களுக்குக் கடன் தர மறுக்கின்றன. இவர்களுக்கு ஒரு பெரிய தொகை கொண்ட நிதியை அரசு உருவாக்கவேண்டும். மதம், சாதி வித்தியாசம் இல்லாமல் இது உதவுவதாக இருக்கவேண்டும்.



பதினொன்றாவதும் முக்கிய மானதுமான படிநிலை என்னவெனில், நாட்டின் ஜிடிபியில் 1.5 சதவிகிதத்தி லிருந்து கல்விக்கான முதலீட்டை 5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். ஆரம்பக் கல்வியில் அரசு மிகச்சிறந்த பங்கேற்பைச் செய்யமுடியும். ஆரம்பக் கல்வி மற்றும் அடிப்படை ஆரோக்கியத் தில் தனியார் துறையினர் காப்பாற்று வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். 



இந்த பதினோரு வழி முறைகளும் இந்தியா வின் கல்வி நிலையை மாற்று வதற்கு உதவும் என நான் நினைக்கிறேன். ஆனால் இன்னொன்றையும் நான் அறிவேன். எல்லாம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகில் திறந்த மனதுடன் இருக்கவேண்டி யதும் அவசியம். அதுதான் இந்த பதினோரு வழிமுறைகளைவிட முக்கிய மான வழிமுறையாகும்

thanx - The Sunday Indian

Thursday, October 04, 2012

விஜய் ஆண்டனி பேட்டி @ த சண்டே இந்தியன்

http://topnews.in/files/Vijay-Antony.jpg 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோவாக ‘நான்’ படத்தில் நடிக்கிறார். நாக்கமுக்க, ஏ உச்சி மண்டையில என அதிரடி குத்துப்பாட்டு ரகங்களின் தந்தையான அவரோ, தான் இன்னும் எதையும் சாதிக்கவில்லை என்று அடக்கம் காட்டுகிறார்.




சுக்ரன் தொடங்கி வேலாயுதம் படம் வரையிலான அனுபவத்தில் நீங்கள் அடைந்திருக்கிற வளர்ச்சி என்ன? 



நான் எதுவுமே செய்யவில்லை என்ற மனநிலை இருப்பதால்தான், புதுமை யாகச் செய்யவேண்டும் என்று நினைத்து நடிக்கவே வந்திருக்கிறேன். வளர்ச்சியடைந்து விட்டேன்  என்ற உணர்வே எனக்கு வரவில்லை. இன்னும் அடையவேண்டிய எல்லைகள் நிறைய இருக்கின்றன. எதையும் சாதித்துவி¢ட்டதாகவும் நினைக்கவில்லை. நான் வளர்ந்தேன் என்ற நினைப்பும் இல்லை. என்னுடைய திறமைக்கு இன்னும் அதிகம் செய்யவேண்டியுள்ளது.. இன்னும் செல்லவேண்டிய தூரம் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுகிறேன்.


நீங்கள் இசையில் அடைந்திருக்கிற இடம்... 



ஆரம்பத்தில் என்னுடைய இசையை மக்கள் அறியவில்லை. இப்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. எல்லாவகையான இசையும் செய்கிறேன் என்று அவர்களிடம் ஒரு கருத்து இருக்கிறது. குத்துப்பாட்டு, மெலடி, வெஸ்டர்ன், கர்நாடக இசை எல்லாவற்றிலும் ஒரு வித்தியாசமான இசையைத் தருகிறேன் என்று நினைக்கிறார்கள். அப்புறம் வார்த்தையை வைத்து விளையாடுகிறார் என்ற பேச்சும் இருந்தது. எல்லா பாடல்களிலும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு மாதிரி அமையும்.


இசையில் பரிசோதனை முயற்சிகள் செய்வதற்கான சுதந்தரம் கிடைத்திருக்கிறதா? 


நிறைய கிடைத்திருக்கிறது. எனக்கு எங்கே சுதந்தரம் கிடைக்கிறதோ அங்குதான் இதுபோன்ற பரிசோதனை களை இயக்குநர்களிடம் பேசி செய்துபார்க்கிறேன். எல்லோருமே வித்தியாசமான பாடல்களைத் தருவதற்கான முயற்சியை உற்சாகப்படுத்துகிறார்கள். யாரும் தடை சொல்வதில்லை.


நீங்கள் அதிரடியான சூப்பர்ஹிட் குத்துப்பாட்டுகளைத் தந்திருக்கிறீர்கள். அதுதான் உங்கள் தனித்துவமா?


அப்படியில்லை. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்பது குத்துப்பாட்டு கிடையாது. அழகாய் பூத்ததே என்பது குத்துப்பாட்டு இல்லை. நெஞ்சாங்கூட்டில் நீயே குத்துப்பாட்டு அல்ல. வேலாயுதம் படத்தில் இடம்பெற்ற முளைச்சு மூணு எல விடலை குத்துப்பாட்டு கிடையாது இப்படி நிறைய மெலடிகள் சொல்லிக்கொண்டே போகலாம். குத்துப்பாட்டைத் தாண்டி நல்ல மெலடிகளையும் கொடுத்திருக் கிறேன். பலதரப்பட்ட வகையிலான பாடல்களைத் தருவதில்தான் எனக்கு விருப்பம். நாக்க முக்க... பாடல் பெரிய உயரத்தைத் தொட்டதால் அதனால் எனக்குக் கிடைத்த இமேஜை அழிக்க முடியவில்லை. அதைவிட பல பாடல்கள் செய்துகொண்டிருக்கிறேன். உலகக்கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் போட்டி, டர்ட்டி பிக்சரில் அந்தப் பாடலைப் பயன்படுத்தியுள்ளனர். அதுபற்றிய ஒரு பேச்சு  இன்றும் இருந்துகொண்டே இருக்கிறது.


நாக்க முக்க...  போன்ற கேள்விப்படாத புதிய வார்த்தைகளை உருவாக்குவதில் நீங்கள் பங்குவகிக்கிறீர்களா?


ஐம்பது சதவிகிதம். நாக்க முக்க என்கிற வார்த்தை அந்தப் படத்தின் இயக்குநரே கொடுத்த வார்த்தை. டைலமோ என்பது நான் கொடுத்தது. உஸ்மிலாரசே என்னுடைய வார்த்தை. ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருவர் தருகிறார்கள்.


ஒய் திஸ் கொலைவெறிடி போன்ற பாடல்களால் பாடலாசிரியர்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமா?


அப்படியெல்லாம் இல்லை. எப்போதும் திறமைசாலிகளுக்கான வாய்ப்புகளை யாரும் பறிக்கமுடியாது. அவர்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். திறமைசாலி எப்போதுமே திறமைசாலிதான். எது நல்லா இருக்கோ அதை மக்கள் வரவேற்பார்கள். மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுங்கள்.


சினிமாவில் இசையமைப்பாளராவதற்கு என்னென்ன அவசியம்? 


இசை அறிவு முதல் தேவை. அடுத்து தைரியம். அதற்கடுத்து பாமர மக்களின் நாடித்துடிப்பு. படித்தவர்கள் பற்றிய புரிதல். எல்லாவிதமான மக்களுடைய விருப்பம். இந்தப் பாடல் இவர்களுக்குப் பிடிக்கும். அந்தப் பாடல் பாமரர்களுக்குப் பிடிக்கும் என்ற தீர்மானம் வேண்டும். இதெல்லாம் முக்கியம் என்று நினைக்கிறேன்.


இசையறிவு இருந்தாலும் ஒரு புதிய ட்யூனை உருவாக்குவதற்கு கற்பனை தேவையில்லையா?


எல்லாம் உண்மைதான். ட்யூனை உருவாக்கும் திறனைக் கொண்டு வருவது கற்பனையா ரசனையா அறிவா என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் தைரியம் நிச்சயம் வேண்டும். நல்ல இசை தெரிந்தவர்களாக இருப்பார்கள். ட்யூன் என்று உட்காரும்போது தயக்கத்துடன் இருப்பார்கள். அந்த இடத்தில் துணிச்சலாக இருந்தால்தான் ஒரு புதிய ட்யூனைக் கொண்டுவரமுடியும். என்னைவிட ஐம்பது மடங்கு திறமைசாலிகள் உலகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கம்போசிங் என்று உட்காரும்போது பயந்துவிடுவார்கள். என்னமோ பெரிய விஷயம் போலிருக்கு என்று கருதுவார்கள். ஆனால் அது பெரிய விஷயமே கிடையாது. பெரிய கம்பெனிகள் பலவும் வீடு கட்டுகிறார்கள். சின்னப் பையனும் மணலில் வீடு கட்டிப் பார்க்கிறான். பெரிய வீடுகள் மணல்வீட்டிருந்துதான் கனவாகத் தொடங்குகின்றன. அதனுடைய வளர்ச்சிதான். ரசனையும் சேரும்போதுதான் அந்தப் பாடல் மக்களைப் போய்ச் சென்றடைகிறது. நம்முடைய ரசனையும் பொதுமக்களின் ரசனையும் ஒன்றாக இருக்கும் போதுதான் இசை வெற்றிபெறுகிறது.



உங்களுக்குப் பிடித்த மெலடிகள், இசையமைப்பாளர்கள் பற்றி...


இளையராஜாவின் இசையும் அவருடைய மெலடிப் பாடல்களும் எனக்குப் பிடித்தமானவை. அதேபோல ஏ.ஆர்.ரகுமானின் இசையும் குரலின் தரமும் பிடிக்கும். பிறகு ஆர்.டி.பர்மன், எஸ்.டி.பர்மன். ஜனனி ஜனனி... ஜெர்மனியின் செந்தேன் மலரே... இந்தக் கண்மணிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது... தெய்வீக ராகம்... ராஜாவின் பழைய மெலடி பாடல்கள் அனைத்துமே இனிமையானவை. 


ஹிந்தித் திரைப்பட இசை, தமிழ்த் திரைப்பட இசை எப்படி இருக்கிறது? 


எல்லாமே தனிப்பட்ட திறமையைப் பொறுத்தது. அதுதான் இது. இதுதான் அது. தமிழ் சினிமாவிலிருந்து ஒருவர் போய் அங்கு பெரிதாகச் செய்யமுடியும். அதேபோல அங்கிருந்து ஒருவர் வந்து இங்கு செய்யமுடியும். ட்யூன் நன்றாக இருக்கும்போது மொழி வேறுபாடு இல்லாமல் எல்லோரும் ரசிக்கிறார்கள். நல்லா இருந்தால் கேட்கிறார்கள். அப்படி இல்லையென்றால் கேட்கமாட்டார்கள். எல்லா இடங்களிலும் எல்லாமே ஹிட்டாகிறது. எல்லாமே ப்ளாப் ஆகிறது. அந்தந்த படைப்பின் தரத்தைப் பொறுத்தது.


நீங்கள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் குடும்பவழியைச் சேர்ந்தவர். அதுபற்றி? 


ஆமாம். அவருடைய கொள்ளுப்பேரன் நான். என்னுடைய தாத்தா மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் மகன். அவ்வளவுதான் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். அவருடைய மகன், என்னுடைய தாத்தா திருச்சியில் வேலைபார்த்தார். எங்க அப்பாவும் திருச்சியில்தான் இருந்தார். நான் திருநெல்வேலியில் படித்தேன். இன்றைக்கு ட்யூன் கம்போஸ் செய்யும்போதும், ஒரு பாடலாசிரியரைத் தேர்ந்தெடுக்கும்போதும் அவருடைய ரத்தம் எனக்குள் ஓடுவதாக நினைத்துக்கொள்கிறேன். இது நல்ல வரி என்றும், இது இசைக்குள் இருக்கிறது என்றும் தீர்மானிக்க முடிவது அவரால்தான் என்று நினைக்கிறேன். அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் படித்ததில்லை. நானும் உங்களைப்போலத்தான்.


திடீரென ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். எப்போது ‘நான்’ வெளிவரும்? 


பிப்ரவரியில் கண்டிப்பாக வெளிவந்து விடும். என் வகுப்புத்தோழர்தான் இந்தப் படத்தின் இயக்குநர். ஏதாவது வித்தியாசமாக செய்துபார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது. நடிப்பது என்பது எந்த இசையமைப்பாளருக்கும் புதிய விஷயம் கிடையாது. மைக்கேல் ஜாக்சன், மடோனா வரையில் எல்லோருமே நடித்திருக்கிறார்கள். இளையராஜா, ரகுமான் வரையில் மூன்று நாள் கால்ஷீட்டில் விளம்பரத்தில் நடிக்கிறார்கள். நான் சினிமாவில் நடிக்கிறேன். அவ்வளவுதான். சினிமாவில் நடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏன் கூடாது என்று தோன்றியது. தியாகராஜ பாகவதர் காலத்தில் பாட்டுப் பாடி நடித்திருக்கிறார்கள். நானே ஏதோ புதிதாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியாது. இங்கு என்னைவிட பெரிதாகச் செய்தவர்கள் இருக்கிறார்கள். இப்போது நானும் நடிக்கிறேன். நான் நடிக்கிறேன் என்பதை புதிதாகப் பேசுகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும்.


இந்தப் படத்தில் நடிப்பதற்காக பயிற்சிகள் ஏதும் உண்டா?



ஒன்றும் அவசியமில்லை. நடிக்கிறோம் என்ற கவனம் இருந்தால்தான் பிரச்னை. எதுவுமே தேவையில்லை. படப்பிடிப்பில் கோபப்படுங்கள், அழுங்கள் என்று சொன்னால் நீங்கள் இயல்பில் எப்படி இருப்பீர்களோ அதைச் செய்தால் போதுமானது. அதற்காக கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டால் சரிவராது.


பாடல்கள் இல்லாமல் படங்கள் வரவேண்டும் என்கிறார்கள். அதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


அது நல்ல விஷயம்தான். அப்படி பாடல்களே இல்லாமல் படங்கள் தமிழில் வரும்போது அவை உலகளவில் பேசப்படும். எதுவரைக்கும் பாடல்கள் வருகிறதோ அதுவரைக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைக்காது. பாடல்கள் இல்லாததுதான் படம். இசையமைப்பாளர்களுக்கு அதனால் ஒன்றும் பிரச்னையில்லை. பின்னணி இசை இருக்கிறது. ஆல்பம் செய்துவிட்டுப் போய்விடுவோம். நீங்கள் காதலிக்கிறீர்கள். எப்போதாவது மனைவியோடோ காதலியோடோ சேர்ந்து ஆடியிருக்கிறீர்களா? பாடல் என்பது சுத்தமாக வெறும் கதைதான். நடைமுறையில் இல்லாத மலிவான ஒரு பிலிம்மேக்கிங்தான் இது. ஜிகினா உடைகள் போட்டுக்கொண்டு ஆடுவதெல்லாம் நல்ல படத்திற்குரிய அடையாளம் கிடையாது. 

Thursday, June 28, 2012

பத்மினி

பத்மினி - அ முத்துலிங்கம்

http://www.bollywood501.com/classic_f/Padmini/index01.jpg

நடிகை பத்மினியின் முதல் படம் ‘மணமகள்’ என்று நினைக்கிறேன். அது யாழ்ப்பாணத்து தியேட்டரில் ஓடத் தொடங்கியபோது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மாற்றும் முன்னர் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஆர்வம். நானும் இன்னொரு நண்பனும் இரவு களவாக விடுதி கேட் ஏறிப் பாய்ந்து சென்று இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்தோம். மணமகள் படத்தில் வந்த யௌவன பத்மினியின் அழகும் ஆட்டமும் என்னைப் படுத்தியபாட்டை விவரிக்க முடியாது. 


என்னுடன் படம் பார்த்த நண்பன்கூட அறியமாட்டான். ஓர் இடத்தில் பத்மினி சற்று தலை குனிந்து கூந்தல் வழியாக என்னை மட்டும் பார்த்து நெருங்கிய பற்களை பாதி காட்டி சிரித்தார். தமிழ்ப் பாடத்தில் ’செறி எயிற்று அரிவை’ என்று படித்தது சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. அன்றிலிருந்து நான் அவருக்கு அடிமையாகிவிட்டேன்.

பத்மினி நடித்த படங்கள் எல்லாவற்றையும் ஒன்று தவறாமல் பார்த்தேன். ஒரு காலத்தில் அவர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. 2003&ம் ஆண்டு பத்மினி ஒரு விழாவுக்காக ரொறொன்ரோ வந்தபோது எங்கள் வீட்டில் 3 நாட்கள் தங்கினார். மணமகள் திரைப்படத்தில் நான் பார்த்து மயங்கிய பத்மினிதான். 


தங்கத்தை கரைத்துப் பூசியதுபோல அதே மேனி. கால்மேல் கால் போட்டு, ஒரு பூனைக்குட்டியை அணைப்பதுபோல மடியிலே கைப்பையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். உடனேயே ஒரு சங்கதி  புலப்பட்டது. அவர் வாழ்நாள் முழுக்க அதிகாரம் செய்து பழக்கப்பட்டவர். புகழ் வெளிச்சத்தில் இருந்து விலக விருப்பம் கொள்ளாதவர். சாதாரண பேச்சும் கட்டளை போலவே இருக்கும்.


 கேள்விகள் எல்லாம் துப்பாக்கி ரவைகள்போல சட்சட்டென்று வந்தன. ’ரொறொன்ரோவில் நண்டு இருக்கிறதா? என்ன நண்டு, ஆற்று நண்டா கடல் நண்டா? றால் இருக்கிறதா? உங்களுக்கு றால் பொரிக்கத் தெரியுமா? என்ன என்ன மீன் இருக்கிறது? கரி மீன் இருக்கிறதா? பால் மீன் இருக்கிறதா? சுறா மீன் இருக்கிறதா?’ என்று எல்லாம் கேட்கத் தொடங்கினார். ‘இங்கே புட்டு எப்படியிருக்கும்? வீட்டிலே இடியப்பம் செய்வீர்களா? ஓ, மறந்துவிட்டேன். ரொறொன்ரோவில் நல்ல அப்பம் கிடைக்கும் என்று சொன்னார்களே.’ ஒவ்வொரு கேள்வியும் எங்களைக் கலங்கடித்தது.

அடுத்து வந்த கேள்வி என் மனைவியைத் திடுக்கிட வைத்தது. ‘ஆறு மணி மருந்தை எடுத்தேனா?' என்றார். மனைவி என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். இப்பொழுதுதானே வந்து இறங்கியிருக்கிறார். எங்களுக்கு எப்படித் தெரியும்? மடியிலே படுத்துக் கிடந்த கைப்பையை திறந்து இரண்டு கை நிறைய மருந்துகளையும், வைட்டமின் மாத்திரைகளையும் அள்ளி எடுத்தார்.


 எல்லா நிறங்களிலும் எல்லா அளவுகளிலும் அவை இருந்தன. அது தவிர நாளுக்கு ஒருதரம் போடவேண்டிய ஊசியும் இருந்தது. மனைவி ஒரு சொல் பேசாமல், வாழ்நாள் முழுக்க இந்தத் தொழிலைச் செய்த தாதிபோல, அத்தனை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். பத்மினியின் ஞாபக சக்தி புகழ் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். கண்ணாடியைப் பார்த்து நடிகை மேக்கப் போடும்போது அந்தக் கால வழக்கப்படி வசனகர்த்தா நீண்ட நீண்ட வசனங்களை நின்றபடி சொல்லிக் கொடுப்பார். சிவாஜிக்குப் போட்டியாகப் பேச வேண்டிய வசனங்கள் அவை. அத்தனையையும் பத்மினி, இயக்குநர் வியக்கும்படி ஒரே டேக்கிலேயே பேசி அசத்திவிடுவார். 


பழைய கதைகள் பேசும்போது பத்மினி இப்படித்தான் ஆரம்பிப்பார். ‘1958&ல் எஸ்.எஸ்.வாசன் இயக்கத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலாவுடன் நான் நடித்து வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில்’ அல்லது ‘1967&ல் சிவாஜி, கே.ஆர்.விஜயாவுடன் நான் நடித்து திருலோகசந்தர் இயக்கத்தில் வெளிவந்த இருமலர்கள் படத்தில்’ என்று ஒரு படத்தைப் பற்றி சொல்லும்போது அதில் நடித்தவர்கள், அதை இயக்கியவர், அது வெளிவந்த வருடம் போன்ற சகல விவரங்களையும் மறக்காமல் சேர்த்துக்கொள்வது அவர் இயல்பு. 


அத்தனை வியக்கவைக்கும் ஞாபகசக்தி அவருக்கு. அப்படிப்பட்ட பத்மினிக்கும் என் மனைவிக்கும் இடையில் தினம் சண்டை மூளும். ’இதைப் போடுங்கள்’ என்று என் மனைவி ஒரு மருந்தை நீட்டுவார். ‘இதை ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டேனே’ என்பார் பத்மினி. ‘அது வைட்டமின். இதுதான் ரத்த அழுத்த மாத்திரை.’ அப்படியா என்று அதை வாங்கிப் போடுவார். ஒரு பதினைந்து நிமிடம் போயிருக்கும். ‘பாருங்கள், இந்த மாத்திரையைத் தர மறந்து விட்டீர்கள்’ என்று குற்றம் சாட்டிவிட்டு ஒன்றை எடுத்து வாயைத் திறப்பார். என் மனைவி எங்கேயோவிருந்து பாய்ந்து வந்து அதைப் பறித்து ‘இதைத்தான் 15 நிமிடம் முன்பு நீங்கள் சாப்பிட்டீர்கள்’ என்று சொல்வார். பத்மினி, வங்கி மெசினில் பணம் இல்லையென்று சொன்னதுபோல திடுக்கிட்டுப் பார்ப்பார். ஒரு மாற்றமில்லாமல் தினம் தினம் இது நடந்தது.

ரொறொன்ரோவில் ஓர் இரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு நாங்கள் புறப்பட்டபோதுதான் பிரச்னை ஆரம்பமானது. அலங்கார சம்பிரமங்களை பத்மினி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தார். பொற்சரிகை வைத்த இரண்டு நிறமான பட்டுச் சேலைகளில் எதை உடுப்பது என்று தடுமாறினார். கழுத்து மணியாரத்தை எடுத்து அணிந்தார். நீலக்கல் பதித்த அட்டிகையைக் கட்டுவதா விடுவதா என்று முடிவெடுக்க முடியவில்லை. அதற்கு இரண்டில் மூன்று பெரும்பான்மை தேவைப்பட்டது. வளையல்கள் மாட்ட வேண்டுமென்று நினைத்ததுதான் விபரீத முடிவு. முன்கையிலிருந்து முழங்கைவரை அவை நிரப்பப்பட்டன. எண்ணிப் பார்த்தபோது ஒரு கையில் 16ம் மறு கையில் 17ம் ஏறிவிட்டது. எத்தனை தரம் எண்ணினாலும் அதே தானம்தான் வந்தது. விருந்திலே யாராவது எண்ணிப் பார்த்து விடக்கூடும் என்ற அச்சத்தில் பத்மினி அமைதி இழந்தார்.

விருந்துக்குப் புறப்பட்டபோது இரவு 10 மணிக்குத் திரும்பிவிடவேண்டும். ரசிகர்களின் அநாவசிய தொந்திரவு அவருக்குப் பிடிக்காது என்று சொல்லிவிட்டார். ஆனால் அங்கே நடந்தது வேறு. விருந்துக்கு  வந்திருந்தவர்கள் எல்லோரும் பத்மினியுடன் படம் எடுக்க ஆசைப்பட்டார்கள். எல்லோருக்கும் கையெழுத்து வேண்டும். எல்லோரிடமும் கேள்விகள் இருந்தன. முக்கியமான கேள்வி ‘நீங்கள் ஏன் சிவாஜியை மணமுடிக்கவில்லை?’ ஆயிரம் கி.மீட்டர் பயணம்செய்து வந்தது இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவா? எனினும் பத்மினி மலர்ந்துபோய், சௌந்தர்யம் அதிகமாகி காட்சியளித்தார். ஒரு சின்னப் பெண் சலுங் சலுங் என்று நடந்துவந்து அவர் காலைத் தொட்டபோது அப்படியே அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.  புகழின் உச்சியில் இருந்த ஒரு தருணத்தை அவர் மறுபடியும் வாழ்ந்துகொண்டிருந்தார். வீடு திரும்ப இரவு ஒரு மணியாகிவிட்டது. ஆனால் அடுத்த நாள் நடந்த சம்பவம்தான் அத்தனையையும் கெடுத்துவிட்டது.

பத்மினி கேட்ட சகல உணவு வகையும் அகப்படும் ஓர் உணவகம் ரொறொன்ரோவில் இருந்தது. ஓர் ஈழத்துக்காரர்தான் அதை நடத்தினார். பெயர் Hopper Hut. பத்மினியை அங்கே அழைத்துப் போனோம். பத்மினி மெனு அட்டையைப் பார்த்து தனக்கு வேண்டிய அத்தனை உணவு வகைகளுக்கும் ஆணை கொடுத்தார். அப்பம், நண்டு, மீன், றால், கோழிப் பிரியாணி. அப்பத்தின் நடுவில் மீனை வைத்து மடித்து, பின்னர் றாலை வைத்து இன்னொருதரம் மடித்து ருசித்து ருசித்துச் சாப்பிட்டார். பரிசாரகன்  20 வயதுப் பையன். அவன் பத்மினியைக் கவனித்ததாகவே தெரியவில்லை. பத்மினி அவன் முகத்தைப் பார்த்தார், பின்னர் அப்பத்தைப் பார்த்தார். மறுபடியும் பையனின் முகத்தைப் பார்த்தார். அவன் கவனத்தை என்ன செய்தும் திருப்பமுடியவில்லை. இறுதியில் ஆற்றாமல் ‘நான் யாரென்று தெரிகிறதா?’ என்றார்


 மேசை துடைத்த பையன் அரைக் கணம் அந்த வேலையை நிறுத்திவிட்டு ‘தெரியாது’ என்றான். அந்த மேசையை சுற்றிய இலையானின் மேல் அவனுக்கிருந்த கவனம்கூட பத்மினியின் மேல் இல்லை. பில் கொடுத்தபோது மறுபடியும் ‘நான் யார் தெரியுமா?’ என்றார். வாயைத் திறக்காமல் தலையை கிழக்கு மேற்காக ஆட்டினான். இந்த வேதனையை நீடிக்கவிடாமல் நான் ‘இவர்தான் நடிகை பத்மினி' என்றேன். அவன் ‘எந்த பத்மினி?' என்றான். பத்மினியின் அத்தனை நடிப்பும், அத்தனை அழகும், அத்தனை புகழும் அந்த ஒரு வார்த்தையில் அடிபட்டுப் போயின.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-9hIWqP0BD8fQUqOJiqVMWWth8PuHTHbGuB0o0X8pQ3O3b0pq-iv9UUuzTEw7p_-9WEU_vpXXWznBwxQdZ-5UL_tkpshwnx4GaJN9KRf-bnLJi6wbgtB0nLnK6CjtiqFeKqzNNRLTS8s/s1600/padmini_jis_desh.jpg

பத்மினியை விமான நிலையத்தில் ஏற்றிவிடப் போனபோது அவரை மறுபடியும் பார்க்கக்கூடும் என நான் எண்ணவில்லை. அதுவே கடைசி என்று நினைத்தேன். சில மாதங்கள் கழித்து நியூயோர்க்கில்  ஒரு விழாவில் சுதா ரகுநாதன்  பாடினார். ஜி.ராமநாதன் இசையமைத்த ‘பாற்கடல் அலைமேலே, பாம்பணை யின் மீதே’ என்ற ராகமாலிகை. திடீரென்று அந்தப் பாடலுக்கு பத்மினி அபிநயம் பிடிக்கத் தொடங்கிவிட்டார். உலகம் காணவேண்டிய அருமையான காட்சி. இசை அரசியின் பாடலுக்கு நாட்டிய அரசியின் நடனம். பத்மினிக்கு அப்போது வயது 72. அதுவே பத்மினி மேடையில் ஆடிய கடைசி நடனம் என்று நினைக்கிறேன். 


விழா முடிந்த பின்னர் பத்மினியை அமைதியாகச் சந்தித்தேன். நலம்தானா? என்றார். நேரில் பார்க்கும்போதும் டெலிபோனில் அழைக்கும்போதும் அப்படித்தான் பேச ஆரம்பிப்பார். அவர்  முகத்தில் புது ரத்தம் பாய்ந்து அழகாகத் தெரிந்தார். ‘என்ன இன்று இவ்வளவு மகிழ்ச்சி?’ என்றேன். ‘பல நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர் களை முகம் முகமாகப் பார்க் கிறேன்’ என்றுவிட்டு தலையைச் சற்று குனிந்தார். 


தாயின் கையைப் பறித்துக்கொண்டு ஓடும் குழந்தை போல ஒரு முடிக்கற்றை நெற்றியிலே விழுந்தது. அதை அகற்றாமல் என்னைப் பார்த்து சிரித்தார். சட்டென்று மாணவப் பருவத்தில் எனை மயக்கிய மணமகள் படத்து சிரிப்பு ஞாபகத்துக்கு வந்தது. அவர் திரும்பவும் இந்தியாவுக்குப் போய்விடப் போவதாகச் சொன்னார். நான் அதை ஒன்றும் பெரிதாக எடுக்கவில்லை. விடை பெறும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எங்கேயிருந்தாலும் தொடர்பில் இருங்கள் என்று சொன்னேன். சரியென்றார்.



2006-ம் ஆண்டு, 25 ஆம் தேதி செப்டம்பர் மாதம் திங்கள் கிழமை இரவு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது  செய்தி வந்தது. சென்னையில் ஒரு விழாவுக்கு பத்மினி சக்கர நாற்காலியில் போயிருக்கிறார். இரண்டு வருடத்துக்கு முன்னர் மேடையில் அவர் நடனம் ஆடியது நினைவுக்கு வந்தது. இந்த இடைக்காலத்தில் அவர் சக்கர நாற்காலி ஏறிவிட்டார். 


விழாவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த பின்னர் உயிர் பிரிந்துபோனது என்று சொன்னார்கள். நான்  உண்பதை நிறுத்திவிட்டு கடைசியாக நியூயோர்க் விழாவில் அவரிடம் விடைபெற்றதை நினைத்துக் கொண்டேன். சற்று குனிந்து நெற்றி யில் வழிந்த கூந்தல் வழியாக சிரித்த படி மேல் கண்ணால் என்னைப் பார்க்கிறார் நாட்டியப் பேரொளி.



 நன்றி - த சண்டே இந்தியன்  

Tuesday, June 26, 2012

சரோஜாதேவி

சரோஜாதேவி


Veteran Actress B. Saroja Devi


ஒவ்வொரு காலமும், தன் கால மக்களுக்கு எவ்வளவுதான் இடரும் துயரும் தந்தாலும், அது அவர்களுக்கு விசேஷமான சந்தோஷத்தையும் பரவசத்தையும் தரத் தவறுவதில்லை. என் இளம் பிராயம் கறுப்பு- வெள்ளைத் திரைப்படக் காலமாக அமைந்த தென்பது காலம் எனக்களித்த பரிசு. கறுப்பு வெள்ளைத் திரைப் படங்களும் அவற்றின் அற்புதமான பாடல்களும், ஆடிப்பாடிய அழகு தேவதைகளும் என் நினைவுகளின் சேகரக் கிடங்குகளில் சேர்மானமாகியிருக்கும் பொக்கிஷங்கள்.

திரைப்படங்களுடன் பெரும் அபிமானத்தோடு உறவுகொள்ளும் காலமென்பது, பத்து முதல் இருபது வரையான பத்தாண்டுக் காலம். என்னுடைய இப்பிராயத்தில் தமிழ்த் திரையுலகம், சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினிகணேசன் ஆகியோருடைய ஆளுகையில் இருந்தது. அவர்களோடு இணைந்து நாயகிகளாக நடித்த சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி, தேவிகா ஆகியோரே இன்றளவுக்கும் என் மனதுக்கு இதமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எனினும், என் அபிமானம் அதிகமாக சாய்ந்திருந்ததும், சாய்ந்திருப்பதும் சரோஜாதேவியின் பக்கம்தான். என் வளரிளம் பருவத்தில் தமிழ்த் திரையுலகில் உச்சத்தில் ஒளிர்ந்த நட்சத்திர நாயகி சரோஜாதேவி. காலம் பரிசளித்த மகத்துவம். என் கால யுவன்களையும் யுவதி களையும் முழுவதுமாக வசப்படுத்தியிருந்த பைங்கிளி.

தமிழ்த் திரையுலகில் “குணவதிக்குக் குணவதி, கவர்ச்சிக்குக் கவர்ச்சி என்ற பிம்பத்தை முதன்முதலாக பரிபூரணமாகக் கட்டமைத்தவர் சரோஜாதேவி (பின்னாளில் தன் காலத்திற்கேற்ற அம்சங்களோடு அந்த பிம்பத்தில் கச்சிதமாகப் பொருந்தியவர் சிம்ரன். அன்று சரோஜாதேவி; இன்று சிம்ரன் என்று கொண்டாடுவதற்கான என் மன அமைப்பு இதன் வழி வெளிப்படுவதாகவே தோன்றுகிறது).


 இவருடைய குணவதி பிம்பம் எல்லாப் படங்களிலும் நாயகிக்கே உரிய பாங்கோடு புலப்படும் என்றாலும் மிக எளிய உதாரணமாக, கல்யாணப் பரிசு, பாலும் பழமும் என்ற இரு படங்களை நினைவுகூரலாம். தியாகத்தில் சுடரும் இருவேறு பாத்திரங்களில் வெளிப்படும் இவருடைய நடிப்பும் முக அபிநயங்களும் அலாதி யானவை. பரிவும் பாசமும், பாந்தமும் பரிபக்குவமும் உடல் மொழியில் கனிந்திருக்கும்.



பேதமையிலிருந்து பரிபக்குவம் வரையான எல்லைகளில் சஞ்சாரம் செய்யும் இவருடைய முகமொழி வசீகரமானது. காதல் பெண்ணாக வாழும்போது வெளிப்படும் குறும்பும் குதூகலமும், ஒயிலும் ஒய்யாரமும், நளினமும் நாணமும், செருக்கும் மிடுக்கும், கனிவும் காதலும் நம்மைப் பரவசப்படுத்து பவை. மனைவியாக வரும்போது பாசமும் நேசமும், பரிவும் பாந்தமும், எழிலும் எளிமையும் வெகு சுபாவமாக வெளிப்படும்.

சரோஜாதேவியின் உடல் வனப்பு இயல்பிலேயே அலாதியான கவர்ச்சி கொண்டது. அவருடைய முன்னழ கின் ஈர்ப்பும், முக அழகின் நயங்களும் எவரையும் சுண்டியிழுத்து சொக்க வைப்பவை. அவருடைய பின்னழகு விசேஷமானது. சோழர்காலச் சிற்பங்களின் லாவண்யம் கொண்டது. தமிழ்ச் சமூகம் பின்னழகின் மகத்துவத்தை அறிந்து கொண்டதும், அந்த அறிதலின் வழி ஆனந்தப்பட்டதும் இவருடைய வருகைக்குப் பின்னர்தான். பாடல் காட்சிகளில் இவர் ஒயிலாகவும் மிடுக்காகவும் நடக்கும்போது கேமரா பின்னாலிருந்து தொடரும் மாயமும் நிகழ்ந்தது. அதுவரை, எந்தக் கதாநாயகியின் பின்னாலும் கேமரா இப்படி ஆனந்தக் கூத்தாடி அலைந்ததில்லை.

http://im.rediff.com/movies/2007/nov/28saroja2.jpg


காதல் பாடல் காட்சிகள் வெளிப்புறங்களில் நடக்கும்போது, காட்சியின் ஏதோ ஒரு தருணத்தில், நாணத்தை வெளிப்படுத்தும் விசேஷ அம்சமாக, இவர் தோள்களை சற்றே குன்னி சில எட்டுகள் எடுத்து வைப்பார். அப்போது அவர் முகம் நாணத்தில் மலர்ந்திருக்கும். உடல், வனப்பில் ஜொலித்திருக்கும். நம் மனம் பரவச அலைகளில் மிதந் திருக்கும். பாடல் காட்சி வீட்டுக்குள் நிகழும்போது, அதன் ஏதோ ஒரு தருணத்தில், படுக்கையில் குப்புறப் படுத்தபடி, இரு கால்களையும் மேலும் கீழுமாக ஆட்டுவார். நம் மனம் கிறுகிறுக்கும்.


ஆக அன்றைய வாலிபர்களை இவர் வசப்படுத்தியதிலும், கிறங்க வைத்ததிலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதேசமயம் அன்றைய மாணவிகளுக்கும், இளம் பெண்களுக்கும் இவர் மனதளவில் அழகிய சிநேகிதியாக இருந்தார். 1960 – 70 வரையான பத்தாண்டு காலத் தமிழ்ப் பெண்களின் நடை, உடை பாவனைகளைத் தீர்மானித்த சக்தியாகத் திகழ்ந்தார்.

தமிழில் அதிகமான படங்களில் மாணவியாக நடித்தவர் இவராகத் தான் இருக்கக்கூடும். அன்றைய கல்லூரி மாணவிகள், இவர் உடுத்திய ஆடைகள், அணிந்த அணிகலன்கள், மேற்கொண்ட சிகை அலங்காரங்கள் ஆகியவற்றைப் பின்பற்றித் தங்களை சிங்காரித்துக்கொண்டார்கள்.

அக்காலகட்டத்துப் படங்களில் சரோஜாதேவி அணிந்த விதவிதமான காதணிகளை மட்டுமே கொண்ட ஒரு கண்காட்சிக் கூடத்தை நிர்மாணிக்கலாம். மேலும், இவர் உடுத்திய ஆடைகள்தான் எத்தனை வகை. பாவாடை – தாவணி, சேலை – ஜாக்கெட் (ஜாக்கெட்டில் விதவிதமாய் பல்வேறு வடிவங்கள்), முழு நீள கவுன், அரை கவுன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், சுடிதார், பைஜாமா, பேன்ட், விதவிதமான மேலாடைகள், சட்டை, டி-சர்ட் என எல்லாமே இவர் உடலில் அழகுற, பாந்தமாய்ப் பொருந்தின.

அதுபோன்றே கணக்கற்ற சிகையலங்காரங்கள். விதவிதமாய் ஸ்கார்ப் அணிந்ததும், அழகழகாய் ரிப்பன்கள் சூடியதும் இவர்தான். இரட்டைச் சடை போட்டு, அதையும் இரண்டாக மடித்து அவற்றில் ரிப்பன்களைப் பூ வடிவில் சூடிச் சுடர்ந்தார். அவர் கொண்ட எண்ணற்ற அழகுக் கோலங்கள், தமிழ்ப் பெண்கள் சமூகத்தையும் அழகுபடுத்தின. தமிழ்த் திரையுலகம் இவரை விதவிதமாய் அழகுபடுத்திப் பார்த்தது. இவர் தமிழ்ச் சமூகத்தை விதவிதமாய் அழகுபடுத்தினார்.

அபிநய சரஸ்வதியாக தன் இருபதாவது வயதில் (1958) சரோஜாதேவி கன்னடத்திலிருந்து தமிழ்த் திரையுலகில் பிரவேசித்தார். எம்.ஜி.ஆர் தமிழ்த் திரையுலக்கு அளித்த பெரும் கொடையாக இந்நிகழ்வு அமைந்தது. எம்.ஜி.ஆர் முதன்முதலாக தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்தார்.

 கறுப்பு  – வெள்ளைப்படமான நாடோடி மன்னனின் பிற்பாதியில் சரோஜாதேவி அறிமுகமா வதிலிருந்து படம் வண்ண மயமாகும். தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய நட்சத்திரம் மங்காத வண்ணமாய் ஒளிவீசத் தொடங்கியது. அடுத்த பத்தாண்டுகளில், தன் கொஞ்சும் தமிழாலும் அழகாலும் நடிப்பாலும் கன்னடத்துப் பைங்கிளியாகத் தமிழ் மனங்களில் சிறகடித்தார்.

பெங்களூரில் அவருடைய இல்லத்தில் தமிழ்த் தொலைக்காட்சி சேனலொன்று சமீபத்தில் எடுத்த நேர்காணலின் போது அவர் வெளிப்படுத்திய ஆதங்கமிது: “எனக்கு முன்பெல்லாம் சென்னையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எம்.ஆர்.ராதா ஆகியோரின் நான்கு வீடுகள் எப்போதும் இருந்தன. அவர்களில் எவரும் இப்போது இல்லை. நெஞ்சில் நினைவுகளோடும் கண்களில் கண்ணீரோடும் நான் மட்டும் தனியாக இருந்து கொண்டிருக்கிறேன்."

இன்றும்கூட, ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பழைய தமிழ்த் திரைப்படப் பாடல்களைத் தவறாமல் பார்த்துக் கொண்டி ருக்கிறேன். தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள் இவ்வகையில் என் வாழ்வில் பெரும் பங்கு வகிக் கின்றன. குறைந்தது நான்கைந்து சரோஜாதேவி பாடல்களையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. நாளின் இடைப்பட்ட பொழுதுகள் எப்படிப் போனலும், நாள் அழகாகப் புலரவும், இரவு அமைதியாகத் துயிலவும் இவை இதமாக இருந்து கொண்டிருக்கின்றன.


என்னளவில் சரோஜாதேவி, காலம் பரிசளித்த பெறுமதி வாய்ந்த கொடை.


 நன்றி - த சண்டே இந்தியன் 

Thursday, June 14, 2012

சாருநிவேதிதாவும் ,அவர் மனம் கவர்ந்த சில்க் ஸ்மிதாவும்


பாலியல் தொழிலாளியாக இருந்து, பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலா ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். அவருடைய சுயசரிதை நூல் கேரளத்தில் பிரபலமான பிறகு அவருடைய நேர்காணல்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் வெளிவரத் தொடங்கின.  அப்போது அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான காதல் கடிதங்கள் வர ஆரம்பித்தனவாம்.  காதல் என்றால் எப்படிப்பட்ட காதல்?  “உங்களோடு ஒரே ஒருமுறை செக்ஸ் அனுபவிக்க வேண்டும்.”  இதைப் பற்றி சிரித்துக் கொண்டே குறிப்பிட்ட ஜமீலா, “அவர்கள் அனுபவிக்க நினைத்தது, ரத்தமும் சதையுமாக உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்த ஜமீலாவுடன் அல்ல;  தொலைக்காட்சியில் தெரியும் ஜமீலாவின் நிழலுடன்” என்றார்.


எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஏனென்றால், ஜமீலா அனுபவரீதியாக உணர்ந்து கூறியதைத்தான்  ஃபிரான்ஸைச் சேர்ந்த பிரபலமான பின்நவீனத்துவ சிந்தனாவாதியான ஜான் பொத்ரியார் (Jean Baudrillard)  தன்னுடைய Simulacra and Simulation என்ற நூலில் Hyperreality என்ற கருத்தாக்கமாக முன்வைக்கிறார்.   சுருக்கமாகக் கூறினால், எதார்த்தத்துக்குப் பதிலாக, அதன் இடத்தை பிம்பங்கள் எடுத்துக் கொள்வதே ஹைப்பர் ரியாலிட்டி.

தமிழ்க் கலாச்சாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளில் பிரதானமாக இருப்பது சினிமா என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.  அந்த சினிமாதான் தமிழர்களுக்கான பிம்பங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பிம்பங்களில் மிக முக்கியமானவர் சில்க் ஸ்மிதா (1960-&96).  ஆந்திராவின் ஏழ்மையான குடும்பம் ஒன்றைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு பள்ளிக்குச் சென்று படிக்க வசதியில்லை. 


 அதனால் மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். திருமண வாழ்க்கை தோல்வியில் முடிய, ஆந்திராவிலிருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்து, கோடம்பாக்கத்தின் சினிமா ஸ்டுடியோக்களில் எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வயது 16. இதேபோல், கிராமத்தில் சிறுவயதில் திருமணம் செய்விக்கப்பட்டு, அது தோல்வியில் முடிந்து, பிறகு சினிமாவில் சேர்ந்து புகழ்பெற்ற நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.  உதாரணத்துக்கு ராக்கி, ஜெயா பாதுரி.  இதை இங்கே குறிப்பிடக் காரணம், அந்தக் காலகட்டத்தில் பல நடிகைகளின் கதையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.  

ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவின் எதிரே இருந்த மாவு மில்லில் வேலை செய்துகொண்டிருந்த விஜயா, நடிகர் வினு சக்ரவர்த்தியின் பார்வையில் பட  விஜயாவின் வாழ்க்கையில் அதிரடித் திருப்பம் ஏற்படுகிறது.  வண்டிச் சக்கரம் என்ற படத்தில் விஜயா சாராயம் விற்கும் பெண்.  பெயர் சிலுக்கு. பிறகு அந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிடுகிறது. 

அதற்குப் பிறகு சில்க் ஸ்மிதா 450 படங்களில் நடித்தார்.  புகழின் உச்சத்தில் இருக்கும்போது தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று இன்றளவும் நம்புகிறவர்கள் உண்டு.  புகழின் உச்சாணியில் இருந்த சிலுக்குவின் சடலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்தபோது அந்த சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்குக்கூட யாரும் இல்லை என்பது இன்னொரு துயரமான விசித்திரம். இதிலும் பல நடிகைகளின் கதை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.  பர்வீன் பாபி, இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு நடிகை. பாலிவுட்டின் செக்ஸ் ஸிம்பலாகக் கருதப்பட்டவர். தத்துவ ஞானி யு.ஜி. கிருஷ்ணமூர்த்தியின் சிநேகிதி.  என்னுடைய எக்ஸிஸ் டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற நாவலுக்கு டெபொனேர் பத்திரிகையில் வெளிவந்த பர்வீன் பாபியின் ஒரு பேட்டிதான் அடிப்படையாக இருந்தது. அந்தப் பேட்டி வந்த ஆண்டு 1972.  அப்படிப்பட்ட பர்வீன் பாபி 2005-&ல் இறந்தபோது அவரது சடலமும் Unclaimed body (Token No. 62) -ஆகத்தான் கிடந்தது. மேலும், சிலுக்கு பிரபலமான பிறகு தன் சொந்த பந்தங்கள் யாரையும் தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை. அவருடைய மூத்த சகோதரர், சிலுக்கு சாகும்போதுகூட லாரி டிரைவராகத்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் ஸ்மிதா அளவுக்குப் பிரபலமாக இருந்த நடிகை தமிழ் சினிமாவில் இன்றளவுக்கும் வேறு யாரும் இல்லை. ஒருமுறை இந்திரா காந்தி “யார் இந்த சில்க்?” என்று சிரித்துக்கொண்டே கேட்கும் அளவுக்கு சில்க் ஸ்மிதாவின் பெயர் இந்தியா முழுவதும் பரவியிருந்தது.   பெண்களுக்கும் சிலுக்கைப் பிடித்திருந்தது.  இன்றைய கவர்ச்சி நடிகைகள் யாருமே சில்க்கின் நிழலைக்கூடத் தொட முடியவில்லை.  அன்றைய கதாநாயக நடிகர்கள்கூட பிரபலம் என்ற அளவில் சிலுக்குவுக்குப் பின்னால்தான் இருந்தார்கள். 17 ஆண்டுகள் ஓர் ஒட்டுமொத்த சமூகத்தின் பாலியல் கனவாக விளங்கினார் சில்க்.  இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆய்வு செய்தால், தமிழ்ச் சமூகத்தை மிகச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும். 

ஆந்திரா பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.  அங்கே முக்கால்வாசிப் பெண்கள் சில்க் ஸ்மிதாவைப் போல்தான் இருப்பார்கள்.  அவர்களில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு மாநிலம் தனது கனவுக் கன்னியாக வைத்துக் கொண்டதற்குக் காரணம் என்ன?

உலகில் பாலியல் வறட்சி மிகுந்த பிரதேசங்களில் தமிழ்நாடு முன்னணியில் வரும் என்று நினைக்கிறேன். என் வாசகர் ஒருவர் இருந்தார். வயது 60. அவர் நீண்ட நாட்களாக யோசித்து, தயங்கி, பிறகு சற்றே துணிச்சல் பெற்று ஒருநாள் தன் மனைவி தனியாக இருக்கும்போது முத்தமிட்டார்.  உடனே அந்தப் பெண்மணியும், குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.  “உங்கள் புத்தகங்களைப் படித்ததால் எனக்கு ஏற்பட்ட கதியைப் பாருங்கள்” என்று பிறகு அவர் என்னிடம் வருத்தப்பட்டார். 

அப்போதெல்லாம் கழிப்பறை வசதி கொண்ட கேரவன்கள் கிடையாது.  அதனால் வெளிப்புறப் படப்பிடிப்பின்போது நடிகைகள் பெரும் அவதிக்குள்ளாவது உண்டு.  அப்படி ஒரு சமயத்தில் ஒரு தனியான இடத்தைக் கண்டுபிடித்து சிறுநீர் கழித்திருக்கிறார் சில்க்.  முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் சுவரிலும், பக்கத்திலிருந்த மரக் கிளைகளிலும் பல ஆண் உருவங்கள்.  இதை சிலுக்கே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  


அவர் இறந்த பிறகு அவரது பிரேதம் necrophilia செயலுக்கு ஆட்பட்டதாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஒரு பேச்சு உண்டு.  ஒரு பிரபலமான நடிகை பல நாட்கள் கோமாவில் இருந்த போது, அந்த மருத்துவமனையின் வார்ட்பாயிலிருந்து மூத்த டாக்டர் வரை அந்த நடிகையின் ஜனனேந்திரியத்தைப் பார்த்து விட்டுச் சென்றார்கள் என்று அங்கே பணிபுரிந்த ஒரு பெண் மருத்துவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். 

ஹைப்பர்ரியாலிட்டி என்பது எதார்த்தம் அல்ல; ஆனால் எதார்த்தத்திலிருந்து முழுதும் அந்நியமானதும் அல்ல. அதே சமயம், அதில் எதார்த்தத்தின் சாயலும் உண்டு.  Hallucinatory resemblance என்கிறார் பொத்ரியார்.  தமிழ்நாட்டை சுமார் 20 ஆண்டுகள் இந்த மாயத்தன்மையினால் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த சில்க் ஸ்மிதாவின் கதையை ஆராய்ந்தால் ஒருவேளை அது தமிழர்களின் கதையையே சொல்லக்கூடும்.


நன்றி - த சண்டே இந்தியன்

Sunday, January 22, 2012

ரஜினியும் நானும் ஒண்ணு -சாரு நிவேதிதா பேட்டி - த சண்டே இந்தியன்

http://lh4.ggpht.com/_3dVzeCbqCSw/Syo66vKLFMI/AAAAAAAABog/JP6fLY0XFfc/charu_thumb%5B3%5D.jpg 

இலக்கிய உலகில் பல சர்ச்சைகளில் சிக்கியவரும் , லட்சக்கணக்கான வாசகர்களைக்கொண்டவருமான சாரு நிவேதிதா பேட்டி த சண்டே இந்தியன் வார இதழில் வந்திருந்தது.. பேட்டி கண்டவர்கள் சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன்

1. தமிழின் முக்கியமான சிறுகதைகளைத் தொகுத்தால் அதில் உங்கள் கதைகளும்    இடம்பெறும்..ஆனால் தற்போது சிறுகதைகள் எழுதுவதில்லையே?



சமீபத்தில் மொராக்கோ எழுத்தாளர் Tahar ben jelloun  எழுதிய Leaving tangier என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  அதில் உள்ள பல அத்தியாயங்கள் நான் எழுதும் கட்டுரைகளைப் போலவே இருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தேன்.  மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  நான் எழுதும் பெரும்பாலான எழுத்துக்கள் புனைகதை, கட்டுரை என்ற இரண்டுக்கும் நடுவில் இருப்பதாகவே கருதுகிறேன். 

என் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே ஏதோ மாயாஜாலக் கதைகளில் வருவதைப் போல் என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன.  கட்டுரை, கதை என்று எல்லாமே சேர்ந்து மலையிலிருந்து விழும் அருவியைப் போல் கொட்டுகிறது.  ஒரு சமயத்தில் மூன்று மலையாள வார இதழ்களில் எழுதி வந்தேன்.  ஒன்றில் ராஸ லீலா.  இன்னொன்றில், உலக இசை.  மூன்றாவதில், இலக்கியம், அரசியல், சினிமா என்று பொது விஷயங்கள்.  இந்த மூன்றையும் படித்த என் மலையாள நண்பர் ஒருவர் “மூன்றுமே ஒன்று போல் இருக்கிறது. அனுப்பும் போது மாற்றி அனுப்பி விடாதீர்கள்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

அமெரிக்க எழுத்தாளர் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றியும் இப்படித்தான் சொல்வார்கள்.  என் எழுத்து புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருப்பதால் என்னைப் பொறுத்தவரை சிறுகதை, நாவல் என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லை.  என் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையுமே ஒருவர் சிறுகதைகளாக வாசிக்க முடியும்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதிக்கு நான் எழுதி மலையாள இதழ்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட என் கடிதமே மரியோ பர்கஸ் யோசாவின் நாவலில் ஒரு அத்தியாயமாக எழுதப் பட்டிருக்கும்.  இருந்தாலும் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதாக இருந்தால், இப்போது என் மனம் ஒரு பரந்து விரிந்த கேன்வாஸில்தான் யோசிக்கிறது.  200 பக்கங்களுக்குக் குறைவாக என்னால் ஒரு புனைகதையை இனிமேல் உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை.  


2. எக்சிஸ்டென்சியலிசமும், ஜீரோ டிகிரியும் கூர்மையும், அங்கதமும், புதிய வடிவமும் கொண்ட நாவல்கள்..ஆனால் அவற்றைத் தொடர்ந்து நீங்கள் எழுதிய நாவல்கள் வெறும் செய்திக்குறிப்புகள் மற்றும் டைரிக்குறிப்புகளைப் போல் உள்ளதே?


டைரிக் குறிப்புகள் அல்ல.  ஆட்டோ பிக்ஷன்  சர்வதேச அளவிலேயே ஆட்டோஃபிக்‌ஷனை இதுவரை எழுதிப் பார்த்தவர்கள் என்று இரண்டு மூன்று பேரை மட்டுமே குறிப்பிட முடியும்.  செர்கி டெப்ரோவ்ஸ்கி என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் அவர்களில் ஒருவர்.  ஆனால் அவருடைய நாவல்கள் எதுவும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.  மொழிபெயர்க்கப்பட முடியாத ஒரு ஃப்ரெஞ்சை அவர் எழுதுவதாகச் சொல்கிறார்கள்.  என்னுடைய ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு அது அவருடைய எழுத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

ஆட்டோஃபிக்‌ஷன் என்ற இலக்கிய வகையே சர்வதேச இலக்கியத்துக்குத் தமிழ் கொடுத்த கொடை என்று சொல்ல முடியும்.  அப்படிப்பட்ட இலக்கிய வகைமை என் மூலமாகவே வெளியே சென்றது.  இது ஏதோ சுயம்புவாக என் மூளைக்குள் உதித்தது அல்ல.  இந்த வகைமைக்காக நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்.  ஒருவர் நகுலன்.  இன்னொருவர், ஃப்ரெஞ்ச் இயக்குனர் கொதார்.  


மேலும், தமிழில் ஒரு பழக்கம் உண்டு.  எல்லா எழுத்தாளர்களிடமுமே இப்படி ஒரு கேள்வி கேட்கப் படுகிறது.  “உங்களுடைய முந்தைய கவிதைத் தொகுப்பு நன்றாக இருந்ததே?  இப்போது வந்திருப்பது அப்படி இல்லையே?” உண்மையில் இப்படிப்பட்ட கேள்வி ஒரு எழுத்தாளனை அவமானப்படுத்தவே செய்கிறது.  இதன் பொருள் ஒன்றுதான்.  தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் கருதுகிறது.  அந்த அவமதிப்பின் அடையாளமே இப்படிப்பட்ட கேள்விகள்.  இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஸீரோ டிகிரி வந்த காலத்தில் அதை என் சக எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதி தவிர வேறு ஒருத்தர் கூட  அதை சிலாகித்து ஒரு வார்த்தை சொன்னதில்லை.  இப்போது அந்த நாவலுக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் வந்து விட்டதால் தவிர்க்க முடியாமல் அதைத் தங்களின் பட்டியலில் சேர்க்கிறார்கள்.  என்னுடைய மற்ற நாவல்களுக்கும் இது நடக்கும்; ஆனால் 20 ஆண்டுகள் ஆகும்
http://www.andhimazhai.com/account/news/new%208.1.09%20003.jpg

3. கேரளச்சூழலை சுந்தர ராமசாமி தொடங்கி நீங்கள் வரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறீர்கள். அங்கு பரந்த வாசகத்தளம் இருக்கிறார்கள். ஆனால் தமிழளவுக்கு ஆழமாக இலக்கிய, விமர்சனச் செயல்பாடுகளும் விவாதங்களும் நடந்திருக்கிறதா...தமிழுடன் ஒப்பிடத்தகுந்த அளவில் சமகால எழுத்தாளர்கள் மலையாளத்தில் உள்ளார்களா? 

இல்லை.  மலையாளத்தில் மட்டும் அல்ல; இந்தியாவிலேயே இல்லை.  அருந்ததி ராயை விட சிறப்பாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள் தமிழில் 50 பேர் இருப்பார்கள்.  ஆனால், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். கேரளத்தில் எழுத்தாளர்களுக்குத்தான் முதல் மரியாதை.  அங்கே ஒரு டஜன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன.  அதுவும் அவை வாரப் பத்திரிகைகள்.  இங்கே வாசகர் எண்ணிக்கை கம்மி.  இதுவே வித்தியாசம். 

4. இணையம் சார்ந்த வாசகர்களை ஏராளமாக வைத்திருப்பவர் நீங்கள். அவர்கள் ஆழமான வாசகர்கள் என்று கருதுகிறீர்களா?

இல்லை.  ஆனால் இணையம் இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  அதைவிட இது பரவாயில்லை.  ஆனால் எல்லோரையும் அப்படிச் சொல்லி விட முடியாது.  எனக்குத் தெரிந்து பல்வேறு சீரியஸான விஷயங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன.  முன்பு சிறுபத்திரிகைகள் இருந்த இடத்தை இன்று இணையம் எடுத்துக் கொண்டிருக்கிறது.  இணையத்தைப் பற்றிய சரியான பரிச்சயம் இல்லாதவர்களே இணைய எழுத்தாளர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  பதர்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் நெல்மணிகளும் இங்கே ஏராளம் என்பதை மறந்து விடக் கூடாது.

5. தமிழில் இணையம் வழியாக முதலில் அதிக வாசகர்களை எட்டியவர் நீங்கள்.. ஆனால் தொடர்ந்து சுயதம்பட்டமும் சுயபெருமையும் அதிகமாக உங்கள் எழுத்துகளில் தொடர்கிறது..ஒரு மொழியில் இயங்கும் முக்கியமான எழுத்தாளன் இந்தளவு தனது ஆளுமையை பெரிதாக்கிக் காட்ட அலட்டிக்கொள்ள வேண்டுமா?


ஒரு கதை சொல்கிறேன்.  வெளியுலகத் தொடர்பே இல்லாத ஒரு பட்டிக்காடு.  அங்கே பிறந்து வளர்ந்த ஒருவன் வெளியே போய் படித்து விளையாடி ஒரு ஒலிம்பிக் மெடலையும் வாங்கினான்.  அதை எடுத்துக் கொண்டு தன்னுடைய பட்டிக்காட்டுக்கு வந்தான்.  தன் தாய்க் கிழவியிடம் காண்பித்துப் பெருமை கொண்டாடினான்.  ஒரு நாணயத்தைப் போல் இருந்த அந்த மெடலை எடுத்துக் கொண்டு போய் பெட்டிக்கடையில் கொடுத்துக் கொஞ்சம் புகையிலை கேட்டாள் கிழவி.  கடைக்காரனோ அதை செல்லாத காசு என்று திருப்பி கொடுத்து விட்டான்.  அந்த ஒலிம்பிக் மெடல் வாங்கியவனின் நிலையில் நான் இருக்கிறேன்.  அந்த கிராமம்தான் தமிழ்நாடு.   நான் வாங்கிய மெடல்களின் பெருமையை அறியாத இந்த ஊரில் நான் தானே அதைப் பற்றிப் பேச வேண்டும்?

உலக ஆட்டோஃபிக்‌ஷனை அறிமுகப் படுத்தியதால் ஒரு ஆங்கில தினசரி அதன் அகில இந்தியப் பதிப்பின் முதல் பக்கத்தில் என் பேட்டியைப் போட்டது. பிரதம மந்திரி போன்றவர்களின் பேட்டிதான் அப்படி வரும் என்று சொன்னார்கள்.  பிறகு, கடந்த பத்தாண்டுகளின் சிறந்த பத்து சாதனையாளர்கள் என்ற பட்டியலில் ஒருவனாக வெளியிட்டது.  அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்ற இருவரில் நானும் ஒருவன்.  இன்னொருவர், ரஜினிகாந்த்.  கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரியை மாடர்ன் ஏசியன் க்ளாசிக்ஸ் என்ற பிரிவில் பாடமாக வைத்திருக்கிறது.  இதையெல்லாம் நான் யாரிடம் போய் சொல்ல?  ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சினிமாக்காரர் தும்மினால் கூட அது தலைப்புச் செய்தியாக வருகிறது.

  எழுத்தாளனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.  அதனால்தான் இதையெல்லாம் நானே சொல்லித் தீர வேண்டியிருக்கிறது.  மேலும், எனக்குப் போலிப் பணிவு பிடிக்காது.  ஒரு மருத்துவர் தான் வாங்கிய பட்டங்களைப் போட்டுக் கொண்டுதானே மருத்துவம் பார்க்கிறார்?  அதைப் போலவேதான் நானும் செய்கிறேன்.  மேலும், நான் என்னைப் பற்றி எதையும் பெரிதாக்கிக் காட்டவில்லை.  உள்ளது எதுவோ அதை மட்டுமே சொல்கிறேன்.  எழுத்தாளர்களைக் கொண்டாடும் கேரளத்தில் இப்படி நானே என் பெருமையைச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை.


6. தமிழ் சினிமா தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக எழுதியும் விவாதித்தும் வருபவர் நீங்கள் . இன்றைய தமிழ்சினிமா பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?


தமிழ் சினிமாவில் மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் சினிமாத் துறையில் செய்த அராஜகத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது முடங்கிக் கிடந்தது.  இனிமேல் நிலைமை திருந்தி விடும்.  இது ஒருபுறம் இருக்க, விஷ விருட்சத்தைப் போல் பரந்து விரிந்து கிடக்கும் வணிக சினிமாதான் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆபத்து.  நல்ல சினிமா எடுப்பவர்கள் கூட வணிக சினிமாவின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி சில பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.  இன்னொரு பிரச்சினை, தணிக்கைத் துறை.  சினிமா பற்றி எதுவுமே தெரியாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சினிமாவை மதிப்பீடு செய்ய என்ன தகுதி இருக்கிறது?  இவர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவை யாராலும் காப்பாற்ற முடியாது.  உடனடியாக இந்த அதிகாரிகள் தணிக்கைத் துறையிலிருந்து விரட்டப்பட்டு அங்கே கலைஞர்களும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் நியமிக்கப்பட வேண்டும்.  இது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப கட்ட வேலை.    
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin1lZ703JltrRmx7vIUUL1o81IEpWaUVE1k6JX_j5XHuw2eYV0xvsruRfwSeZ3JrO5xCwZI4nQ6YR29qhmDTxUxG8evRr7jKTxKDQNnUbF3MDHunjSjyg7w3aW91AyFh5VyAPIX3hyphenhyphenegM/s400/CIMG0427.JPG
 
7.ஒரு ஆளுமையை திடீரென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், தூற்றுவதும் உங்களுடைய செயல்பாடுகளில் தொடர்வதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?

 என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது.  நகுலன், ஆதவன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கோபி கிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், தர்மு சிவராமு என்று என் முன்னோடி எழுத்தாளர்களை கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கிறேன்.  யாரையும் தூற்றியதில்லை.  கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  என்றைக்குமே பாராட்டியதில்லை.  ஆனால் ஒரு சாமியாரைப் பாராட்டினேன்.  அவர் ஒரு போலிச் சாமியார் என்று பிறகுதான் தெரிந்தது.  அப்படித் தெரிந்த பிறகும் நான் ஏற்கனவே பாராட்டியவர் ஆயிற்றே என்பதற்காகத் தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்க முடியுமா?  இன்று என் மனதுக்கு உகந்தவனாக இருக்கும் ஒரு கவிஞன் நாளையே நடிகர் விஜய்யைப் பாராட்டி கவிதை எழுதினால் அவனைத் தூற்றத்தானே வேண்டியிருக்கும்?

8. உங்களது எழுத்துவாழ்க்கை உங்களுக்கு தந்தது என்ன?

இழந்தைதைச் சொன்னால்தானே பெற்றதைச் சொல்ல முடியும்? இழந்தவை: எழுத்துலக நண்பர்கள், குடும்பம், அன்றாட வாழ்வின் கொண்டாட்டங்களும் சுக துக்கங்களும், பணம், செக்ஸ்.  பெற்றது ஒன்றே ஒன்று: வாசக நண்பர்கள்.  மைக்கேல் ஜாக்ஸனைப் போன்ற ஒரு பாப் ஸ்டாரின் ரசிகர்களைப் போல் என் மீது உயிரையே வைத்திருக்கும் வாசகர்களும் அவர்களோடு நான் கொண்டுள்ள உறவும்தான் இந்த எழுத்து எனக்குத் தந்தது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAsayE5O8A_GSNw-r18O7XPF6CcZ22tDF3ASN3OYZHR2lAD95SzvlBGBetD4mq3aIWVXuexkXay-V6voy2etWEuJaekZtHo-IEuiMf-uoqn4EPwRK-3B8M7ONOz8IMiv8N1YY_v3nQEmU/s400/soro1.jpg


9. இளைஞர்கள் தான் உங்கள் வாசகர்கள் என்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்துகளுக்குள் நவீன வாழ்க்கையின் வேகமயமான மாற்றங்கள் சார்ந்து குறிப்பாக பாலியல் பண்பாடு சார்ந்து ஒரு அசூயை தொடர்ந்து வெளிப்படுகிறதே..இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அசூயை வெளிப்படுவது உண்மைதான்.  ஆனால் இது பாலியல் ஒழுக்கம் சார்ந்தது அல்ல.  அன்பும், அறிவார்த்தத் தேடலும் இல்லாமல் வெறும் உடல் கவர்ச்சி ஒன்றையே ஆதாரமாகக் கொண்ட இன்றைய ஆண்/பெண் உறவையே நான் கடுமையாக விமர்சிக்கிறேன்.  இருந்தும் ஏன் இளைஞர்கள் என் எழுத்தைப் படிக்கிறார்கள் என்றால் நான் அவர்களின் உலகில் இருந்து கொண்டு இந்த விமர்சனத்தைச் செய்கிறேன்.  வெளியில் இருந்து அல்ல.  அதன் காரணமாகவே அவர்கள் என் விமர்சனத்தை ஆர்வத்தோடும் பதற்றத்தோடும் எதிர்கொள்கிறார்கள். காமரூப கதைகள் மற்றும் ராஸ லீலா ஆகிய இரண்டு நாவல்களும் இளைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நாவல்கள்.   இதை அவர்கள் ஒரு உரையாடலாகவே எடுத்துக் கொண்டார்கள்.  மற்ற எழுத்தாளர்கள் இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தாமல் வெளியே நின்று கொண்டு போதனைகளும் அறிவுரைகளும் செய்வதால் இந்த இளைஞர்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.


10. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனிமொழி பெயர் சர்ச்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரை உங்கள் புத்தக வெளியீடுக்கு அழைத்துவிட்டு பின்னர் அவரை ஊழல்வாதி என்று விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?

உங்கள் கேள்வியில் ஒரு சிறிய தகவல் பிழை உள்ளது.  கனிமொழியையும் ராசாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து நான் கடுமையான மொழியில் விமர்சித்து வருகிறேன்.  கனிமொழி என்னுடைய புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய அன்றுதான் ஒரு பிரபல பத்திரிகையில் ’இப்படிப்பட்ட ஊழல் செய்பவர்கள் தேசத் துரோகிகள்; இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று எழுதினேன். அதையும் படித்து விட்டுத்தான் அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தார்.

ஆனால் இப்பேர்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்றே நான் விரும்பினேன்.  தனிப்பட்ட முறையில் அது என் கொள்கைக்கும் வாழ்வியலுக்கும் முரணானது.  ஆனால் நான் இந்த விஷயத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது.  என்னுடைய புத்தக வெளியீட்டாளரின் விருப்பத்தின் பேரிலேயே கனிமொழி அழைக்கப்பட்டார்.  இனிமேல் இது போன்ற பிழைகள் நடக்காது.  இனிமேல் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்களால் மட்டுமே நடத்தப்படும்.  இனிமேல் என்னுடைய  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிய முடிவுகளை நான் மட்டுமே எடுப்பேன்.

11. ஜெயலலிதா சுயநலமில்லாதவர் என்று சமீபத்தில் துக்ளக்கில் எழுதியிருந்தீர்கள்..அது மிகையான கூற்றாக உங்களுக்குப் படவில்லையா?


 இல்லை.  ஜெயலலிதா சுயநலம் இல்லாதவர் என்றே நான் நினைக்கிறேன்.  கருணாநிதியின் குடும்பத்தில் சுமார் 500 பேர் இருப்பார்கள்.  தமிழகத்தின் அத்தனை துறைகளும் அவர்கள் கையில்தான் இருந்தன; இருக்கின்றன.  ஜெயலலிதா ஒரே ஆள்.  உலகில் தனித்து வாழும் மனிதர்கள் சுயநலம் கருத வேண்டிய அவசியமே இல்லை.