Showing posts with label THE OUT LAWS (2023) - அமெரிக்கா - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label THE OUT LAWS (2023) - அமெரிக்கா - சினிமா விமர்சனம். Show all posts

Tuesday, August 01, 2023

THE OUT LAWS (2023) - அமெரிக்கா - சினிமா விமர்சனம் ( பேங்க் ராபரி -ஆக்சன் காமெடி த்ரில்லர் ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


இதே  டைட்டிலில்  வெவ்வேறு  கால  கட்டங்களில் ஆறு  படங்கள் , ஏழு  வெப்  சீரிஸ்கள்  ரிலீஸ்  ஆகி  உள்ளன/ எல்லாமே  வேறு  வேறு  கதைகள் . அவுட்  லா  என்பதற்கு  சட்டத்திற்குப்புறம்பாக  வாழ்பவர்கள்  என்று  அர்த்தம்   நெட்  ஃபிளிக்சின்  நேரடி  ரிலீஸ்  ஆன  இப்படம்  2023  ஜூலை 7  அன்று  வெளியானது . காட்சி  ரீதியாக  ஏ  காட்சிகள்  இல்லை  என்றாலும்  வசனங்களில்  பச்சை  வாசம்  அடிப்பதால்  ஏ சர்ட்டிஃபிகேட்  உடன்  வந்துள்ளது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  பேங்க்  மேனேஜர் ,. தன்  காதலியை  மணக்க  இருக்கிறார். இன்னும்  ஒரு  வாரத்தில்   திருமணம். அத்திருமணத்துக்கு  இரு  தரப்புப்பெற்றோரும்  வர  இருக்கிறார்கள் , அவர்களை  நன்கு  கவனித்துக்கொள்ள  வேண்டுமே  என்ற  கவலையில்  நாயகன்  இருக்கிறார்


நாயகியின்  பெற்றோர்  அமேசான்  காடுகளில்  வாழ்ந்தவர்கள்  என்பதால்  கொஞ்சம்  நாகரீகம்  இல்லாமல்  இருப்பார்கள் , தன்  பெற்றோர்  ஏற்றுக்கொள்வார்களா? என்ற  கவலை  நாயகனுக்கு 


 நாயகியின்  பெற்றோர்  வருகிறார்கள் . பார்ட்டியில்  மப்பில்  நாயகன்  தன்  பேங்க்  செக்யூரிட்டி சிஸ்டம்  பற்றி  வருங்கால  மாமியாரிடம்  உளறி  விடுகிறான் 


 அடுத்த  நாள்  நாயகனின்  பேங்க்  கொள்ளை  அடிக்கப்படுகிறது . கொள்ளை  அடித்த  நபர்கள்  இருவர் . அவர்கள்  தன்  வருங்கால  மாமனார் - மாமியார்தான்  என்ற  சந்தேகம்  நாயகனுக்கு 


 அதே போல்  போலீசுக்கு  நாயகன்  மீது  சந்தேகம் . இந்த  பேங்க்  கொள்ளைக்கு  நாயகன்  ஒரு  முக்கியமான  காரணம்  ஆக  இருந்திருப்பான்  என  நினைக்கிறார்கள் 


 இப்போது  ஒரு  கட்டத்தில்  நாயகனின்  வருங்கால  மாமனார் , மாமியார்  இருவரும்  தாங்கள்  தான்  பேங்க்  கொள்ளையர்கள்  என  ஒத்துக்கொள்கிறார்கள் . இன்னும் 5  நாட்களில்  5  மில்லியன்  டாலர்  கொள்ளை  அடித்து  ஒரு  நபரிடம்  தர  வேண்டும்  அப்படி  இல்லை  என்றால்  நாயகியை  உயிருடன்  பார்க்க   முடியாது , பணயக்கைதி  போல்  நாயகி 


\ இப்போது  நாயகனும்  பேங்க்  கொள்ளைக்கு  தயார்  ஆகிறார். அவர், வருங்கால  மாமனார், வருங்கால  மாமியார்  மூவர்  கூட்டணியில்   இரு  வெவ்வேறு  பேங்க்  கொள்ளைகளை  எப்படி  செய்தார்கள்  என்பதே  காமெடி  களேபரமான  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன் - நாயகி  இருவரும்  காமெடி  நடிப்பில்  களை  கட்ட  வைக்கிறார்கள் . அதே  போல்  நாயகனின்  வருங்கால  மாமனார் - மாமியார்  இருவரும்  ஆக்சன், காமெடி இரண்டிலும்  அதகளப்படுத்துகிறார்கள் . நாயகனின்  பெற்றோருக்கு  அதிக  வாய்ப்பு  இல்லை 

ஒன்றரை  மணி  நேரம்  ஓடும்  அளவு  டைம் டியூரெஷன்  இருக்கிறது , கச்சிதமான  எடிட்டிங், பிரம்மாண்டமான  ஒளிப்பதிவு . பின்  பாதி  சேசிங்  காட்சிகள் , ஆக்சன்  சீக்வன்ஸ்  எல்லாம்  ஆக்சன்  ரசிகர்களுக்கு  விருந்து . முதல்  பாதி  காமெடிகள்  வசனத்தாலேயே  படம்  கலகலப்பாகச்செல்கிறது 


சபாஷ்  டைரக்டர்

1   ஓப்பனிங்  காட்சிகளில் இரு  தரப்புப்பெற்றோருக்கும்  நடக்க  இருக்கும் ஈகோ கிளாஸ்  தான்  படம்  என்ற  எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி  அப்படியே  யூ  டர்ன்  அடித்து  திரைக்கதையை  ராபரி  திரில்லர்  ஆகக்கொண்டு  போன  சாமார்த்தியம்  அருமை 


2   தம்பதி  தனிமையில்  இருப்பது  போன்ற  காட்சிகள்  இருந்தும்  வரம்பு  மீறாமல்  கண்ணியம்  காத்த  விதம் குட் 


3  பேங்க்  லேடி  மேனேஜரை  உசுப்பேற்றி  செக்யூரிட்டி  சிஸ்டம்  பற்றிய  உண்மைகளை  வர  வைக்கும்  நாயகனின்  சாமார்த்தியம்  கலக்கல் காமெடி 



  ரசித்த  வசனங்கள் 


1 உங்க  பொண்ணு  கிட்டே  தான்  நான்  யோகா  க்ளாஸ்  போனேன். முத  நாளே  என்னைப்பார்த்து  அவ  சிரிச்சா


 அடுத்த  நாளே  டேட்டிங்க்கு  கூப்பிட்டிருப்பியே?

அதான்  இல்லை . ஒன்றரை  வருசம்  ஒழுங்கா  க்ளாஸ்  போனேன், என்  ஒழுக்கத்தைப்பார்த்துதான்  உங்க  பொண்ணு  வழுக்கி  விழுந்துட்டா 


2  இனிமே  கேக்  எல்லாம்  கேக் காதீங்கனு  பேக்கரிக்காரன்  ஃபோன்  பண்ணி  சொல்லிட்டான். குனியும்போது  குதிரை  நெஞ்சுலயே  மிதிச்சிடுச்சாம், ஹார்ட்  வாய் வழியா  வந்துச்சாம் 


3  அவன்  ஒரு  மோசமான  ரேசிஸ்ட் 

 அப்போ  நல்ல  ரேசிஸ்ட்  எல்லாம்  இருக்காங்களா?

அதான்  என்  பாட்டி  இருக்காங்களே? 



4 அவங்க  வர்றாங்க ,நீங்க  வழக்கமாப்பேசற  மாதிரி  நடிங்க 


 புரியல 


 கொஞ்சம்  கூட  கூச்சமே  இல்லாம  பர்சனல்  விஷயங்களைப்பற்றிக்கேட்பீங்களே?


5 என்  கெட்டப்  பற்றி  நீங்க  எதுவுமே  சொல்லலையே? ஏதாவது  சொன்னாத்தானே  அடுத்த டைம்  நான்  இம்ப்ரூவ்  பண்ணிக்க  முடியும் ? வெயிட்  ஏத்தனும்னாக்கூட  சொல்லிடுங்க, ஏத்திக்கலாம்


6  அந்த  பேங்க்கை  ஒருத்தராலயும்  கொள்ளை  அடிக்க  முடியாதுனு  நீதானே  சொன்னே?


 ஒருத்தராலதான்  முடியாதுன்னேன், நாமதான்  மூணு  பேரு  இருக்கோமே? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   காட்சி  ரீதியாக  அடல்ட்  கண்ட்டெண்ட்  இல்லை , வசனத்தில்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஜாலியாக  சிரிக்க  விரும்புபவர்கள்  அவசியம்  காண  வெண்டிய  மெலோ  டிராமா . ரேட்டிங்   2.75 / 5


The Out-Laws
The Out Laws poster.png
Release poster
Directed byTyler Spindel
Written by
Produced by
Starring
CinematographyMichael Bonvillain
Edited by
  • Ian Kezsbom
  • Phillip Kimsey
Music byRupert Gregson-Williams
Production
company
Distributed byNetflix
Release date
  • July 7, 2023
Running time
95 minutes
CountryUnited States
LanguageEnglish