நடைப்பயிற்சி உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் எளிய உடற்பயிற்சி . இது கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செய்யும் அருமையான உடற்பயிற்சி. இதை நாம் நம் மனம் ;போன போக்கில் செய்யும்போது சில நாட்கள் சோம்பல் காரணமாக நமக்கு நாமே லீவ் கொடுத்துக்கொள்வோம், ஆனால் வாக்கிங் ஆப் பை டவுன் லோடு செய்து கொண்டால் அதன் மூலம் நாம் எத்தனை கிமீ நடக்கிறோம், எத்தனை ஸ்டெப்ஸ்? எத்தனை கலோரிகளை எரிக்கிறோம், ரூட் மேப் எல்லாம் அப்டேட் ஆகி விடும், அதை சமூக வலைத்தளங்களில் பகிரும்போது நமக்கு ஒரு ஊக்குவிப்பு கிடைக்கும், அதைப்பார்த்து பலர் அதை ஃபாலோ பண்ணும் வாய்ப்பும் உண்டு . ஒரு நாள் வாக்கிங் போகவில்லை என்றாலும் நம் உள் மனம் இன்று அப்டேட் போட முடியாது , எல்லாரும் கேள்வி கேட்பார்களே? என்பதற்காகவாவது வாக்கிங் போவோம்
கூகுள் ஃபிட் , மீ ஃபிட் , ஸ்டார்வா போன்ற பல வாக்கிங் ஆப்கள் ப்ளேஸ்டோரில் கிடைக்கின்றன. ப்ளூ டூத் , ஜிபிஎஸ் ஆன் பண்ணி விட்டு இந்த ஆப்பை டவுன் லோடு பண்ணி ஓப்பன் பண்ணி நடந்தால் நெட் ஒர்க் கவரேஜ் இல்லாத ஏரியாக்களில் வாக்கிங் போனாலும் அது அப்டேட் ஆகிவவிடும்.\
ஸ்பாய்லர் அலெர்ட்
இப்போ படத்தோட கதைக்கு வருவோம். நாயகன் , நாயகி இருவரும் தம்பதிகள் , அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் . வாழ்க்கை நல்லா போய்க்கொண்டு இருந்தாலும் நாயகிக்கு ஏதோ ஒரு மனக்குறை .
ஒரு பார்ட்டியில் தன் தங்கையைப்பார்த்து பேசிக்கொண்டு இருக்கும்போது அவள் இந்த மேரேஜ் ஆப் பற்றி சொல்கிறாள். ஈக்குலிபிரியம் என்ற அமைப்பு குறிப்பிட்ட அளவு கட்டணம் வாங்கிக்கொண்டு தம்பதிகள் இருவர் கையிலும் ஒரு வாட்ச் அல்லது பிரேஸ்லெட் போல ஒரு கருவியைப்பொருத்தி விடுவார்கள் . தம்பதிகள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவும்போது அவர்கள் கணக்கில் பாயிண்ட்ஸ் ஏறும். இதனால் பாயிண்ட்ஸ் பெறுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்பாக , ஒத்தாசையாக இருப்பார்கள்
இருவரும் அந்த அமைப்புக்குச்சென்று அதில் பணம் கட்டி சேர்கின்றனர் அதற்குப்பின் அவர்கள் வாழ்க்கை அமைப்பே மாறுகிறது . போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் அன்பு மழை பொழிகிறார்கள் . ஒரு கட்டத்தில் இருவரும் குறுக்கு வழிகளில் பாயிண்ட்ஸ் ஏற்ற முயல்கின்றனர்
நாயகி தன் தோழியை பார்ட்டிக்கு வர வைத்து கணவனுடன் பேச வைத்து நாயகிக்கு நாயகன் உண்மையாக இல்லை என மைனஸ் பாயிண்ட்டை அவனுக்கு பெற்றுத்தருகிறாள்
நாயகன் தன் தோழன் ஒருவனின் உதவியோடு நாயகியை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளை அடிக்க வைத்து அந்தப்பொருட்களை மீட்பது போல டிராமா போட்டு பாயிண்ட்ஸ் ஏற்றிக்கொள்கிறான்
இருவருக்கும் இந்த மோசடிகள் தெரிய வரும்போது பிரிவு வ்ருகிறது. இதற்குப்பின் தம்பதிகள் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் க்ளைமாக்ஸ்
ஒரு சாதாரண எளிமையான கதைகக்ரு தான் , ஆனால் அதை மிக அழகாக திரைக்கதை ஆக்கி கே பாக்யராஜ் திரைக்கதை அமைக்கும் பாணியில் எடுத்த விதம் நன்றாக இருக்கிறது
நாயகனாக , நாயகியாக லுசானா லோபிலாட்டோ மற்றும் ஜ்வான் மினிஜின் இருவரும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள் . இருவரின் வாரிசுகளும் கொள்லை அழகு , சுட்டித்தனமான நடிப்பு
கேப்ரியலின் கச்சிதமான திரைக்கதைக்கு உயிர் ஊட்டி இயக்கி இருப்பவர் செபாஸ்டியன் டி கரோ. 101 நிமிடங்கள் ஓடும் அளவு நீட்டாக எடிட் செய்து இருப்பவர் ஜூவான் மேனுவ்ல். இசை பீட்ரோ ஒனாட்டோ . ப்டம் முழுக்க அர்ஜெண்ட்டைனாவில் படம் ஆக்கப்பட்டிருக்கிறது
இந்தப்படம் நெட் ஃபிளிக்சில் ஆங்கில சப் டைட்டில் உடன் கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 படத்தோட ஓப்பனிங் சீன்ல இருந்தே நேரடியா கதைக்குள் செல்வது
2 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் அந்த சுட்டிப்பெண் எடுக்கும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆவதும் . ஸ்கூல் நிர்வாகம் நாயகன், நாயகியை அழைத்து புகார் சொல்லும்போது அந்த வீடியோவைப்பார்த்து இவர்கள் பூரிப்பதும் கிளாசிக்
3 க்ளைமாக்சில் சொல்ல வரும் சோசியல் மெசேஜ்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 பொதுவாக லேடீசுக்கு பொசசிவ்னெஸ் அதிகம்., அப்படி இருக்கும்போது நாயகி தன் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஜாலியாக சிரித்துப்பேசுவதை க் கண்டு கொள்ளவில்லை என்றதும் நாயகனுக்கு ஏன் சந்தேகம் வரவில்லை ?
2 நாயகனும், நாயகியும் ரொமாண்டிக்காக பேசுவது , முத்தம் இடுவது எல்லாவற்றையும் மகள் வீடியோ எடுக்கிறாள் நேரடியாக அவர்கள் பார்க்கும் கோணத்தில் தான் எடுக்கிறாள், ஆனால் அவர்கள் அதைக்கண்டு கொள்ளவில்லை . ஃபோனை வாங்கி செக் பண்ணி இருக்கலாமே? ஒவ்வொரு டைமும் வீடியோ பண்றியா? என உதட்டளவில் கேப்பதோடு சரி
3 குடும்பம், தாம்பத்யம் எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருக்கும்போது ஏதோ வெறுமையை உணர்கிறேன்னு பொத்தாம் பொதுவா நாயகி சொல்றாரே தவிர என்ன பிரச்சனை என்பதை சொல்லவே இல்லை
4 அடிக்கடி நாயகன், நாயகி இருவரும் லாங்க் ட்ரிப் போய் நைட் வெளில ஸ்டே பண்றாங்க . வீட்டில் குழந்தைகளை யார் பார்த்துக்கறாங்க? பணியாட்களும் இல்லை , பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லை
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - பெரிய அளவில் திருப்பங்களோ , விறுவிறுப்போ இல்லாத சாதாரணமான காமெடி மெலோ டிராமா, ஸ்லோவாதான் போகும் . ரேட்டிங் 2. 5 / 5