ஸ்பாய்லர் அலெர்ட்
சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் பற்றிய ஒரு டாகுமெண்ட்ரி படம் இது . மொத்தம் நான்கு எபிசோடுகள் . ஒவ்வொன்றும் 40 லிருந்து 45 நிமிடங்கள் . முதல் இரண்டு எபிசோடுகள் நாம் அறியாத பல தகவல்கள் சுவராஸ்யமாக சொல்லப்பட்டிருக்கின்றன. காரணம் அவை எல்லாம் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தவை . மூன்றாம் எபிசோடு ராஜ்குமார் கடத்தல் சம்பவம், அதைப்பற்றி நக்கீரன் வார இதழில் ஜூ வி யில் மற்றும் மீடியாக்களில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறொம். நான்காம் எபிசோடு ஆம்புலன்சில் வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவம், இதுவும் நாம் பேப்பர்களில் , டி வி க்களில் கண்டிருக்கிறோம்
இந்த டாகுமெண்ட்ரி டிராமாவில் கற்பனைக்கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை . எல்லாமே வாழ்ந்த மனிதர்கள் தான் . வீரப்பன் தரப்பு ஆட்கள் , போலீஸ் , ஆட்கள் , ஃபாரஸ்ட் ஆஃபீசர்ஸ் இவர்களைக்கொண்டே பேட்டி வடிவில் எடுக்கப்பட்டு இருக்கிறது . வீரப்பனின் மனைவி முத்து லட்சுமியின் பேட்டிகளும் இருக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 பிரமாதமான ஒளிப்பதிவு . ஏரியல் வ்யூவில் ஃபாரஸ்ட் ஏரியாக்களைக்காட்டும்போதெல்லாம் பிரமிப்பு கூடுகிறது
2 வீரப்பன் பக்கமோ , போலீஸ் பக்கமோ சாய்ந்து விடாமல் நடு நிலையாக இரு தரப்பு நியாயங்கள் , அநியாயங்கள் இவற்றை பட்டியல் இடுகிறது
ரசித்த வசனங்கள்
1 வீரப்பனிடம் ஒரு மனைவியா உங்களுக்குப்பிடிச்ச விஷயம் என்ன?
நம்பிக்கையான ஆள்னா உயிரைக்கொடுத்தாவது அவரைக்காப்பாற்றும் குணம் , அதே சமயம் அவருக்கு துரோகம் இழைத்தால் உயிரையே எடுக்கனும்னு நினைப்பாரு
2 ஒரு திருடனைப்பிடிக்க ரெண்டு வழிகள் இருக்கு 1 அவன் இருக்கற இடத்தை தேடிக்கண்டுபிடிப்பது 2 அவனை சரண்டர் பண்ண வைப்பது
3 சில மனிதர்களைத்திருத்தவே முடியாது . நாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்
4 எந்த ஒரு க்ரைம் நடந்தாலும் அது எப்படி உருவாச்சு என்பதைக்காட்ட அதை மீண்டும் நாங்கள் ( போலீஸ்) உருவாக்குவோம்
5 ஒரு ஆஃபீசரா நான் கத்துக்கிட்ட விஷயம் ஒருத்தரைக்கோபப்படுத்தக்கூடாது , கட்டுப்படுத்தக்கூடாது
6 என்னைக்கு இருந்தாலும் நானும் ஒரு நாள் செத்துதான் ஆகனும், ஆனா என் சாவு ஒரு போதும் போலீஸ் கையால் நிகழக்கூடாது என நினைக்கிறேன்
7 ரகசியம் என்பது இரு நபருக்கு இடையே இருப்பது . மூன்றாவது நபருக்குத்தெரிய வந்தால் அது செய்தி
சில தகவல்கள்
1 தமிழக - கர்நாடக எல்லையில் இருக்கும் கோபிநத்தம் தான் வீரப்பனின் சொந்த ஊர்
2 வீரப்பனின் மனைவி முத்து லட்சுமிக்கு 14 வயது ஆன போது வீரப்பனுக்கு 39 வயது . அப்போதான் லவ் ப்ரொப்போஸ் பண்ணாரு
3 கிட்டத்தட்ட 1000 யானைகளைக்கொன்று தந்தங்களை எடுத்திருப்பான்
4 எம் எம் ஹில்ஸ் மலைப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருந்தன. உலக அளவில் சந்தனத்துக்கும், அதன் வாசனை எண்ணெய்க்கும் நல்ல மார்க்கெட் இருந்ததால் வீரப்பன் யானை தந்தத்திலிருந்து சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டான்
5 பெரிய மீசை என்பது ஆதிக்கம், பலம் இவற்றின் அடையாளம். அந்தக்காலங்களில் ஜமீன் தாரர், நில சுவான் தாரர்கள் தான் பெரிய மீசை வைத்திருந்தார்கள்
6 உலக அளவில் அதிக ச்ந்தனக்கட்டைகளைப்பறிமுதல் செய்தது தமிழகம் தான் . முதல் ஆபரேஷனில் 65 மெட்ரிக் டன் சந்தன மரங்கள் கைப்பற்றப்பட்டன
7 கர்நாடகாவில் 1989-1990 கால கட்டத்தில் வீரப்பனைப்பிடிக்க ஸ்பெசல் ஃபோர்ஸ் உருவாக்கப்பட்டது ( எஸ் டி எஃப்)
8 கர்நாடக அதிகாரி சீனிவாஸ் காந்திய வழியில் செயல்பட்டு பலரை சரணடைய வைத்தார், ஆனால் பல அதிகாரிகளுக்கு சீனிவாசைப்பிடிக்கவில்லை
9 சீனிவாஸ் வீரப்பனின் தங்கை மாரியம்மாவுக்கு நர்ஸ் வேலை வாங்கிக்கொடுத்தார். மாரியம்மா உடன் சீனிவாஸ் ஜீப்பில் சுற்றுவதைப்பார்த்து காவலர்களே இருவரையும் இணைத்து கிசுகிசு எழுப்பினர்
10 வீரப்பன் தன் தங்கை மாரியம்மாவுக்கு கடிதம் எழுதினான். நான் இங்கே காட்டுக்கே ராஜாவா இருக்கேன், நீ அங்கே என்ன பண்ணிட்டு இருக்கே? சீனிவாசன் கூட தொடர்பில் இருக்கியா? நீ நிஜமாவே என் தங்கையா இருந்தா கொதிக்க வைத்த எண்ணையை ஊற்றி சீனிவாசை கொல். இல்லைன்னா என் முகத்தில் விழிக்காதே
11 வீரப்பனின் கடிதம் கண்டு பயந்து மாரியம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
12 வீரப்பனின் சகோதரன் அர்ஜூனை வைத்து வீரப்பனை சரண்டர் செய்ய வைக்க சீனிவாஸ் திட்டம் இட்டார். வீரப்பனும் சரண்டர் ஆவதாக ஒத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு சீனிவாசை வரச்சொன்னான்
13 காட்டில் 6 கிமீ நடந்தே வந்த சீனிவாசனை வீரப்பன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். தன் தங்கையின் மரணத்துக்கு சீனிவாசன் தான் காரணம் என நினைத்தான், பழி வாங்கினான்
14 வீரப்பனின் தலைக்கு ரூ 20 லட்சம் பரிசு என கர்நாடக அரசு அறிவித்தது. 1991 ல் அந்தத்தொகை மிகப்பெரியது
15வீரப்பன் எப்போதும் தன் தாக்குதலை ஹேர்பின் பெண்டில் தான் செய்வான், காரணம் அங்கேதான் வண்டி ஸ்லோ ஆகும்
16 வீரப்பன் செய்த பெரிய தப்பே தானும் தன் கூட்டாளிகளும் மக்களுக்குப்போய்ச்சேர வேண்டும் என தங்கள் ஃபோட்டோக்களை பிரஸ் மூலம் ஓப்பன் செய்ததுதான் . மனைவி முத்து லட்சுமியின் எதிர்ப்பையும் மீறி வீரப்பன் தன் ஆட்களின் ஃபோட்டோக்களை வெளியிட்டான்
17 காட்டுக்குள் மனித மலம் மஞ்சளாக இருந்தால் அது கிராம மக்கள் கூடிய இடம் , ஏனெனில் அரிசி சாதம் சாப்பிடுபவர்கள் மலம் மஞ்சளாக இருக்கும், கறுப்பாக இருந்தால் வீரப்பன் ஆட்கள், ஏன் எனில் ராகி சாப்பிடுபவர்கள் மலம் கறுப்பாக இருக்கும்
18 முத்து லட்சுமி வீரப்பன் பிடிப்பட்ட போது அவள் கழுத்தில் முக்கா கிலோ எடை உள்ள தங்க செயின் இருந்தது
19 வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி அளித்த பேட்டியில் அவரது மார்பு , பெண் உறுப்பு ஆகியவற்றில் கரண்ட் ஷாக் கொடுத்த போலீசின் கொடுமை பற்றிக்கூறுகிறார்
20 1998-1999 ஆகிய இரு வருடங்கள் அமைதியாக இருந்த வீரப்பன் 2000 ஆண்டில் ராஜ்குமாரை கடத்தினான்
21 வீரப்பனுக்கு விடுதலைப்புலி இயக்கம், மற்றும் தமிழ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது . அதனால் பணயக்கைதியாக ராஜ்குமாரை வைத்து அவன் விடுத்த கோரிக்கைகளில் பத்து கோரிக்கைகளில் பெரும்பாலும் கன்னட - தமிழர் மோதலை ஏற்படுத்துவதாக இருந்தது
22 வீரப்பன் விதித்த நிபந்தனைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய , செயலாக்கக்கூடிய நிபந்தனைகளில் ஒன்றே ஒன்று வீரப்பனின் சொந்தக்காரர்கள் , அப்பாவி கிராமத்து மக்கள் ஜெயிலில் இருந்தவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே
23 மீடியாக்களில் வராத செய்தி 11வது கோரிக்கையாக 1000 கோடி ரூபாய் பணம் கேட்டானாம், 900 கோடி தங்கமாகவும் 100 கோடி ஹாட் கேஷ் ஆகவும்..
24 வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் மனைவி முத்து லட்சுமியை மகளை பார்க்க வேண்டும் என வைக்காதது மனைவிக்கு ஏமாற்றம். முத்து லட்சுமி 10 வருடங்களாக போலீசின் கஸ்டடியில் இருந்ததால் போலீசின் ஆளாக மாறி விட்டாரோ என ச்ந்தேகப்பட்டிருக்கலாம்
25நான் செத்தாலும் போலீசுக்கு என் டெட் பாடி கிடைக்கக்கூடாது , என்னைத்தேடி தேடி அவங்க முட்டி தேயனும் என வீரப்பன் சொல்வதுண்டாம்
26 கோவையில் ஒரு பங்களாவுக்கு முத்து லட்சுமியை போலீஸ் அனுப்பியது . அந்த வீட்டில் ஒரு லேடி இருந்தார். அவர் போலீஸ் இன்ஃபார்மர். அவர் முத்து லட்சுமியை பிரெய்ன்வாஷ் செய்து தான் வீரப்பனை நேரில் சந்திக்க விரும்புவதாக அந்தப்பெண் தூண்டில் போடுகிறாள். அவள் போலீஸ் ஆள் என்பது முத்துலட்சுமி க்கு அப்போது தெரியாது
27 வீரப்பன் ஒரு தூதுவன் மூலமாக விடுதலைப்புலி பிரபாகரனை அணுகி இலங்கையில் செட்டில் ஆக தான் விரும்புவதாக சொன்னபோது பிரபாகரன் இப்போது போர் சூழல் நிலவுகிறது. உங்களை அதில் ஈடுபடுத்த எனக்கு விருப்பம் இல்லை , ஏதாவது வெளிநாட்டுக்கு உங்களை அனுப்பி வைக்கிறேன் என பிரபாகரன் வீரப்பனிடம் சொன்னதாக வீரப்பன் முத்து லட்சுமியிடம் சொன்னானாம்
28 2004 ஆம் ஆண்டு போலீசாரால் வீரப்பன் கொல்லப்பட்டான். கண் ஆபரேஷனுக்காக ஆம்புலன்சில் வந்த போது போலீசின் திட்டத்தால் அந்த மரணம் நிகழ்ந்தது. ஆனாலும் இந்த சாவில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுகிறது
29 வீரப்பன் 2004 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட போது அவன் வயது 52. அவனைப்பிடிக்க தமிழக - கர்நாடகா போலீஸ் ஃபாரஸ்ட் ஆஃபீசர்ஸ் மொத்தம் 5000 பேர் பணியில் ஈடுபட்டார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ தான் , காட்சி ரீதியாக எதுவும் இல்லை , வீரப்பன் கேசட்டில் அனுப்பிய செய்தியில் மட்டும் போலீசை திட்டும் கெட்ட வார்த்தைகள் 3 இடங்களில் உண்டு
தனிப்பட்ட முறையில் என் சந்தேகங்கள்
1 வீரப்பனின் மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்தபோது சரண்டர் ஆகி இருக்கிறார். ஆனால் அவரை பொறியாக வைத்து வீரப்பனைப்பிடிக்க எந்த முயற்சியும் போலீஸ் எடுக்க வில்லையா?
2 ஒரு குழந்தை பிறந்த பின் குழந்தையை பெற்றோரிடம் கொடுத்து விட்டு நீ காட்டுக்கு வா என வீரப்பன் சொன்னதும் முத்து லட்சுமி போய் இருக்கிறார். அவரை கண்காணிக்க போலீஸ் ஆள் போடவே இல்லையா? என்னை போலீஸ் ஃபாலோ பண்ணவும் இல்லை , கண்டுக்கவும் இல்லை என முத்து லட்சுமியே பேட்டியில் கூறி இருக்கிறார்.
3 ராஜ்குமார் கடத்தலில் வீரப்பனுக்கு அஃபிஷியலாக 100 கோடி ரூபாய் தரப்பட்டதாகக்கூறப்படுகிறது . அது தமிழக , கர்நாடக அரசின் 50% 50% பங்கா? ராஜ்குமார் ஃபேமிலி கொடுத்த பணமா? என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - போர் அடிக்காமல் போகும் க்ரைம் டாக்குமெண்ட்ரி டிராமா . ஆண்களுக்குப்பிடிக்கும் . ரேட்டிங் 2. 5 / 5
The Hunt for Veerappan | |
---|---|
Genre | True crime docuseries |
Based on | Veerappan |
Directed by | Selvamani Selvaraj |
Composer | Jhanu |
Country of origin | India |
Original languages | English Tamil Kannada |
No. of episodes | 4 |
Production | |
Producer | Apoorva Bakshi |
Cinematography | Monisha Thyagarajan Udit Khurana David Bolen Gururaj Dixit |
Production company | Awedacious Originals |
Release | |
Original network | Netflix |
Original release | 4 August 2023 |