Showing posts with label THE GREAT INDIAN SUICIDE (2023) -தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label THE GREAT INDIAN SUICIDE (2023) -தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, October 18, 2023

THE GREAT INDIAN SUICIDE (2023) -தெலுங்கு / தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ ஆஹா தமிழ்

 


 பெரும்பாலான  மெகா  ஹிட்  படங்களின்  திரைக்கதை அமைப்பை  ஆராய்ந்தால்  முதல்  பாதி  பட்டாசைக்கிளப்பி  இருக்கும், ஆனால்  பின்  பாதி  முதல்  பாதி  அளவுக்கு  விறுவிறுப்பாக  இருக்காது. முதல்வன்,பாட்ஷா    உள்பட  பல  படங்களின்  நிலை  இதுதான். ஆனால்  இந்தப்படத்தில்  நிலைமை  தலைகீழ்.  இரண்டரை  மணி  நேரப்படத்தில் கடைசி  40 நிமிடங்கள்  பட்டாசாக  இருக்கும் , முதல்  பாதி  சுமாராக  ,ஸ்லோவாக  நகரும். எடிட்டிங்கில்  கவனம்  செலுத்தி  முன்  பாதியில்  க்ரிஸ்ப்  கட் செய்திருந்தால் இது ஒரு  மெகா  ஹிட் படம்  ஆகி  இருக்கும் 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு  அனாதை . தன்  நண்பனுடன்  கூட்டு  சேர்ந்து  ஒரு  ரெஸ்ட்டாரண்ட்  நடத்தி வருகிறான். நாயகி  அந்தக்கடைக்கு  ரெகுலர்  கஸ்டமர். கடையில்  உள்ள  காஃபி  சூப்பர், ஆனால்  மற்ற உணவு  அயிட்டங்கள்  சுமார்  தான்  என  விமர்சிக்கிறாள். நாயகி  தன்  சகோதரியுடன்  சேர்ந்து  சில  குக்கீஸ்  தயாரித்து  அந்த  கடைச்கு  சப்ளை  செய்கிறாள் . நன்கு  விற்பனை  ஆகிறது. ரெஸ்டாரண்ட்  பிஸ்னெஸ்  சூடு  பிடிக்கிறது 


பிஸ்னெஸ்  பார்ட்னர்  ஆன  நாயகியை  லைஃப்  பார்ட்னர்  ஆக்க  நாயகன்  நாயகியிடம்  ப்ரப்போஸ்  செய்கிறான். அப்போதுதான்  நாயகி  ஒரு  குண்டைத்தூக்கிப்போடுகிறாள். அவர்கள்  குடும்பத்தின்  கார்டியன் பெரியப்பா  தான் . அவர்  ஒரு  கார்  விபத்தில்  அகால  மரணம்  அடைந்து  விட்டார் . அவரது  உயிரை  மீட்க  நாங்கள்  அனைவரும்  தற்கொலை  செய்து  உயிர்  தியாகம்  செய்தால்  அவர்  மீண்டு  வருவார், பின்  நாங்களும் உயிர்த்தெழுவோம்  என  எங்கள்  குடும்ப  சாமியார்  சொன்னார்  என்கிறாள் 


நாயகன்  இதில்  ஏதோ  மர்மம்  இருக்கிறது  என்பதை உணர்ந்து  நாயகியின் கழுத்தில்  தாலி  கட்டி  க்ணவன்  ஆக  அவர்கள்  வீட்டில்  நுழைகிறான். அவர்கள்  குடும்பத்தில்  ஒருவர்  ஆக  ஆகி  அனைவரின்  மன  நிலையையும்  ஆராய்கிறான்.இதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  கதை 


நாயகி  ஆக  ஹெபா  பட்டேல்  தான்  படத்தின் முதுகெலும்பு . அவரது  முதல்  பாதி  அப்பாவித்தன  நடிப்பும் , பின்  பாதி  ட்ரான்ஸ்ஃபர்மேஷன்  நடிப்பும்  பெரிய  பலம் . 


நாயகன்  ஆக  ராம்  கார்த்திக்   கச்சிதமாக  நடித்திருந்தாலும்  நாயகி உடனான  காம்போ  காட்சிகளில்  நாயகியின்  டாமினேஷனை  சமாளிக்க  முடியாமல்  தடுமாறுகிறார்


ஒளிப்பதிவு , இசை , ஆர்ட்  டைரக்சன்   போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  இது  ஒரு  லோ  பட்ஜெட்  படம்  என்பதை  பறை  சாற்றுகிறது


சபாஷ்  டைரக்டர்

1  2018  ஆம்  ஆண்டு  மும்பையில்  நிகழ்ந்த புராரி  குடும்பத்தில்  நிகழ்ந்த  ஒரே  குடும்பத்தை   சேர்ந்த 11  பேர்  தற்கொலை  சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  பின்  பாதியில் கற்பனை  கலந்து  திரைக்கதை  உருவாக்கிய  விதம் 


2   பெரியப்பா  கார்  விபத்தில்  மரணம்  அடைந்தது  தற்செயல்  அல்ல  திட்டமிட்ட  கொலை  என்பதை  உடைக்கும்  காட்சி 


3   நாயகி , நாயகியின்  தங்கை ,சாமியார்  மூவருக்கும்  தனித்தனி  ட்விஸ்ட்  வைத்து  க்ளைமாக்சில்  ஆடியன்சை  அதிர்ச்சிக்கு  உள்ளாக்கியது    


  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க  செஞ்ச  ஆர்டர்ஸ் எல்லாம்  கொண்டு  வந்துட்டேன். வேற  என்ன  வேணும் ?

 கொஞ்சம்  பிரைவசி  வேணும்


2  முதல்ல  காதல்  வரும், அடுத்ததா  பணம்  வரும்


3  நமக்குப்பிடிச்சதுன்னா  அது  நம்பிக்கை , பிடிக்கலைன்னா  அது  மூட  நம்பிக்கை  என  ஆகிடாது 


4  விசித்திரமான  விஷயம் , அஸ்தமிக்கற  சூரியன்ல  நாம்  அழகு  பார்க்கறோம்

 மீண்டும்  நாளை  உதயம்  ஆகப்போற  சூரியன்  தானே? 


5 மனிதர்களுக்கு  உண்மை தேவையில்லை , தனக்கு  சாதகமான  உண்மை தான்  தேவை


6 டெட் லைன் க்குள்ளே  எதையும்  க்ண்டு பிடிக்க  முடியல, டெட்லயாவது  ஏதாவது  கண்டு பிடிக்க  முடிய்தா? பார்ப்போம்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகிக்கு  நேர்ந்த  ஒரு  கொடுமையான  சம்பவத்தை   நாயகன்  துப்பறிந்து  அறியும்போது  அதே  சம்பவம்  நாயகியின்  தங்கைக்கும்  நிகழ்ந்திருக்கும்   என்பதை  ஏன்  யூகிக்கவில்லை ? 


2   தற்கொலை  செய்து  கொள்ள  அத்தனை  பேருக்கும்  அளவான  சேர் , தூக்குக்கயிறு  எல்லாவற்றையும்  ரெடி  செய்யும்  ஆட்கள்  சுலபமாக  விஷம்  கலந்து  சாக  முடிவெடுக்கலாமே? 


3   சாமியார்  வெளிநாட்டுப்பெண்களுடன்  மட்டும்  தான்  உல்லாசமாக  இருப்பார்  என  சித்தரித்தது  ஏன் ? உள்ளூர்ப்பெண்கள்  அவருக்குப்பிடிக்காதா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - தற்கொலை  முயற்சி , அரங்கேற்றம்  உட்பட  சில  அடல்ட்  கண்ட்டெண்ட்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டுக்காக்  2  மணி  நேரம்  பொறுமையாக  இருக்க  வெண்டும்  . ரேட்டிங்  3 / 5