Showing posts with label THE EYES OF MY MOTHER (2016) - சினிமா விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் ). Show all posts
Showing posts with label THE EYES OF MY MOTHER (2016) - சினிமா விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் ). Show all posts

Tuesday, July 14, 2020

THE EYES OF MY MOTHER (2016) - சினிமா விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் ) 18+



லீவ்  மீ அலோன்  அப்டினு  அடிக்கடி  சிலர்  சொல்ல சினிமாவிலோ , நேரிலோ   கேட்டிருப்பீங்க, பார்த்திருப்பீங்க . தனிமைல  என்னை விட்டாப்போதும்  நான்  நிம்மதியா  இருப்பேன்னு சொல்வாங்க , ஆனா தனிமைல விடப்பட்டா என்னென்ன விபரீதம்  நடக்கும்னு பெரும்பாலானோர்க்குத்தெரியாது, சில  அட்டெம்ப்ட் சூசையிட் கேஸ்களில்  டாக்டர்கள்  சொல்வதுண்டு  . அவங்களை கொஞ்ச நாள்  தனிமைல விடாம பார்த்துக்கோங்க .. அதனால்தான்  அந்தக்காலத்துலயே பாட்டு எழுதினாங்க , தனிமையில் இனிமை காண முடியுமா?அப்படி தனிமையில்  இருக்கும் ஒரு பெண்ணின்  நிலை  என்ன  ஆச்சு? என்பதுதான்  கதை 


நல்ல  வேளை , இந்த சினிமா இதுவரை மிஷ்கின்  கண்ணுலயோ ,  கவுதம்  வாசுதேவ் மேனன் கண்லயோ . செல்வராகவன் கண்லயோ  படலை , பட்டிருந்தா  அட்லீ அவதாரம்  எடுத்து  சோனியா அகர்வாலை நாயகியாப்போட்டு  ஒரு சைக்கோ  த்ரில்லர்  படம்  ரெடி  பண்ணி  இருப்பாங்க 


சின்னக்குழந்தையா  இருக்கும்போது அ  ஃபார் அம்மா , ஆ   ஃபார்  ஆடுன்னு சொல்லிக்கொடுத்திருக்காங்க , இதுல  வர்ற அம்மா     டேபிள்  மேல ஒரு மாட்டோட வெட்டப்ப்ட்ட  தலையை  வெச்சு  மனிதனின்  கண்ணுக்கும்    மாட்டின் கண்ணுக்கும் பெரிய  வித்தியாசம்  ஏதும் இல்லைனு  விளக்கிட்டு இருக்காங்க , அப்பவே  நான் உஷார் ஆகி இருந்திருக்கனும், எனக்கு   ரெக்கமெண்ட்  பண்ண  நபர்   இந்தப்படம்  வேற  லெவல்ல  இருக்கும்னு பில்டப் குடுத்ததால,  சரி  துணிஞ்சு  பார்ப்போம்னு  தொடர்ந்தேன் 


ஒரு ஒதுக்குப்புறமான  இடம் , ஒரு பங்களா. அம்மாவும் , மகளும்  தனியே  இருக்காங்க , அப்பா வெளில  போய் இருக்கார் , எவனோ  ஒருத்தன்  வந்து “ மேடம், உங்க  வீட்டு பாத்ரூமை யூஸ் பண்ணிக்கவா? கொஞ்சம் அர்ஜெண்ட்னு கேட்கறான், வீட்ல யாரும் இல்லைனு அவனை அனுப்பாம  உள்ளே அலோ பண்றாங்க  , அவன் என்னடான்னா   உள்ளே வந்ததும்  சைக்கோ மாதிரி  குழந்தையோட அம்மாவை பாத்டப்ல  பீஸ்  பீஸா  வெட்டறான்,அப்பா  திரும்பி  வந்து  அவனை மடக்கறாரு.

 அவனை  ஒரு சங்கிலில  சாரி   4  பெரிய  சங்கிலில கட்டி வைக்கறாங்க
.போலீஸ்க்கு ஃபோன் பண்ணி  தகவல்  சொல்லி இருந்தா  இது  ஒரு குறும்படமா  முடிஞ்சிருக்கும்,  10 வருசமா அவனுக்கு  சாப்பாடு  போட்டு  வளர்க்கறாங்க . அப்றம் அப்பாவும் ஒரு நாள்  செத்துடறாரு 

 மேலே நான் சொன்ன  கொடூரமான சம்பவங்கள்  எல்லாம்  10 நிமிசத்துல  முடிஞ்சிடுது , மீதி ஒரு மணி நேரத்துக்கும்  , மேல  நாயகி என்ன செஞ்சா  என்பதுதான் அந்த  கொடூரமான  கதை 


நாயகியோட  நடிப்பு    ரொம்ப  நல்லாருந்தது. படத்துல  பாராட்டும்படி   ரெண்டே  அம்சம் தான்  , ஒளிப்பதிவு  மற்றும் கேமரா   கோணங்கள் . டைரக்டர்  மணிரத்னத்துக்கே  அண்ணனா  இருப்பாரு   போல  மொத்தப்படத்துக்கும்  வசனமே  ஏ 4  சீட் ல அரை  பக்கம் தான் 

 ஒரே ஆறூதல் என்னான்னா  சைக்கோ  த்ரில்லர்  படங்கள்ல   தடக்  தடக் ம்யூசிக் போட்டு கொல்வாங்க , அது இல்லை , 

 எனக்கு  ரெக்கமண்ட்  பண்னவரு  சொன்னாரு ? வசனத்தால  காட்சியை  நிரப்புவதை  விட பாலு ந்மகேந்திரா  மாதிரி   காட்சியாலயே  கதை  சொல்லி இருக்காரு .. ஆனா  என்ன  கதைனு தான்  கடைசி  வரை  தெரியலை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ்


1   அந்த  ஊர்ல போலீஸ்  ஸ்டேஷன்னு  ஒண்ணு  இருக்கா? இல்லையா?


2   அம்மா , அப்பா  செத்துடறாங்க , பாப்பா வேலைக்கும்  போறதில்லை , வீட்லயேதான்  கிடக்குது, பூவாவுக்கு என்ன செய்யுது? ஏது  காசு? இது சாப்டறதும்  இல்லாம  அம்மாவைக்கொன்ன  கொலைகாரனுக்கும் தண்டமா 10 வருசமா  சோறு போட்டு வளர்த்திட்டு  இருக்கு 



3  நாயகி  வளர்த்தும்  குழந்தை  ஒரு கட்டத்தில்  கட்டிப்போடப்பட்ட  பெண்ணைப்பார்த்து  அது  யார்?என்ன?னு  டீட்டெய்ல்  கேட்குது. அப்பவாவது நாயகி உஷார்  ஆகி   மெயின் டோரை  லாக் பண்ணி  இருக்கலாமில்ல? 


4   ஃபிரிட்ஜ்ங்க்றது  காய்கறி , பழங்கள் , உப்புமா, சட்னி  கெடாம
  வெச்சிருக்க  யூஸ்  பண்றது , நாயகி என்னடான்னா ஹ்யூமன்  டெட் பாடி பீஸ் பீஸா  வெச்சு  அழகு  பார்த்துட்டு  இருக்கு 




 சி.பி   ஃபைனல்  கமெண்ட் - மகா ஜனங்களே ! இது  யூ ட்யூப்ல கிடைக்குது, ஒயிட் அண்ட்  பிளாக்  தான் . வெட்டியா  இருக்கறவங்க  பாருங்க  . ரேட்டிங்  1.5  / 5