1.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.
சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன?
-------------------------------------------
2. தலைவரு ஒரு ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
ரோட்ல ஒரு ஃபிகர் நடமாடிடக்கூடாது... உடனே இந்தப்பொண்ணை நம்ம கட்சில சேர்த்துக்கலாமா?ன்னு கேக்கறாரு..
-------------------------------------------
3. தலைவலி சரியாக நீங்க கிளாஸ் போடனும்...
டாக்டர்.. ஏற்கனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத்தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.
--------------------------------
4.சிரசாசனம் சொல்லிக்குடுத்த யோகாசன டீச்சரை தலைவர் டச் பண்ணீட்டாராமே...?
ஆமா.. சிரசாசனம் உரசாசனம் ஆகிடுச்சு...
------------------------------------
5.அடிக்கடி நீங்க செல்ஃபோன் யூஸ் பண்ணுவீங்களா?
நோ டாக்டர்... காலைல 6 மணில இருந்து நைட் 12 மணி வரை மட்டும்தான் யூஸ் பண்றேன்.
---------------------------------------------
6.தலைவருக்கு பிறந்த ஊரு பழனி, வளர்ந்த ஊரு திருப்பதி...
அப்போ எப்படியும் மக்களுக்கு மொட்டை அடிக்கப்போறது உறுதின்னு சொல்லுங்க..
----------------------------
7. ஃபீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?
டாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது?
--------------------------------------------
8.தலைவருக்கு கேரளாப்பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?
தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...
---------------------------------------
9. வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
சம்பளம் கைக்கு வந்ததும்...
சம்பளம் எப்போ கைக்கு வரும்?
கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?
--------------------------------------
10. உன் காதலர் சலவைத்தொழிலாளியா?
ஏன் கேட்கறே?
உன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா?ன்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,?