Showing posts with label TATSAMA TATBHAVA (2023) - கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label TATSAMA TATBHAVA (2023) - கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, November 11, 2023

TATSAMA TATBHAVA (2023) - ( THE CONFESSION) கன்னடம் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் ) @ அமேசான் ப்ரைம்

   


   இது  மாறுபட்ட  ஒரு  த்ரில்லர்  மூவி . நடிகை  மேக்னா  ராஜ்க்கு  கம்பேக்  மூவியாக  அமைந்தது. பிரியாமணி  நடித்த  சாரு லதா , வாட்  ஹேப்பண்ட்  டூ  மண்டே , ஆர்  பார்த்திபன்  நடித்த  குடைக்குள்  மழை  ஆகிய  படங்களின்  ரெஃப்ரன்ஸ்  இதில்  உண்டு . மிகக்குறைந்த  பட்ஜெட்டில்  ஆறு  கேரக்டர்களை  மட்டுமே  வைத்து  எழுதப்பட்ட  நல்ல  திரைக்கதை 


   ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஓப்பனிங்  ஷாட்ல  யே  போலீஸ்  ஸ்டேஷன்  போய்  ஒரு  புகார் பதிவு  செய்கிறார். அவரோட  கணவரைக்காணவில்லை . ஆஃபீஸ்  கொலீக்ஸ் ,  சொந்தக்காரங்க , நண்பர்கள்  அனைவருக்கும்  ஃபோன்  செய்து  பார்த்தாகி  விட்டது, நோ  யூஸ் 


நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . இவர்  புகார்  கொடுக்க  வரும்  நபர்களின்  உடல் மொழி , கண்  அசைவுகளை  வைத்தே   பல  விஷயங்களை  அப்சர்வ்  பண்ணும்  ஆற்றல்  கொண்டவர் 


இந்த  மிஸ்சிங்  கேஸ்  விசாரணை  நடந்து  கொண்டிருக்கும்போதே  இன்னொரு  புகார்  ஸ்டேஷனுக்கு  வருகிறது . ஒரு  ஆள்  வந்து  நாயகியின்  ட்வின் சிஸ்டரின்  லவ்வர்  நான். என்  ஆளைக்காணவில்லை ., அனேகமா  நாயகி  தான்  கொலை செய்திருக்க  வேண்டும்  என்கிறான்


 இப்போ  நம்  கண்  முன்  இருக்கும்  சாத்தியக்கூறுகள்   1   நாயகியின்  கணவன்  நாயகியின்  ட்வின்  சிஸ்டருடன்  கள்ளத்தொடர்பில்  இருந்ததை  நேரில்  பார்த்த  நாயகி  இருவரையும்  போட்டுத்தள்ளி விட்டாள்  

2 நாயகியின் ட்வின்  சிஸ்டர்  நாயகியையும் , அவள்  கணவனையும்  போட்டுத்தள்ளி  விட்டு  உருவ  ஒற்றுமையைப்பயன்படுத்தி  நாயகி  மாதிரி  நடித்துக்கொண்டிருக்கிறார்


 என்ன  நடந்தது ?  என்பதை  நாயகன்  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  கண்டு  பிடிப்பதுதான்  மீதி திரைக்கதை 

 நாயகி  ஆக  பிரமாதமான  கேரக்டர்  டிசைன்  செய்யப்பட்ட  பாத்திரத்தில்  மேக்னா ராஜ். கொஞ்சம்  பூசினாற்போல  உடல்  வாகு  இருந்தாலும்  அந்த  கேரக்டருக்கு  அருமையாக  செட்  ஆகிறார். நெகடிவ்  ஷேடு  உள்ள  லேடி  ஹீரோயின்  படங்கள்  பெரும்பாலும்  வெற்றி  தான் . உதா - சந்திரமுகி , பச்சைக்கிளி  முத்துச்சரம் , படையப்பா , மன்னன் 

நாயகன்  ஆக  போலீஸ்  ஆஃபீசர்  ரோலில்  பிரஜ்வால்  தேவராஜ்  மைன்யூட்  ஆக  நோட்  பண்ணும் புத்திசாலி  கேரக்டர். கச்சிதமாக  செய்திருக்கிறார்

வாசுகி  வைபவ்  இசையில்  இரு  பாடல்கள்  ஓக்கே  ரகம், பிஜிஎம்  நல்ல  விறுவிறுப்பு

ரவியின்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  ஓடுமாறு  ட்ரிம்  செய்யப்பட்டிருப்பது  சிறப்பு ஸ்ரீனிவாஸ்  ராமய்யா  வின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  லாங்க்  ஷாட்டிலும்  சரி  க்ளோசப்  ஷாட்களிலும்  சரி  தனி  முத்திரையைப்பதிக்கிறது 

விஷால்  ஆத்ரேயா  என்னும்  புதுமுக  இயக்குநர்  தான்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார். 


சபாஷ்  டைரக்டர் (விஷால்  ஆத்ரேயா ) 


1  வைதேகி  காத்திருந்தாள்  படத்தில்  ரேவதியின்  கணவர்  முகத்தைகக்டைசி  வரை  காட்டாமலேயே  ஆர்  சுந்தர்  ராஜன்  படத்தை  முடித்திருப்பார். அதே  டெக்னிக்கை  இதிலும்  ஃபாலோ  பண்ணி  கொலையான  நாயகியின்  கணவன்  முகத்தைக்கடைசி  வரை  காட்டாமலேயே  படம்  முடிவது  நல்ல  டெக்னிக் 


2   நாம்  யூகித்த  இரு  கோணங்களை  விட்டி  விலகி  வித்தியாசமான  கோணத்தில்  ட்விஸ்ட்டை  முடித்த  விதம்  அருமை 


3   கொலை  செய்த  நபருக்கு  தண்டனை  கிடையாது  என்பதை  உணர்த்தும்  விதமும்  அருமை 


4  நாயகியின்  பெயர்  ஆரிகா , ட்வின் சிஸ்டரின்  பெயர்  அகிரா ( ARIKA - AKIRA) இந்தப்பெயர்களை  ஆங்கிலத்தில்  எழுதிப்பார்த்து  நாயகன்  கண்டு  பிடிக்கும்  ஒரு  ட்விஸ்ட்  அட்டகாசம் 


5 கொலை  செய்யப்பட்ட  நபரின்  கையில்  இருக்கும்  வாட்ச்  குறிப்பிட்ட  டைமில் ஸ்டன்  ஆகி  நிற்பதை  வைத்து  கொலையான  நேரம்  உத்தேசமாக  இதுவாகத்தான்  இருக்கும்  என  கணிப்பதும்   அது  கொலையாளியின்  ட்ரிக்  ட்ராமா  என்பதை  நாயக்ன்  கண்டுபிடிப்பதும்  த்ரிஷய்ம்  டெக்னிக்கை  நினைவுபடுத்தினாலும்  குட்  எக்ஸ்க்யூசன்


6பொதுவாக  ஒரு  நபர்  தன்  துணையைக்கொலை  செய்ய  1  கள்ளக்காதல்  2  வரதட்சணைக்கொடுமை  3   டொமெண்ச்டிக்  வயலன்ஸ்  4  சொத்து  மோசடி  இந்தக்காரண்ங்களாகத்தான் இருக்கும், அவற்றை  விட்டு  விலகி  புதுசாக  ஒரு  ரீசனைக்கண்டுபிடித்த  விதம்  குட் 


  ரசித்த  வசனங்கள் 


1  குழந்தைகள்  கண்ணாடி  மாதிரி , ஜாக்கிரதையாத்தான்  அவங்களை  கையாளனும்


2  டைரி  எழுதும்  பழக்கம்  அவருக்கு  இல்லை . நல்ல  விஷயங்கள் எப்படியும்  நினைவில்  இருக்கும், கெட்ட  விஷயங்கள் நினைவில்  வைத்திருக்கத்தேவை  இல்லை , அப்றம் எதுக்கு டைரி?


3 சஞ்சய்  என்  மேல  கேஸ்  கொடுத்திருக்கானா? என்  லாயரைக்கூப்பிடனுமா?

 இல்லை .,  அவர்  கேஸ்  ஏதும்  கொடுக்கலை ., அவர்  தான்  கேசே.!  அவர்  கொலை  செய்யப்பட்டிருக்கார் 


4  எந்த  க்ரைம்  எங்கே  எப்போ  நடந்தாலும்  ரெண்டு  விஷயம்  அங்கே  இருக்கும்  1  ஸ்ட்ராங்  மைண்ட்  2  வீக்  மைண்ட்


5 இண்ட்டெலிஜெண்ட்  என்பது  ஃபைட்  பண்றதுல  இல்லை , உண்மையை  ஒத்துக்கொள்வதில்  இருக்கிறது 


6    ஜெய்க்கிறது மட்டும் புத்திசாலித்தனம் இல்லை, எப்போ தோல்விய ஒப்புக்கிட்டு , விட்டு கொடுக்கிறோமோ  அதுவும்  இன்டெலிஜென்ஸ் தான்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  மிகப்பெரிய  கம்பெனி  ஓனர்  கள்ளக்காதல்  பார்ட்டியிடம்  உல்லாசமாக  இருக்க  நினைத்தால்   ஹோட்டல் , லாட்ஜ்  போகலாம், அல்லது  தன்  கம்பெனியிலேயே  எல்லோரும்  போன  பின்  அரங்கேற்றலாம் , எல்லா  ஆப்சன்சையும்  விட்டுட்டு  பேக்கு  மாதிரி  காருக்குள்ளே   பப்ளிக்   நோட்  பண்ணும்  இடத்தில்  பெப்பெரப்பேனு  தப்பு  பண்ணி  மாட்டுவாங்களா? 


2   காதலன்  ஸ்டேட்மெண்ட்படி  கிடார்  நன்றாக  வாசித்தால்  அது   காதலி  அகிரா. வாசிக்கத்தெரியவில்லை  எனில்  அது ஆரிகா. உடனே  நாயகியிடம் கிடாரைக்கொடுத்து  வாசிங்க  என  நாயகன்  சொல்வது  அபத்தம் . நாயகி  நினைத்தால்  கிடார்  வாசிக்கத்தெரிந்திருந்தாலும்  தெரியாதவராகக்காட்டலாமே?  அது  எப்படி  ஒர்க்  அவுட்  ஆகும் ?  


3   நாயகி  தான்  தான்  ஆரிகா  என்பதை  நிரூபிக்க  கிடாரை  வாசிக்கத்தெரியாதவர்  மாதிரி  காட்டி  இருந்தாலே  போதுமே? அவர்  ஏன்  வாய்ப்பைப்பயன்படுத்தாமல்  சொதப்புகிறார் ? 


4 கொலை  நடந்த  இடம்  வீட்டின்  பேஸ்மெண்ட் . அந்த  இடத்திற்கு  இருவரும்  ஏன்  போனார்க்ள்?  அது  அதிகம்  புழங்காத  இடம்.  இதற்கு  திரைக்கதையில்  பதில்  இல்லை 

5  அகிராவின்  காதலன்  தன்  காதலியின்  வீடு  எங்கே  இருக்கிறது  என்பதைக்கேட்கவில்லை  ஓக்கே  ஆனால்  ஃபோன்  நெம்பர்  கூடவா  ஷேர்  பண்ணலை ? 


6   நாயகி  ஆகிரா  ஒரு  விபத்தில்  காயம்  ஆன  பின்  இனி  கர்ப்பம்  ஆக  வாய்ப்பில்லை  என  டாக்டர்கள்  கூறி  விட்டனர் . ஆனால்  கர்ப்பம்  ஆகிறார். எப்படி  எனக்கேட்டால்  அது  தெய்வாதீனம்  என்கிறார். கர்ப்பத்துக்குக்காரணம்  ஆகிராவின்  கணவனா? அரிகா வின்  காதலனா? என்பதை  தெளிவாக  சொல்லவில்லை 


7  அரிகாவுக்கும்  , அரிகா  வின்  காதலனுக்கும்  உடல்  ரீதியான  உறவு  நிகழ்ந்ததா? என்பதிலும்  தெளிவான  பதில்  இல்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மாறுபட்ட  த்ரில்லர்  ரசிககர்கள்  அவசியம்  காண  வேண்டிய  படம் . ரேட்டிங்  3 / 5 


Tatsama Tadbhava
Directed byVishal Atreya
Screenplay byVishal Atreya
Story byVishal Atreya
Produced byPannaga Bharana
Spurthi Anil
Chethan Nanjundaiah
StarringPrajwal Devaraj
Meghana Raj
Aravind Iyer
Balaji Manohar
CinematographySrinivas Ramaiah
Edited byRavi Aradhya
Music byVasuki Vaibhav
Production
companies
PB Studios
Anvit Cinemas
Distributed byKRG Studios
Release date
  • 15 September 2023
CountryIndia
LanguageKannada