Showing posts with label TAPSI. Show all posts
Showing posts with label TAPSI. Show all posts

Monday, April 04, 2011

தப்ஸி உங்கள் சாய்ஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4O4v5C2UtveG4zh5XYaeojnmVY9Vb270LEPvGUZzHvciymuGLMqXA0trUfyrAay2Iss4XBoKePq4HlkCfm_-EMP4-2Yu_59U8yqjDGMfLg01gOKKH8e6kpCFX7JjQK8u7SzuEBxCVlnk/s1600/tapsi+%2528115%2529.jpg 

1. யார்  கூட  கூட்டணி?-னு  ஒரு  தீர்க்கமான  முடிவுக்கு  நான்  வந்துட்டேன்.

விளையாடாதீங்க  தலைவரே!  நீங்க  டூ  லேட்...  எலெக்‌ஷனே  முடிஞ்சிடுச்சு.

-----------------------------

2. தலைவரே!  உங்க  பள்ளிப்படிப்புல  சிங்கிள்  டிஜிட்  மார்க்தான்  எடுத்தீங்கன்னு  வெளில  சொல்லிடாதீங்க.

ஏன்?

அப்புறம்  கூட்டணி  கட்சில  சிங்கிள்  டிஜிட்லதான்  சீட்  குடுப்பாங்க...

--------------------------

3. ஒரு  கவர்மெண்ட்  ஆஃபீசரான  நீங்க  எப்ப  பாரு  லேடீஸ்  கூட  சுத்திட்டு  இருக்கீங்களாமே?

தப்புதான்...  அதுக்காக  அஃபீஸ்ல  அரசு  ஊழியர்ங்கற  நேம் போர்டை  சரச  ஊழியர்னு  மாத்திடறதா?

-----------------------------

4. என்ன  தலைவரே! 10,000  ஓட்டு  வித்தியாசத்துல  ஜெயிச்சுடுவீங்களா?

10,000  ஓட்டு  மொத்தமா  வர்றதே  சிரமம்தான்.

------------------------------

5. தேர்தல்  பிரச்சாரத்துல  மக்களை  பகிரங்கமா  மிரட்னாராமே தலைவர்?

ஆமா...  என்னை  ஜெயிக்க  வைக்கலைன்னா  மறுபடியும்  சினிமாவுக்கே  நடிக்க  வந்துடுவேன்னாரு.

---------------------------
http://searchandhra.com/english/wp-content/uploads/2010/05/Tapsi-Photo-Gallery-58.jpg
6. புள்ளி  விபரப்புலி-னு  பேரெடுக்க  ஆசைப்பட்டு  தலைவர்  தேர்தல்  கமிஷன்  கிட்டே  மாட்டிக்கிட்டாரா?  எப்படி?

இந்த  தொகுதில  மொத்தம்  75,000 கள்ள  ஒட்டுக்கள்  பதிவாகி  இருக்கு.  அதுல  68,000 என்  கட்சி  ஆளுங்க  போட்டது  7,000  கூட்டணி  கட்சி  ஆளுங்க  போட்டது-னு சொல்லி  மாட்டிக்கிட்டாரு.

-------------------------------

7. C.M.  ஆகியே  தீருவேன்னு  தலைவர்  234  தொகுதிக்கும்  நடந்தே  பிரச்சாரத்துக்கு  போறாரு.

அடடா...  நடக்காத  விஷயத்துக்கு  ஏன்  நடக்கறாரு?

----------------------------

8. பட்டி  மன்றத்தலைப்பால  கட்சிக்கு  பிரச்சனை  வந்துடுச்சாமே?

ஆமா...  மகளிர்  அணித்தலைவியின்  புகழுக்கு  காரணம் அவரது  சதைப்  பிடிப்பா?  உடல்  அழகின்  வடிவமைப்பா?-இதுதான்  டைட்டிலாம்.

---------------------------

9. தலைவர்  பழசை  என்னைக்கும்  மறக்கமாட்டார்-னு  எப்படி  சொல்றீங்க?

இன்னும்  அவரது  டைரிக்குள்ள  ஜெயமாலினி,  அனுராதா,  டிஸ்கோ சாந்தி  ஃபோட்டோஸ்  எல்லாம்  வெச்சிருக்காரே?

--------------------------------

10. தலைவர்  எதுக்காக  நடிகை  தப்ஸியை  பிரச்சாரம்  பண்ண  கூட்டிட்டு  வந்திருக்காரு?

இந்த  தேர்தல்ல  தப்ஸிதான்  கட்சியோட  கதாநாயகியாம்...

Friday, April 01, 2011

காதலி ஓப்பன் டைப்பா? மூடி டைப்பா? என எப்படி கண்டு பிடிக்கறது?

http://www.cinesnacks.in/tamil-movies/actress/Anjali-New-Photos/anjali-actress-stills-157.jpg

1. தலைவருக்கு  842  சீட்  கிடைசிருக்கா?  என்ன  உளர்றே? மொத்தமே  234  சீட்  தானே?

தலைவர்  புதுசா  கட்டி  இருக்கற சினிமா  தியேட்டர்ல்  842  சீட்டாம்.

----------------------

2. ஆஹா...  சமையல்  பிரமாதம்...  உங்க  மனைவியோட  கை பக்குவம்  அருமை...

பாவம்  ஒரு  பக்கம்,  பழி  ஒரு  பக்கமா?  சமைச்சது  மாமியார்.

---------------------------

3. தலைவரோட  அலம்பல்  தாங்கல...

ஏன்?

தினத்தந்தில  கன்னித்தீவு  படக்கதை  சீக்கிரம்  முற்றும்  போடப்பட்டு  கச்சத்தீவு  கதை  ஆரம்பிக்க வேண்டும்கறாரே?

-----------------------------
http://www.stillsindia.com/gallery2/cache/south-actress/anjali/actress-anjali-saree-stills-08_900.jpg
4. வாழ்க்கைல  பல  திருப்பு  முனைகளை  சந்திச்சுத்தான்  இந்த  தியேட்டரை  கட்டினேன்...  ஆனா  ஃபயர்  ஆக்சிடெண்ட்ல  எல்லாம்  எரிஞ்சு  போச்சு...

அடடா...  டர்னிங்  பாய்ண்ட்டா  அமைஞ்சு  தியேட்டர்ல  பர்னிங்  பாய்ண்ட்டா?

---------------------------------

5. ஒரே  ஒரு  சீட்  குடுத்தா  போதும்னு  சொல்லியும்  நம்ம  தலைவரை  எந்த  கட்சியும்  கூட்டணில  சேர்த்துக்கலையே, ஏன்?

அது  சரி...  நம்ம  தலைவர்  கேட்டது  சி.எம்.  சீட்...

---------------------------------

6. தேர்தலுக்கு  முன்னால  தலைவர்  பாரி  வள்ளலா  மாறி  பணத்தை  அள்ளி  இறைக்கறாரே?

தேர்தல்  முடிஞ்ச  பிறகு  பாருங்க.  ஒப்பாரி  வள்ளலா  மாறிடுவார்.

-------------------------------
http://cinegalleries.com/wp-content/uploads/2011/03/Maharaja-Movie-20110326-anjali1.jpg
7. காதலி  ஓப்பன்  டைப்பா?  மூடி  டைப்பா? என  எப்படி  கண்டு  பிடிக்கறது?

சுடிதார்  மட்டும்  போட்டிருந்தா  ஓப்பன்  டைப்; துப்பட்டவும்  போட்டிருந்தா  மூடி  டைப்.

----------------------------------

8. டாக்டர்...  எனக்கு  தூக்கத்துல  நடக்கற  வியாதி  இருக்கு...  என்ன  பண்றது?

ஒண்ணா  தூங்கு...  இல்லைனா  நட...  இரண்டும்  உடம்புக்கு  நல்லதுதான்.

----------------------------------

9. முத்துக்கு  முத்தாக  படத்தை DMK கட்சி  ஆட்கள்  யாரும்  பார்க்கக்  கூடாது-னு  தலைவர்  சொல்லீட்டாரா?  ஏன்?

அம்மா  பாசம்  அதிகமாகி  ஓட்டை  மாற்றி  குத்திட்டா?

-------------------------------
http://mimg.sulekha.com/tapsi/stills/tapsi-stills0309.jpg
10. நடிகை  தப்ஸி (TAPSI)க்கு  இடுப்பு  பிடிச்சிருக்கறாதால  ஹாஸ்பிடல்  போயிருக்காராம்.

அடடா...  எனக்கு  கூட  தப்ஸியோட  இடுப்பு  பிடிச்சிருக்கு... நான் ஹாஸ்பிடல்  போனேனா?

Wednesday, March 16, 2011

தமனாவும், தப்ஸியும் ஒரே கட்சிலயா? உருப்பட்ட மாதிரி தான்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioWJDBnit0WAHtClKHkSfNYxbpq8PNXWcLg_8m-3gFsksZMtDUq_kJy_IfFQC0ICC_yioAEqVucWHfunNKtXugMVhGWM9AalBr6NhdqDEwAL4wkCQj2-auMRShZzmLFunf4rENsQHN8duR/s1600/tapsee2.jpg

1.  நாட்டு நலனுக்காகத்தான் கட்சி நடத்தறேன்...

காமெடி பண்ணாதீங்க தலைவரே.... நீங்க கட்சியை கலைச்சாத்தான் அது நாட்டுக்கு நலன்.....

--------------------------------------------

2. உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...

கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...

-----------------------------------------

3. தலைவருக்கு இனப்பற்று அதிகம்னு எப்படி சொல்றே..?

அவரோட ஜாதி ஆளுங்களுக்கு மட்டும் தான் சீட் தர்றாராம்...

-----------------------------------------

4. நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...

தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி  ஊரை கூட்டறது?

---------------------------------------

5. இன்ஸ்பெக்டர! ஆயுதக்கடத்தல் வழக்குல எதுக்கு மளிகைக்கடைக்காரரைப்போய் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க..?

அவரு கடைல 100 கிலோ ரவை ஸ்டாக் வெச்சிருந்தாராம்..

-------------------------------------
http://mallumasalaactress.in/wp-content/uploads/2010/06/tamanna2.jpg
6.சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஏன் திக் பிரமை அடைஞ்சு நின்னுட்டாங்க?

ஊழல் எனது பிறப்புரிமை அப்படின்னு தலைவரு  உரிமை முழக்கம் இட்டாராம்..

-------------------------------------

7. தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?

கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..

-------------------------------------

8.    சித்தோடு சதீஷ் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே..?


மஞ்சள் கலர்ல இருக்குன்னு போஸ்ட் கார்டு கூட யூஸ் பண்றதில்லை...

-----------------------------

9. பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?

கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...

----------------------------------

10.  தலைவரோட செல் ஃபோன்ல காலர் டியூனாக என்ன வெச்சிருக்காரு..?

அது தெரியலை.. கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்காரு. அது வேணா தெரியும்...

---------------------------------

Friday, January 14, 2011

ஆடுகளம் - சினிமா விமர்சனம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBvdyTNlnjXWsGlmtKE5kcE_ETgnL5I2GYY3d0eFmwkvvmk_Zuos6hSw1PSdoTH9MQtUNormbwxQTCZB7CIWEJrjoGziK8om7X-OaA0wKbB-7M7cbIM-XGuw-dfsl49srDXwsrq6eiM0Bu/s640/6.jpg
சேவல் சண்டையை மையமாக வைத்து ஒரு கிராமியக்கதையை இவ்வளவு சுவராஸ்யமாய் எடுக்க முடியும் என்று நிரூபித்ததற்காகவே இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.பொல்லாதவன் படத்துக்குப்பிறகு இயக்குநர் வெற்றி மாறனுக்கு கிடைத்த பொங்கல் ஹிட்டு.

மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி,போதையைக்கொடுத்து அதை தக்க வைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் அவனை செய்ய வைக்கும்  என்ற உளவியல் தத்துவத்தை அட்டகாசமாய் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ரெண்டே முக்கால் மணி நேரம் ஓடும் படத்தில் 30 நிமிடம் சேவல் சண்டையை திரில்லிங்காய் குடுத்திருப்பது புதுசு..படத்தில் தனுஷ் மதுரை வட்டார வழக்குத்தமிழ் பேசி ஜெயித்திருக்கிறார்.ஹீரோயின் புதுமுகம்.கிட்டத்தட்ட பிரியாமணியின் சாயல் (குரல் மட்டும் அதே மாதிரி கட்டைக்குரல்)நல்ல ஃபிகர்தான்.ஆங்கிலோ இண்டியன் மாதிரி காண்பித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
http://www.koodal.com/cinema/koodal_reel/2010/Aadukalam-reel-27.jpg
அப்படி காண்பித்ததால் தேவை இல்லாமல் ஆங்கில வசனங்கள் பேச வைத்தது கிராமியக்கதைக்கு அந்நியம் சேர்க்கிறது.ஹீரோயினை தன்னை லவ் பண்ணுவதாக 2 பேர் சொல்ல ,ஏம்மா.. நீ யாரை லவ் பண்றே? என கேட்க ஹீரோயின் ஹீரோவைக் கை காண்பிக்கையில் தனுஷின் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் அருமை.

அந்த ஃப்ளோவில் வரும் டப்பாங்குத்துப்பாட்டு இசை அமைப்பாளர்,நடன இயக்குநர்,இயக்குநர் அனைவரும் கலக்கி எடுத்த கலக்கல் காக்டெயில் நடனம்.

அதே ஹீரோயின்  அவன் என்னை உன்னை விட அதிகமா டார்ச்சர் பண்ணுனான்,அதனாலதான் உன்னை லவ் பண்றதா பொய் சொன்னேன் என பல்டி அடிக்கும்போது தனுஷின் சோக நடிப்பும் கன கச்சிதம்.


படத்தின் கதைக்களன் சேவல் சண்டைதான் என்பதையும்,கதை நடப்பது கிராமத்தில் தான் என்பதையும் அடிக்கடி நினைவுபடுத்த சேவலின் கொக்கரக்கோ சத்தத்தை அடிக்கடி யூஸ் பண்ணி இருப்பதும் அவசியமே இல்லாதது.

மனிதனுக்கு பந்தயம் ,போட்டிகளில்,சூதாட்டத்தில் ஏற்படும் வெறியை நிதர்சனமாய் காண்பித்து பார்வையாளர்களுக்கும் அந்த வெறியை ஏற்படுத்துவதில் இயக்குநருக்கு வெற்றியே..

சேவல் சண்டையை கிராஃபிக்ஸில் எடுத்தது தெரியாத அளவு ஒளிப்பதிவாளர் பாடுபட்டு அழகாக சமாளித்து இருக்கிறார்.படத்தில் வில்லனாக வருபவர் உண்மையில் ஒரு கவிஞர்.தாத்தா மாதிரி இருக்கும் அவருக்கு அவரை விட 30 வயது இளைய பெண் காதலித்து மனைவி ஆனவர் என்பது நம்பும்படி இல்லை.

அதே போல் தனது மனைவியை அவர் சந்தேகப்படும் சீனும் எடுபடவில்லை.ஆனால் அந்த சீனில் மனைவியாக நடிப்பவரின் பிரமாதமான நடிப்பு மைனசை போக்கி விட்டது.


வசனகர்த்தாவாக இயக்குநர் ஜொலித்த இடங்கள்

1. இப்படியே தனியா பேசிட்டு இரு, சீக்கிரம் மெண்ட்டல் ஆகிடுவே...

சரி சரி விடம்மா.. உன் பையன் உன்னை மாதிரிதானே இருப்பான்..?

2. சும்மா ஜாலிக்காகத்தான் அவ கூட சுத்துனேன்.நேத்துதான் அவங்கப்பனைப்பார்த்தேன்,இனி நாமதான் அவளை கவனமா ,நல்லப்டியா பாத்துக்கோணும்னு அப்பவே முடிவு பண்ணீட்டேன்.


3. வேட்டைக்காரன் சாவு வீரமாத்தான் இருக்கோணும்,சாவே வந்தாலும் களத்துக்கு வெளில வந்த பிறகுதான் சாகனும்.

4.எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்ப என் கூடவே 10..15 வருஷமா இருந்த யாரும் ஹெல்ப் பண்ணலை,அவந்தான் உதவி செஞ்சான்..அவன் கெட்டவனா இருந்தா என்ன?

5. மனுஷனுக்கு ஒரு பிரச்சனை வரும்போது அவன் சவுகர்யத்துக்கு மாறிடறான்,அவனோட அடிப்படை  குணங்கள் மாறிடுது.

6. போலீஸ்காரன் புத்தி திருட்டு புத்தின்னு நிரூபிச்சுட்டியே,....

7. எனக்கு ரூ 2000 அவசரமாத்தேவைப்படுது.

சரி.. இந்தா..

ஓக்கே.என்னை லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனியே.. அதுக்கு ஃபைனா இதை நினைச்சுக்கோ...

8. தோத்திடுவோம்னு பயமா?

பயமா? எனக்கா? நாங்க எல்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங்க் பண்ற ஆளுங்க

(இந்த வசன பஞ்ச்சுக்கு தியேட்டரில் இருந்த தனுஷ் ரசிகர்கள் 22 பேரும் கை தட்டுனாங்க)

9. ஏய்.. எதுக்காக இப்போ என் கையை பிடிச்சே?

அது வந்து... சேஃப்டியா கூட்டிட்டு போறதா வாக்கு குடுத்துட்டேன்,, அதான்..

10. இப்போ நான் யாருமே இல்லாத தனியனாய் ஆகிட்டேன்,அதிர்ஷ்டத்துல ஜெயிச்சவன் எல்லாம் என்னைப்பார்த்து எள்ளி நகையாடறான்.

11.எங்கப்பாவோட தோத்த முகத்தை என்னால பாக்க முடியல.

12,  சந்தோஷமா இருக்கறதுக்கு காசு ,பணம்,ஸ்டேட்டஸ் எதுவும் தேவை இல்லைன்னு உன்னைப்பார்த்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்.

13.  என்ன ..தயங்கறே..கேளு..

வந்து.. வந்து.. ஒரு கிஸ் அடிச்சுக்கிட்டா?

14.இத்தனை  நாளா நீ இங்கிலீஷ்ல பேசுனது புரியல.. இப்போ நீ தமிழ்ல பேசுறதும் புரியலயே..அது ஏன்?

15. என் பையன் உருப்பட்டுடுவான்.. என்னை சாகற வரை சந்தோஷமா வெச்சுக்குவான்னு நினைச்சேன்,, ம் ம் 

16. எங்கம்மா உயிரோட இருந்தவரை அவங்க எவ்வளவு முக்கியமானவங்கன்னு எனக்கு தெரியாமயே போச்சு..

17. மத்த ஜாதிப்பையனோட ஓடிப்போன பொண்ணு கடைசி வரை சந்தோஷமா இருந்ததை சரித்திரம் இதுவரை பார்த்ததில்லை..

18. அப்பன்கறது யாரு? ஆத்தா கூட படுத்து பிள்ளை பெத்துக்கறது மட்டும் இல்ல..பிள்ளையோட கையைபிடிச்சுக்கூட்டிட்டுப்போய் இதுதான் உலகம்னு காண்பிக்கனும்,

19. அண்ணே... ஏண்ணே இப்படிப்பண்ணீட்டே..?நீ பண்றது எனக்குப்பிடிக்கலை..செத்துப்போன்னு சொல்லி இருந்தாக்கூட செத்துப்போயிருப்பேனே....ஏன் நம்பிக்கை துரோகம் பண்ணுனே..

20. நாங்க எல்லாம் அம்பானிக்கே அட்வைஸ் தர்றவங்க..நமக்கே ஐடியாவா? 



இயக்குநர் சறுக்கிய இடங்கள்


1.ஹீரோ பந்தயத்தில் ரூ 10 லட்சம் ஜெயித்த பிறகு ஹீரோயின் லவ்வுக்கு ஓக்கே சொல்வது மாதிரி காட்சி வைத்து பெண்கள் எப்பவும் சேஃப்டி சைடு என்று தவறாக சொல்லப்படும் கருத்துக்கு ஆமாம் சாமி போட்டிருக்கிறார்.

2. என்னதான் கிராமங்களில் சேவல் சண்டை ஃபேமஸ் என்றாலும் ,சேவல் டோர்ணமெண்ட்டை விட்டால் வேறு உலகமே இல்லாதது மாதிரி திரைக்கதை அமைத்த  விதம்.

3.கலக்கல் ஃபிகராய் இருக்கும் ஹீரோயின் கசங்கிய சட்டை மாதிரி இருக்கும் ஹீரோவை லவ் பண்ணுவதற்கு நியாயமான காரணம் சொல்லாதது...


4.குழந்தைக்கு காது குத்தும் சீனை இவ்வளவு க்ளோசப்பில் காட்ட வேண்டுமா?கிராமப்படங்கள் எல்லாவற்றிலும் இது வருகிறது.

5.படம் முழுக்க யாராவது லொட லொட என பேசிக்கொண்டே இருப்பது ஓவர்.
பாதி வசனம் புரியவே இல்லை.

6. படம் பெரும்பாலும் இரவில் தான் நடக்கிறது என்பதால் ஒளிப்பதிவிலும் இருட்டாக காட்ட வேண்டிய கட்டாயம். இதை தவிர்த்திருக்கலாம்.

பாடல்கள் ஏற்கன்வே ஹிட். 3 பாடல்கள் நல்லாருக்கு.

வெற்றி பெறுவது பெரிசில்லை..அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்...மனிதனுக்குப்பொறாமை கூடாது. எதிரியை அஹிம்சை வழியிலும்,சரண்டர் முறையிலும் வீழ்த்தலாம் என புது ரூட் போட்டு ஜெயித்திருக்கிறார்.சேவல் சண்டையை இவ்வளவு விஸ்தீரமாக காட்டியதில்லை என்ற அளவிலும் இது ஒரு முக்கியப்பதிவாக அமைகிறது.


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - நன்று


ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள்,  பி செண்ட்டர்களில் 30 நாட்கள்,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.