Showing posts with label Sudeep. Show all posts
Showing posts with label Sudeep. Show all posts

Friday, July 06, 2012

நான் ஈ - சினிமா விமர்சனம்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicbTwGjbUg2D7WYHIjjqek07tgMrfCxRvmZKukYZP2ZVvvj7Z0jRuRHFsZL1zdTg3hSDW7pObppWNnaxyBhXpN37eOKawEDZ4Wg8yLW3PhHtIAch88bvN70NwpDNtpX3ngsSYTqQScYdU3/s1600/Naan+Ee.jpgசயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில்  ரிலீஸ் ஆகும்  ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..


 படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..

இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு ,  கமலுக்கே வழி காட்டி  சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின்  ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..



http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/05/naan-ee-movie-stills.jpg



 ஹீரோயின் ஒரு மினியேச்சர் ஆர்டிஸ்ட் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..


 எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே  ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே  ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..


 ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான்  + இ  . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..


படத்தோட  முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால  ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை..


வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..


 ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..

 ஹீரோயின் சமந்தா  அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை..  சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..



http://g.ahan.in/tamil/NAAN%20EE%20photos/naan%20ee%20(7).JPG

மனம் கவர்ந்த வசனங்கள் ( கிரேசி மோகன்)


1. வில்லனிடம்- ஹாய், நீங்க டெயிலி இங்கே வருவீங்களா?

 யா..

 விச் டைம்?

 நீங்க வர்ற டைம்.. ஹி ஹி



2. நம்ம தொழிலுக்கு போட்டியா இருக்கானே அவனை எப்படி கரெக்ட் பண்ணலாம்னு நாங்க எல்லாம் யோசிச்சுட்டு இருக்கோம், நீ என்னடான்னா அவன் சம்சாரத்தையே கரெக்ட் பண்ணிட்டியே?


3. என் ஒயிஃபை முதன் முதல் காதலியா சந்திச்சப்போ ஒரு டைம் முடிச்சுட்டு கழட்டி விட்டுடலாம்னு தான் நினைச்சேன், ஆனா அவ கிடே ஏகப்பட்ட சொத்து.. மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. அவ சொத்தை என் பேர்ல எழுதி வைக்க கேட்டேன்.. செத்தாலும் அது நடக்காதுன்னு அடம் பிடிச்சா.. பாவம் அல்பாயுசுல போய்ட்டா..


4. ஹேய்.. நீ பேங்க்ல எவ்ளவ் பணம் வெச்சிருக்கே?

 ரூ 15,860 ஓ டி அமவுண்ட் ( ஓவர் டியூ..  மைனஸ்ல )


5. எனக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தி.. அதனால செக்ல சைன் பண்ணாமயே தர்றேன்.

 டேய் லூசு, செக்ல சைன் பண்ணலைன்னா எப்படி அது பாஸ் ஆகும்?


6. மிஸ்,,, உங்க ஜடை ரொம்ப டைட்டா இருக்கு.. புரிஞ்சுதா?

 எனக்கு லூஸ் தான் பிடிக்கும்


 நீங்க லூஸ்னு தெரியும்..  ஆனா ப்ளீஸ் ட்ரை த டைட்.. ( டபுள் மீனிங்க் )


7. நீ கொடுத்த 15 ரூபா செக்குக்காக அவ அர்ச்சனை செய்ய கோயிலுக்கு வந்திருக்காளே.. அர்ச்சனை சீட்டே 20 ரூபா ஆச்சே?


8. டேய்.. முதல்ல உன்னோட எக்ஸ்பிரஷனை மாத்து.. அவ எல்லாருக்கும் பிரசாதம் குடுத்துட்டு போறா.. ஆனா உன்னை கண்டுக்காம போறா..


 டேய்.. எல்லாருக்கும் குடுத்துட்டு எனக்கு தர்லைன்னா என்ன அர்த்தம்? அவளுக்கு நான் ஸ்பெஷல்னு அர்த்தம்


9. டிராஃபிக் சார்ஜெண்ட் - வண்டிக்கு ஆர் சி புக் இருக்கா?  லைசன்ஸ் இருக்கா?


 ஹீரோ - என் ஆள் போறா. அவளை பிடிக்கனும்.. வண்டியே இருக்கு.. நீயே அதை வெச்சுக்கோ


10.  என்னடா அவ கிட்டே இருந்து வெறும் பிளாங்க் மெசேஜ் வந்ததுக்கு இப்படி குதிக்கறே?

 உனக்கு தெரியாதுடா , பிளாங்க் மெசேஜ் = பிளாங்க்செக்.. பவர் ஃபுல்.. இஷ்டபட்ட வங்களுக்குத்தான் பொண்ணுங்க  பிளாங்க் மெசேஜ் அனுப்புவாங்க


11. அழுதா வருத்தம் மறைஞ்சுடும்னு சொல்வாங்க, ஆனா எனக்கு அழ அழ அது அதிகம் ஆகுது.. பல தடவை அவனை கண்டுக்காத மாதிரி அலைய விட்டிருக்கேன்.. ஹூம்.. இப்போ நான் தான் சிரமப்படறேன்


12.  வில்லன் - என் மனைவி  சாகறப்ப என் கிட்டே என்ன பிராமிஸ் வாங்கினா தெரியுமா? நீங்க என்னை லவ் பண்றது உண்மையா இருந்தா நான் செத்த பிறகு என்னை மறந்துடனும்.. அப்டின்னா.. அதே போல் நீ உன் காதலனை மறந்துடு, ஓக்கே.. ?


14.  வில்லன் - ஏண்டா, அனிமல்ஸ் ரிவஞ்ச் பண்ணுமா? ( பழிக்குப்பழி வாங்குமா? - நன்றி மேஜர் சுந்தர் ராஜன் )


யா யா விட்டலாச்சாரியார் படத்துல எல்லாம்  அப்படித்தான்


15.. நான் கேட்க வர்றது ஒரு ஈ அப்படி பழி வாங்குமா?


 பாம்பு பழி வாங்கறப்போ ஈ பழி வாங்காதா? சின்ன பாம்புன்னா ஓக்கே.. ஈ-ன்னா யோசிக்கனும்


16. நான் சொல்றேனேன்னு கோவிக்காதே.. ஏதாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதை படிச்சுட்டு அதே ஞாபகமா இருந்திருப்பே..


17. சர்வர் - மேடம், காஃபில ஈ விழுந்துடுச்சு போல ,ஸாரி மேடம்..

 நோ நோ , ஈ காஃபி குடிச்சுட்டு இருக்கு


 18. சந்தானம் - டேய் , எங்கே இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? ஓவர் ஓவர்..

 நான் இங்கே ஒரு பூட்டுன வீட்டுல குதிக்கலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்..

 செருப்பால அடிப்பேன், நாயே அது என் வீடு


 19. சந்தானம் ஹீரோயின் வீட்டுக்கு திருட வர்றார்.. அப்போ ஹீரோயின் காதலனான ஈ கிட்டே பேசிட்டு இருக்கார்.. அது தன்னை பார்த்து பேசறதா சந்தானம் நினைக்கறார்

ஹீரோயின் - டேய் , திருட்டுப்பயலே.... வெளீல வா.. ஐ கேன் லெர்ன் யுவர் ஸ்மெல்.. உன்னை லவ்வர்னு வெளீல எப்படி சொல்ல?


20. பூசாரி - உன் சாவுக்கு விதை இங்கே தான் விதைக்கப்பட்டிருக்கு.. புரியலை.. நீ யாரை சாகடிச்சியோ அவன் பிணம் விழுந்த இதே இடத்துல தான்  நீ சாகப்போறே..


21. வில்லன் - பார்ட்னர்ல ஒரு ஆள் செத்துட்டா இந்த டீலிங்க் கேன்சல் ஆகிடும், இன்சூரன்ஸ் தொகை கோடிக்கணக்குல கிடைக்கும்

 அடப்போப்பா.. அதுக்காக  நீ தற்கொலையா பண்ணிடப்போறே?


 நோ நோ..  உன்னை கொலை பண்ணப்போறேன் ..


22. வில்லன் - அடங்கோ.. ஈக்கும், உனக்கும் கம்யூனிகேஷன் கூட நடக்குதா?


23.டேய் , 2 வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக 
எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம 
ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை 
காதலிக்கவேயில்லை 





 இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது 
எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே 
நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம 
போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி 
என்னையும் தூங்கச் சொல்லுறா



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-fcyoor5c-zfCfT6iubF867X8v3Ih_uBY09zBZm8QSNEYvz0e_UQQsvU1WmY89FZnCmu9hXUPsiBH0uKVy2b8x-V7K-pZPblIEg1LYvR_Jy6yst9-ADxhjA_5XaDklXJhzxE0248wmG56/s1600/samanthainbanakathaadi_05.jpg



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. மரகத மணியின் இசையில் வீசும் வெளிச்சத்திலே .. பாட்டு செம மெலோடி.. ஆல்ரெடி சூப்பர்  ஹிட்.. படமாக்கப்பட்ட விதம் குளுமை..


 2. பின்னணி இசை கன கச்சிதம் , குறிப்பாக ஈ கிட்டத்தட்ட ஹீரோ லெவலில் இருப்பதால் அது பழி வாங்க கிளம்பும்போதெல்லாம் அதற்கு தரப்படும் பில்டப் மியூசிக் ஓக்கே..


3. ஒரு ஷாட்ல ஹீரோ சருகுகளை உதைக்க அது சாலை எங்கும் சிதறும் காட்சி கிளாசிக்


4. வில்லன் கார்ல போய்ட்டிருக்கான்.. ஹீரோயின் ஏர்போர்ட்ல .. அவனை போக விடாம பண்ணனும் .. அதுக்கு ஈ டிராஃபிக் கான்ஸ்டபிள் மூலம் குழப்படி பண்ணி முதல்வன் பட டிராஃபிக் ஜாம் போல் பிரம்மாண்டமாய் பண்ணுவது நல்ல நம்பும்படியான ஐடியா


5. ஈயிடம் இருந்து தப்பிக்க வில்லன் பிணம் போல உடம்பு பூரா பாண்டேஜ் கட்டி படுக்கையில் தூங்கும் சீன்..

6. ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் படம் முழுக்க இயக்குநரின் வெற்றிக்கு உழைத்த விதம்,. 


7. ஹீரோயின் வீட்ல கரெண்ட் போயிடுது,, உடனே ஹீரோ பர பரவென மொட்டை மாடி வந்து  சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து  லைட் கொடுக்கும் ஐடியாவும், அதை புன்முறுவலோடு அங்கீகரிக்கும் சமந்தாவின் முகத்தில் காதல் பொங்கி வழிவதும்

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120522171403000000.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வில்லன் ரூமுக்குள்ளே ஹீரோயின் கூட தனியா இருக்கார்.. அவர் ஹீரோயினுக்கு 15 லட்சம் செக்  தர்றார்.. 2 பேரும் ஒண்ணா வெளீல வர்றாங்க.. அப்போ பார்டன்ர் வில்லன் கிட்டே ” 15 லட்சம் செக்   தர்ற அளவு அவளை உனக்கு பிடிச்சுடுச்சா? என கேட்கறாரே? எப்படி? செக்கை ஹேண்ட்பேக்ல ஹீரோயின் வெச்சிருக்கா.. வில்லன் எதும் சொல்லலை, எப்படி தொகை பார்ட்னருக்கு தெரியும்?


2. ஹீரோ நண்பர்களிடம் பேசும்போது ஒன்றரை வருஷமா அவ பின்னால அலையறேன்னு ஒரு வசனம், ஹீரோயின் தன் அண்ணி கிட்டே பேசும்போது “ 2 வருஷமா அவன் என் பின்னால சுத்தறான்”ன்னு டயலாக்.. 6 மாசம் என்ன ஆச்சு?


3. ஈயாக மாறும் ஹீரோ வில்லன் கிட்டே நான் உன்னை கொல்லப்போறேன்னு எழுதி காட்டுது.. அதே போல் ஹீரோயின் கிட்ட்டே நான் தான் உன் ஆள், என்னை அவன் கொலை பண்ணிட்டான்னு ஆரம்பத்துலயே எழுதி காட்டி இருந்தா அவ உஷாரா இருந்திருப்பாளே?  ( ஆனா அப்படி ஒரு சீன் வெச்சிருக்காங்க, ரொம்ப லேட்டா )


4. பொதுவா சோகத்துல பொண்ணு இருந்தாலும் ஒரு விழிப்புணர்வு,  ஜாக்கிரதை உணர்வு பொண்ணுக்கு இருக்கும் , ஆனா ஹீரோயின் கேனம் மாதிரி வில்லன் என்ன செஞ்சாலும் கண்டுக்காமயே இருக்காளே.. வாலி படத்துல வில்லன் அஜித் கொஞ்சம் ட்ராக் மாறூம்போது ஒரு சீற்றம் காண்பிப்பாரே அப்படி ஒரு சீனாவது வெச்சிருக்கனும்..


5. வில்லன் பல டைம் ஹீரோயினை தவறான பார்வை தவறான கோணத்துல பார்க்கறான்.. எல்லாருக்கும் அது தெரியுது, ஆனா ஹீரோயினுக்கு மட்டும் அது தெரியலை..


6. க்ளைமேக்ஸ்ல அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஹீரோவான ஈ மீண்டும் ஈயாக மறு ஜென்மம் எடுக்குது, எப்படி? ஒரு முறை ஒரு பிறவி எடுத்துட்டா மறுபடி அதே பிறவி வரும்?



7. க்ளைமாக்ஸ்ல ஈ ஒரு ஊசியை எடுத்து வில்லனை தாக்க வருது.. வில்லன் ஒரு காந்தத்தை எடுத்து அந்த ஊசியை காந்தத்துல மாட்டி வைக்கறார்.. அப்போ ஆபத்துல இருக்கற ஈ ஊசியை விட்டுட்டு அந்த பக்கம் வந்துடலாமே? ஏன் இறுகி பிடிச்சு மாட்டுது?

8. வில்லன் ஈ வைச்ச பாம்ல காயப்படறான்.. அந்த ரூமே அழியுது, அடியாளுங்க எல்லாம் தெரிச்சு ஓடறாங்க, ஆனா ஹீரோயினுக்கு எதுமே ஆகலை.. ஏன்>


9. காதலன் இறந்த துக்கத்தை ஹீரோயின் முகத்துல நல்லா பதிவு செய்யலை.. ஏனோ தானோன்னு இருக்கார்..



http://i45.servimg.com/u/f45/17/35/15/36/naan-e12.jpg


அனைவரும் பார்க்கும்படி சுவராஸ்யமா தான் படம் போகுது.. ஜூலை 13 ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா -2 விற்கு டஃப் ஃபைட் கொடுக்கும்




 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 44


 குமுதம் ரேங்க் - ஓக்கே



சி.பி கமெண்ட் - ஃபேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு..  காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட்  தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்.. மறுபடி க்ளைமேக்ஸ்ல அதே சீனை எடிட் பண்ணி யூஸ் பண்ணி இருக்காங்க

 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்.. ஸ்ரீ கிருஷ்ணாவிலும் ரிலீஸ் 

http://123tamilcinema.com/images/2012/05/Naan-E-Movie-Posters-Mycineworld-Com-1.jpg