இயக்குநர் விக்ரம் குமார்க்கு எந்த தமிழ் இயக்குநருக்கும் இல்லாத ஒரு பெருமை உண்டு. வழக்கமா தெலுங்குப்படத்தை ,ஹிந்திப்படத்தை தமிழ் ல ரீமேக் பண்ணின தமிழ் சினிமா உலகத்தில் முதல் முறையா தமிழ் சினிமா வை ஹாலிவுட் சினிமா ரீமேக்கிய தருணம். யாவரும் நலம் என்ற பிரமாதமான த்ரில்லர் மூவி. அவரது அடுத்த ப்டம் 24 எப்டினு பார்ப்போம்
ஹீரோ ஒரு சயிண்ட்டிஸ்ட். டைம் மிஷின் போல் டைம் ட்ராவல் வாட்ச் கண்டு பிடிக்கறார். ஆனா அவரோட அண்ணன் ( ட்வின்ஸ்) வந்து அவரைக்கொலை செஞ்சுடறார்.அண்ணன் கைக்கு வாட்ச் கிடைக்கலை,
ஹீரோவுக்கு ஒரு குழந்தை. 26 வருசத்துக்குப்ப்பின் கதைல ஒரு திருப்பம். வில்லனும் ஹீரோ மகனும் சந்திக்கறாங்க , அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதே திரைக்கதை
ஹீரோவா அர்ப்பணிப்பான நடிப்பில் கமல் விக்ரம் க்கு அடுத்த இடத்தில் இருக்கும் சூர்யா. இ ரு வித கெட்டப் .
வில்லன் கெட்டப்ல கலக்கல் நடிப்பு ஆனா அகரம் ஃபவுண்டேசன் சாஃப்ட் ஹீரோவை வில்லனா பார்த்து ஜீரணிக்க கொஞ்சம் டைம் ஆகும்.
பாடி லேங்குவேஜில் வில்லன் நடிப்பில் வீல் சேரில் அமர்ந்திருக்கும் சூர்யாவின் ஆக்டிங் அசத்தல்
ஹீரோவா வரும் சூர்யா வழக்கம் போல் ரொமா\ண்டிக் வழிசல் இளமை துள்ளல்
ஹீரோவா வரும் சூர்யா வழக்கம் போல் ரொமா\ண்டிக் வழிசல் இளமை துள்ளல்
ஹீரொயினா சமந்தா . பவுடர் கோட்டிங் பர்பி பொம்மை. பாடல் காட்சிகளில் அசால்ட்டா ஒரு நைட்டி மட்டும் போட்டுட்டு சுத்துது. நல்ல காஸ்ட்யூம் சென்ஸ்,
சரண்யா ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மா கேர்கடர், வழக்கம் போல் குட்
ஆர்ட் டைரக்சன் , ஒளிப்பதிவு , இசை மூன்றும் போட்டி போட்டு பர்ஃபார்மென்சில் கலக்கறாங்க. ஸ்டண்ட் மாஸ்டரும் இந்த லிஸ்ட்டில் சேர முயற்சிக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி
டூயட் சீன்களின் லொக்கேசன் செலக்சன் அருமை டிர்ஸ்சிங் சென்சில் சிக்கன் நடவடிக்கையில் ஈடுபட்ட சமந்தாவுக்கும் காஸ்ட்யூம் டிசைன்ருக்கும் ஒரு பூங்கொத்து
நச் டயலாக்ஸ்
1 வில்லன் =,நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.உன் பிறந்தநாள் இறந்த நாள் 2 ம் ஒரே நாளில். #24
2 வீடு பூரா இத்தனை வாட்ச் இருக்கு.ஆனா நேரத்தோட அருமை தெரியாதவங்க #24
3 அதெப்டிரா வெட்கமே இல்லாம ஓசி சாப்பாடு சாப்பிடறே?
நாங்க எல்லாம் வெக்கத்தை கக்கத்தில் வெச்சுக்குவோம் #24
4 எல்லாருக்கும் ரொம்ப நாள் வாழனும்னு ஆசை இருக்கும்.ஆனா வயசானவனா வாழ ஆசை இருக்காது #24
5 மணி எங்கே?
இதோ 5 நிமிசத்துல் வந்துடறேன்னு சொல்லிட்டுப்போய் அரை மணி நேரம் ஆச்சு.1 மணி நேரத்துல வந்துடுவான் எப்படியும் #24
6 ஒரே ஆளை 2 தடவை கொல்ல வாய்ப்பு கிடைச்ச உலகின் முதல் மனிதன் / அதிர்ஷ்டசாலி நாந்தான் #24
தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்
24 = 164 நிமிடம். ஈரோடு மகாராஜா @ 9 AM show
2 ஆக்சன் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன் பட்டாஸைக்கிளப்பனும்
இதில் அமைதியான எளிமையான ஓப்பனிங் #24
3 ஆர்ட் டைரக்டர் பர்ஸ்ட் கோல்.சயின்ட்டிஸ்ட் லேப் #24
4 வாட்ச் திஸ் மூவி னு தாராளமா சொல்லலாம்.ஏன்னா கதையே வாட்ச் ல தான் # டைம் மிஷின் டைம் வாட்ச்
5 ஆர்ட் டைரக்டருக்கு அடுத்து இசை 2 வது கோல்.பிஜிஎம் ஏ ஆர் ஆர் ராக்கிங் #24
6 3 வது கோல் ஒளிப்பதிவு.மழைத்துளிகளை ப்ரீஸ் செய்து ஹீரோ சுண்டி விடும் காட்சி #24
7 திரைக்கதையின் தேவை கருதி ஒரே சீன் 3,டைம் ரிப்பீட் ஆகுது.இப்டி அடிக்கடி நிகழ்ந்தா நல்லதல்ல #24
8 வாட்ச் மெக்கானிக் இல்லையா நான்.இதெல்லாம் சர்வசாதாரணம். இதே டயலாக்கை ஹீரோ அடிக்கடி சொல்றார்.முடியல #24
9 யாவரும் நலம் விறுவிறுப்பு பரபரப்பு மிஸ்சிங் #24
10 டைம் மிஷின் கதைகளின் முக்கிய விதி இறந்த காலத்தின் நிகழ்வுகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே.ரூல் மீறுதே #24
11 டைம் ப்ரீசிங்.& செட்டிங்ஸ் சேஞ்ச் சீன் கள் சி சென்ட்டர்.ஆடியன்சை கவர்வது புரிவது சிரமம் #24
12 இண்ட்டர்வல் பிளாக். எதிர் பாராத திருப்பம் . வில்லன் ஆக்டிங் ராக்கிங் பர்ஃபார்மென்ஸ் #24
13 வில்லன் = அவன் சேது ராமன் பிள்ளைன்னா நான் சேதுராமனோட
அண்ணண்டா #24
சபாஷ் டைரக்டர்
1 வில்லன் சூர்யாவுக்கான கெட்டப் நடிப்பு எல்லாம் செம
2 ஆள் மாறாட்ட சீனில் வில்லன் தன் பெயரை செக்கில் சைன் செய்வதும் ஹீரோயினுக்கு தெரிந்த உண்மை ஹீரோவுக்கு தெரியாமல் போவதும்
3 பின் பாதியில் வில்லனும் ஹீரோவும் சந்திக்கும் சீனும் ஹீரோ டைம் வாட்சை வில்லனுக்கு தராமல் போக்கு காட்டி பஞ்ச் டயலாக் பேசுவதும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஹீரோ ஒரு சீன்ல டைம் வாட்ச் மூலம் பேக்ல போய் ஹீரோயினுக்கு பூ வெச்சு விடறார். அது நிகழ்காலத்துக்கு வந்த பின்னும் அவ\ளால உணர முடியல. 10 நிமிசம் கழிச்சு க\ண்ணாடில பார்த்த பின் தான் ஹீரோயின் உணருகிறார். மல்லிகைப்பூ வாசம் கூடவா தெரியாம போய்டும்?
2 ரிப்பீட் ஆடியன்ஸ் வரனும்னா படத்தில் ரிபீட் சீன்ஸ் ரிபீட் வசனம் வரக்கூடாது ( விதி விலக்கு ரஜினி பட பஞ்ச் டயலாக்\) இந்தப்படத்தில் வாட்ச் மெக்கானிக்னா இது கூட தெரியாதா என்|ற ஒரே டயலாக் 14 டைம்வருது. வரும்போதெல்லாம் ஆடியன்ஸ் ஓன்னு கத்தறாங்க
3 ஓப்பனிங் சீனில் ஹீரோ மனைவி மகன் ஆபத்தான சூழலில் வில்லன் ஆட்களிடம் மாட்டி இருக்காங்கன்னு தெரிஞ்சும் எப்படி பதட்டமா உடனே கிளம்பாம டைம் வாட்சை பத்திரப்படுத்திட்டு அப்புறமா போக முடியுது?
4 சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் மூவி எடுக்கனும்னு முடிவு எடுத்ததும் வழக்கமான காதல் மொக்கை காமெடி சீன்களை எல்லாம் ஒதுக்கி இருக்க்லாம்
5 ஹீரோ ஒரு சாதாரண வாட்ச் மெக்கானிக். ஹீரோவோட அப்பா ஒரு சயிண்ட்டிஸ்ட். பல வருசம் சிரமப்பட்டு க\ண்டு பிடிச் ச டைம் வாட்ச் ல இருக்கும் குறையை ஒரே நா|ள் ல ஹீரோ எப்டி சரி செஞ்சு டெவலப் பண்றாரு? அவர் சயிண்ட்டி\ச்ட் கிடையாதே? சயிண்ட்டிஸ்ட் ஆன அப்பா கூடவும் வளரலை
5 ஹீரோ ஒரு சாதாரண வாட்ச் மெக்கானிக். ஹீரோவோட அப்பா ஒரு சயிண்ட்டிஸ்ட். பல வருசம் சிரமப்பட்டு க\ண்டு பிடிச் ச டைம் வாட்ச் ல இருக்கும் குறையை ஒரே நா|ள் ல ஹீரோ எப்டி சரி செஞ்சு டெவலப் பண்றாரு? அவர் சயிண்ட்டி\ச்ட் கிடையாதே? சயிண்ட்டிஸ்ட் ஆன அப்பா கூடவும் வளரலை
சி.பி கமெண்ட் - 24 - தமிழ் சினிமாவுக்கு புதிதான சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் மூவி,முன் பாதி ஸ்லோ பின் பாதி ஓக்கே , விகடன் மார்க் -43 , ரேட்டிங் = 3 / 5
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மார்க் = 43
குமுதம் எதிர்பார்ப்பு யூக ரேட்டிங் = ஓக்கே