Showing posts with label SWETHA RAO. Show all posts
Showing posts with label SWETHA RAO. Show all posts

Monday, June 16, 2014

நான் தான் பாலா - சினிமா விமர்சனம்


 மகாபாரதத்தில்  இருந்து  துரியோதனன் - கர்ணன் கதையை சுட்டு பட்டி டிங்கரிங்க் பண்ணி மணிரத்னம் தளபதியை கொடுத்தாரு. அது வந்து பலம் வருசம் ஆனதால  தமிழர்கள் அதை எல்லாம் மறந்திருப்பாங்கனு நம்பி அதே சாயல் ல ஒரு படம்  தந்திருக்காங்க . எக்சாம் ஹால் ல வேணா  தமிழன் தான் படிச்சதை மறந்து அரியர் வைக்கலாம். ஆனா தான் பார்த்த   ஒரு சினிமா வை ஒரு மாமாங்கம் ஆனாலும்  தமிழன் மறக்கவே  மாட்டான். இதை எல்லா  இயக்குநர்களும்  நினைவில்  கொள்க .


ஹீரோவோட  அப்பா  பொய்யான  குற்றச்சாட்டில்  ஜெயிலுக்குப்போறார். அவரை  ஜாமீனில் எடுக்கக்கூட யாரும்  உதவி செய்யலை. ஹீரோ ஒரு சாத்வீகமான  பிராமணர். அவருக்கு ஒரு ரவுடி உதவி செய்யறார். 

 இருக்கற  சோகம் பத்தாதுன்னு ஆடியன்ஸ் நெஞ்சை கசக்கிப்பிழிய  ஹீரோவோட அம்மா, அப்பா அவமானம்  தாங்காம தற்கொலை பண்ணிக்கறாங்க . 


தகர டின் ல   போளி விற்கும்  ஹீரோயினுக்கு  ஹீரோ ஒரு அநாதைனு  தெரிய வந்ததும்  பொசுக்குனு லவ் வந்துடுது . நாட்டுல  1008 பேர் அநாதையா  இருந்தாலும் அவங்களை எல்லாம் கண்டுக்காத  ஹீரோயின் கரெக்டா  ஹீரோவை மட்டும் லவ்வறார் . 


ஹீரோயினோட அப்பா  இவங்க காதலுக்கு  ஓக்கே சொல்றார். ஆனா அந்த ரவுடி சகவாசம் மட்டும் வேணாம்கறார். ஆனா  ஹீரோ  தனக்கு ஆபத்து  காலத்தில்  உதவிய நண்பனை கட் பண்ண தயாரா இல்லை 

  முடிவு என்ன ஆச்சு?னு  தில்  இருப்பவர்கள்  தியேட்டரில் போய் பார்த்து  தெரிந்து கொள்க 





 ஹீரோவா  ஜனரஞ்சகக்கலைஞன்   சின்னக்கலைவாணர்  விவேக் . சின்னக்கவுண்டர்   ஹேர் ஸ்டைல்  , அந்நியன்  முக கெட்டப் , தர்மதுரை  ரஜினி  ஓல்டு கெட்டப் நடை  என அவர் கலந்து கட்டி கலக்கி இருக்கார் .  அவரது   இந்த  புதிய  முயற்சி , நடிப்புக்கு ஒரு ஓ போடலாம் . ஆனா கதை , திரைக்கதை தான்  சொதப்பல் . 


 ஹீரோயினா  ஸ்வேதா .  50 மார்க் வாங்கிடும்  சராசரி  ஃபிகர் . ஆனா பாவம்  முகத்தில்  உணர்ச்சிகளே வர மாட்டேங்குது . குஷ்பூ அரசியலில்  திமுக வை தனியே தன்னந்தனியே விட்டுட்டுப்போய்ட்டார்னு ஷாக்கிங்க்  நியூசை சொன்னாக்கூட அப்படியா? என அசால்ட்டா கேட்கும் ஏனோ தானோ கேரக்டர் , மனதில்  ஒட்டவில்லை .


ஹீரோவின்  நண்பனாக  பூச்சி கேரக்டரில்   வேங்கட் ராஜ் அருமையான நடிப்பு . நல்ல எதிர்காலம்  இருக்கு 


 செல்  முருகன்  விவேக் கிற்கு வாலி பட காலத்தில்  இருந்து  காமெடி ஸ்க்ரிப்ட் எழுதித்தந்தவர் . இதுல  மொக்கை  ஜோக்கா அடிச்சுத்தள்ளறார். அவர் அடிக்கும்  18 மொக்கைகளுக்கு  4 ல் ஆடியன்ஸ்  போனா போகுதுன்னு  சிரிச்சு வைக்கறாங்க 


 பாடல்கள் , இசை , ஒளிப்பதிவு  எடிட்டிங்க் எல்லாம் சராசரி ரகம் 





a







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. விவேக்கின்  கெட்டப்  , போஸ்டர் டிசைன்   எல்லாம்  கலக்கல்  ரகம் . எல்லா மீடியாக்களிலும்   முன்னணி  இயக்குநர்கள் படத்தைப்பத்தி ஆஹா ஓஹோ  விமர்சனம் தந்தாக  வந்த செய்தி


2   டைட்டில்   டிசைன் நல்லா  இருக்கு




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   ஹீரோவை  ரொம்ப சாத்வீகமா  காட்டும் போதே க்ளைமாக்ஸ் ல ஒரு கொலை பண்ணப்போறார் என எல்லோருக்கும்  தெரிஞ்சுடுது 


2   ஹீரோவின் பெற்றோர்   தற்கொலை செய்வது ரொம்ப செயற்கை . ஒவ்வொரு தேர்தல் வரும்போதும்  கலைஞர்  இதுதான் எனது கடைசித்தேர்தல் என அள்ளி  விட்டு அனுதாப ஓட்டுக்கு அடி போடுவாரே அது மாதிரி   எடுபடலை 


3   ஹீரோ -  ஹீரோயின் காதல்  காட்சிகள்  எடுபடலை 


4   என்னதான்ன்   ஹீரோவுக்கு  சீரியஸ்  கேரக்டரா  இருந்தாலும் அவர் நரசிம்மராவ்  கணக்கா  சிரிக்காமயே உம்மணாம்மூஞ்சி  உமாவாய் இருப்பது  ஓவர் . வலிய திணிக்கப்பட்ட கேரக்டரைசேஷன்  





மனம் கவர்ந்த வசனங்கள்

 1.நான் குழந்தையா இருக்கச்சே எங்கம்மா அப்பா பாத்துக்கிட்டா.இப்போ அவங்க குழந்தை.நான் தானே பாத்துக்கனும்? # நான் தான் பாலா


=============


2 நமக்கு உதவி செஞ்சது நம்மாளா? வேத்தாளா? எப்பவும் வேத்தாள் தான் உதவி செய்வான். # நான் தான் பாலா


===============

3  சமைக்கும்போது நாம சந்தோஷமா இருந்தாத்தான் சாப்பிடறவங்களுக்கு அந்த் சந்தோஷம் போய்ச்சேரும் #,நான் தான் பாலா


================


4 மத்தவங்க அனுதாபத்தின் மூலமா நம்ம வாழ்க்கை எப்பவும் அமைஞ்சிடக்கூடாது # நா பா



=================


5  செல் முருகன் = குடிச்சுட்டு வண்டி ஓட்டக்கூடாதுனுதான் சட்டம் சொல்லுது. குடிச்சுட்டே ஓட்டக்கூடாதுனு எந்த சட்டமும் சொல்லலை


=================


6  குடிக்கறதைக்கொஞ்சம் குறைச்சுக்கக்கூடாதா?



அதான் குடிக்கக்குடிக்க குறையுதே?# நா பா


=================


7  இந்தப்பொண்ணுங்க லவ் பண்றப்ப (ROUGH & TOUGH) ஆளாப்பாத்து லவ் பண்ணுவாங்க.மேரேஜ்னு வரும்போது SOFTடான ஆளாப்பாத்து பண்ணிக்குவாங்க #நாபா

================


8  மயில்சாமி டூ செல் முருகன் = வேர் ஈஸ் யுவர் ஐ டி கார்டு/? வேர் ஈஸ் யுவர் விசிட்டிங் கார்டு? வேர் ஈஸ் ஏற்காடு?


===============


9  பெத்த தாயே சொன்னாலும் மத்தவா உயிரை எடுக்கறது தப்பு # நா பா


================

 






படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S


1. படம் போட்டு 15 நிமிஸம் கழிச்சு விவேக் அமைதியின் சொரூபியா என்ட்ரி.க்ளைமேக்ஸ் ல கேப்டன் ரேஞ்ச்சுக்கு ஆவாருனு பட்சி சொல்லுது# நான் தான் பாலா

================ 


2  ஹீரோ ஒரு அநாதைனு தெரிஞ்சதும் ஹீரோயின் அப்டியே துடிக்குது.ஷப்பா. # நா பா


=====================


3   விவேக் கின் அண்டர்ப்ளே ஆக்டிங்க் குட்.ஆனா உன்னிப்பா கவனிச்சா பல இடங்கள் ல செயற்கை தட்டுது


==================


4  இசை ரசிகர்களுக்கு.போஜனம் செய்ய வருக பாட்டு சரணத்தில் வரிகள் ,இசை ,ஆண்டாள் வேட நடனம் அருமை. # நா பா


=================


5 அய்யர் பையன் சகசாசம் ஆகாது அப்டி னு சர்ச்சைக்குரிய வசனம் வருது.எப்டி சென்சார்ல விட்டாங்க? # நா பா


===============


6  அம்மா.ரொம்ப ரொம்ப நகை நான் கேட்கவில்லை பாட்டு படத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆனால் சமபோக விருந்து


==============







சி பி கமெண்ட் =நான் தான் பாலா - ஆம் ஆத்மி போல் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்ட சராசரி படம் - விகடன் மார்க் =40 ,ரேட்டிங் = 2.25 / 5


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =40





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =2.25 / 5


நான் தான் பாலா @ சென்னை ரக்சினி  ( rohini complex)



Embedded image permalink