Showing posts with label SURYAKATHIR. Show all posts
Showing posts with label SURYAKATHIR. Show all posts

Thursday, July 05, 2012

ஜனாதிபதி தேர்தலில் கேப்டன் பம்முவது ஏன்? ஓ பக்கங்கள் ஞானி பேட்டி @ சூர்யக்கதிர்

http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_11835443974.jpg1. ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசையெல்லாம் உங்களுக்கு கிடையாதா?


இதில் நான் கலாம் கட்சி. எல்லா கட்சிகளும் சேர்ந்து வந்து என்னைப்
போட்டியின்றித் தேர்ந்தெடுத்தால் குடியரசுத் தலைவராவதில் எனக்கு ஒன்றும்
ஆட்சேபணையில்லை.



2. அப்பாவிகளிடம் நில அபகரிப்பு செய்ததன் விளைவே தி.மு.க. மாஜியினர்
ஜெயிலுக்கு போயுள்ளனர். ஆனால், குற்றம் செய்த அமைச்சர்களை கண்டிக்காமல்
அவர்களுக்கு ஆதரவாக அப்பாவி தி.மு.க. தொண்டர்களை சிறை நிரப்பும்
போராட்டம் என்ற பெயரில் சிறைக்கு அனுப்ப ஆசைப்படுகிறாரே கருணாநிதி?



ஜெயிலுக்குப் போயிருப்பவர்களின் நிதி ஆதாரத்தில்தானே கட்சி ஒவ்வொரு
மாவட்டத்திலும் நடக்கிறது ? அவர்களைக் காப்பாற்றினால்தானே கட்சியைக்
காப்பாற்றமுடியும் ? அப்பாவி தொண்டர்களால் கட்சிக்கு பணம் கொடுத்து
உதவமுடியாது அல்லவா. எனவே அவர்களால் முடிந்தது உடல் உழைப்பு. அதனால்
சிறைக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள்.



3. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி தான் காரணம் என்று குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்
பி.ஏ. சங்மா குற்றம் சாட்டியுள்ளாரே?



தனி நபர் யாரையும் பொறுப்பாக்க முடியாது. மொத்த அரசாங்கமும் ஆளும்
கட்சியும் அவர்களின் பொருளாதாரக் கொள்கைகளுமே பொறுப்பு.



4. பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க கிராமம் கிராமமாக மக்களை
திரட்டுவேன் என்கிறாரே வைகோ?



செய்ய முடிந்தால் நல்லதுதான்.ஆனால் கிராமம் கிராமமாக மக்கள் திரண்டு
வந்து அமைதியாகப் போராடியும் அணு உலை விஷயத்தில் அரசுகள் காட்டும்
பிடிவாதத்தைப் பார்க்கும்போது, அணை விஷயத்திலும் அதேதானே நடக்கும் என்ற
கவலை எழுகிறது.



5. வெள்ளாட்டின் தலையை காட்டி ஓநாய் கறி விற்பதில் பிரணாப் கெட்டிக்காரர்
என்கிறாரே நாஞ்சில் சம்பத்?


பிரணாப் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளும் அந்தக் கலையில் தேர்ந்தவர்கள்தான்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW3cOnnmWSo-6pSGMqmaUQsuvP3dv6x7J3_dXh0Sn7qP9b0OIZ5QueU7ci7M-v-9xtEHiM_N5aUUuR5WNh_LViXjgemKMZN78LEJ4hpDmTg7daGlION4DO9zXqjJDUqyqLiTm_-nR7BLY/s1600/0.jpg


6. கலகம் – கழகம் என்ன வித்தியாசம் சார் ?


கழகத்துக்குள் கலகம் நடந்தால் இன்னொரு கழகம் பிறக்கும் என்பது வரலாறு.
கழகம் மக்களுக்கு எதிராகக் கலகம் செய்தால் ஆட்சியை இழக்கும் என்பதும்
வரலாறு.



7. மத்தியில் கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று
கருணாநிதி கூறியிருக்கிறாரே?


அவர் சொல்வது முழுக்க முழுக்க சரிதான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது?
இந்தக் கூட்டணிகள் எல்லாம் என்ன கொள்கைக் கூட்டணிகளா, இல்லையே? சந்தர்ப்ப
சூழ்நிலைக்கேற்ப அவரவர் சுயநலம் சார்ந்து அணி மாறுவதுதானே வழக்கம் ?
இதற்கெல்லாம் கோபப்படலாம், வருத்தப்படலாம். ஆச்சரியப்படமுடியாது.



8. குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஓராண்டில் தமது வீட்டில் 171
சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி இருக்கிறாராமே?


பொதுவாக நம் நாட்டு அரசியல் நிர்வாக முறையில் எம்.எல்.ஏ தொடங்கி
ஜனாதிபதி வரை எல்லா பதவிகளிலும் இருப்பவர்கள் வீட்டில் அவர்கள் குடும்பம்
மட்டுமே இருப்பதில்லை. நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு பெரும்படையே
அங்கே பொதுச் செலவில் வாழ்க்கை நடத்துகிறது. சென்னையில் எம்.எல்.ஏ
ஹாஸ்டலுக்குப் போய் பாருங்கள்.

எம்.எல்.ஏவை சந்திக்கமுடியாதே தவிர, அவர்
ஊரிலிருந்து வந்து தங்கியிருக்கும் சுற்றம் நட்பு எல்லாரையும்
சந்தித்துவிடலாம். இதற்கு மற்றபடி நேர்மையான அறிஞரான அன்சாரியும் விதிவிலக்கல்ல என்று
தெரிகிறது. அப்துல் கலாம் போல திருமணமே ஆகாதவர்கள் மட்டும்தான் எந்தப்
பதவியிலும் இருக்கலாம் என்று விதி போட முடியாது. அப்படிப் போட்டால் கூட,
அவரைக் கவனித்துக் கொள்கிறேன் என்று ஒரு கூட்டம் வந்து சேரும்.



9. குடியரசு தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வெற்றி உறுதி ஆகி விட்ட நிலையில்
சங்மா போட்டியிடுவது அவசியமா ?


போட்டியின்றி பிரணாப் ஜெயிக்கக்கூடாது என்று அரசியல்ரீதியாக எதிர் அணி
நினைக்கும்போது அது சரிதான். ஜனநாயகத்தில் போட்டி இருந்தால் அது ஒன்றும்
தவறல்ல.


10. சங்மா போட்டியிடுவதால், பிரணாப் முகர்ஜியின் வெற்றி வாயப்பு நன்றாக
உள்ளது என்கிறாரே கருணாநிதி?



யார் போட்டியிட்டாலும் பிரணாபின் வாய்ப்பு மாறாது. கலாமே நின்றிருந்தால்
கூட பிரணாபுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.


http://www.vikatan.com/news/images/muthu_toon(2).jpg


11. தமிழகத்தில் தற்கொலைகள் அதிகம் என வந்துள்ள செய்தி குறித்து ?


டாஸ்மாக்கில் தினம் குடித்து ஸ்லோவாக தற்கொலை செய்வோரின் என்ணிக்கையையும்
சேர்த்தா, சேர்க்காமலா?



12. மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் திடீர் தீவிபத்து
ஏற்பட்டது சதி செயல் என கூறப் படுவது குறித்து?


இந்தியாவில் அரசு அலுவலகங்களிலும் தனியார் கம்பெனிகளின் ஆலைகளிலும்
தீவிபத்து நடந்தால் அது விபத்து என்று நம்புவதற்கான வாய்ப்பு பொதுவாகக்
குறைவுதான். சென்னையில் மூர்மார்க்கெட் எரிந்ததே, அந்த இடம்/நிலம்
ரயில்வேக்கு தேவைப்பட்டது என்பதாலும், அதை தர மார்க்கெட் வியாபாரிகள்
மறுத்துவந்ததினாலும்தான் என்று அப்போதே பேசப்பட்டது.



13. தேசத்திற்காக விளையாட வேண்டிய பயஸ் – பூபதி தனி நபர் வெறுப்பை காட்டுவது
முறைதானா சார்?


டென்னிஸ் தனி நபர் விளையாட்டு. ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பிறகு தேசம்,
மாநிலம் என்பதற்கெல்லாம் அர்த்தம் கிடையாது.



14. தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிப் பொருளாளர்
மு.க.ஸ்டாலின் தனது தந்தையைப் போலவே கருப்புக் கண்ணாடியுடன் வந்தது
அனைவரையும் சற்றே சிந்திக்க வைத்து யோசிக்க வைத்ததாமே?


ஸ்டாலின் அவர் அப்பா போல தோற்றம் காட்டினால் பிரச்சினை இல்லை. அவரைப்
போலவே அரசியல் செய்யாமல் இருந்தால் போதும்.



15. ஜனாதிபதி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கும் என்று விஜயகாந்த்
கூறியிருப்பதன் உள் அர்த்தம் என்ன?


2014ல் எந்த அணியுடன் போவது என்று இன்னும் முடிவு செய்யமுடியாமல்
இருப்பதால் இருவரையும் விரோதிக்க விரும்பாமல் இருக்கலாம்.


http://www.vikatan.com/av/2012/07/ndqyqy/images/p7b.jpg


16. தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தை அழகிரி புறக்கணித்துவிட்டாரே?

செயற்குழுவில் என்ன நடந்தால் என்ன? கடைசியில் தனக்கு சாதகமாக முடிவுகளை மாற்றவும் வளைக்கவும் வேறு அழுத்தங்கள் தரமுடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கலாமே.



17. அடிக்கடி நீங்கள் ஸ்டாலினை புகழ்கிறீர்கள்.. ஸ்டாலினை பிடித்த அளவிற்கு
உங்களுக்கு அழகிரியை பிடிக்காமல் போனது ஏன்?


ஸ்டாலினை நான் புகழ்வதில்லை. அழகிரியுடன் ஒப்பிடும்போது, அவர்
படிப்படியாக அரசியலில் வேலை செய்து மேலே வந்தவர் என்பதை நான் அவருக்கு
சாதகமன அம்சமாகப் பார்க்கிறேன் அவ்வளவுதான்.



18. ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை ரத்து செய்வதாக பிரணாப் உறுதியளித்த
பிறகு ஆதரியுங்களேன் என தி.மு.க.வுக்கு சீமான் அட்வைஸ் செய்திருக்கிறாரே?


நல்ல அட்வைஸ்தான். பிரணாப் ஆதரவு கேட்டு வந்து சந்திக்கும்போது இதை
கலைஞர் கருணாநிதி வலியுறுத்தலாம். பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக இந்த
உத்தரவைப் போட்டால், தமிழக மக்களுக்கு பிரனாப் மீது பெரு மதிப்பு
ஏற்படும்.


நன்றி - சூரிய கதிர் 1.7.2012


நன்றி - ஞானி இணைய தளம்


http://www.vikatan.com/news/images/p8(3).jpg