90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆன முதல் 2 நாட்களிலேயே 50 கோடிரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் ஆன மசாலா படம் இது .ஹீரோவை விட வில்லனுக்கு அதிக கை தட்டல்கள் கிடைத்த படம் . நான் ஈ புகழ் நானியின் திரை உலக வாழ்க்கையில் அதிக செலவில் தயாரான படம் இது
2022 ம் ஆண்டு வெளியான ANTE SUNDARANIKI ( அடடே சுந்தரேஷா ) படம் பெரிய வெற்றி அடையாத போது அதே இயக்குனருடன் இணைந்து ஒரு வெற்றிப்படம் கொடுப்பேன் என சவால் விட்ட நானி அதில் வெற்றி பெற்றிருக்கிறார் . இயக்குனர் விவேக் ஆத்ரேயா + நானி + எஸ் ஜெ சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் மாஸ் மசாலா ஆக்சன் படம் இது
SARIPODHAA SANIVAARAM என்ற டைட்டிலுக்கு சனிக்கிழமை மட்டும் போதுமா? என்று அர்த்தம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சிறுவனாக இருக்கும்போதே முரடன் ஆக இருக்கிறான் , இதனால் அவனது அம்மா அவனிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள்கிறார் . எப்போதும் கோபமாகவே இருக்காதே . வாரம் ஆறு நாட்கள் அமைதியாக இரு . யாருடனாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை எழுதி வைத்துக்கொள் , வாரம் ஒரு நாள் அடிதடியில் இறங்கு என்கிறாள் , சுருக்கமா சொல்லனும்னா நாயகன் ஞாயிறு முதல் வெள்ளி வரை மாணிக்கம் ஆகவும், சனிக்கிழமை மட்டும் மாணிக் பாட்சா ஆகவும் இருப்பான்
வில்லன் ஒரு சைக்கோ .போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் . அவனுக்கு பர்சனல் ஆக ஏதாவது பிரச்சனை என்றால் லாக்கப்பில் இருப்பவனை போட்டு அடி நொறுக்குவது , அவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது அவன் வழக்கம்
நாயகி வில்லன் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் ஆக இருக்கும் அதே போலீஸ் ஸ்டேஷனில் சாதா கான்ஸடபிள்
ஒரு கட்டத்தில் நாயகன் முகமூடி போட்டு வில்லனை அடித்து விடுகிறான் . வில்லன் தன்னை அடித்தவன் யார் என தேடுதல் வேட்டையில் இறங்குகிறான் . நாயகனுக்கு , வில்லனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் மீதி திரைக்கதை
எந்த மொழியில் எடுத்தாலும் ஹிட் ஆக வாய்ப்புள்ள மசாலா ஃபார்முலா கதை இது
நாயகன் ஆக நானி கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் . அவரது ஹேர் ஸ்டைல் , பாடி லேங்க்வேஜ் கச்சிதம்
நாயகி ஆக பிரியங்கா மோகன் பாந்தமான தோற்றம் . பால் அல்வா மாதிரி மாசு மரு இல்லாத மொசைக் முகம் . ஆனால் நடிப்பில் ஓக்கே ரகம் தான் . பிரமாதம் என சொல்ல முடியாது
வில்லன் ஆக அதகளப்படுத்தி இருப்பவர் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா . நாயகனை விட வில்லன் கேரக்டர் வலிமையாக எழுதப்பட்டிருப்பது பெரிய பிளஸ் . ஆக்சுவலாக இவர் செய்வது ஓவர் ஆக்டிங் தான் , ஆனால் ஆடியன்ஸ் ரசிக்கிறார்கள் . இவர் நடிக்கும் காட்சிகளில் மற்ற அனைவருமே டம்மி ஆகத்தெரிவது இவருக்குப்பெரிய பிளஸ்
1985 ஆம் ஆண்டு வெளியான காக்கிச்சட்டை படத்தில் வில்லன் ஆன சத்யராஜ் தகடு தகடு என்ற டயலாக்கை பேசும்போது அரங்கம் அதிரும் . அதே பாணியில் க்ளைமாக்சில் கமல் போலீஸ் போலீஸ் என சத்யராஜ் பாணியில் சதயராஜைக்கலாய்க்கும்போது கமல் ரசிகர்கள் கூட கை தட்டவில்லை . அதே போல இந்தப்படத்திலும் ஹிஸ்டரி ரிப்பீட் ஆகி இருக்கிறது
வில்லன் ஆன எஸ் ஜே சூர்யா ஒரு பாணியில் வசனம் பேசி கை தட்டல் வாங்குவார் . க்ளைமாக்சில் நானி அதே பாணியில் நான்கு வரி டயலாக் பேசுவார் , ஆனால் அது எடுபடவில்லை
இவர்கள் போக முரளி சர்மா , அதிதி பாலன் , அபிராமி ஆகியோர் நடிப்பும் குட்
ஜேக்ஸ் ஜோ இசையில் 12 பாடல்கள் . அவற்றில் 3 பாட்டு ஹிட்டு . பின்னணி இசை தெறிக்கிறது
முரளி யின் ஒளீப்பதிவு பிரமாதம் . சனிக்கிழமை மட்டும் ரெட் ஷேடோ மற்ற நாட்களில் சாதா கலர் என எடுத்த ஐடியா அட்டகாசம்
கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங்கில் படம் 175 நிமிடங்கள் ஓடுகின்றன
நாயகன் , வில்லன் , நாயகி இவர்களைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கே முதல் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டார்கள் , கொஞ்சம் நீளம் தான்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் விவேக் ஆத்ரேயா
சபாஷ் டைரக்டர்
1 வாரா வாரம் ஒரு நாள் ஆக்சன் அவதாரம் மற்ற நாட்களில் அமைதி என்ற கான்செப்ட் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
2 நாயகன் , நாயகி இருவரும் பால்ய கால தோழர்கள் , ஆனால் இப்பொது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அடையாளம் தெரியாது என்ற கான்செப்ட் ரசிக்கும்படி இருந்தது
3 வில்லனின் எண்ட்ரி சீன் ரொம்ப லேட் என்றாலும் டோட்டலி ஸ்டீல் த ஷோ அல்லது டேக்கன் த மூவி அண்டர் கண்ட்ரோல் என்று சொல்லும் அளவுக்கு ஆர்ப்பாட்டமான எஸ் ஜே சூர்யா நடிப்பு
4 நாயகனின் சனிக்கிழமை அவதாரம் நாயகிக்குத்தெரியாது . அப்போ நாயகன் நாயகி உடன் இருக்கும் போது சனிக்கிழமை அன்னைக்கு அடிக்கனும் என இன்னொரு வில்லனின் அடியாட்களுக்கு கட்டளை பிறப்பதும் அந்த ஆக்சன் சீனும் அதகளம்
5 வில்லனை நாயகன் முதன் முதலாக அடிக்க வரும்போது சனிக்கிழமை மிட் நைட் 12 மணி ஆவதும் , நாயகன் வில்லனை அடிக்காமல் பின் வாங்குவதும் , அந்த கடிகாரம் 10 நிமிசம் ஃபாஸ்ட் என்பதை அறிந்து திரும்பி வந்து அடிப்பதும் செம சீன்
6 வில்லன் நாயகன் ஒரு சனிக்கிழமை சனியன் என்பதை கண்டு பிடிக்க முற்படும் காட்சிகள் கலக்கல் காமெடி
7 வில்லனின் அண்ணனை வில்லனே போட்டுத்தள்ள முயல்வதும் . ஆனால் அண்ணன் வில்லனை தன் உயிரைக்காப்பாற்றியவன் என தவறாக நினைத்து பாசத்தில் உருகுவதும் செம காமெடி காட்சிகள்
8 வில்லனின் சந்தேக வளையத்தில் இருந்து தப்பிக்க நாயகன் வில்லனிடமே போய் என்னை ஒருத்தன் சனிகிழமை அடிச்சுட்டான் என கேஸ் கொடுப்பதும் , அதைத்தொடர்ந்து வில்லன் நாயகனை சாட்சியாக வைத்துக்கொள்வதும் காமெடிக்கலக்கல்கள்
ரசித்த வசனங்கள்
1 நமக்குப்பிடிச்சவங்களை ,பிடிச்சவங்களோட தான் சந்திப்போம் .
2 நீ அம்பி இல்லை .,அந்நியன் என்பது அவளுக்குத்தெரிஞ்சா நீ ரோமியோ ஆக முடியாது
3 அவனை அடிச்சதும் ,உன்னை அடிச்சதும் , என்னை அடிச்சதும் ஒரே ஆள்
சார் , உங்களை எப்படி ... ?
நீ எவ்ளோ ஷாக் ஆனாலும் அதான் நிஜம்
4 இந்தப்பாவிப்பையன் கூட இருந்துக்கிட்டே என்னை அப்பாவி ஆக்கி இருக்கான்
5 கூப்பிட்டியா? சமந்தா?
இல்லையே?
கூப்பிடாமயே கூப்பிட்ட மாதிரி இருந்தா ரொமான்ஸ் ஒர்க் அவுட் ஆகிடுச்சுன்னு அர்த்தம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் ஒரு சாதா இன்ஸ்பெக்டர் . அவர் பண்ணும் அட்டூழியங்கள் ஓவர் ரகங்கள் . இதெல்லாம் 1980 கால கட்டத்துக்கு ஓக்கே , ஆனால் சமூக வலைத்தளங்கள் இருக்கும் இப்போதைய கால கட்டத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டு அவரை நாஸ்தி பண்ணி விட மாட்டாரகளா?
2 நாயகன் தான் தன் அம்மாவுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் அமைதியாக இருப்பேன் என சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். வில்லனின் அடியாட்களுக்கு என்ன கேடு? ஞாயிறு டூ வெள்ளி வரை நாயகனைப்போட்டு பொளந்து கட்டி இருக்கலாமே? அவர்களும் சனிக்கிழமை ஏன் சண்டைக்குப்போக வேண்டும் ?
3 நாயகன் - நாயகி இருவரும் தாங்கள் இன்னார்தான் என்பதை உணர்ந்து அதற்குப்பின் காதலை வெளிப்படுத்தி இருந்தால் இன்னும் கவித்துவமாய் இருந்திருக்கும்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஜாலியான கமர்ஷியல் ஆக்சன் மசாலாப்படம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் , எஸ் ஜெ சூர்யாவின் ஓவர் ஆக்ட்டிங்கை ரசிப்பவர்கள் பார்க்கலாம் . ஆனந்த விகடன் மார்க் 44 , குமுதம் - நன்று. அட்ரா சக்க ரேட்டிங் 3 / 5
Saripodhaa Sanivaaram | |
---|---|
Directed by | Vivek Athreya |
Written by | Vivek Athreya |
Produced by | D. V. V. Danayya |
Starring | |
Cinematography | Murali G. |
Edited by | Karthika Srinivas |
Music by | Jakes Bejoy |
Production company | |
Distributed by | Sri Venkateswara Creations |
Release date |
|
Running time | 175 minutes[1] |
Country | India |
Language | Telugu |
Budget | ₹90 crore[2][3] |
Box office | ₹41 crore[4] |