Showing posts with label SURYA S J. Show all posts
Showing posts with label SURYA S J. Show all posts

Thursday, May 24, 2012

எஸ் ஜே சூர்யா (S.J.SURYA) விகடன் பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilnafE4lCiB11ZT_u5kdQ8uHySb5lCpPBwg-C5JHHY9E-vuQpURtnqLL17u_-m-sGFSuicnk2y_Ja9iWkfCsO77s_HMTGQP7726j0IHrMnUS1HGguq-GhMOP6_QkW7TdOTma97XWXSQ4k/s400/dsc_208000881244878142.JPG 

'இசையமைப்பாளர் எஸ்.ஜே.சூர்யா உங்களை வரவேற்கிறான்!''- மேஜையில் தடதட தாளம் தட்டி அதிரடிக்கிறார் மிஸ்டர் தன்னம்பிக்கை! 



 சி.பி - அப்போ டி ராஜேந்தர் யாருங்கோவ்?


 ''படத்தோட டைட்டில் 'இசை’... செமத்தியான டைட்டில்ல! ச்சும்மா பட்டையக் கௌப்புறோம்!'' - ஒரே நொடியில் அவர் உற்சாகத்தை நம் தோளுக்கு மாற்றுகிறார்.



சி.பி - டைட்டில்  இசையா? ரொம்ப ஈசி பட விமர்சனத்துல நம்மாளுங்க இசை = இம்சை அப்டினு வசை பாடப்போறாங்க 


''ஆறு வருஷத்துக்குப் பிறகு, நான் தமிழில் பண்ற படம் 'இசை’. காதலும் மியூஸிக்குமா முதல் பாதி, சைக்கோ த்ரில்லர் இரண்டாம் பாதி.





சி.பி  - சைக்கோ  த்ரில்லரா? சுத்தம்.அரோகரா அரோகரா , மயக்கம் என்ன? 3 எல்லாம் வரிசையா எங்க கண்ணுக்குள்ள வந்துட்டு போகுதே?




 காலங்காலமாப் பார்த்தீங்கன்னா, சினிமாவில் ஒரு மியூஸிக் ஜீனியஸ் இடத்தை இன்னொரு மியூஸிக் ஜீனியஸ் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. நம்ம கண்ணு முன்னாடியே பலர் புகழ் சக்கரத்துல ஏறி இறங்குறதைப் பார்த்திருக்கோம். அப்படி தன்னோட உச்சத்தில் இருந்து இறங்கிய ஒருத்தன், மீண்டும் அந்த உயரத்தை அடையப் போராடுறதுதான் கதை. தோத்துப்போன ஒரு மியூஸிக் டைரக்டரின் வலி, வேதனை எல்லாமே அச்சு அசலா படத்தில் இருக்கும்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5rIhIXgaztb4dp6Uo-wMdSG4hIFt3d3EFafCnU7JtqJB98gsf7f4i8sq637cNKIdbsNFWjjd2zi7zFfpAH9-dISZzGui2pKggj6soQpj1LWza4mm5aVl4EVjEXhwF86nerBBFJTLgSpBr/s1600/sj_surya_05.jpg



சி.பி - துரை இயக்கி தல நடிச்ச முகவரி கதையை கொஞ்சம் உல்டா பண்ணீட்டீங்க போல  , இடைவேளைக்குப்பிறகு மயக்கம் என்ன மாதிரியா, விளங்கிடுச்சு.. ஐ மீன் படத்தோட கதை விளங்கிடுச்சு ஹி ஹி



எந்தக் காரியத்திலும் ஆழமா இறங்கிப் பார்க்கிறதுதான் என் ஸ்டைல். அதான் நானே மியூஸிக் டைரக்டர் ஆகிட்டேன்!''


சி.பி - டீப் ஸீயிங்க்? ஹி ஹி 
1. ''ஒரு முழு படத்துக்கும் இசையமைக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?''


'' 'உங்களால ஒரு முழு படத்துக்கும் மியூஸிக் பண்ண முடியும்’னு என்கிட்ட சொன்னவரே ஏ.ஆர். ரஹ்மான்தான். 'நீங்க மனசுவெச்சா, பயிற்சி எடுத்துக் கவனமா இறங்கினா, நிச்சயம் உங்களால் முடியும்’னு சொன்னார் ரஹ்மான். நான்கூட, 'என் படத்துக்கு மியூஸிக் போடாம இருக்க இப்படி ஒரு ஐடியாவா சார்?’னு கேட்டேன்.


 'சேச்சே... அப்படியில்லை... உங்களால முடியும்னு எனக்குத் தோணுச்சு’னு சொன்னார். அவரே சொல்லிட்டாரே... நிச்சயம் அதுல ஏதோ இருக்கும்னு எல்லாத்தையும் ஒதுக்கிவெச்சிட்டு அஞ்சு மாசம் பியானோ, கிடார்னு மூழ்கி இசையமைப்பாளர் ஆகிட்டேன்!''



சி. பி - என்னண்ணே, முழு நமீதாவை கர்சீஃப்க்குள்ளே மறைக்க ட்ரை பண்றீங்க? உங்களூக்கும் ஏ ஆர் ஆர்க்கும் லடாய், அவர் இசை அமைக்க மறுத்துட்டாரு, அவர் எதிரே சவால் விட்டீங்கன்னாங்களே?

'2. 'என்னங்க இது... இந்தப் பயிற்சி போதுமா ஒரு இசையமைப்பாளர் ஆக?''


சி.பி - அதானே, இதென்ன ஓ பி எஸ் மாதிரி ஜிங்க் ஜக் அடிக்கற வேலையா?


''இந்த உலகத்துல எல்லாமே ஈஸிங்க. கஷ்டம்னு நினைச்சாத்தான் கஷ்டம். எந்த அறிமுகமும் இல்லாம 'நான் ஹீரோவா நடிக்கணும்’னு உங்க முன்னாடி வந்து நின்னு சொல்லியிருந்தா, அப்போ இதைவிடப் பெருசா ஆச்சர்யப்பட்டு இருப்பீங்கதானே?! ஆனா, நான் ஹீரோவா நடிச்சேனே.


 ஒரு விஷயம் நமக்குப் பிடிக்கணும். அவ்வளவுதான். பிடிக்காத பொண்ணுக்காக ஒரு நிமிஷம்கூடக் காத்திருக்க முடியாது. ஆனா, பிடிச்ச பொண்ணுக்காக ஒரு யுகம்கூடக் காத்தி ருக்கலாம். நான் மட்டும்இல்லை... இசை ரசனை கொண்ட யாருமே மியூஸிக் டைரக்டர் ஆகலாம். மனசு வைக்கணும். அதான் மேட்டர்!''


சி.பி - அதை விடுங்க.. நிலா மேட்டர் என்னாச்சு? பைசல் பண்ணி பேக் பண்ணீ அனுப்பிட்டீங்களாமே?


3. ''ஆல் தி பெஸ்ட். ஆனா, அருமையான இயக்குநராக இன்னிங்ஸ் ஆரம்பிச்சீங்க.அப்படியே இருந்திருக்கலாமோனு இப்போ தோணுதா?''


''என்னை நடிகனாக்கிப் பார்க்கணும்கிறதுதான் என் அளவு கடந்த ஆசை, கனவு, வெறி எல்லாமே. அதைச் செய்வதற்குக் கிடைச்ச பாதைதான் டைரக்ஷன். அஜீத் பெரிய மனசு பண்ணி என்னை இயக்குநர் ஆக்கினார். கொஞ்சம் டைரக்ட் பண்ணிட்டு உடனே என் கனவை வாழ்ந்து பார்த்துட்டேன். ஆசைப்பட்டதைப் பண்ண முடியலைன்னா, கையில கோடி கோடியாப் பணம் இருந்தும் என்ன பிரயோஜனம்?''

4. ''ஆறு வருஷ இடைவெளிக்கும் மொத்தமா சேர்த்து கிளாமர் சரக்கு வெச்சிருக்கீங்க போல?''


''அட... இதெல்லாம் சும்மா புரொமோஷனுக்கு! காதல், கண்ணீர், காமெடி, த்ரில், இசை, கிளாமர்னு எல்லாமே எந்தெந்த அளவு இருக்கணுமோ, அந்தந்த அளவு இருக் கும். பெங்களுரூ, மும்பை, டெல்லினு சுத்திச் சுத்தி, சுலக்னா வைப் பிடிச்சேன். தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு சாவித்திரினு போட்டுக்கலாம். நடிப்பு பின்னுது! 'எஸ்.ஜே.சூர்யா - எஸ்.சாவித்திரி இணைந்து கலக்கும்’னுதான் டிசைன் ரெடி ஆகிட்டு இருக்கு!''


சி.பி - எஸ் சாவித்ரி எல்லாத்துக்கும் எஸ் சொல்லீட்டாங்களா? ஆமா, சும்மா புரோமஷனுக்காகன்னா அந்த சீன் எல்லாம் படத்துல வராதா?


5. ''இத்தனை வருஷத்துல காதல், கல்யாணம்னு எதுவுமே இல்லையா? முன்னாடி பூமிகா, நிலானு கிசுகிசு அள்ளுமே?''

''காதல் நல்லது... கல்யாணம் அதைவிட நல்லது!ஆனா, கல்யாணம்னு போயிட்டா, அந்த உறவை நியாயப்படுத் தணும். உண்மையா இருக்கணும். அப்படி உண்மையா இருக்க முடியாத விஷயத்தை நான் செய்ய மாட்டேன். நம்மை நம்பி வந்த பொண்ணு கண்ணீர்விட்டு அழற மாதிரி இருக்கக் கூடாது. சரியா இருக்க முடியும்னு நம்பிக்கை இருந்தா, உள்ளே போயிடலாம். மத்தபடி காதல் வரும்... போகும். காதல் ஓர் அழகான உணர்வு. அதுக்குக் கட்டுப்பாடே கிடையாது!''


சி.பி - அண்ணன் சுருக்கமா இன்னா சொல்ல வர்றாருன்னா மேரேஜ் பண்ணுனா ஒரு ஃபிகர், லவ் மட்டும் பண்ணிட்டு இருந்தா ஊரெல்லாம் ஃபிகர்ங்கறார்  


http://cinesouth.com/images/new/28092005-THN12image1.jpg

6. ''தமிழ் சினிமாவைக் கவனிச்சுட்டு இருந்திருப்பீங்க... இப்ப இருக்கிறவங்கள்ல யாரைப் பிடிச்சிருக்கு?''

''இப்ப தமிழ் சினிமா ரொம்பவே அழகு! 'மைனா’ பிரபு சாலமன், 'வழக்கு எண்’ பாலாஜி சக்திவேல் ரெண்டு பேரையும் ரொம்பக் கொண்டாடத் தோணுது. சரவணனோட 'எங்கேயும் எப்போதும்’ சூப்பர். அந்தப் படத்தைப் பார்த்தா, படபடப்பா இருக்கும். அதே சமயம் காதல் ஃபீல், நல்ல மெசேஜ், கமர்ஷியல் எல்லாமே கலந்திருக்கும். அப்படி நிறையப் படங்கள் வரணும்.


 ஜீவா, ஜெய், ஆர்யா மேல எல்லாம் நல்ல நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் ரகுவரன், ரஜினி, கமல் மாதிரி பெர்ஃபார்ம் பண்ற நடிகர்கள் இப்ப ரொம்பக் கம்மியா இருக்காங்க. சம்பந்தமே இல்லாத வேற வேற கேரக்டர்களில் நடிச்சா, அதுவும் கைக்கு வந்திரும். இப்ப இருக்கிற பல ஹீரோக்களிடம் அந்தத் திறமை இருக்கு. பெரிய விஷயம் இல்லை. அனுபவமும் தெளிவும் ஆர்வமும் அதை அவங்களுக்குக் கத்துக்கொடுக்கும்!''