Showing posts with label SURYA. Show all posts
Showing posts with label SURYA. Show all posts

Friday, September 20, 2019

காப்பான் - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு மிலிட்ரி இண்ட்டெலிஜென்ஸ் ஆஃபீசர் . பிரதமருக்கு செக்யூரிட்டி ஆஃபீசராக நியமிக்கப்படறார். பிரதமரைக்கொல்ல ஒரு க்ரூப் அலையுது . அவர் கிட்டே இருந்து இடைவேளை வரை காப்பாத்தறார். நம்ம தமிழ் நாட்டிலும் சரி , இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சரி ஒரு திருடன் செத்தா திருடனோட மகன் தான் புது திருடன்  ( அரசியல்வாதின்னாலே திருடன் தானே?, உழைச்சு சம்பாதிக்கறவன் ஏன் இந்த கேவலமான அரசியலுக்கு வர்றான்?)


 பிரதமரோட மகன் புது பிரதமரா பதவி ஏற்ற பின் அவரைக்கொல்லவும் திட்டம் தீட்டப்படுது. அதை ஹீரோ எப்படி முறிஒயடிக்கிறார் என்பதே மிச்ச மீதி திரைக்கதை


ஹீரோவா சூர்யா. மிலிட்ரி கட்டிங் விறைப்பான பாடி லேங்க்வேஜ் எல்லாம் பக்கா , ஆனா அவர் டான்ஸ் மூவ்மெண்ட்களில் இன்னும் அஞ்சான், என் ஜிகே இவ்ற்றின்  பாதிப்பில் இருந்து மீண்டு வரனும். காக்க காக்க , சிங்கம் அளவுக்கு இதில் ஈர்க்க முடியல,. அவர் அருகே எப்போதும்   ஆஜானுபாவமான மோகன் லால்  அல்லது அவரை விட உயரமான ஆர்யாவோ இருப்பதால் கூட இருக்கலாம். ஆக்சன் காட்சிகளில் ஓக்கே ரகம் .சமீபத்திய தோல்விப்படங்களுக்கு இது ஒரு கம் பேக் மூவி தான்


மோகன் லால் பாடி லேங்க்வேஜ், டயலாக் டெலிவரி   பக்கா. அனுபவம் பேசுதுகேரளாவில் இது போதிய அளவு கொண்டாடப்படாதது ஏன் என தெரியல  ( ஓப்பனிங் இல்லை)


ஆர்யா வை பிரதமரோட மகனா விளையாட்டுப்பிள்ளையா பார்ப்பது ஒரு கொடுமைன்னா அவரே பிரதமர் ஆவது மகாக்கொடுமை . பிரதமர் ஆன பிறகும் அவர்  [பாடி லேங்க்வேஜ் என்னமோ அதே பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரி தான். கேர்கடர் செலக்‌ஷனில் , கேர்க்டர் வடிவமைப்பில் இயக்குநர் இந்த இடத்தில் சறுக்கி இருக்கிறார்.

ஹீரோயினாக சாயிஷா.தமிழ் சினிமா அக்மார்க் ஹீரோயின் கேரக்டர், பாவம் , க்ளைமாக்சில் படம் முடிந்தபின்  ஒரு டூயட் வைத்தது அநியாயம்


வில்லனாக பொம்மன் இரானி கன கச்சிதம் , இவரை அனில் அம்பானி போல் வடிவமைச்சிருக்காங்க 

 சமுத்திரக்கனியும் உண்டு

 பட்டுக்கோட்டை பிரபாகர் தான் வசனம் , இவர் தன் டச் இருக்கனும்கறதுக்காக வலியனா டபுள் மீனிங் டயலாக்ஸை 4 இடங்களில்  புகுத்தி இருக்கிறார். சூர்யாவுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் , ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம், அதை கருத்தில் கொண்டு அடக்கி வாசித்து இருக்கலாம்


 ஹாரீஸ் ஜெயராஜ்  பாடல் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்கினாலும் பிஜிஎம்மில் சொதப்பல். விஜய்யின் துப்பாக்கி யில் காட்டிய ஈடுபாட்டை இதில் காட்டாமல் விட்டு விட்டார்


கே வி ஆனந்த் இயக்கம் கச்சிதம். ஆனால் அவரது முந்தைய படங்களான  கனா கண்டேன் , கோ இவற்றோடு ஒப்பீடு செய்தால்   இது பல மாற்று குறைவே


 படம் பிரமாதம்னும் சொல்ல முடியாது , மொக்ம்கைனும் ஒதுக்கிட முடியாது , ஆவரேஜ்

நச் வசனங்கள்


1  ஒரு உயிரை பலி குடுத்துத்தான் 100 உயிரைக்காப்பாத்த முடியும்னா அந்த ஒரு உயிரை பலி குடுக்கறது தப்பில்லைனு மனு தர்மம் சொல்லுது #kaappaan



2  போலீஸ் ,மிலிட்ரி மாதிரி விவசாயமும் ஒரு சர்வீஸ்தான்#kaappaan

வீட்டுக்காக உழைப்பது கடமை.

நாட்டுக்காக உழைப்பது பெருமை #kaappaan


4  மண்ணுக்கு மகத்துவமான சக்தி இருக்கு ,மண்ல போடற எந்தப்பொருளும் ஏதோ ஒரு வகைல ஏதோ ஒரு உயிருக்குப்பயன் அளிக்கும்படி மண் அதை மாத்திடும் #kaappaan


சீக்ரெட்ஏஜெண்ட்னா பாராட்டு கூட ரகசியமா பெற வேண்டி இருக்கு #kaappaan


6  நல்லது செய்யறதுக்கே சில கெட்டது செய்ய வேண்டியதா இருக்கு #kaappaan


7ஆளுங்கட்சி நல்லதா அமைஞ்சா மட்டும் போதாது , அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கனும் #kaappaan


8    அந்த ஆண்ட்டிக்கு 40 +   இருக்கும்

 யோவ் , ஆண்ட்டின்னாலே 40 +  தானே


 நான் வயசைச்சொல்லலை ( pkp touch )   #kaappaan 




 9  உன்னால முடியாதுனு ஒருத்தனை உசுப்பி விட்டா அதை அவன் உடனே முடிச்சுக்காட்டுவான் #kaappaan 


10   என்னை லவ் பண்ணுய்யா 

 அதுக்கு எல்லாம் டைம் இல்லை 

 யோவ்


சரி , 2 நிமிஷம்  தர்றேன், அதுக்குள்ளே எதுனா லவ் பண்ணிக்க 


 2 நிமிஷத்துல நூடுல்ஸ்தான் பண்ண முடியும் 
#kaappaan 



11   போராடறது  தப்புன்னா போராடறதுக்கான சூழலை உருவாக்கறதும் தப்பு தானே? #kaappaan 


12  பேங்க் ல வாங்குன லோனை அடைக்க முடியலைன்னா கார்ப்பரேட்  முதலாளி நாட்டை விட்டு ஓடிப்போறான், ஆனா கடனை அடைக்க முடியலைன்னா விவசாயி தற்கொலை பண்ணிக்கறான், எந்த விவசாயியாவது ஓடிப்போனான்னு நியூஸ் வந்திருக்கா? 
#kaappaan 

13   பொதுவா  உழைக்கறதுக்குதான் சம்பளம் வாங்குவாங்க , ஆனா நாங்க ( மிலிட்ரி) சாகறதுக்கும் / சாகப்போறதுக்கும் சேர்த்தே  சம்பளம் வாங்கறோம்  #kaappaan 


14    சார்  எதுக்காக இந்த காம்ப்ரமைஸ்க்கு இறங்கி வந்திருக்கீங்க?

 முன்னாடி போற அம்பு முதல்ல பின்னால வந்துட்டுதான் போகும்  #kaappaan

15   பொண்ணுங்க செய்யாதே-ன்னா செய் அப்டினு அர்த்தம்    #kaappaan 


7  

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  தீவிரவாதி / வில்லன் சதித்திட்டம் தீட்டி பிரதமரைக்கொல்ல முயற்சிக்க ஹீரோ அதை முறியடிக்கும் கதைகள் எனக்குத்தெரிந்ததை பட்டியல் இடுகிறேன் ,உங்களுக்குத்தெரிந்ததை நீங்கள் பட்டியல் இடவும்
1 சூரியன் (சரத் குமார்)− மெகா ஹிட்
2 ஐ லவ் இந்தியா(சரத்குமார்)− பெய்லியர்
3 மாநகரக்காவல் − விஜயகாந்த் − ஹிட்

4 செங்கோட்டை - அர்ஜூன் -  சுமார்
5  அலெக்ஸ் பாண்டியன் - கார்த்தி - ஃபிளாப்

6  காப்பான் −சூர்யா   ( ரசிகர்கள் கையில்)


நான் சின்னப்பையனா இருக்கும்போது விஜய்,சூர்யா இவங்க 2 பேருக்கும் கேரளா தான் கோட்டை னு சொல்வாங்க,இப்ப கோட்டை விட்டுட்டாங்க போல,சமீபத்திய தோல்விகளால் இருவருக்கும் கேரளாவில் ஓப்பனிங் குறைஞ்சிடுச்சு,காப்பான் fdfs@ கேரளா ,கோட்டயம் அனுபமா 10.45 am ஷோ காத்து வாங்குது .இதுவரை 240/824 சீட் புல் ஆகி இருக்கு. 1/3 கூட இல்லை #kaappaan

1



No photo description available.

3  கதைக்குத்தேவை இருக்கோ இல்லையோ ஹீரோ விவசாயத்துக்கு ஆதரவா கருத்து சொல்ற மாதிரி வசனங்கள் பெருகிடுச்சு இப்ப #kaappaan



 1990 கள் ல விஜயகாந்த் ,சரத்குமார் ,அர்ஜூன் வகையறாக்கள் அடிச்சு துவைச்சு காயப்போட்டதேசபக்தி,காஷ்மீர்,பாகாஸ்தான் தீவிரவாதிகள் ,பிரதமர் உயிரை காப்பாற்றும் ஹீரோ என கதைக்கரு,திரைக்கதை உத்திகளில் பழைய பார்முலாவில் பயணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.பிகேபி + கேவி ஆனந்த்+ கபிலன் வைரமுத்து இத்தனை பேர் உழைப்பும் வீண்தானோ னு தோணுது @ இடைவேளை #காப்பான்

சபாஷ் டைரக்டர்

1  கேரளா மார்க்கெட் பிடிக்க மோகன்லால் கேரக்டர் அமைத்த விதம் குட்

2  பெரிய பட்ஜெட் படம் என்பது காட்சிகளின் பிரம்மாண்டத்தில் தெரிகிறது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  லூசு ஹீரோயின் மப்பில் இருந்து தெளிந்து எழுந்ததும் ஹீரோ கிட்டே < எதுனா தப்பு நடந்ததா? என கேட்கறார், ஒரு பொண்ணுக்கு அது கூடவா தெரியாது?

2  ஹீரோயின் மணிக்கட்டு பகுதில , ஹீரோவோட புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் ;ல பாம் செட் பண்றாரு வில்லன் , பாம் இருக்கா?னு  செக் பண்ற செக் போஸ்ட் எல்லாம் தாண்டி எப்படி அவங்க வந்தாங்க?


3  மிலிட்ரி ஆஃபீசர்   ஆன ஹீரோ தன்னையே வில்லன் ஒரு தணுவா ரெடி பண்றதை எப்படி   உணராமல் இருந்தார்?


4  கேனயனான வில்லன் தான் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் அப்படியா புட்டு புட்டு வெச்சுட்டு இருப்பான்?


5  சமுத்திரக்கனி சொல்லும் ஃபிளாஸ்பேக் லவ்ஸ்டோரி நாடகத்தனம், கதைக்கு சம்பந்தமே இல்லை 


6  பிரதமரின் ஆஃபீசில் , வீட்டில் பாதுகா;ப்பு ஏற்பாடுகள் இவ்வளவு  கேவலமாவா இருக்கும்? ஒட்டுக்கேட்கும் கருவிகள்  அசால்ட்டா ஆங்காங்கே கிடக்கு

7  கண்காணிப்பு கேமரா என்பது  ஸ்டேண்டர்டா ஒரு இடத்தில் இருக்கும், ரொட்டேட் ஆகற கேமரா தனியா இருக்கும் .. ஆனா படத்துல அது மிஸ்சிங்,. ரொட்டேட் ஆகற கேமரா மூவ்க்கு தகுந்த மாதிரி  ஹீரோ   இடம் பெயர்வது  லாஜிக் சொதப்பல்



 விகடன் மார்க் ( யூகம்)   40

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5 /5 


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்  2.5 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)




 சி.பி கமெண்ட் -காப்பான் − யூகிக்கக்கூடிய திரைக்கதை அமைப்பு ,நாடகத்தனமான காட்சி அமைப்புகள் ,ஒட்டாத காதல் பெரிய மைனஸ்.விவசாயிகள் பிரச்சனை,தேசப்பற்று வசனங்கள் அனைத்தும்"செயற்கை,எனக்குப்பிடித்த பிகேபி வசனம் எழுதி இருந்தும் பிரமாதம்னு சிலாகிக்க முடியாதது வருத்தம் ,சூர்யாவுக்கு தொடர் தோல்வி கிடைப்பதும் சங்கடமா இருக்கு ,விகடன்,"40 ரேட்டிங் 2.5 / 5 #kaappaan

Friday, May 06, 2016

24 - சினிமா விமர்சனம்


இயக்குநர் விக்ரம் குமார்க்கு எந்த தமிழ் இயக்குநருக்கும் இல்லாத ஒரு பெருமை உண்டு. வழக்கமா தெலுங்குப்படத்தை ,ஹிந்திப்படத்தை தமிழ் ல ரீமேக் பண்ணின தமிழ் சினிமா உலகத்தில்  முதல் முறையா தமிழ் சினிமா வை ஹாலிவுட் சினிமா ரீமேக்கிய தருணம். யாவரும் நலம் என்ற பிரமாதமான த்ரில்லர்  மூவி. அவரது அடுத்த ப்டம் 24  எப்டினு பார்ப்போம்


ஹீரோ ஒரு சயிண்ட்டிஸ்ட். டைம் மிஷின் போல் டைம் ட்ராவல் வாட்ச் கண்டு பிடிக்கறார். ஆனா அவரோட அண்ணன் ( ட்வின்ஸ்) வந்து அவரைக்கொலை செஞ்சுடறார்.அண்ணன்  கைக்கு வாட்ச்  கிடைக்கலை,

 ஹீரோவுக்கு  ஒரு குழந்தை. 26  வருசத்துக்குப்ப்பின்  கதைல  ஒரு திருப்பம். வில்லனும் ஹீரோ மகனும் சந்திக்கறாங்க , அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதே திரைக்கதை

 ஹீரோவா அர்ப்பணிப்பான நடிப்பில் கமல் விக்ரம் க்கு அடுத்த இடத்தில்  இருக்கும் சூர்யா. இ ரு  வித கெட்டப் . 
வில்லன்  கெட்டப்ல கலக்கல் நடிப்பு  ஆனா அகரம் ஃபவுண்டேசன் சாஃப்ட் ஹீரோவை வில்லனா பார்த்து  ஜீரணிக்க கொஞ்சம்  டைம் ஆகும்.


பாடி லேங்குவேஜில்  வில்லன் நடிப்பில்  வீல்  சேரில் அமர்ந்திருக்கும் சூர்யாவின்  ஆக்டிங் அசத்தல்

ஹீரோவா வரும் சூர்யா வழக்கம் போல் ரொமா\ண்டிக் வழிசல் இளமை துள்ளல்


ஹீரொயினா  சமந்தா . பவுடர் கோட்டிங்  பர்பி பொம்மை.  பாடல் காட்சிகளில் அசால்ட்டா  ஒரு நைட்டி மட்டும்  போட்டுட்டு சுத்துது. நல்ல காஸ்ட்யூம் சென்ஸ், 


 சரண்யா  ஹீரோவுக்கு வளர்ப்பு அம்மா கேர்கடர், வழக்கம் போல்  குட்

ஆர்ட்  டைரக்சன்  , ஒளிப்பதிவு  , இசை மூன்றும்  போட்டி போட்டு பர்ஃபார்மென்சில் கலக்கறாங்க. ஸ்டண்ட் மாஸ்டரும் இந்த லிஸ்ட்டில் சேர முயற்சிக்கிறார். அவருக்கு வாய்ப்பு கம்மி


டூயட்  சீன்களின்  லொக்கேசன் செலக்சன் அருமை டிர்ஸ்சிங் சென்சில் சிக்கன் நடவடிக்கையில்  ஈடுபட்ட சமந்தாவுக்கும் காஸ்ட்யூம்   டிசைன்ருக்கும்  ஒரு  பூங்கொத்து



நச் டயலாக்ஸ்


1  வில்லன் =,நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி.உன் பிறந்தநாள் இறந்த நாள் 2 ம் ஒரே நாளில். #24

2 வீடு பூரா இத்தனை வாட்ச் இருக்கு.ஆனா நேரத்தோட அருமை தெரியாதவங்க #24


3 அதெப்டிரா வெட்கமே இல்லாம ஓசி சாப்பாடு சாப்பிடறே?


நாங்க எல்லாம் வெக்கத்தை கக்கத்தில் வெச்சுக்குவோம் #24


4 எல்லாருக்கும் ரொம்ப நாள் வாழனும்னு ஆசை இருக்கும்.ஆனா வயசானவனா வாழ ஆசை இருக்காது #24


5 மணி எங்கே?


இதோ 5 நிமிசத்துல் வந்துடறேன்னு சொல்லிட்டுப்போய் அரை மணி நேரம் ஆச்சு.1 மணி நேரத்துல வந்துடுவான் எப்படியும் #24



6 ஒரே ஆளை 2 தடவை கொல்ல வாய்ப்பு கிடைச்ச உலகின் முதல் மனிதன் / அதிர்ஷ்டசாலி நாந்தான் #24



தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

                        
24 = 164 நிமிடம். ஈரோடு மகாராஜா @ 9 AM show

ஆக்சன் ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன் பட்டாஸைக்கிளப்பனும்

இதில் அமைதியான எளிமையான ஓப்பனிங் #24



3 ஆர்ட் டைரக்டர் பர்ஸ்ட் கோல்.சயின்ட்டிஸ்ட் லேப் #24


4 வாட்ச் திஸ் மூவி னு தாராளமா சொல்லலாம்.ஏன்னா கதையே வாட்ச் ல தான் # டைம் மிஷின் டைம் வாட்ச்

5 ஆர்ட் டைரக்டருக்கு அடுத்து இசை 2 வது கோல்.பிஜிஎம் ஏ ஆர் ஆர் ராக்கிங் #24

6 3 வது கோல் ஒளிப்பதிவு.மழைத்துளிகளை ப்ரீஸ் செய்து ஹீரோ சுண்டி விடும் காட்சி #24


7 திரைக்கதையின் தேவை கருதி ஒரே சீன் 3,டைம் ரிப்பீட் ஆகுது.இப்டி அடிக்கடி நிகழ்ந்தா நல்லதல்ல #24

8 வாட்ச் மெக்கானிக் இல்லையா நான்.இதெல்லாம் சர்வசாதாரணம். இதே டயலாக்கை ஹீரோ அடிக்கடி சொல்றார்.முடியல #24

9 யாவரும் நலம் விறுவிறுப்பு பரபரப்பு மிஸ்சிங் #24

10 டைம் மிஷின் கதைகளின் முக்கிய விதி இறந்த காலத்தின் நிகழ்வுகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே.ரூல் மீறுதே #24

11 டைம் ப்ரீசிங்.& செட்டிங்ஸ் சேஞ்ச் சீன் கள் சி சென்ட்டர்.ஆடியன்சை கவர்வது புரிவது சிரமம் #24

12 இண்ட்டர்வல் பிளாக். எதிர் பாராத திருப்பம் . வில்லன் ஆக்டிங் ராக்கிங் பர்ஃபார்மென்ஸ் #24


13 வில்லன் = அவன் சேது ராமன் பிள்ளைன்னா நான் சேதுராமனோட
அண்ணண்டா #24











சபாஷ் டைரக்டர்


1   வில்லன் சூர்யாவுக்கான  கெட்டப் நடிப்பு  எல்லாம் செம

2  ஆள் மாறாட்ட  சீனில்  வில்லன் தன் பெயரை செக்கில் சைன் செய்வதும்  ஹீரோயினுக்கு தெரிந்த உண்மை  ஹீரோவுக்கு  தெரியாமல்  போவதும்


3   பின் பாதியில்  வில்லனும்  ஹீரோவும்  சந்திக்கும் சீனும்  ஹீரோ டைம் வாட்சை வில்லனுக்கு தராமல் போக்கு காட்டி பஞ்ச் டயலாக் பேசுவதும்




 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1   ஹீரோ  ஒரு சீன்ல  டைம் வாட்ச் மூலம் பேக்ல போய் ஹீரோயினுக்கு பூ வெச்சு  விடறார். அது நிகழ்காலத்துக்கு வந்த பின்னும் அவ\ளால உணர முடியல. 10 நிமிசம் கழிச்சு க\ண்ணாடில பார்த்த பின்  தான் ஹீரோயின் உணருகிறார். மல்லிகைப்பூ  வாசம் கூடவா தெரியாம  போய்டும்?


2   ரிப்பீட் ஆடியன்ஸ்  வரனும்னா படத்தில்  ரிபீட்  சீன்ஸ்  ரிபீட் வசனம் வரக்கூடாது ( விதி விலக்கு ரஜினி பட பஞ்ச் டயலாக்\)  இந்தப்படத்தில்  வாட்ச் மெக்கானிக்னா இது  கூட தெரியாதா என்|ற ஒரே டயலாக் 14 டைம்வருது. வரும்போதெல்லாம் ஆடியன்ஸ்  ஓன்னு கத்தறாங்க


3 ஓப்பனிங்  சீனில் ஹீரோ மனைவி மகன் ஆபத்தான சூழலில்  வில்லன் ஆட்களிடம் மாட்டி இருக்காங்கன்னு தெரிஞ்சும்  எப்படி பதட்டமா  உடனே  கிளம்பாம டைம் வாட்சை பத்திரப்படுத்திட்டு அப்புறமா போக  முடியுது?


4  சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர்  மூவி  எடுக்கனும்னு முடிவு எடுத்ததும் வழக்கமான  காதல்  மொக்கை காமெடி  சீன்களை  எல்லாம்  ஒதுக்கி  இருக்க்லாம்

5   ஹீரோ ஒரு சாதாரண வாட்ச் மெக்கானிக். ஹீரோவோட அப்பா ஒரு சயிண்ட்டிஸ்ட். பல வருசம் சிரமப்பட்டு க\ண்டு பிடிச் ச  டைம் வாட்ச் ல  இருக்கும்  குறையை ஒரே நா|ள் ல  ஹீரோ எப்டி சரி செஞ்சு டெவலப் பண்றாரு? அவர் சயிண்ட்டி\ச்ட் கிடையாதே? சயிண்ட்டிஸ்ட் ஆன அப்பா கூடவும் வளரலை



 சி.பி கமெண்ட் -  24 - தமிழ் சினிமாவுக்கு புதிதான சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர்  மூவி,முன் பாதி ஸ்லோ பின் பாதி ஓக்கே , விகடன் மார்க் -43 , ரேட்டிங் = 3 / 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு யூக மார்க்  = 43


குமுதம்  எதிர்பார்ப்பு யூக   ரேட்டிங் = ஓக்கே


Tuesday, September 23, 2014

அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்?

அத்துமீறுகிறதா ஆன்லைன் கலாய்ப்புகள்... 'வித்தை'களை இறக்கி 'டியூன்' ஆக வேண்டியது யார்?

 

1
நடிகர் சூர்யா, இயக்குநர் லிங்குசாமி | கோப்புப் படம்
நடிகர் சூர்யா, இயக்குநர் லிங்குசாமி | கோப்புப் படம்
"இதுவரைக்கும் கத்துகிட்ட மொத்த வித்தையும் முழுசா இறக்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்.
நானே அப்படி டியூன் ஆகிருக்கேன்"
சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இந்த வார்த்தைகளை சொல்லும்போது, இயக்குநர் லிங்குசாமி சத்தியமாக அது இப்போது இந்த அளவில் பிரபலமாகும் என நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
கடந்த சில நாட்களாக, தமிழ் கூறும் சமூக வலைதளங்களில் இந்த வார்த்தைகள்தான் கன்னா பின்னா ஹிட். தமிழ் சினிமா பிரியர்கள் அனைவரும் தங்களால் முடிந்தவரை இதற்கான வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து, அடுத்தவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
முதல் பத்தியில் விவரம் புரியாதவர்களுக்கு: சென்ற வருடம் ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அஞ்சான் படம் எப்படி இருக்கும் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, இயக்குநர் லிங்குசாமி தந்த பதில்தான் முதல் இரண்டு வரிகள்.
அஞ்சான் திரைப்படம் வெளியாகி, அதற்கு கிடைத்த விமர்சனங்கள் அனைவரும் அறிந்ததே. திடீரென எவருக்கோ இந்த பேட்டி நினைவில் வர, அவர் அதை எடுத்துப் பகிர, அதைப் பார்த்து ரசித்த, அஞ்சான் திரைப்படத்தால் திருப்தி அடையாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பகிர, ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் அந்த வார்த்தைகள் ட்ரெண்டிங் ஆக, ஐ படத்தில் 'மெர்சலாய்ட்டேன்..' என்று வந்த பாடல், 'டியூன் ஆயிட்டேன்..' என ரீமிக்ஸ் ஆக, மீம் (Meme) எனப்படும் நையாண்டி புகைப்பட வாக்கியங்கள் புதிது புதிதாக முளைக்க, இப்படி அந்த பேட்டியில் சொன்ன வார்த்தைகள் கட்டுக்கடங்காமல் பிரபலமாகிவிட்டன. வேறு எப்படியெல்லாம் அந்த வார்த்தைகளை வைத்து நையாண்டி செய்யலாம் என இதற்கென்றே பிரத்தியேகமாக பல ஃபேஸ்புக் குழுக்களும் உருவாகி 'ரூம் போட்டு' யோசித்து வருகின்றன.
திரைப் பிரபலத்தை சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது ஒன்றும் புதிதல்ல. டி. ராஜேந்தர், பவர் ஸ்டார் என்று அழைக்கபடும் சீனிவாசன், சாம் ஆண்டர்சன் எனப் பலரும் தொடர்ந்து ரசிகர்களின் நையாண்டிக்கு ஆளாகி வருகின்றனர். ஹாலிவுட்டிலும் கூட, நட்சத்திரங்கள் இப்படி பேட்டியில் ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லி மாட்டிக் கொண்டால் அதை வைத்து அவர்களை கிண்டலடிப்பது வழக்கம்.
ஆனால் லிங்குசாமியின் பேட்டி ஒளிபரப்பாகி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அஞ்சான் திரைப்படம் வெளியான ஒன்றரை மாதங்கள் கழித்து, ஏன் இந்த கேலியும், நக்கலும் என பலருக்குப் புரியவில்லை. இணையத்தில் இருக்கும் ஒரே வசதி, பெருந்திரளாகச் சென்று கலவரம் செய்வதைப் போல, இதை யார் தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது.
அஞ்சான் திரைப்படம் தந்த ஏமாற்றத்தால் ஒரு பக்கம் பலரும் இதை சந்தோஷமாக அணுகினாலும், ஒரே ஒரு நபரை இப்படி குறி வைத்து கலாய்ப்பது நியாயம்தானா என லிங்குசாமிக்கு ஆதரவாக அனுதாப அலைகளும் வீசிக் கொண்டுதான் இருக்கின்றன.
இதற்கு காரணம் ரசிகர்களுக்கு லிங்குசாமியின் மீது இருந்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றமாய்ப் போனது தான் என சொல்லப்பட்டாலும், இது சரியான போக்கு தானா?
இணையவாசிகளின் கற்பனை வளம் செழித்து வளர்ந்தோங்குவது ஒருபுறம் இருந்தாலும், சில பல கலாய்ப்புகள் அத்துமீறி தனி மனிதத் தாக்குதல்கள் / கிண்டல்களாய் இருப்பதை அனுமதிப்பது எப்படி?
சமூக வலைதளங்களில் படைப்பாளிகளையும் படைப்புகளையும் கலாய்த்தல் என்பது இயல்பானதே. ஆனால், அதைத் திட்டமிட்டு ஓர் இயக்கமாக செயல்படுத்துவதால் பிற்காலத்தில் ஏற்படும் விளைவுகள் எப்படிப்பட்டதாய் இருக்கும்?
இணையத்தில் இப்படியான அதிகபட்ச கேலி, கிண்டல், நக்கல்கள், கலாய்ப்புகள் ஆரோக்கியமானதா? - உங்கள் பார்வை என்ன? 


thanx - theindu


  • Ragupathy Deivasigamani at Sengunthar Engineering College, Tiruchengode 
    I strongly condemn this filthy move. If there is a facility to express your voice use it n d right way or else keep quite. That's my attitude.
    24 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) ·
       
  • Rj Durai Vetti officer at Velai Illa Pattadhaari 
    கற்பனையே இல்லாத ஒரு படைப்புக்கு இவ்வளவு பெரிய பிரபலமும் பேட்டிகளும் தேவைதானா? இதற்க்கு முதலில் தங்களின் கருத்தை கூறிவிட்டு ரசிகர்களிடம் கேள்வி கேளுங்கள்... பிழையை செய்துவிட்டு இப்படி முட்டாள்தனமாக மீண்டும் இவ்வாறு பேட்டிகொடுதுவிடகூடாது என்பதை இனியாச்சும் நினைவில் வைக்க ஒரு பாடம்... இது போன்ற தேவையற்ற படைப்புகளால்தான் அதே நேரத்தில வெளிவந்த சில அருமையான படைப்புகள் காணமல் போயின... திறமை இல்லாமல் வெறும் விளம்பரத்தையும் பெரிய ஹீரோ பெரிய டைரக்டர் என்ற பேனர் என்ற பெயரைமட்டுமே தாங்கி வரும் நிறைய படங்கள் திறமையான வித்யாசமான கதையம்சமும் கொண்ட படனகளை நசுக்குகிறது என்பதே கசக்கும் உண்மை...... எதிர்காலத்தில் இப்படி ஒரு படத்தை எடுக்கும் திட்டம் ஏதேனும் லிங்குசாமிக்கு இருந்தால் இளம் இயக்குனர்களிடம் துணை இயக்குனராக சேருவது உத்தமம் என்பதே என் கருத்து... ஒரு ரசிகனாகவும் படைப்பை பற்றி யோசிப்பவனாகவும் இருந்து இதைவிட ஒழுக்கமான முறையில் என்னால் கூற முடியாது.....
    27 minutes ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Ashok James  
    லிங்கு சாமீ : முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி.. அஞ்சான் சரியாய் ஊடாததுகு ரொம்ப சாரி!!!
    31 minutes ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Bala Mani  
    அஞ்சான் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் மக்கள் இதை தான் செய்திருப்பார்கள். இது போன்று மொக்கை படங்களை எடுக்காதிர்கள் / நடிக்காதிர்கள் என்று ஒரு செய்தியை இயக்குனர்கள் / நடிகர்கள் புரிந்தால் சரி.
    Points
    500
    35 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Nallarasu  
    Anjaan First Law: "For every tuning there is an equal and opposite tuning".
    Points
    7280
    36 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Shan Shan  
    இப்போது இணையம் முகநூல், ஹிந்து தமிழ் விமர்சனங்கள் மற்றவர்களிடம் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பது உண்மை
    Points
    29695
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • RT Amudhan  
    இப்படி கிண்டல் செய்வது தவறு .... ஒருவரின் கடின முயற்சி தோல்வி அடைந்தால் அவரை கிண்டல் செய்வது பெரும் தவறு ..... இந்திய அணி கேப்டன் தோனி பல தோல்விகளை சந்தித்த போதும் சிறிதும் வெட்கமில்லாமல் அவரது ரசிகர்கள் ''தோனி டா தல டா'' என்றனர் .... அனால் அதே போல் ஒரு தோல்வியை மற்றொருவர் சந்தித்தால் கிண்டல் அடிக்கின்றனர் ....
    Points
    220
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Essar  
    அளவோடு விமர்சித்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நல்லதில்லை. இது அனைத்திற்கும் பொருந்தும்!
    Points
    855
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • DHANANJAYAN  
    Ivara aatharikura magaangal yaar sir. 120₹ kuduthu theatre ku poi mokka vangunavanuku thaan sir theriyum antha vali. Ithula vera interview. Motha vithayum irukarenu .
    Points
    125
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • satturan  
    வர்ற எத்தனையோ படங்களில் இது ஒன்றும் அவ்வழு மோசம் இல்லை. இந்த கலாய்ப்பு எல்லாம் யாரோ காசு கொடுத்து தூண்டி விட்டு செய்வதுதான். சூர்யா வளர்ச்சி பிடிக்காத யாரோ செய்ற அரசியல் தான் இதெல்லாம்!
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • adhi sankar  
    Idhu pondra kindalgal thevaiyatradhu...mothathil adhu oru cinema enbadhiyum thandi rasigargalin oru pirvinar seyalpaduvadhu sammandhapattavarai manavedhanai paduthum alavirku selvadhu rasigargalin varaiyarai meerum seyal...cenemavuku thanikkai irupadhu bol samooga valaithalangalukum anaithu karuthukalum oru varaiyarai kuzhu uruvaakka pariseelikalam....
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • திருப்பதி  
    எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்கும் போது அவப்பெயர் வரத்தான் செய்யும், மீண்டும் விஸ்வரூப வெற்றி பெற உழைக்க வேண்டும்
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Raja  
    இனிமேலாவது எந்த ஒரு இயக்குனரும் இப்படி பேட்டி கொடுத்து தன் படத்துக்கு விளம்பரம் தந்து மக்களை இளிச்சவாயன் ஆக்கமாட்டாங்க. இருந்தாலும் அவர இந்த அளபுக்கு கலாஇக்க வேண்டியதில்லை.
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Babu  
    My opinion is good.
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Ramesh  
    உங்கள யாச்சும் ஒரு படத்துக்கு தான் ஓட்டுனாங்க ....போங்க பாஸ் pencil ல வறன்சதுக்கெ புழுதியில விட்டு வருஷக்கணக்க பொரட்டிகிட்டு இருக்காங்க....#குருவி விஜய்
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Manoj Prabahar  
    வாயால வட சுட்டா இப்டிதான் கத்து கிட்ட மொத்த வித்தையும் இறக்கி கலாய்போம்
    about 2 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
  • Manoj Prabahar  
    வாயால வட சுட்டா இப்டி தான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி கலாய்போம்
    about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • karthik  
    படம் பாத்தவனுக்கு கண்டிப்பா லிங்குசாமி மேல் அனுதாபம் வராது . பொதுமக்கள் பாக்கறதுக்கு படம் எடுத்துட்டு விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை ... பேட்டி குடுக்கறவங்க தான் திருந்தனும்
    about 2 hours ago ·   (125) ·   (4) ·  reply (0) · 
  • sarath  
    Ithuku naanga poruppula ... Thavalai than vaayal kedum ... epdi namba tuning
    about 2 hours ago ·   (39) ·   (2) ·  reply (0) · 
  • Thalapathi Thalapathi  
    காசு கொடுத்து டிக்கெட் எடுத்து தியேட்டர்ல பாத அனைவருக்கும் கலாய்க்கும் உரிமை உண்டு
    about 2 hours ago ·   (74) ·   (2) ·  reply (0) · 
    Boopathi-D  Up Voted
  • Thalapathi Thalapathi  
    காசுகுடுத்து தியேட்டர்ல படம் பாத்தா அனைவர்க்கும் கலாய்க்கும் உரிமை உண்டு
    about 2 hours ago ·   (39) ·   (1) ·  reply (0) · 
    Boopathi-D  Up Voted
  • UnmaiyaiUrakaSol  
    எவர் ஒருவரை பற்றி நாம் அதிகம் பேசுகிறோமோ அவர் நம்மை வெல்பவர் ஆவர். இப்படி லிங்குசாமியை வெற்றி பெற செய்த அணைத்து memeers கும் அவர் தன் மனதில் நன்றி குறிகொண்டு இருப்பார். பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களது உற்பத்தியை வியாபாரம் செய்ய என்ன சொன்னாலும் நம் பற்களை இளித்த வாறு வாங்கி கொண்டு தான் இருக்கிறோம். ஏன் நமக்கு அதிக சம்பளத்தில் ஒரு வேலை என்றால் interviewer இடம் நாமும் நம்மை பற்றி BUILDUP தான் செய்கிறோம். இது தான் லிங்குசாமி பேட்டியிலும் நடந்திருகிறது. இது நம்மை சிரிக்க மட்டுமே வைக்கும். ஆழ்ந்து யோசித்தால் ஒரு வகையில் நாமே அவரை பெரிய அளவில் விளம்பரம் செய்து இருக்கிறோம்.
    about 2 hours ago ·   (28) ·   (1) ·  reply (0) · 
    RT-Amudhan · RT-Amudhan  Up Voted
  • marish  
    Anjaan sariyaa tune aagala bt fans padubayangarama tune aagitanga sry aakkiteenga ji
    about 2 hours ago ·   (12) ·   (4) ·  reply (0) · 
  • Dhivya  
    பேட்டி குடுக்குறதுக்கு முன்னாடி யோசிக்கணும்.. நாம சொல்றத நம்மால நிரூபிக்க முடியுமான்னு... படம் நல்ல ஒடுனபிறகு இதை சொல்லி இருந்தா நல்ல இருந்திருக்கும்...
    about 3 hours ago ·   (58) ·   (2) ·  reply (0) · 
  • pachaiyappan  
    தம்மை இனங்காண இயலாது என்று நினைத்து கலாய்ப்பது ஒரு குழு, எதிர் நிலை கொண்ட குழு, தொழில் முறை போட்டி குழு , பொறாமை கொண்ட குழு, தவிர்த்து இயல்பான வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களே உண்மை நிலையை அறிய முடியும்.
    about 3 hours ago ·   (8) ·   (10) ·  reply (0) · 
    adhi-sankar · Boopathi-D · DHANANJAYAN · DHANANJAYAN  Down Voted
  • Boss  
    அளவறிந்து பேசுக , இன்றைய திரை பட கலைஞ்சர்கல் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நினைப்பிற்கு மக்கள் கொடுத்த செருப்படி
    about 3 hours ago ·   (60) ·   (1) ·  reply (0) · 
  • Arul Chellappa Editor at Libott Medical Publishers 
    வித்யுத் ஜம்வல் பிரஸ்ட் டைம் அ ஸ்டுண்ட் காட்சி இல்லாம செத்து போனது இந்த படமா தான் இருக்கும்
    about 3 hours ago ·   (16) ·   (1) ·  reply (0) · 
  • Padmanabhan  
    டீசருக்கு சக்சஸ் மீட் வேச்சதுலாம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது , பின்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆகையால் ரசிகர்கள் டியுன் ஆகி அவர்கள் விதையை இறக்கி விட்டார்கள்.
    about 3 hours ago ·   (43) ·   (1) ·  reply (0) · 
    Boopathi-D · Nallarasu · Nallarasu · DHANANJAYAN · DHANANJAYAN  Up Voted
  • kirukkuppayal  
    அந்தப்பேட்டில அவரே சொல்லிருப்பாரு: "ரசிகர்கள் ஒவ்வொரு கலைஞனைப் பத்தியும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க. இந்த மாதிரி ஒரு combination-ல ஒரு படம் வருதுன்னா என்னவெல்லாமோ எதிர்பார்ப்பாங்க" ன்னு. Hype ஏத்துறேன்னு சொல்லி teaser-க்கு success meet வச்சா இப்பிடித்தான் ஆகும். படம் ஹிட் ஆயிருந்தா இதே online comments படத்துக்கு பெரிய level-ல உதவியிருக்கும். Marketing Strong Movie Weak. அதான் மாட்டிகிட்டு முழிக்கிறாரு.
    about 3 hours ago ·   (40) ·   (0) ·  reply (0) · 
  • Shahul  
    இதில் இரண்டு விதமான பார்வை இருக்கிறது... ஒன்று - அளவிற்கு அதிகமான கிண்டலும் கேலியும் சிலரின் மனதை முடக்கி போட்டு விடும். இதே நிலை தனக்கு ஏற்பட்டால் என்ன ஆகும் என்று ஒவ்வொருவரும் நினைத்து பார்க்க வேண்டும். இரண்டு - பழைய புளித்த மாவையே போட்டு அரைத்து தள்ளி விட்டு, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் உண்டான விபரீதத்தை இனிமேலாவது திரை உலகினர் உணர வேண்டும்