Showing posts with label SUGARLESS (2022) -கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label SUGARLESS (2022) -கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, July 05, 2024

SUGARLESS (2022) -கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா) @ ஜியோ சினிமாஸ்

   


    கன்னட சினிமா உலகில் வெளி வந்த முதல் சர்க்கரை வியாதி சம்பந்தப்படட கமர்ஷியல் பிலிம் இது  எஜுக்கேசன்  பிலிமோ என யாரும் பயப்பட வேண்டாம் .காமெடி சப்ஜெக்ட்  தான் .2022 ஜூலை 8 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ்  ஆகி ஹிட்ஆன  இப்படம்   இப்போது  தமிழ் டப்பிங்கில் ஜியோ சினிமாஸ்  ஓ டி டி யில் காணக்கிடைக்கிறது 


 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு அவனோட நண்பன் வேலை செய்யும் கம்பெனில நண்பன் சிபாரிசு மூலமா வேலை கிடைக்குது . அங்கே பணி புரியும் சக பணியாளை  நாயகன் பார்த்ததுமே லவ் பன்றார் , ஆனா நாயகி கண்டுக்கவே இல்லை . ஆனா ஆ பிஸ்ல     சக்ஸஸ்புல்லா வலம் வர ஆரம்பிச்ச பிறகு நாயகி நாயகனை லவ் பண்ண ஓகே சொல்லிடறா . முதல் பாதி படம் காதல் ,பாட்டு , கலாட்டா  என    மாமூல் ரொமாண்டிக்  டிராமா   மாதிரி போகுது 


இடைவேளை அப்போதான் டிவிஸ்ட் . 28  வயதான  நாயகனுக்கு  சுகர் இருக்கு . அந்த விஷயம் நாயகிக்குத்தெரி யாம இருக்க நாயகன் படும் பாடுகள் தான்  மீ தி   கலாட்டா கதை 


நாயகன்    ஆக பிருத்வி   அம்பார் இயல்பாக நடித்திருக்கிறார்   நாயகி ஆக பிரியங்கா திம்மெஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார் நாயகனின் நண்பன்  ஆக  தர்மன்னா கடூர் காமெடி போர்சனை  கவனிக்கிறார் .இது போக குறிப்பிடட சிலரும் வந்து போகிறார்கள் 



அனுப் சிலீன்  இசையில் இரண்டு பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசை சராசரி லவித்தின்  ஒளிப்பதிவு குட் ரவிச்சந்திரன் எடிட்டிங்கில் படம் இரண்டே கால் மணி நேரம் ஓடுகிறது 


கதை , திரைக்கதை ,இயக்கம், தயாரிப்பு  என எல்லாமே  கே எம் சசிதர்  கவனிக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்


1   உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நல்ல கருத்துக்களை கமர்ஷியல் சாக்லேட் தடவிக்கொடுத்த விதம் 


2  முதல் பாதி காதல், காமெடி , பின் பாதி  காமெடி கலாட்டா  என பிரித்துக்கொண்டு  திரைக்கதை அமைத்த விதம் 



செம  ஹிட்  சாங்க்ஸ்


  ரசித்த  வசனங்கள் 



1  யோகா எல்லாருக்கும் வராது ,நோய் யாரையும் விடாது 


2   என் சம்சாரம் வாழ்க்கைல ஒரு  கொள்கை வெச்சிருக்கா 


 டமாரம் டேவிட்  = என்னது ? உ ன் சம்சாரம்  எவனையோ  வெச்சிருக்காளா ? 


டேய் , அவ வாழ்க்கைல ஒரு   பிரின்ஸிபிள்  ( கொள்கை )  வெச்சிருக்கா 


 டமாரம் டேவிட்  = என்னது ? உ ன் சம்சாரம்  பிரின்சிபாலையும்   வெச்சிருக்காளா ? 


3 இவ தான்  அலமேலு 


இவை சாகறதே  மேலு 



4   ஏ பார் ஆப்பிள்னு கத்துக்கிட்ட அப்பவே ஏ  பார் ஆண்ட்டி  என  கத்துக்கிட்ட ஆள்  நான் ,   என் கிட்டேயே இங்க்லிஷா? 


5 பக்கத்து வீட்டுல வைபை  ஆன் பண்ணினா நம்ம வீட்டு மொபைல் அதை வேணாம்னா சொல்லும் ? 


6  என்னது ? நீ பிஹெச் டி யா? 


 பிரைமரி ஹை ஸ்கூல்  டிப்ளமோ 


7  இவ தான்   அப் லோடு அனிதா , ஆபிஸ் ல என்ன நடந்தாலும் பேஸ்புக்ல  அப்டேட்   பண்ணிடுவா 


8 பத்து லவ் ;லெட்டர் எழுதி ஒரு பெண்ணை கரெக்ட் பண்ணினவுன்  இல்லை , ஒரு லெட்டர் எழுதி  10 பெண்ணை கரெக்ட் பண்ணினவுன் இவன் 


9  சேலை இலவசமா கொடுத்தா  ஆட்சியே மாறுது .. பொண்ணு மாற மாட்டாளா ?


10  ஆல்ரெடி எங்களுக்கு 2  சைட்ஸ்  அவளுக்கு ஷார்ட்  சைட் , எனக்கு லாங்க் சைட் 



11  ஒரு காலத்துல  அப்பா , அம்மா கூட இருந்தா  ஆல் பிராப்ளம்ஸ்  சால்வ்டு . இப்போ அவங்க கூட இருந்தாலே பிராப்ளம் தான் 


12 கடவுள் கிட்டே வரம் கேட்டா கடவுள் மாதிரி ஒருத்தனை வரமாக்கொடுத்தா  வேணாம்னு யாராவது  சொல்வாங்களா? 


13  சரக்கைத்தொட்டே நீ கெட்டே , எமன் எருமை மாட்டில் வந்து உன்னைக்கூட்டிட்டுப்போயிடுவா ன் 


14   பூசணிக்காய்   சாப்பிட்டா  சுகர் போயிடுமா? 


பூசணிக்காய்   சாப்பிட்டா   திருஷ்டியே போகும்போது சுகர்போகாதா? 


15   காத்து காலியா இருக்கே  என காலிபிளவர் வைக்காத 

16  பண்ணி மாதிரி கிடைக்கறதை சாப்பிடக்கூடாது , நந்தி மாதிரி கீரை , காய்கறி சாப்பிடணும் 


17  இருமுகிற எல்லாருக்கும் கொரானாவும் இல்லை ,  வாக்கிங் நடக்கிற எல்லாருக்கும் சுகரும் இல்லை 


18   என்னடா? பழி வாங்கிற பாம்பு    மாதிரி பார்த்துட்டு இருக்க? 


19  அந்த ஹிந்தி பிங்கர் டிப் பாட்டு போடு 


 அப்டின்னா? 


அதான் பா , பிரண்ட்ஷிப் பாட்டு 


20  என்னது ஸ்வீ ட் ஹவுசா? வீட்டின் பேரும் சர்க்கரை , வீட்டுக்கு வரப்போகும்  மாப்பிள்ளைக்கும்  சர்க்கரை 



 21  மாப்பிள்ளை வாய்க்கு சர்க்கரை தான் போடணும் 


அப்படிப்போட்டா  அது  வாய்க்கரிசி தான் 


22   என் பேரு  ஏ எல் சேஷன் 


ஓ , அல்சேஷனா ?



23   ஸ்வீட் சாப்பிடறதால மட்டும் சுகர் வர்றதில்லை , ஆனா  சுகர்  வந்துட்டா  ஸ்வீட் சாப்பிடக்கூடாது 


24    பிகா இல்லாத வீடு கூட இருக்கு , ஆனா  சுகர் இல்லாத வீ டு இல்லை 


25  உலகத்துலயே ரொம்ப கஷ்டமான வேலை ஒரு பொண்ணோட மனசை ஜெயிப்பதுதான் 


26 ஒவ்வொரு மனுஷனுக்குமே நல்ல நேரம் ஒரு தடவை வரும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  நாயகனுக்கு சுகர் என்ற  தகவலை என்னமோ அவனுக்கு எய்ட்ஸ் இருப்பது போல  அனைவரும் ஓவர் ரி ஆக்ட்  காட்டுவது 


2 க்ளைமாக்சில் நாயகியின் பெற்றோர் நாயகியையே குறை சொல்வது நம்பும்படி இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - clean u 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு கொண்டவர்கள் பார்க்க வேண்டிய காமடி டிராமா . ரேட்டிங்  2.5 / 5 


Sugarless
Theatrical release poster
Directed byK. M. Shashidhar
Written byK. M. Shashidhar
Produced byK. M. Shashidhar
Starring
CinematographyLavith
Edited byRavichandran
Music byJ. Anoop Seelin
Production
company
Shashidhar Studios Productions
Release date
  • 8 July 2022
CountryIndia
LanguageKannada