Showing posts with label SUCKER - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label SUCKER - சினிமா விமர்சனம். Show all posts

Friday, October 04, 2013

SUCKER - சினிமா விமர்சனம் 32+



ஹீரோ  கல்பாக்கம் , கூடங்குளம் மாதிரி ஒரு அணு மின் நிலையத்துல ஒர்க் பண்றாரு . ஆனா அவருக்கு கிடைக்க வேண்டிய  பிரமோஷன் எதுவும் கிடைக்கலை . திடீர்னு ஒரு நாள் அவரை வேலையை விட்டுத்தூக்கிடறாங்க.அவர்  லோன்ல எடுத்த கார் தவணை கட்டாததால சீஸ் பண்ணிடறாங்க  . அவருக்கு மிக  மோசமான நாள் , ஆள் கடுப்பாகி கம்பனியை விட்டு வெளில நொந்து போய் வரும்போது  ஒரு ஹோட்டல் ல  அவரோட மனைவி இன்னொரு ஆள்  கூட சந்தோஷமா  இருப்பதைப்பார்த்துடறாரு . வாழ்க்கையே வெறுத்துப்போய்  சோகமா  ரோட்ல நடந்து போய்ட்டிருக்கும்போது  ஒரு கார் வந்து அவரைத்தாக்க இருந்து சடன்  பிரேக் போட்டு நிறுத்துது 

 அதுல இருந்த  2 பேரும் அவரை சரக்கு அடிக்க  பார்-க்கு கூட்டிட்டுப்போறாங்க . அவங்க  கொசு பற்றி ஒரு விபரீத ஆராய்ச்சி பண்ணும் விஞ்ஞானிகள் . ஹீரோவை பரிசோதனை எலி ஆக்க ஐடியா பண்ணிடறாங்க .அந்த  பிராசஸ் ல ஹீரோ பயங்கரமான தோற்றம் உள்ள கொசு மனிதனா   உருமாறிடறாரு .

அவர்க்கு இப்போ பழி வாங்கும்  குணம்  வந்துடுது , கம்பெனில  தன்னை வஞ்சித்தவங்க , தன் மனைவியை கரெக்ட் பண்ணின ஆள் இப்படி வரிசையா போட்டுத்தள்ள  ஆரம்பிக்கறார் . 


இவருக்கு  ஒரு முன்னாள் காதலி . ஆட்டோகிராஃப்  மல்லிகா சேரன் மாதிரி . அவர்  கூட  இப்போ நெருக்கமா ஆகிடறாரு . பொண்ணு புருஷனுக்கு செஞ்சா  அது  துரோகம் , புருஷன் தன் பொண்டாட்டிக்கு  துரோகம் செஞ்சா   அது  கோ இன்சிடெண்ட் . சபாஷ் ஆணாதிக்க ஹாலிவுட் . 


 இந்த  கொசு  மனிதனை  போலீஸ்  எப்படி  பிடிக்குது ? அந்த  மோசடி விஞ்ஞானிகள்  என்ன ஆனாங்க என்பது  மிச்ச மீதிக்கதை 


ஹீரோ Michael Manasseri  தான்  படத்தோட  இயக்குநர் கம்  திரைக்கதை ஆசிரியர் . அதனால  கதை  முழுக்க தன்னைச்சுத்தியே நடக்கனும்னு பிளான் பண்ணி  திரைக்கதை அமைச்சிருக்கார் . இவர்  தன்  சொந்த  முகத்தோட   மொத்தமே 20 நிமிஷம் தான் இருக்கார் , மீதி  ஒரு மணி  நேரம்  கொடூர மாஸ்க் மேக்கப்  தான் .  அந்த மேக்கப் சகிக்கலை .  ஸ்பைடர் மேன் , பேட் மேன் மாதிரி  கொஞ்சம் கண்ணியமா  இருந்திருக்கலாம் . 


 ஹீரோயின்கள்  2 பேரு .   ,  .  2 பேருமே  சுமார் மூஞ்சி குமாரிகள்  தான் , ஒண்ணும்  பெருசா சொல்ற அளவுக்கு  இல்லை 


வில்லன் சயிண்ட்டிஸ்ட் கேரக்டர்ல வர்றவர்  ஹீரோவை விட பர்சனாலிட்டியா இருக்கார் . அவருக்கு  இன்னும் வாய்ப்பு  குடுத்திருக்கலாம் .



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1. போஸ்டர்  டிசைன்  ஏதோ சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்சன் த்ரில்லர் மாதிரியே நல்லா டிசைன் பண்ணியது 


2.  ரொம்ப சாதாரண  கதையா  இருந்தாலும்  சி  செண்ட்டர் ரசிகர்கள் ரசிக்கும்படி  போர் அடிக்காம திரைக்கதை அமைச்சது 


இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  வில்லன் எல்லாப்படத்திலும் வர்ற மாதிரி  “ அவனை  உயிரோட பிடிக்கனும்”னு எதுக்கு சொல்லிட்டு இருக்கார்? ஆராய்ச்சி  ஃபெய்லியர் , இனி அடுத்த ஆராய்ச்சியை அடுத்த ஆள் வெச்சு பண்ணப்போறார் . எதுக்கு இவர் உயிரோட  வேணும் ? 


2 போலீஸ்  விசாரனைல  அந்த விஞ்ஞானிகள் மேல  சந்தேகம்  வந்தும்  எந்த செக்கும்   அவங்களுக்கு வைக்கப்படலையே ஏன் ? 


3  தன்னோட  உதவியாளன் , ஹீரோவின்  காதலி   2 பேரையும்  ஒரே டைம்ல   வில்லன்  ஊசி போட்டு ஆராய்ச்சிக்கு  ரெடி பண்ண  முயற்சி பண்றாரு . பி ஏ வை ஊசி போட்டு மயக்கம் ஆக்கிடறாரு . ஹீரோயினை மட்டும்  எதுக்கு கட்டில் ல  கட்டி வெச்சு  அந்த பில்டப் கொடுத்து  ஹீரோ வரும் வரை டைம் வேஸ்ட் பண்றாரு ? 


4.  ஹீரோ  ஹோட்டல்  வாசல்ல நிக்கறாரு , அப்போ  உள்ளே ரூம் ல  இருந்து  முனகல் சத்தம் மட்டும் வருது . அந்த சத்தத்தை வெச்சே அது தன் மனைவிதான்  முடிவுக்கு வர்றாரு. ஏன் உள்ளே போய் நேருக்கு நேர் பார்க்கலை ? ( அநியாயமா  ஒரு சீன் போச்சே , அந்த ஆதங்கம்  தான் ) 



5  ஹீரோ வோட  காதலி   பாத்ரூம் ல  குளிக்கறா . ஒண்ணா  டக்னு போய் குளிக்கனும் , அல்லது  கிடார் வாசிச்சுட்டு போய் குளிக்கனும் , 2ம் இல்லாம  இப்படித்தான்  டிரஸ் எல்லாம்  கழட்டி  வெச்சுட்டு  கிடார் வாசிச்சுட்டு இருப்பதா?  தியேட்டர்ல அவனவன்  டென்ஷன் ஆகி கத்தறான் 


6 .  ஹீரோ    தன்  நாக்கால   எதிராளியின்  ரத்தம்  பூரா  உறிஞ்சி சாகடிகறார். ஆனா அந்த டெட் பாடி நார்மல் டெட் பாடி மாதிரியே இருக்கு ,  ரத்தம் சுண்ட உறிஞ்சப்பட்ட பாடி மாதிரி காட்ட வேணாமா? 



7  . ஹீரோவோட  உருவம்  படு பயங்கரமா  இருக்கு . என்னதான்  முன்னாள்  காதலன்  என்றாலும்  காதலி   கில்மாவுக்கு எப்படி  ஒத்துக்கறா ?  வியாதியோ அல்லது வேற பாதிப்பு வருமோன்னு பயப்பட் வேணாமா?  ( எல்லாம்   ஒரு வயித்தெரிச்சல் தான்  ) 


8  கம்ப்யூட்டர்  கிராஃபிக்ஸ்  படு மட்டம் . ரொம்ப  லோ [பட்ஜெட் படம் போல . ஹீரோ  தன் நாக்கால் ரத்தம்  உறிஞ்சும் காட்சி எல்லாம் ராமநாராயணன்  பட  ரேஞ்சுக்கு  ரொம்ப சாதாரணமா  இருக்கு 


9  ஹீரோ தன்  மனைவியை பழி வாங்க  கடைசி  டைமா  கில்ம பண்ணிட்டு  கொலை பண்றாரு , அப்போ மனைவி  உடல் அவர்து மாதிரியே பாளம் பாளமா  வெடிச்சு பயங்கரமா  இருக்கு , ஆனா  தன் காதலி  கூட கில்மா பண்ணியும் காதலி பாடி ( உடம்பு ) சாதா வாத்தான்  இருக்கு , எப்படி ?   


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  யோசிச்சுத்தான்  சொல்றீங்களா? 


 நான்  யோசிக்காம  எதையும்  செய்ய மாட்டேன் , செஞ்ச பின் யோசிச்சுட்டு இருக்க மாட்டேன் 


2  பொண்ணுங்க   பெரும்பாலும்   துரோகிகள் 


 எல்லாப்பொண்ணுங்களும் அப்படின் -னு  சொல்லிட  முடியாது , ஆனா  மேக்சிமம் லேடீஸ்   அப்படித்தான் 



3    அவன்  வாழ்க்கைல  ஏன் விளையாடறே?  


 என் வாழ்க்கைல நான்  வளரனுமே? 



4   விட்டில் பூச்சிகள்  எல்லாம் ஏன் விளக்கைத்தேடி  ஓடுது தெரியுமா? வெளிச்சத்துக்கு   வரனும் , ஸ்டார்   ஆகனும்னு வாழ்க்கைல  எல்லாருக்கும் ஆசை . அதான் 


5   அவன்    “ பசிக்குது , சாப்பிடப்போகனும்”னு சொன்னான் . ஒரு கொசு மனிதனா   அவன் சொன்னதுக்கு என்ன அர்த்தம் ?  


 கில்மா பண்ண  மூடு வந்துச்சு , கிள்ம்பறேன்னு அர்த்தம் 


ரேட்டிங் =  2 .25 / 5


சி பி கமெண்ட்-   தியேட்டர் ல பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . ஹெச் பி ஓ சேனல் ல  எப்படியும்  போடுவாங்க , அப்போ பார்த்துக்கலாம் . இது  ஒரு ஏ படம் , அதனால  தியேட்டர்ல   பெண்கள் போய்ப்பார்க்க  முடியாது . கள்ளக்குறிச்சி  ஸ்ரீ கீதா  தியேட்டர்ல படம் பார்த்தேன் .



டிஸ்கி -  இதை ஏன்  டி வி டி ல பார்க்கச்சொல்றேன்னா  படத்துல  3 சீன்  இருக்கு ,. எல்லாம் அறை  குறையா இருக்கு , சென்சார் உபயம் . அதனால டி விடில பார்த்தா “ நான் பார்த்த  சீனை   நீ பார்க்க வில்லை , நீ பார்த்த  சீனை நான் பார்க்க வில்லை”னு நீங்க என்னைப்பார்த்து பாட்டு பாடலாம் .