ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு கன்ஸ்ட்ரக்சன் ஃபோர்மேன் ஆகப்பணி புரிபவர் . அழகான மனைவி , இரு குழந்தைகள் உண்டு . மனைவிக்கு இதய சம்பந்தமான ஒரு பிரச்சனை ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருக்கிறாள் .
நாயகன் தன் குழந்தையுடன் ஷாப்பிங்க் போன போது அங்கே ஆர்ட்டிஃபிசியல் இண்ட்டலிஜென்ஸ் மூலம் ரோபோக்கள் உலா வருவதைப்பார்க்கிறான் . அதில் ஒரு பெண் ரோபோவை குழந்தைக்கு மிகவும் பிடித்து விடுகிறது . தேர்க்கடையில் பொம்மை வாங்கித்தா என நாம் அடம் பிடித்ததைப்போல அந்தக்குழந்தை அப்பாவிடம் அடம் பிடித்து அதை வாங்க வைத்து விடுகிறது
அந்தப்பெண் ரோபோவை நாயகன் வீட்டுக்கு அழைத்து வருகிறான் . அது எல்லா வேலைகளையும் பார்த்துக்கொள்கிறது . குழந்தைகளைக்கவனித்தல் , வீட்டைக் க்ளீன் செய்தல் உட்பட ஆல் இன் ஆல் இன்சார்ஜ் ஆகிறது
சில வசதிகளுக்காக அந்த ரோபோவின் செட்டிங்கில் சில மாறுதல்களை நாயகன் செய்யப்போக விபரீதங்கள் ஸ்டார்ட் ஆகின்றன .மனிதர்களுக்கு உண்டான பொறாமை , பொசசிவ்னெஸ் , காதல் பொன்ற உனர்வுகள் அந்த பெண் ரோபோவிடம் தலை தூக்க ஆரம்பிக்கிறது
இதனால் பல விபரீதங்கள் நடக்கின்றன . ஒரு கட்டத்தில் அந்தப்பெண் ரோபாவுக்கும், நாயகனுக்கும் உரவு நிகழ்கிறது ,. அது நாயகனின் மனைவிக்குத்தெரிய வருகிறது . இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகன் ஆக இத்தாலி நடிகர் மைக்கேல் மோரோன் நடித்துள்ளார் . முக சாயலில் 365 நாட்கள் பட ஹீரோ போலவே இருக்கிறார் . இந்திய முக சாயல் . கச்சிதமான் நடிப்பு
நாயகனின் அழகான மனைவி ஆக மாடலின் ஜிமா அழகாக நடித்துள்ளார் . இவரது முக அழகு அருமை அமெரிக்க நடிகை என்றே சொல்ல முடியவில்லை
பென் ரோபோ ஆக மேகன் ஃபாக்ஸ் நடித்துள்ளார் . சவாலான கேரக்டர் . அசால்ட் ஆக நடித்துள்ளார்
மகள் ஆக மடில்டா ஃபில்த் சிறப்பாக நடித்துள்ளார்
\
ஜெட் ஃபால்மரின் இசையில் விறுவிறுப்பாக கதை நகர்கிறது .பின்னணி இசை பெரிய பிளஸ் . டேனியலின் ஒளிப்பதிவு கண் முன் பிரம்மாண்டத்தை நிறுத்துகிறது . சீன் லாஹிப் பின் எடிட்டிங்கில் 106 நிமிடங்கள் விறுவிறுப்பாக நகர்கிறது
வில் ஹொன்லி , அப்ரைல் மெகுரி ஆகியோர் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் எஸ் கே டேல்
சபாஷ் டைரக்டர்
1 எரோட்டிக் திரில்லர் அல்லது கில்மா டிராமா கதையை ( சயின்ஸ் ஃபிக்சன் த்ரில்லர் போர்வை போர்த்தி தந்த விதம்
2 நாயகியின் குடும்பப்பாங்கான அழகு , நடிப்பு
3 வில்லியாக வரும் ரோபோ நடிகையின் தத்ரூபமான நடிப்பு , ஆக்சன் சீக்வன்ஸ்
ரசித்த வசனங்கள்
1 எப்பவும் ரூல்ஸ் பிரகாரம்தான் நடக்கனும்னு அவசியம் இல்லை , தேவைப்பட்டால் ரூல்சை மீறலாம்
2 அற்ப சுகத்துக்கு ஆசைப்பட்டு குடும்ப வாழ்க்கையை நீ இழக்கத்துணிந்து விட்டாய்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லி நாயகனின் குழந்தையைக்கொல்ல திட்டம் போடுவது எல்லாம் ஓவரோ ஓவர் .
2 வில்லி ஆன ரோபோவை நாயகி , நாயகன் இருவரும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்வது எப்படி ? .
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+
சி பி- எஸ் ஃபைனல் கமெண்ட் படம் விறுவிறுப்பாகப்போனாலும் அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்ற யூகத்துக்கு இடமே இல்லாமல் ஓப்பன் ஆக எல்லாம் நமக்கு முன் கூட்டியே தெரிவது மைன்ஸ் . ரேட்டிங் 2.25 / 5
Subservience | |
---|---|
![]() Release poster | |
Directed by | S.K. Dale |
Written by |
|
Produced by |
|
Starring |
|
Cinematography | Daniel Lindholm |
Edited by | Sean Lahiff |
Music by | Jed Palmer |
Production companies | |
Distributed by | XYZ Films |
Release date |
|
Running time | 106 minutes[1] |
Country | United States |
Language | English |
Budget | €4 million[2] (USD $5 million) |
Box office | $264,096 |