ஸ்டார் வேல்யூ இல்லாததால் பல நல்ல கதைகள் கூட அதிகம் கவனத்தில் வராமல் போய் விடுகிறது. ஒரு மோகன் லாலோ , மம்முட்டியோ இதில் போலீஸ் ஆஃபீசர் ஆக நடித்திருந்தால் அல்லது ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தால் இந்தப்படத்தின் ரீச் வேற லெவலில் இருந்திருக்கும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி , வில்லி இருவரும் நெருங்கிய தோழிகள் . ஒரு பிரபல டெக்ஸ்டைல் ஷாப்பில் சேல்ஸ் கேர்ள் ஆக பணி புரிகிறார்கள் , இருவரும் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்கிறார்கள் . இருவரும் மணம் ஆனவர்கள்
இதில் நாயகிக்கு எந்த ஒரு வில்லங்கமும் கிடையாது, இவருக்கு யாரும் எதிரிகள் இல்லை .ஆனால் வில்லிக்கு ஒரு கள்ளக்காதலன் உண்டு . பிரபல நகைக்கடை ஓனரின் மகன் தான் அவன் . இவனை வில்லன் என வைத்துக்கொள்வோம், ( வில்லிக்கு ஜோடி வில்லன் தானே? ) இப்போது திடீர் என ஒரு நாள் நாயகியைக்காணவில்லை . பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டுக்கிடக்கிறார் என்பது தெரிய வருகிறது . நாயகியின் கணவனுக்கு தகவல் போகிறது
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் நாயகியின் கணவனுக்கும் நாயகிக்கும் எந்த ஒரு சண்டையும் கிடையாது இருவருக்கும் கள்ளக்காதல் எதுவும் இல்லை . வில்லன் இதுவரை நாயகியை நேரில் பார்த்தது கூட இல்லை , வில்லிக்கும் , நாயகிக்கும் எந்த ஒரு விரோதமும் கிடையாது .
நாயகி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை , நகை எதுவும் களவு போகவில்லை . அப்போ நாயகியைக்கொன்றது யார்? அதை விட முக்கியக்கேள்வி என்ன காரணம் ? இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விடை அளிப்பது தான் மீதி திரைகக்தை
நாயகி ஆக அஞ்சு ராஜ் க்கு அதிக வேலை இல்லை . மொத்தமே 10 நிமிடங்கள் தான் திரையில் வருகிறார். வில்லி ஆக அபர்ணா நாயர் அசால்ட் ஆக நடித்திருக்கிறார். அவரது உயரம் பெரிய பிளஸ். வில்லன் ஆக ஸ்ரீஜித் விஜய் முகத்தில் வில்லத்தனமே இல்லை . பிஞ்சு மூஞ்சி. நீ எல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே தம்பி ரகம் தான்
போலீஸ் ஆஃபீசர் ஆக சுதீர் கர்மானா போலீசுக்கான கம்பீரம் மிஸ்சிங். நடிக நடிகை தேர்வில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஹாஸ்டல் வாட்ச்மேன் ஆக இந்திரன்ஸ், டம்மி கேரக்டர். ஒரு அபாரமான நடிகரை வீணடித்திருக்கிறார்கள்
விஜி ஆப்ரஹாம் எடிட்டிங்கில் படம் ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடுகிறது
அணில் நாராயணன் ஒளிப்பதிவில் காட்சிகள் கச்சிதமாகப்படம் ஆக்கப்பட்டுள்ளது . இசை பின்னணி இசை இரண்டும் சுமார் ரகம் தான் .
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஹெச் என் ஷிஜோய்
சபாஷ் டைரக்டர் (ஹெச் என் ஷிஜோய்)
1 ஒரு குறும்படத்துக்கான கதைக்கரு தான். நான் லீனியர் கட்டில் சாமார்த்தியமாக ஒன்றே முக்கால் மணி நேரப்படமாக இழுத்த விதம் அருமை
2 செலவே இல்லாமல் ஒரே ஹாஸ்டலில் மொத்தமே 8 பேரை வைத்து ஒரு படத்தை மிக லோ பட்ஜெட்டில் எடுத்த விதம்
ரசித்த வசனங்கள்
கண்ணுக்கு எட்டின தூரம் வரை சாரி காதுக்கு எட்டின தூரம் வரை அபப்டி ஒரு டயலாக்கும் இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆட்டோவில் ஏறியதும் இரண்டு பெண்களும் ஆட்டோ ட்ரைவரிடம் ஹாஸ்டல் போங்கனு தான் சொல்றாங்க . ஹாஸ்டல் பெயரோ, ஏரியாவோ சொல்லலை ,
2 வில்லன் 12 ஜூவல்லரி கடைகளின் ஓனரின் மகன், ஆனால் சாதா பைக்கில் பஜாஜ் டிஸ்கவர் ல வருகிறான்
3 வில்லன் வில்லியைக்கொலை செய்ய வரும்போது கரண்ட் போயிடுது . ஆள் மாறாட்டமா நாயகியைக்கொலை செய்கிறான். கன்ஃபர்ம் பண்ணாமயா கொல்வாங்க ?
4 கொலை நடந்த மூன்று நாட்களுக்குப்பின் டெட் பாடியை காட்டும்போது டீகம்ப்போஸ் ஆகி இருக்காதா? ஃப்ரெஷ்ஷா இருக்கு டெட் பாடி
5 ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் கொலை நடந்திருக்கு . ஹாஸ்டல் ஓனருக்கு இன்ஃபர்மேஷன் போகலை , அவரை வரவழைக்கவே இல்லை
6 கொலை நடந்தது அல்லது ஒரு லேடி மிஸ்சிங் என்றதும் போலீஸ் கேஸ் ஃபைல் பண்ணனும், ஃபாரன்சிக் ரிப்போர்ட்டர்ஸ / ஆஃபீசர்ஸ் வரனும், நாயகன் அவர் பாட்டுக்கு என்கொயரியை ஸ்டார்ட் பண்ணிட்டார்
7 போலீஸ் ஸ்டேஷனில் நாயகன் கேஸ் பற்றி விளக்கும்போது போலீஸ் ஆஃபீசர் டேய் விளக்கெண்ணெய், நாங்க எதுக்குடா இருக்கோம்? எங்களுக்கு, இன்ஃபார்ம் பண்ணாம உன் இஷ்டத்துக்கு எல்லாம் செஞ்சிருக்கே?னு திட்டனும், அவர் என்னடான்னா கை குலுக்கி நன்றி சொல்றாரு. எங்களுக்கு வேலையே இல்லாம பண்ணீட்டீங்க தாங்க்ஸ்ங்கறாரு
8 ஒரு லேடீஸ் ஹாஸ்டலுக்குள் டெட் பாடி 3 நாட்களா கேட்பாரற்றுக்கிடக்குது , பேடு ஸ்மெல் வராதா? யாருக்கும் மூக்கு வேர்க்கலை ?
9 டெக்ஸ்டைலில் சேல்ஸ் கேர்ள்க்கு ஒர்க்கிங் டைம் தமிழ் நாட்டில் காலை 8 டூ நைட் 8, ஆனால் கேரளாவில் காலை 10 டூ மாலை 7 , ஆனால் படத்தில் மாலை 5.30 க்கே ட்யூட்டி முடிவதாகக்காட்டுகிறார்கள் . அதற்குப்பின் கடைக்கு வரும் கஸ்டமர்களை யார் கவனிப்பார்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஸ்டார் வேல்யூ இல்லை , ஸ்டார் கேஸ்டிங் சரி இல்லை . ஆனால் கதைக்கரு ஓக்கே , இது உங்களுக்கு ஓக்கே எனில் படம் பார்க்கலாம் , சின்ன்ப்படம் என்பதால் குயிக் வாட்ச் ஆக பார்க்கலாம், ரேட்டிங் 2 / 5