அ
1. ''கர்மவீரர் காமராஜருடனான உங்கள் நெருக்கத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்...''
''வேலையைச் சரியாகச் செய்தால் தட்டிக்கொடுக்கும் அதேசமயம், யாராவது தவறு செய்துவிட்டால், மிகக் கடுமை யாகக் கண்டிக்கவும் செய்வார் காமராஜர். நான் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர், மாநிலப் பொதுச் செயலாளர் ஆகிய இரு பதவிகளையும் வகித்த காலத்தில் ஒரு முறைகூட அவரது கோபத்துக்கு ஆளாகியது இல்லை. என் மீது அவருக்குத் தனி பாசம் இருந்தது.
மதுரையில் 72-ம் ஆண்டு தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அதற்காக உள்ளூர் வியாபாரிகளிடம் தி.மு.க-வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்போது மதுரைக்கு வந்த ஆளுநர் கே.கே.ஷாவிடம் நான் புகார் மனு அளித்தேன். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான முதல் புகார் மனு அதுதான். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநாட்டில் பேசிய முரசொலி மாறன், 'யார் அந்த நெடுமாறன்? அட்ரஸ்கூட இல்லாதவர்கள் கவர்னரிடம் புகார் கொடுக்கிறார்கள்’ என்று கடுமையாக என்னைத் தாக்கிப் பேசினார். இதுவும் பத்திரிகைகளில் வெளியானது.
இதற்கு அடுத்த சில நாட்களில், மேலூரில் ஒரு கட்சிக் கூட்டத்தில் காமராஜர் கலந்துகொண்டார். 'நெடுமாறனின் அட்ரஸை சிலர் கேட்கிறார்கள். சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். பழ.நெடுமாறன், எம்.ஏ. பட்டதாரி. குறிஞ்சி பத்திரிகை ஆசிரியர். மதுரையில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர், நாளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அதில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்’ என்று காமராஜர் சொன்னபோது, மேடையில் இருந்த நான் உள்ளிட்ட அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டோம்.
ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்’ என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு என் அரசியல் வாழ்க்கை இருந்தது குறித்து இப்போதும் எனக்குப் பெருமிதம் உண்டு. காமராஜர் மரணத்தின்போது அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டு இருந்தது. அந்த ஆறடி உடல் அருகே, நாள் முழுவதும் நான் அமர்ந்திருந்தேன். அவரைப் போன்ற தலைவரை அரசியலில் பார்ப்பது அரிதிலும் அரிது!''
சி.பி - காமராஜர் ஆட்சி அமைப்போம்னு வெட்கமில்லாமல் கூறும் ஆட்களிடம் காமராஜர் எளீமை வாழ்வு பற்றி ஏதும் தெரியுமா? என கேட்டால் பேந்த பேந்த விழிப்பார்..
ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்’ என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு என் அரசியல் வாழ்க்கை இருந்தது குறித்து இப்போதும் எனக்குப் பெருமிதம் உண்டு. காமராஜர் மரணத்தின்போது அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் கிடத்தப்பட்டு இருந்தது. அந்த ஆறடி உடல் அருகே, நாள் முழுவதும் நான் அமர்ந்திருந்தேன். அவரைப் போன்ற தலைவரை அரசியலில் பார்ப்பது அரிதிலும் அரிது!''
சி.பி - காமராஜர் ஆட்சி அமைப்போம்னு வெட்கமில்லாமல் கூறும் ஆட்களிடம் காமராஜர் எளீமை வாழ்வு பற்றி ஏதும் தெரியுமா? என கேட்டால் பேந்த பேந்த விழிப்பார்..
prabakaran son and daughter
2. ''இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்?''
''1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள ராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக்கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார்.சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, 'மாமாதான் வந்தி ருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல’ என்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம்.
1989 ஜூலை 24-ம் தேதி 'தி இந்து’ நாளேட்டில், 'விடுதலைப் புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்த பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்’ என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகு விரைவிலேயே உணர்த்தியது.
2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நார்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித் தார் தம்பி.
2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது. அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள்.
ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்த வர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின் றனர். ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசு கிறேன். எனது சொந்த விருப்பத்தில்இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்!''
சி.பி - நம்பிக்கைதான் வாழ்க்கை.. உயிருடன் இருக்கிறார் என்றே நம்புவோம்
ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்த வர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின் றனர். ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசு கிறேன். எனது சொந்த விருப்பத்தில்இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்!''
சி.பி - நம்பிக்கைதான் வாழ்க்கை.. உயிருடன் இருக்கிறார் என்றே நம்புவோம்
3. ''தமிழக அரசியல்வாதிகளில் அதிகபட்ச நேர்மையாளராக நீங்கள் கருதுவது யார் யாரை?''
''ஒரே ஒருவர்தான். அவர்... தோழர் நல்லகண்ணு அவர்கள்!''
சி.பி - நேர்மை, எளிமை, பொது வழ்வில் தூய்மை மூன்றுக்கும் இலக்கணம் ஆனவர்
சி.பி - நேர்மை, எளிமை, பொது வழ்வில் தூய்மை மூன்றுக்கும் இலக்கணம் ஆனவர்
4. ''கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகான தமிழக அரசியல் எப்படி இருக் கும்?''
''காங்கிரஸ் ஆட்சி, அண்ணா ஆட்சி வரை தமிழக அரசியலில் கண்ணியம் இருந்தது. அண்ணா மறைவுக்குப் பின்னர், தி.மு.க-வுக்கு கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு நிலைமை படிப்படியாக மாறி, எம்.ஜி.ஆர். வருகைக்குப் பிறகு அது முற்றிலுமாக மாறி விட்டது. இரு தலைவர்களுக்கு இடையே யான தனிப்பட்ட வெறுப்பினால் அரசியல் நாகரிகமும் கண்ணியமும் பறக்கவிடப்பட்டது. அது இன்றளவும் தி.முக - அ.தி.மு.க. சண்டையாகத் தொடர்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் மொழிவாரி மாநிலப் பிரிவினை நடந்தபோது, ஆந்திரர்கள் சென்னை நகரத்தையும் கேட்டார்கள். முதல்வராக இருந்த ராஜாஜி, 'சென்னை தமிழர்களுக்கே’ என விட்டுக்கொடுக்க மறுத்தார். அவரைக் காலம் எல்லாம் எதிர்த்த பெரியார், அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சி. போன்றவர்கள் ராஜாஜியை ஆதரித்தனர். தமிழர் நலன் என்ற அடிப்படையில், அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேர்ந்தனர். ஆனால், இப்போதைய நிலைமை என்ன?
தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில்கூட எதிரெதிர் நிலை களை எடுக்கின்றன. தனிப்பட்ட பகையை அரசியலாக மாற்றும் இந்தத் தலைவர்கள் அரசியல் அரங்கில் இல்லாமல்போனால், ஓரளவுக்கு நிலைமை சீராகும்!''
சி.பி - கலைஞருக்குப்பிறகு அழகிரி ஸ்டாலின் வாரிசு சண்டை வந்து ஸ்டாலின் கை ஓங்கும்,, அழகிரி வி என் ஜானகி போல் காணாமல் போவார்.. ஜெவுக்குப்பின் சசிகலா குடும்பம் ஆக்ரமிக்கும், ஆனால் எதிர்காலம் இருக்காது,,
சி.பி - கலைஞருக்குப்பிறகு அழகிரி ஸ்டாலின் வாரிசு சண்டை வந்து ஸ்டாலின் கை ஓங்கும்,, அழகிரி வி என் ஜானகி போல் காணாமல் போவார்.. ஜெவுக்குப்பின் சசிகலா குடும்பம் ஆக்ரமிக்கும், ஆனால் எதிர்காலம் இருக்காது,,
5. ''இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா?''
''அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசு கள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும்.
அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். வெளியுறவு, ராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும்.
மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல!''
6. ''உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர் கள்?''
''உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக் கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை.
அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு. ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண் பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக் கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது; எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வைஇழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்!''
அடுத்த வாரம்....
''ஈழ அரசியல் பேசுவதே புலம்பெயர் ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தத்தான் என்று பலர் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே...''
''ராஜபக்ஷேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?''
''இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?''
தொடரும் - நன்றி விகடன்