Showing posts with label SRIKANTH. Show all posts
Showing posts with label SRIKANTH. Show all posts

Saturday, September 08, 2012

பாகன் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEionVT9KIU4TGQEH1ewp7iN6-MW7WATvxRf2n9_CQ0paghhL2HekCwcaeTAteCPrSGXr0BlUwaLBHHTr8NvAdm_Xg7-FdkHHs0FL0cRApL_R4uAO36SJeoSENticOrZyexY0jyOPAqfYd1O/s1600/Paagan-Movie-New-Firstlook-Poster.jpgஹீரோ டென்த் ஃபெயில்.அவருக்கு உழைச்சு முன்னுக்கு வரனும்னு எண்ணம் இல்லை.. ஊரை ஏமாத்தி உலையில் போட்டு சம்பாதிக்கனும்னு நினைக்கறார்.முதலீடே இல்லாம சில பிஸ்னெஸ் பண்ண முயற்சி பண்றார். எடுபடலை.. அதனால ஒரு குறுக்கு வழியை கண்டு பிடிக்கறார். ஊர்லயே பணக்கார ஃபிகரை பார்த்து லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டா பணக்காரன் ஆகிடலாமே? இந்த கேவலமான ஐடியா வந்ததும் அந்த ஊர் பிக் ஷாட் பொண்ணை சுத்தி சுத்தி நாய் மாதிரி அலையறாரு.


அந்த பொண்ணு 4 ரீல் அலைய விட்டு மீ ஆல்சோ லவ்விங்க் யூன்னு சொல்லுது. அப்பா எதிர்ப்பு. உடனே பாப்பா வீட்டை விட்டு ஓடி வந்துடுது. சொத்து வரும்னு நினைச்ச ஹீரோவுக்கு ஷாக். ஆ ராசாவுக்கு தேள் கொட்டுன மாதிரி ஆகிடுது. இவளை வெச்சு சாப்பாடு போட முடியாது. அவ கிட்டே உண்மையை சொல்லிடறான். நான் சின்சியர் லவ்வர் எல்லாம் கிடையாது.தனுஷ் மாதிரி பணத்துக்கு ஆசைப்பட்டுத்தான் உன்னை லவ்வினது மாதிரி நடிச்சேன்னு தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிடறாரு. ஹீரோயின் காரித்துப்பிட்டு கிளம்பிடுது.. அப்பா கிட்டேயே... ஆஸ்திரேலியா அனுப்பிடறாரு அப்பா..


ஹீரோயின் எழுதி வெச்ச டைரி ஹீரோவுக்கு கிடைக்குது. அதுல பயங்கர ட்விஸ்ட். அந்த ஹீரோயின் தான் ஹீரோவை சின்ன வயசுல இருந்தே லவ் பண்ணின ஆள்.. உடனே ஹீரோ மனம் மாறிடறாரு. உழைச்சு சம்பாதிக்கனும்னு வேலைக்குப்போறாரு. திருப்பூர்ல மொத்தம் 565 கார்மெண்ட்ஸ் இருந்தாலும் கரெக்ட்டா ஹீரோயின் ஹீரோ ஒர்க் பண்ற அதே இடத்துக்கு வருது..  என்ன ஆகுது? அந்த 2 கேனங்களும் சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதே கதை..

http://www.tamilcinemaz.com/wp-content/uploads/2012/07/59th-Filmfare-Awards-Stills-32.jpg
 ஹீரோ ஸ்ரீகாந்த். இவர்  சினிமா வாழ்க்கையை 3 விதமா பிரிக்கலாம். சினேகா கூட சினேகமா இருந்த ஏப்ரல் மாதத்தில் காலம்.. அப்போ ஏறுமுகம். அவருக்கு அல்வா குடுத்து அடுத்து ஒரு ஃபிகரை(அஞ்சனா) கரெக்ட் பண்ணாரு,கோர்ட் கேஸ்னு ஏகப்பட்ட பிரச்சனை, சறுக்கு முகம். இப்போ கொஞ்சம் பரவாயில்லை.. நண்பன் படத்துல நடிக்கறதுக்கு முன் புக் ஆன படம்.. அர்விந்த்சாமியின் புதையல் படம் போல்  இவருக்கு கிடைச்சிருக்கற காமெடி கம் லவ் ஸ்டோரி.. அவர் அளவில் சரியா பண்ணி இருக்கார்.. 

 ஹீரோயின் ஜனனி அய்யர்,.. விழிகள் சுண்டி இழுக்குது.. இதழ்கள் செயற்கைப்பூச்சு இல்லாமயே மின்னுது.. கண்கள் பல கதைகள் சொல்லுது.. ஆனா பாப்பா உயரம் கம்மி.. ஹீரோவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கார்.. சூர்யா அனுஷ்கா கூட நடிக்கறப்போ செய்யும் ஸ்டூல் டெக்னிக்கை ஃபாலோ பண்ணவும்.. 


அங்காடித்தெரு வில்லன் ஏ வெங்கடேஷ் ( மகாப்ரபு இயக்குநர்) தான் வில்லன்.. அதிக வாய்ப்பில்லை.. வந்தவரை ஓக்கே/  புரோட்டா சூரி காமெடி போர்ஷன்.. எல்லாம் மொக்கை காமெடி..  எடுபடலை.. 
 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-4287.jpg
 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. புரோட்டா சூரி தக்காளி லாரி விபத்தில் மாட்டி ஆள் காணாமல் போவதும் ஹீரோ அண்ட் கோ அவர் செத்துட்டதா நினைச்சு ஒப்பாரி வைப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி சீனும் கல கல டைப் 


2. கோவை சரளாவை ஏமாற்றி ஹீரோ  அவர் கையில் கவரிங்க் செயின் மாட்டி விட்டு தங்க நகையை அபேஸ் பண்ணும் சீன்.. அப்புறம் கோழிப்பண்ணை வைப்பதாக சொல்லும்போது உன் பேரைத்தான்மா வைப்பேன் என்றதும் கோவை சரளாவின் சிரிப்பில் கோழியின் குரலை மிக்ஸ் பண்ணியது கலக்கல் காமெடி.. 



3. போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிய ஹீரோ தான் ஏமாற்றிய ஆட்கள் கூடி நிப்பதை பார்த்து சார், நீங்க வேணா அந்த தொகையை செட்டில் பண்ணிடுங்க, நாங்க உங்களுக்கு மறுபடி தந்துடறோம் என போலீஸ் கிட்டேயே ஃபோர்ஜரி செய்வது


4. அழகான மெலோடி சாங்க் எப்படியோ பாட்டு.. ஆஹா! ஒளிப்பதிவும் கலக்கல்.. அந்த தெப்பக்குளம் .. இயற்கைக்காட்சிகள் அடடே போட வைக்குது.. 


5. ஹீரோயின் ஜனனி அய்யரின் கண்ணியமான ஆடை வடிவமைப்பு, ஒப்பனை அழகு..

http://www.cineulagam.com/photos/full/movies/pakan_004.jpg

மனதில் நின்ற வசனங்கள்



1. சார், நாங்க தக்காளி எக்ஸ்போர்ட் பண்றோம்./. 



 எங்கே? 


 பொள்ளாச்சில 

 அது எப்படி எக்ஸ்போர்ட் ஆகும்? 

 ஹி ஹி அங்கே போய் அப்புறம் எக்ஸ்போர்ட் பண்ணுவோம்



2. முகத்தை கொஞ்சம் சோகமா வெச்சுக்கோ இப்போ..


 அவன் முகம் எப்பவுமே சோகமா தான் இருக்கும்



3. நமக்குன்னு ஒரு காலேஜ்,  நமக்குன்னு ஒரு ஹோட்டல் எல்லாம் கட்டனும்



அதே மாதிரி நமக்குன்னு ஒரு கள்ளுக்கடை, நமக்குன்னு ஒரு போலீஸ் ஸ்டேஷன்.. அதுல இப்போ நம்மை அடிச்சானே அந்த போலீஸை வேலைக்கு சேர்த்து சம்பளம் நாமளே தரனும்



4. உழைச்சு சம்பாதிக்க லேட் ஆகும்.. ஆல்ரெடி பணம் இருக்கற பொண்ணை கட்டிக்கிட்டா சீக்கிரம் முன்னுக்கு வந்துடலாம்



5. அவன் அவ கிட்டே என்ன சொல்லிட்டு இருக்கான்? 


 தெரில.. ஆனா அவன் ஃபிரண்ட்ஸ் இல்லாம ஹனிமூன்க்கு கூட போக மாட்டான்.. ஹி ஹி 


6. இது கல்யாணப்பத்திரிக்கை இல்லைடா மஞ்சள்  நோட்டீஸ், எஸ் ஆகிடு



7.. நான் வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன்./. கைல நயா பைசா இல்லை, 200 ரூபா கொடுத்து ஆட்டோவை கட் பண்ணுங்க 


அம்மா 


 கோவை சரளா - என்ன டா 200 ரூபா பணமா? என் கிட்டே இல்லை.. 


8. ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ..  இந்த ஜென்மத்துல உன்னை அவ மறக்கவும் மாட்டா, மன்னிக்கவும் மாட்டா..


9. சிங்கப்பூர் போய் திருப்பூர் பெருமையை காப்பாத்தற மாதிரி  ஹோடல் வைப்பான்னு பார்த்தா திருப்பூர்லயே சிங்கப்பூர் பெருமையை கெடுக்கற மாதிரி அந்தப்பேரை வெச்சிருக்கான் பாரு


10. மேடம், எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேணும்.. 

 நீ என் கம்பெனில ஜாப்க்கு வந்திருக்கியா? லோன் வாங்க வந்திருக்கியா?



11. ரொம்ப கிண்டல் பண்ணாதே. நானாவது ஓட்டை ஜட்டி போட்டிருக்கேன்,  உன்னை மாதிரி லேடீஸ் ஜட்டி போடலை.. 



12. அவன் பொய்யா உன்னை லவ் பண்ணப்ப நீ அவனை நம்புனே.,. இப்போ உண்மையா அவன் உன்னை லவ் பண்றான், ஆனா நம்பலை;. 
http://www.nakkheeran.in/AllImages/Gallerys/21105_1.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. சுந்தர ராமசாமி எழுதுன ஒரு  புளிய மரத்தின் கதைல புளிய மரம் கதை சொல்ற மாதிரி  இருக்கும்.. அந்த மாதிரி ஒரு சைக்கிள் தன் கதையை சொல்ற மாதிரி ட்ரை பண்ணி இருக்கீங்க.. ஆனா எடுபடலை.. ஏன்னா குறும்படத்துக்கு அது ஓக்கே..  2 1/2 மணி நேரப்படத்துக்கு அது போர் அடிச்சிடும்.. பொதுவா பேக் டிராப்ல ஒருத்தர் கதை சொல்றதையே அவாய்டு பண்ணனும்.. 



2.  முதல் பாதி மரண மொக்கை காமெடி, ஜாலி என கதை சொல்லிட்டு பின் பாதில  ஃபிளாஸ்பேக் சீரியஸ் பதின் பருவ காதல் கதை சொல்லப்பட்டிருக்கு. ஆடியன்ஸ் டக்னு செட் ஆக திணறிட்டாங்க// 



3. ஹீரோ கார்மெண்ட்ஸ் கம்ப்பெனில மாசம் ரூ 7000 வேலைக்கு சேருகிறார். 6 மாசம் ஒர்க் பண்ணின பிறகு அவர் கைல ரூ 42,000 தானே இருக்கும்? எப்படி ஒரு லட்சம் வெச்சிருக்கேன்னு சொல்றாரு? பார்ட் டைம் ஜாப் ஏதும் போகலை.. இன்செண்ட்டிவ் இல்லாத வேலை..  அப்படியே  ஓ டி பார்த்து வேலை செஞ்சாலும் மத்த செலவு ஏதும் அவருக்கு இல்லையா? 


4. பொதுவா டைரின்னா அந்தந்த கால கட்டத்துக்கு எழுதுவாங்க.. ஆனா இந்த பட ஹீரோயின் மட்டும் 23 வருஷ காதல் வாழ்க்கையை ஒரே டைரில நீட்டா எழுதி ரெடியா வெச்சிருக்கே? அது எப்படி?அந்த டைரி ஹீரோ கைல சிக்குவதும், ஹீரோ டைரி ஹீரோயின் டைரி கைல சிக்குவதும் நம்பற மாதிரி இல்லை.. 


 5. படத்தின் முக்கியமான மைனஸ் பாயிண்ட் என்னான்னா ஹீரோ தன் கண் முன்னால  ஹீரோயின் ரத்தமும் சதையுமா நிக்குது. லவ் பண்றேன்னு சொல்லுது. அப்போ அவளை உதாசீனப்படுத்தும்போதே அவர் கேரக்டர் மேல் எரிச்சல் வந்துடுது.ஆனா ஹீரோயின் டைரியை படிச்சதும் உடனே எப்படி மனசு மாறிடறார்?ஏத்துக்க முடியலையே?


6. காதல்ங்கறது மனசளவில் உணருவது ஊடலில் இருக்கும் ஹீரோயின் தானா உணர்ந்து வந்தா ஓக்கே.. ஹீரோவின் நண்பர்கள் போய் ஹீரோ டைரியை கொடுத்து உணர்த்துவது எல்லாம் நாடகத்தனம்.. 
http://mimg.sulekha.com/janani-iyer/images/stills/janani-iyer-photos-021.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -39

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - எல்லாரும் இந்தப்படத்தை ரசிச்சுட முடியாது. 30 வயசுக்கு
உட்பட்டவர்கள் மட்டும் பார்க்கலாம்..இடைவேளை வரை மொக்கை காமெடி, அப்புறம் சீரியஸ் லவ்..  பெண்களும் பார்க்கும் தரத்தில் தான்
படம் இருக்கு. ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


http://www.koodal.com/cinema/gallery/events/2010/250/boss-engira-baskaran-premiere-show-stills_22_073605123.jpg