படம் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு ரெடி ஆகி பல வருடங்கள் ஆகி லேட்டாக ரிலீஸ் ஆனதால் வெற்றி வாய்ப்பை இழந்ததாக சொல்லப்படும் முக்கியமான படம் ஆர் கே செல்வமணியின் குற்றப்பத்திரிக்கை... படம் எடுத்து 17 வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆனதால் ஆறிய வடை ஆகி படம் டப்பாவுக்குள் வந்த வேகத்தில் சென்றது.. சதுரங்கம் படம் எடுக்கப்பட்டு 4 வருஷங்கள் கழிச்சுத்தான் ரிலீஸ் ஆகுது.. இதுல என்ன ஒரு விஷயம்னா இந்தப்படம் 4 வருஷம் முன்னால ரிலீஸ் ஆகி இருந்தாக்கூட.... ஹி ஹி
ஸ்ரீகாந்த் கோ பட ஜீவா மாதிரி ஒரு பத்திரிக்கையாளர்.. நாட்டில் நடக்கும் அநியாயங்களை கட்டுரை ஆக்கி வெட்ட வெளிச்சம் ஆக்கி அவர்களுக்கு ஆப்பு வைப்பவர்.. ஆப்பு வாங்கிய ஒரு வி ஐ பி நாயகனின் காதலி சோனியா அகர்வாலை கடத்தி வைத்து சவால் செஸ் கேம் ஆடுவதே கதை..
ஸ்ரீகாந்த் எதுக்காக சத்யா கமல் கெட்டப்பில் படம் முழுக்க வர்றார்னு தெரியல.. பிரஸ் ரிப்போர்ட்டர்னா அவரது ரியல் கெட்டப்ல வந்தாலே ஸ்மார்ட்டா இருக்குமே? எதுக்கு இந்த கொலை வெறி?
சோனியா அகர்வால் 87 ஷாட்ல 85 தடவை ஷாலை கழுத்து ஒண்ட ஏன் போட்டிருக்கார்னே தெரியலை? ( ஒரு வேளை சொல் பேச்சு கேட்காம அக்கா இப்படி டிரஸ்ஸிங்க் சென்ஸ்ல இருந்ததாலதான் குணக்குன்று செல்வராகவன் கழட்டி விட்டுட்டாரோ என்னவோ? நாராயணா! நாராயணா!!)
சோனியாவுக்கு இயல்பாவே சோகம் அப்பிய முகம், இதுல இன்னும் சோகம் ஜாஸ்தி.. ஏதோ டூயட் சீன்ஸ்ல பார்க்கற மாதிரி இருக்கு..
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்
1. கொலை பண்ணினவங்கதான் ஜெயிலுக்கு வர்றாங்கன்னு நீ நினைக்கறே.. கொலை பண்ணறதுக்கு சிறந்த இடமே ஜெயில்தான்னு நான் சொல்றேன்..
2. நான் எதுக்குய்யா நன்றி அறிவிப்புக்கூட்டத்துல மக்களுக்கு நன்றி சொல்லனும்? கட்டுன டெபாசிட்டையே திருப்பி வாங்க முடியலையே?
3. யோவ் 33 % ! உன்னால இந்த காலனில ஆம்பளைங்களூக்கெல்லாம் அவமானம்யா.. எப்பா பாரு பொம்பளைங்க செய்ய வேண்டிய வேலை எல்லாம் நீயே செய்யறியே?
சத்தமாப்பேசாதய்யா.. உள்ளே என் சம்சாரம் இருக்கா..
யோவ், நாங்க மட்டும் சின்ன வீட்டோடயா குடும்பம் நடத்திட்டு இருக்கோம்?
4. XQS மீ மிஸ்.. பேனா ப்ளீஸ்..
பேங்க் வர்றம்னு தெரிஞ்சேதானே வந்தீங்க? ஏன் பேனா கொண்டு வர்லை? தெரிஞ்சே அலட்சியமா இருக்கறவங்களுக்கு நான் உதவறது இல்லை..
5. கால் பக்கத்துல இருக்கற அந்த ஃபிகரோட ஃபோட்டோவை ஃபுல் பேஜ்ல போட்ருங்க..
சார்.. அப்போ மேட்டர்?
யோவ்.. அந்த ஃபோட்டோவே செம மேட்டர்தான்யா ( நல்ல எடிட்டர்!!)
6. அரசியல்வாதி என்னைக்கும் பழசை மறந்ததில்லை
7. அவர் பேர் என்ன? லே அவுட் டல்ஸ்டாயா?
யோவ்.. அது லியோ டால்ஸ்டாய்
8. நான் எல்லாம் தண்டிக்கப்பட்டா அப்புறம் இந்தியாவுல பணத்துக்கே மதிப்பில்லாம போயிடும்.. நான் டெஃபனிட்டா வெளில வருவேன்..
9. மிஸ்.. உங்களுக்கு வரப்போற கணவர் எப்படி இருக்கனும்?
நிறைய சம்பாதிக்கறவரா இருக்கனும், அவர் எப்படி இருந்தாலும் கவலை இல்லை..
10. திட்டுவது பொம்பளைங்க லட்சணம், அதை கண்டுக்காம விடறது ஆம்பளைங்க லட்சணம்..
11. நான் திருப்பதி சாமியை பார்க்கனும்
அவன் உள்ளேதான் இருக்கான்.. என்ன விஷயமா பார்க்கனும்..
ம் சும்மாதான்
சும்மா யாராவது பார்க்க வருவாங்களா?
ம் கொழுப்புதான்..
12. ஒரு அழகான கோலம் எந்தப்புள்ளில ஆரம்பிக்கும்னு தெரியாது.. உங்களை கட்டிக்க ஆசைப்படறேன்..
கண்ணாலம் கட்டனும்னா எல்லார்ட்டயும் பர்மிஷன் வாங்கி லேட் ஆகும், கட்டிப்பிடிக்கனும்னா இப்பவே..
13. நீ 4 பக்கம் எழுதுன கட்டுரையால 2 கோடி நஷ்டம், ஏன் எழுதுனே?ன்னு நான் கேட்க மாட்டேன், ஏண்டா எழுதுனோம்னு உனக்கு தோண வைப்பேன்..
14. காதல் என்பது என்ன? ஞாபகத்துல வெச்சுக்கறதும், ஞாபகங்களையே வெச்சுக்கறதும் ,தானே?
15. ஐ வாண்ட் டூ கிஸ் யூ..
எந்த இடத்துல?
----------------------------
என்ன சொன்னீங்க?
சொன்னேன், சென்சார்ல கட் ஆகிடுச்சு போல.. ( அடங்கோ!!)
16. உங்கப்பா சப்போஸ் நம்ம காதலுக்கு ஓக்கே சொல்லலைன்னா என்ன பண்ணுவீங்க?
வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்குவேன்..
அப்டி பண்ணிக்கிட்டா என் அருமை உங்களுக்குத்தெரியும்.. அடடா.. இவளை மிஸ் பண்ணிட்டமேன்னு ...
17. எனக்குப்பொண்ணு பாக்க எங்கப்பாதான் போனாரு,.. நான் கடைசி வரை பொண்ணைப்பார்க்கவே இல்லை, என் பையனுக்குப்பொண்ணு பார்க்கவும் நான் போகலை, அவனே பார்த்துக்கிட்டான்..
18. தரம் பார்த்துத்தான் நண்பனை வெச்சுக்குவேன், தகுதி பார்த்துத்தான் எதிரியை வெச்சுக்குவேன், எனக்கு எதிரியா இருக்கற தகுதி உனக்கு கிடையாது தம்பி..
19. உலக அளவுல டாப் 50 பணக்காரங்க லிஸ்ட் எடுத்தா அதுல பாதிப்பேரு இந்தியர்கள் தான், அதே நட்ல தான் ஏழைகள் 42 கோடி பேர் இருக்காங்க./.
20. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நான் தப்பு பண்றேன், ஆனா ஒரு நூல் கூட ஜெயிப்போமா?ன்னு பயந்ததில்லை..
21. டாம் & ஜெர்ரி டிசைனிங்க் பண்னப்ப வால்ட் டிஸ்னிக்கு வயசு 48
22. போலீஸ்காரன் எப்பவுமே தப்பை ரொம்ப கரெக்ட்டா பண்ணுவான்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. வலைப்பூ எழுத்தாளர்களுக்கு 6.10.2011 மாலை 6 மணிக்காட்சி பிரிவ்யூ ஷோ காட்டப்போகிறாராம். அதற்கு அவர்களை சக பதிவர்கள் சார்பில் பாராட்டுகிறேன்..
2. பல போராட்டங்களுக்கு மத்தியில் 4 வருடங்களுக்குப்பிறகு இதை ரிலீஸ் செய்தமைக்கு..
3. சொல்ல வந்ததை சொல்ல வில்லை ( பாடல் வரிகளே சில சமயம் படத்தின் விமர்சனம் ஆன தருணம் உண்டு),அம்புலி மாமா வா, எங்கே எங்கே , விழியே விழியே விரும்பும்போது வசதியாக வந்து போன்ற பாடல்களை கண்ணியமாக எடுத்தது..
இயக்குநர்க்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்
1. மாதம் ரூ 30,000 சம்பளம் வாங்கும் ஒரு பிரபல பத்திரிக்கையின் நிருபர் ரூ 1800 மதிப்புள்ள நோக்கியா 1100 மாடல் நோக்கியா ஃபோன் வெச்சிருக்காரே? ஏன்? லோ பட்ஜெட் படமா? கேமரா ஃபோன் வைத்திருக்க மாட்டரா?
2. ஒரு சீனில் மெயின் ரோட்டில் பைக்கில் ஸ்ரீகாந்த் சிக்னலுக்காக வெயிட்டிங்க்.. அப்போது அந்த வழியாகப்போகும் வில்லன் குரூப் வேனில் சோனியா கடத்தப்படுவது தெரிந்து ஹீரோ பைக்கில் துரத்தாமல் அதை கீழே தள்ளி விட்டுட்டு 80 கி மீ வேகத்தில் போகும் வேனை ஏன் ஓடியே சேஸ் பண்றார்?
3. அந்த காரில் உள்ள ஹீரோயின் சோனியா தன் கையில் உள்ள 90 கிராம் எடை உள்ள செல் ஃபோனை காரின் பின் கண்ணாடி மேல் வீசி (4 இஞ்ச் கேப்)அதை எப்படி உடைக்கிறார்? ( நோ சான்ஸ்!!)
4. ஹீரோ ஸ்ரீகாந்த், ஸ்ரீஇமன் இருவரிடமும் பைக் இருக்கு, ஆனா போலீஸ் ஸ்டேஷன்க்கு புகார் தர ஏன் ஆட்டோல போறாங்க?
5. வில்லனால் கடத்தி வைக்கப்பட்ட சோனியா ஏன் ஹீரோவின் செல் ஃபோன்க்கு ட்ரை பண்ணாமல் லேண்ட் லைன் ஃபோனுக்கு ட்ரை பண்றார்? அது ரிங்க் ஆகி யாரும் எடுக்கலையேன்னு ஏன் பதறனும்?
6. ஹீரோ வில்லனின் அடியாளிடம் வில்லனின் அட்ரஸை விசாரித்து விட்டு அப்படியே கிளம்பிடறார்.. விசாரிக்கப்பட்டவன் வில்லனிடம் போட்டுக்குடுக்க மாட்டானா?
ஏ, பி செண்ட்டர்களில் தீபாவளி வரை தாக்குப்பிடிக்கும்.. சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 39
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே
சி.பி கமெண்ட் - டி வி ல போடறப்ப பார்க்கலாம்
ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் பார்த்தேன்