சோனா பிரபல பதிவர்களுடன் நடத்தும் வழக்கு, போராட்டம் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம், பார்க்காதவர்களுக்கு....
பிரபல பதிவர்கள் சோனா மேட்டரில் சிக்கி இருந்தால் காமெடி கலாட்டா கற்பனை
1. உணவு உலகம் ஆஃபீசர் - யுவர் ஆனர் ,நான் திருநெல்வேலில உணவுத் துறைல தரக்கட்டுப்பாட்டுத்துறைல செக்கிங்க் இன்ஸ்பெக்டரா இருக்கேன்.
ஜட்ஜ்- ஓக்கே,ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரா இருக்கற நீங்க ஒரு குணச்சித்திர நடிகையை இப்படி கையைப்பிடிச்சு இழுக்கலாமா?
உணவு உலகம் ஆஃபீசர் - யுவர் ஆனர் ,அப்போ கவர்மெண்ட் ஜாப்பை ரிசைன் பண்ணிட்டு அதுக்குப்பிறகு கையை பிடிச்சு இழுக்கலாமா? என்ன பேசறீங்க? நான் எதுக்காக அப்டி செஞ்சேன்?
ஜட்ஜ் - அதை நீங்கதான் சொல்லனும்..
உணவு உலகம் ஆஃபீசர் - சோனாவோட அன்பு கலப்படம் இல்லாததா? ஒரிஜினலா?அப்டின்னு கண்டுபிடிக்கத்தான் அவங்க கையைப்பிடிச்சு இழுத்தேன்..
ஜட்ஜ் -கையைப்பிடிச்சு இழுத்தா ஒரிஜினலா?ன்னு தெரிஞ்சிடுமா?
உணவு உலகம் ஆஃபீசர் -ஏன் கேட்கறீங்க? நீங்க யாருக்காவது ஒரிஜினலா?ன்னு செக் பண்ண வேண்டி இருக்கா?
ஜட்ஜ் -அப்ஜெக்ஷன்..நோ பர்சனல்.. கேசை பற்றி மட்டும் பேசுங்க..
உணவு உலகம் ஆஃபீசர் - யுவர் ஆனர்.. உண்மையான அன்பிருந்தா கையைப்பிடிச்சு இழுத்தா கோபம் வராது, காதல் தான் வரும்.. சோனா கோபமா கத்தி இருக்காங்க.. அப்போ அவங்களூக்கு உண்மையான அன்பு இல்லைன்னு தானே அர்த்தம்?இதோ அது சம்பந்தமான ஃபோட்டோ க்ளிப்பிங்க்ஸ், சோனாவைப்பற்றி பத்திரிக்கைகள்ல வந்த துணுக்குகள் பெட்டி செய்திகள் இதை எல்லாம் ஆல்பமா தயாரிச்சிருக்கேன், பார்த்துட்டு திருப்பி குடுத்திடனும்..
ஜட்ஜ் -எதுக்கு?
உணவு உலகம் ஆஃபீசர் -இதென்னா கேள்வி? பதிவு போடத்தான்..நான் எங்க ஆஃபீஸ்ல என்ன வேலை செஞ்சாலும் அதை பதிவா போட்டுடுவேன்... மக்களுக்கு விழிப்புணர்ச்சியை அது ஏற்படுத்தும்..
ஜட்ஜ் -சரி.. விடுங்க.. இப்போ வாதியே மன்னிப்புக்கடிதம் கொடுத்துட்டா பிரச்சனையை முடிச்சுக்கலாம்னு சொல்றாங்க, நீங்க அந்த டீலிங்க்குக்கு ஓக்கேவா?
உணவு உலகம் ஆஃபீசர் - சாரி யுவர் ஆனர்.. சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடாதவந்தான் எதுக்கெடுத்தாலும் மன்னிபு கேட்பான்..நான் கேட்கமாட்டேன்... வேணும்னா ஒணு பண்றேன்.. ஈரோட்ல என் ஃபிரண்ட் ஒருத்தன் இருக்கான்.. யார் என்ன தப்பு பண்ணினாலும் அவங்க சார்பா இவன் மன்னிப்பு கேப்பான்.. அவனை வேணா அனுப்பி வைக்கிறேன்..
---------------------------------------------------------------------
2. தமிழ்வாசி பிரகாஷ் - வணக்கம் யுவர் ஆனர்.. இந்தாங்க 10 முழம் மல்லிகைப்பூ..
லேடி ஜட்ஜ் -யோவ்.. எனக்கு பூ வாங்கித்தர என் புருஷன் இருக்கார்.. அவர் ஆஃபீஸ் போன பிறகு பக்கத்து வீட்டுலயே ஹவுஸ் ஓனர் இருக்கார்.. 2 வீட்டுக்காரங்க எனக்கு.. நீ என்ன பூ வாங்கித்தர்றது?
தமிழ்வாசி பிரகாஷ் - சாரி யுவர் ஆனர்.. என் பிளாக்லயே பேக்டிராப்ல மல்லிகைப்பூ தோட்டம் வெச்சிருக்கேன்.. அது போக என் பக்கத்து வீட்ல ஷர்மிளான்னு ஒரு ஃபிகரு அவங்க வீட்லயும் மல்லிகை தோட்டம் இருக்கு..மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு அப்டிங்கறதை உணர்ந்து நான் அவங்க வீட்டு மல்லிகையை வாங்கி ஃபிரண்ட்ஸ்க்கு தந்துட்டு இருக்கேன்..
லேடி ஜட்ஜ் - கேஸ் சம்பந்தமா பேசுங்க..
தமிழ்வாசி பிரகாஷ் -ஓக்கே யுவர் ஆனர் கேள்வி கேளுங்க
லேடி ஜட்ஜ் -நைட் 12 மணிக்கு சோனா கையைப்பிடிச்சு இழுத்தீங்களா?
தமிழ்வாசி பிரகாஷ் -இல்லை யுவர் ஆனர்.. அப்போ நான் செங்கோவி பிளாக்ல இருந்தேன்..அதுக்கு ஆதாரம் இருக்கு
லேடி ஜட்ஜ் -என்னது? உங்களுக்கு 6 தாரம் இருக்கா? எப்படி சமாளிக்கறீங்க?
தமிழ்வாசி பிரகாஷ் -ஹய்யோ, உங்க காதுல ஈயத்தை காய்ச்சி ஊற்ற.. அது ஆறு தாரம் இல்ல, ஆதாரம்..
லேடி ஜட்ஜ் -பதிவுலகில் 1469 பேர் பதிவு போடறாங்க, அதுல மிட் நைட்ல பதிவு போடறவங்க 34 பேர்.. அதுல கரெக்ட்டா 12 மணில இருந்து 12.30 வரை பதிவு போடறவங்க 12 பேர்.. நீங்க ஏன் செங்கோவி பிளாக் மட்டும் பொனீங்க?
தமிழ்வாசி பிரகாஷ் - யுவர் ஆனர், நீங்க கேப்டன் ரசிகையா இருக்கலாம், அதுக்காக இப்படி கொன்னெடுக்காதிங்க... அது என் தனிப்பட்ட விருப்பம், கேஸ் சம்பந்தமா மட்டும் கேள்வி கேளுங்க..
லேடி ஜட்ஜ் -சரி.. நடந்தது நடந்துடுச்சு. சோனா சமரசமா போக விரும்பறாங்க.... நீங்க அவங்க கூட சமரசமா போக ரெடியா?
தமிழ்வாசி பிரகாஷ் -ஐ ஜாலி.. நான் அவங்க கூட போகனுமா? எங்கே எப்போ?
லேடி ஜட்ஜ் -யோவ், ரொம்பத்தான் ஆசை.. சமரசமா போன்னு சொல்ல வந்தேன்..
தமிழ்வாசி பிரகாஷ் -ஓகே மேடம் டன்...
--------------------------------------------------
3. கோமாளி செல்வா -வணக்கம் யுவர் ஆனர்!பேருந்தின் சக்கரத்திற்கடியில் வாழைப்பழத் தோலை வீசிவிட்டேன். வழுக்கி விழுந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!
ஜட்ஜ் - தம்பி..இது கோர்ட்.. ட்வீட் போட்ற இடம் இல்லை..சீரியஸா பேசனும்.
கோமாளி செல்வா -நான் சீரியசாக சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் எனக்கு சீரியசாக எதுவும் சொல்லத்தெரியாது என்பதே!
ஜட்ஜ் -சோனா கூட பார்ட்டிக்குப்போனப்ப எதுக்காக அவங்களை தனி ரூம்ல அடைச்சு வெச்சே?
கோமாளி செல்வா -வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை உள்ளே வீசிவிட்டேன். இனி சாவியும் தொலைந்து போகாது, திருடனும் உள்ளே போக முடியாது!
ஜட்ஜ் -குழப்பாதே! நீ என்னதான் சொல்ல வர்றே?
கோமாளி செல்வா -என் கதை லிங்க் தர்றேன்.. படிச்சுப்பார்த்து கருத்து சொல்லுங்க.. அதுக்குப்பிறகுதான் கேஸ் சம்பந்தமா பேசுவேன்...என் பிளாக் பேரு செல்வா கதைகள்..
ஜட்ஜ் -அல்வா கதைகள்னு டைட்டில் வெச்சிருக்கலாம் பேசாம.. என் வாழ்க்கைலயே இவ்வளவு மொக்கையான பிரதிவாதியை நான் பார்த்ததே இல்லை..
கோமாளி செல்வா - தாங்க்யூ யுவர் ஆனர்.. எங்க ஊர் கோபி, என் ஃபிகர் ஊர் பாரியூர்லகூட இப்படித்தான் சொல்வாங்க.. அவ்வளவு ஏன் நான் ட்வீட் போடும் டைம் காலை 11 டூ 12 .. அந்த நேரம் டைம்லைன் காத்து வாங்கும், ஏன்னா இருந்தா நான் அவங்க உயிரை வாங்குவேன். அதனால..
ஜட்ஜ் - அப்பா சாமி ஆளை விடு, நீ நடையக்கட்டு
கோமாளி செல்வா - யுவர் ஆனர் வடை குடுத்தா கட்டுவேன், நடையை எப்படி கட்டறது?
------------------------------------------------
டிஸ்கி -1 எனக்கு இந்தப்பதிவு எழுத 40 நிமிஷம் தான் ஆச்சு... ஆனா சம்பந்தப்பட்ட பதிவர்கள்ட்ட அதுக்கான பர்மிஷன் வாங்கறதுக்கு 1 மணி நேரம் ஆச்சு.. யோசிச்சு சொல்றேன், அப்புறமா சொல்றேன் அப்டினு இழுத்தடிச்சுட்டாங்க, ஆஃபீசர் மட்டும் தான் உடனே ஓக்கே சொன்னார்..
டிஸ்கி -2 கூகுள் சர்ச்ல 2 மனி நேரமா தேடறேன் சோனாவோட அரை குறை ஃபோட்டோதான் சிக்குச்சு.. டீசண்ட்டா, சேலை கட்டுன ஃபோட்டோவே சிக்கலை.. ரொம்ப சிரமப்பட்டுதான் இந்த ஸ்டில்ஸை கண்டு பிடிச்சேன்.. ஏன்னா அட்ரா சக்க ஒரு கவுரவமான இணைய தளம் ஆச்சே!!!!
டிஸ்கி 3 - காபி பேஸ்ட் பதிவு இனிமே போட முடியாது. இனி நீ என்ன பண்ணப்போறே? அப்டினு ரொம்ப சந்தோஷமா சிலர் சேட்ல கேட்கறாங்க.. ரொம்ப ஈஸி... இத்தனை நாளா ஒரு பதிவுக்கு 20 ட்வீட் அல்லது 40 ட்வீட் போட்டேன்.. அல்லது 25 ஜோக் போட்டேன். இனி ஒரு பதிவுக்கு 5 ஜோக் மட்டும் போடுவேன்.. #தமிழேண்டா!!