கமர்ஷியலாக வெற்றி பெறும் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டைப்பெறாது என்ற விதியைத்தகர்த்தெறிந்து அனைத்துத்தரப்பு மீடியாக்களால் பாராட்டுப்பெற்று விருதுகளையும் அள்ளிக்குவித்த படம் இது 2022 ல் 55 வது சிட்ஜெஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டு சிறந்த படம் , சிறந்த நடிகர் , சிறந்த ஒளிப்பதிவு , சிறந்த இசை என நான்கு விருதுகளைக்குவித்த படம் இது 6 மில்லியன் பட்ஜெட்டில் உருவான இப்படம் 11 மில்லியன் வசூலித்துள்ளது
ஸ்பாய்லர் அலெர்ட்
1944 ல் கதை நடக்கிறது ஃபின்லாந்து ஜெர்மனியுடன் சேர்ந்து ரஷ்யாவை துவம்சம் செய்த காலகட்டம் .
.நாயகன் ஒரு ரிட்டயர்டு கமாண்டோ . இவர் ஃபின்லாந்தை சேர்ந்தவர். இவர் ஒதுக்குப்புறமாக இருக்கும் மலைப்பிரதேசங்களில் தன் குதிரை , நாய் இவற்றுடன் வாழ்ந்து வருகிறார், இவர் தங்கம் வேட்டையாடும் நபர் . அதாவது தங்கம் எங்கு கிடைக்கிறது என கண்டறிந்து அதை எடுத்து விற்று தன் வாழ்வாதாரத்தைக்கவனிப்பவர்
இவர் ஒரு நாள் ஆற்று நீரில் தங்கத்துகள்களை எதேச்சையாகப்பார்க்கிறார். சமீபத்தில் எங்கேயோ தங்கச்சுரங்கம் இருப்பதை அறிகிறார். இடத்தைக்கண்டு பிடித்துத்தோண்டு கிறார். பாளம் பாளமாக தங்கம் கிடைக்கிறது , இவரால் முடிந்தவரை தங்கத்துண்டுகளை மூட்டையாகக்கட்டிக்கொண்டு தன் குதிரை மீது அதை ஏற்றிக்கிளம்புகிறார், கூடவே இவர் நாயும்
அப்போது ரஷ்யயப்படைகள் அவரைக்கடந்து செல்கிறது. பாவம், வயசான ஆள், அவரே சாகக்கிடக்கிறார். நாம் ஏன் வீணாக சுட வேண்டும் என ஏளனமாக ஒரு வீரன் கிண்டல் செய்கிறான், ஆனால் இன்னொரு இடத்தில் படை வீரர்களின் தலைவன் நாயகன் தங்கம் கொண்டு போவதைக்கண்டறிந்து நாயகனைத்தாக்க முனைகிறான்
ஆனால் அவர்கள் நினைத்தது போல நாயகன் வயதான நபர், முடியாதவர் எல்லாம் இல்லை , இவர்கள் அனைவருக்கும் தண்ணி காட்டப்போகிறார் என்பது அப்போது தெரியாது . இதற்குப்பின் நடக்கும் அமளி துமளி ஆக்சன் சம்பவங்களே மீதிக்கதை
நாயகனாக படம் முழுக்க ஆக்சன் சம்பவங்களை செய்பவராக ஜோர்மா டோமிலா அசத்தி இருக்கிறார், அவரது ஜிம் பாடி ஃபிட்னஸ் வியக்க வைக்கிறது
90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம் ஆக்சன் விரும்பிகள் தவறாமல் காணவேண்டிய படம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கடைசி 10 நிமிடங்களில் நாயகன் செய்யும் ஆக்சன் காட்சிகள் நம்ப முடியாதவை , அநியாயத்துக்கு காதில் பூ சுற்றுகிறார்கள்
2 நாயகன் குதிரை மீது சவாரி போகும்போது எதிரிகள் வெடிகுண்டை எரிகிறார்கள் , குதிரை சின்னா பின்னம் ஆகிறது . நாயகன் மட்டும் தப்பி விடுகிறார்
3 நாயகன் உடல் முழுவதும் பெட்ரோல் பட்டு நனைந்திருக்கிறது , எதிரிகள் நாயை ஏவி விடுகிறார்கள் . நாயிடம் இருந்து தப்பிக்க தன்னைத்தானே கொளுத்திக்கொள்ளும் நாயகன் பின் நீர் நிலையில் குதித்து உயிர் தப்பிக்கிறார், இது ஹைலி ரிஸ்க்
4 நாயகனை தூக்கில் தொங்க விடும்போது மூச்சைப்பிடித்து அசையாமல் பிணம் போல் இருப்பதும் அவர் உடலை ஆட்டிப்பார்த்து எதிரிகள் ஏமாறுவதும் நம்ப முடியாதவை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சி ஒரு இடத்தில் இருக்கிறது
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஆக்சன் பட விரும்பிகள் அவசியம் காண வேண்டிய படம் ரேட்டிங் 2.75 / 5
Sisu | |
---|---|
Directed by | Jalmari Helander |
Written by | Jalmari Helander |
Produced by | Petri Jokiranta |
Starring | |
Cinematography | Kjell Lagerroos |
Edited by | Juho Virolainen |
Music by |
|
Production companies |
|
Distributed by |
|
Release dates |
|
Running time | 91 minutes[1] |
Countries |
|
Languages |
|
Budget | € 6 million[a][2] |
Box office | $11.1 million[3][4] |