இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதையாக உருவான படம் , டைட்டிலுக்கு அர்த்தம் சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை = ஒரே ஒரு (நேர்மையான )பொது ஜனம் போதும். த ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் டீம் அப்படியே இதில் களம் இறங்கி இருக்கிறது . தியேட்டர்களில் ரிலீஸ் ஆன போது இது பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்றது மே 23 2023 தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது ஜீ 5 ஓடிடி யில் காணக்கிடைக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி 16 வயது ஆன ஒரு மைனர் பெண். இவரது அம்மா, அப்பாவுடன் வசித்து வருகிறார். அப்பா ஒரு சாமியார் பக்தன். அந்த சாமியாருக்காக அந்த ஊரில் மக்களிடம் நிதி திரட்டி ஆசிரம் எல்லாம் கட்டி நிர்வகித்து வந்திருக்கிறார். ஒரு நாள் சாமியார் நாயகிக்கு பேய் பிடித்து இருக்கிறது , என்னிடம் அழைத்து வா என்கிறார்.
தன் அம்மா , அப்பாவுடன் சாமியாரின் இருப்பிடத்துக்கு சென்ற நாயகி சாமியாரால் பாலியல்துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் . வெளியே வந்து பெற்றோரிடம் முறையிடுகிறாள் . போலீசில் புகார் செய்யப்படுகிறது
சாமியார் மிகவும் செல்வாக்கு மிக்கவர் என்பதால் ஆள் பலம், அரசியல் பலம் மூலம் எல்லோரையும் விலைக்கு வாங்குகிறார். நாயகியின் சார்பாக வாதாட இருந்த வக்கீலையும் விலைக்கு வாங்குகிறார்
இப்போதுதான் நேர்மையான வக்கீலான நாயகன் களத்தில் இறங்குகிறார். நாயகன் அந்த மைனர் பெண்ணுக்கு நீதி வாங்கித்தந்தாரா? என்னென்னெ போராட்டங்களை சந்தித்தார் என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக மனோஜ் பாஜ்பேயி பிரமாதமாக நடித்திருக்கிறார். வில்லனின் ஆட்கள் 20 கோடி ரூபாய்க்கு அவரை பேரம் பேச வரும்போது நையாண்டியுடன் அவர்க்ளை டீல் செய்யும் விதம் அபாரம் . வக்கீல் தொழிலில் உள்ள டென்சனால் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியவில்லையே என அவர் கலங்கும் இடங்கள் செண்ட்டிமெண்ட் டச்
பாதிக்கப்பட்ட பெண்ணாக அட்ரிஷா சின்ஹா பயம் பொங்கும் விழிகளுடன் நேர்த்தியாக நடித்திருக்கிறார். பெரும்பான்மையான காட்சிகளில் பர்தா உடன் வருவதால் கண்களாலேயே நடிக்க வேண்டிய கட்டாயம், கச்சிதமாக நடித்திருக்கிறார்
வில்லன் சாமியாராக சூர்யமோகன் மிரட்டி இருக்கிறார்.
தீபக் கிங்க்ராணி திரைக்கதை அமைக்க அபூர்வ சிங்க் கார்க்கி இயக்கி இருக்கிறார். கோர்ட் சீன்களில் லைட்டிங் பிரமாதம் அர்ஜூன் குக்ரேதிதான் ஒளிப்பதிவு சங்கீத் சித்தார்த் ராய் பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார் எடிட்டர் சுமீத் கோடியன் 132 நிம்டங்கள் டியூரேஷன் வரும்படி கச்சிதமாக ட்ரிம் செய்து இருக்கிறார்
குடும்பத்துடன் பார்க்கும்படி கண்ணியமாக காட்சிகள் நகர்கிறது .ஜீ 5 ஓடிடி யில் காணக்கிடைக்கிறது
சபாஷ் டைரக்டர்
1 பாதிக்கப்பட்ட பெண் மைனர் இல்லை , மேஜர் என பொய்யான டாக்குமெண்ட் ரெடி செய்யும் சாமியார் தரப்பு வக்கீல் நாயகனிடம் நோஸ்கட் வாங்கும் காட்சி கலக்கல் ரகம். ஸ்கூல் பிரின்சிபால் மேடமை உசுப்பேற்றிஅவர் வாயாலேயே உண்மையை வர வைத்த காட்சி கிளாசிக்
2 கோர்ட் வாசலிலேயே சாமியாருக்கு எதிராக சாட்சி சொன்ன ஆள் கொலை செய்யப்படும் காட்சி ப்டமாக்கப்பட்ட விதம்
3 மைனர் பெண்ணை கேள்விகளால் துளைத்தெடுக்கும் வக்கீலுக்குப்பாடம் ப்கட்டும் விதமாக நாயகன் ஜட்ஜையே குறுக்குக்கேள்வி கேட்டு மடக்கும் காட்சி
4 க்ளைமாக்சில் ராவணன் - சிவன் கதையை சொல்லி சாதா மனிதன் செய்யும் தப்பை விட சாமியார் செய்யும் தப்பு எவ்வளவு கொடுமையானது என்பதை விவரிக்கும் இடம்
ரசித்த வசனங்கள்
1 உண்மையான குரு பக்தி என்பது குருவை முழுமையாக நம்பி தன்னை ஒப்படைப்பது
2 வக்கீல்சார் , உங்க ஃபீஸ் எவ்ளோ?
பாதிக்கப்ட்ட பொண்ணோட சிரிப்பு
3 போக்சோ சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண் மைனர் எனில் குற்றவாளி அந்தப்பெண்ணின் அந்தரங்கப்பகுதியை தொட்டாலே அது ரேப் என்றே கருதப்படும்
4 உன் உண்மையான எதிரி உன் பயம் தான்.பதட்டம்தான்
5 மக்கள் அந்த சாமியாரை தெய்வமா மதிக்கறாங்க , அவரையே நீ உள்ளே தள்ளிட்டே, அதான் உன்னை விரோதியாப்பார்க்கறாங்க . இது உனக்குப்பெருமைதான்
6 உலாக்த்துல அவருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ் இருக்காங்க , சாமியார் ஹாஸ்பிடல்ஸ் கட்டி இருக்கார் , ஸ்கூல் கட்டி இருக்கார்
இதெல்லாம் கட்டினா ரேப் பண்ணலாம்னு அர்த்தமா?
7 வாழ்க்கைல கஷ்டங்கள் வரும்போது பயந்து ஓடுபவன் கோழை ,
வீரனாக இருப்பதுதான் நமது வேலை
முள்ளும் சேர்ந்ததுதான் ரோஜா ,
தைரியம் இருந்தால் நாம்தான் ராஜா
8 இந்தௌலகத்துல எல்லாப்பெண்களும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பிசிக்கலாவோ, மெண்ட்டலாவோ அப்யூஸ் பண்ணப்பட்டிருக்காங்க
9 ராவண்ன் சீதையைக்கடத்தும்போது ராவணனாப்போய்க்கடத்தி இருந்தால் அவனை மன்னித்திருக்கலாம், ஆனால் அவன் ஒரு முனிவர் வேடத்தில் போய் கடத்தி இருக்கிறான்/ இதனால் முனிவர்களுக்குப்பெரிய பேர் இழப்பு , இதே மாதிரி தான் சாமியார் கதையும் ..
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் வக்கீல் நாயகியின் வீட்டுக்கு வெளியே வாசலிலேயே பார்ட்டியிடம் டீல் பேசுவது , ஒரு கோடிக்கு ஒத்துக்க முடியாது , 10 கோடி கேட்கலாம் என சொல்வதெல்லாம் நம்பும்படி இல்லை . ஒரு லாயர் இவ்வளவு மடத்தனமாக பப்ளிக்காக பேச மாட்டார். நான் அப்றம் கால் பண்றேன் என சொல்லி இருக்கலாம், அல்லது மெசேஜ் அனுப்பி இருக்கலாம்
2 பொதுவாக சாமியார்கள் பெண்ணுக்கு மயக்க மருந்து. அல்லது போதை மருந்து கொடுத்துத்தான் ரேப் செய்வது வழக்கம், ஆனால் பெண்ணின் பெற்றோர்கள் வெளியே இருக்க பெண்ணை உள்ளே வரச்சொல்லி ரேப் செய்வது ரொம்ப ரொம்ப ரிஸ்க் , எப்படி அந்த முட்டாள் சாமியார் வாண்டடடா சிக்கினார் ?
3 வில்லனான சாமியார் தரப்பு வக்கீல் வாதம் சிறப்பாக இல்லை , பெயில் எடுக்க முனைவது , மைனர் பெண்ணை மேஜர் என பொய்யாக நிரூபிக்க முனைவது ஆகிய இரண்டில் மட்டுமே கான்செண்ட்ரேஷன் செய்திருக்கிறர்கள் , மெயின் கேசில் வில்லனின் சார்பாக சரியாக வாதிட வில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கோர்ட் ரூம் டிராமா ரசிகர்கள் கொண்டாடும் படம் , பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம் ரேட்டிங் 3.25 / 5