வாரா வாரம் ஞாயிறு அன்று கலைஞர் டி வி ல காலை 10.30 மணிக்கு 3 குறும்படங்கள் ஒளிப்பரப்பறாங்க.. மிஸ் பண்ணாம பாருங்க..
இந்த வாரம் நடுவர்களா இயக்குநர் விக்ரமன், மைனா இயக்குநர் பிரபு சாலமன்..
பிரபு சாலமன்... -. எங்களுக்கு நாளைய இயக்குநர் மாதிரி ஒரு பிளாட் கிடைச்சிருந்தா 12 வருஷங்கள் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்.என்னோட அடுத்த படம் கும்கி. அதாவது பயிற்சி கொடுக்கப்பட்ட யானைகள் வாழ்க்கை பற்றி. பின்னணில ஒரு காதல் கதை .. கிராமத்துல நடக்கும் பிரச்சனைகள்.. இப்படி போகும்..
விக்ரமன் - இந்த வாரம் டாபிக் போலீஸ் ஸ்டோரிஸ், சயின்ஸ் ஃபிக்சன்
1. இயக்குநர் பெயர் - பாரதி பாலா , குறும்படத்தின் பெயர் - சத்தியப்பிரமாணம்
1960 களில் வந்த பழைய படங்களை கிண்டல் பண்ற மாதிரியும், புதிய தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு ஞாபகமூட்டலுமா இந்தப்படம் எடுத்திருக்காரு.. பின்னணி இசை , உடை வடிவமைபு, உடல் மொழி, வசனம் எல்லாமே அப்படியே அந்தக்காலம்.. ஐ திங்க்.... இதுதான் முதல் பழைய கால பிரதிபலிப்பு முதல் குறும் படம்./.
போலீஸ் உயர் அதிகாரி அண்ணன் தம்பி 2 பேரையும் கூப்பிட்டு ஒரு பொறுப்பை ஒப்படைக்குது.. அவங்க 2 பேரும் போலீஸ் தான்.. ஒரு கடத்தல் கும்பலை பிடிக்கும் வேலை..
இப்போ ஒரு ஃபிளாஸ்பேக்.. ஸ்கூல்ல படிக்கும்போதே டீச்சர் “ நீங்க என்னவாகனும்னு ஆசைப்படறீங்கன்னு கேட்டப்பவே 2 பேரும் ஒரே மாதிரி போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்டவங்க,..
பழைய பட சஸ்பென்ஸ் மாதிரியே அண்ணன் தம்பி ராமு- குமார்ல ராமுதான் வில்லன்.. ஆனாலும் அவனை பிடிச்சு போலீஸ்ல ஒப்படைக்கறதுதான் கதை..
மேலோட்டமா பார்த்தா அல்லது எழுத்து வடிவில் இதை படிக்கும்போது அரைச்ச மாவுதானே என்ர சலிப்பு வரும்.. ஆனாலும் இந்த 8 நிமிட குறும்படத்துக்காக எடுத்துக்கொண்ட உழைப்பு அதிகம்..
ஆனாலும் உழைப்பு அதிகம் என்பதற்காக யாரும் படங்களை ரசிப்பதில்லை.. அப்படி ரசிச்சிருந்தா கமல் ஹாசன் ரஜினியை பீட் பண்ணி இருப்பாரே?
விக்ரமன் கமெண்ட் பண்றப்போ “ ஸ்பூஃப் ட்ரை பண்ணி இருக்கீங்க. ஆனா அதிகம் ஒர்க் அவுட் ஆகலை.. 1960 டூ 75 அப்படியே கண் முன்னால் நிறுத்தினீங்க அப்டினு பாராட்னாரு..
சாலமன் - ஈஸ்ட்மென் கலர், டைட்டில் டிசைன், பின்னணி இசை எல்லாம் அபாரம்.. ஏன்னா அந்தக்காலத்துல ஈஸ்ட்மென் கலர்ல படம் எடுக்கறது அபூர்வம்.. அதனால அதை பெருமையா டைட்டில்ல போட்டுக்குவாங்க , அதைக்கூட மிஸ் பண்ணாம கரெக்டா நோட் பண்ணி டைட்டில்ல யூஸ் பண்ணி இருக்கீங்க.. குட்.. நேர்த்தியான, உண்மையான உழைப்பு..
ஒளிப்பதிவுக்கு பரிசு வாங்குச்சு..
2,இயக்குநர் பெயர் -ஸ்ரீகணேஷ் , குறும்படத்தின் பெயர் - ஒரு கோப்பை தேநீர்
எஸ் ராம கிருஷ்ணனின் சிறுகதையை பேஸ் பண்ணி மகேந்திரன் பாணில அழகிய படம்..
ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு கைதி .. 2 பேரும் லேடீஸ்.. கோர்ட்டுக்கு போற வழில அவங்களுக்கு இடையில் நடக்கும் சம்பாஷனைகள் தான் படம்..
படத்தோட கதைப்போக்கு அன்பே சிவம் டைப் தான்.. அதாவது மாறுபட்ட 2 கேரக்டர்களை வெச்சு இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கருத்தை மக்களுக்கு சொல்வது ..
கைதி சின்ன விஷயத்துக்காக திருடி மாட்டிக்கறா.. அவளை கோர்ட்ல ஒப்படைக்க லேடி போலீஸ் கூட்டிட்டு போறாங்க,.,. அவங்க அன் மேரீடு.. வழில அவங்க மாமா கிட்டே பேசும்போது அந்த மேட்டர் தெரிய வருது.. போலீஸ்னாலே மாப்பிள்ளைங்க பயப்படறாங்க. அதனால லேடி போலீஸ்க்கு வருத்தம்..
இதுல என்ன காண்ட்ரவர்சின்னா போலீஸ் வேலைல இருந்தும் அந்த லேடி டென்ஷனா இருக்காங்க, கைதியா இருந்தும் அந்த லேடி ஜாலியா , எதைப்பற்றியும் கவலை இல்லாம இருக்காங்க.. வழி பூரா தொண தொணனு பேசிட்டே வர்றா..
திடீர்னு அந்த லேடிக்கு மென்சஸ் ஆகிடுது. போலீஸ் கிட்டே மெடிக்கல் ஷாப்ல நாப்கின் வாங்கித்தாங்கனு கேட்கறா.. போலீஸும் வாங்கித்தருது.. இதே ஒரு ஆண் போலீஸா இருந்தா கிண்டல் தான் பண்ணுவாங்க.. ஒரு பொண்ணா இருப்பதால் தான் வலி உங்களுக்கும் தெரியுதுன்னு சொல்லி படத்தை செண்ட்டிமெண்ட்டா முடிக்கறாங்க
இதுல முக்கியமான 2 கேரக்டர் நடிப்பும் கிளாஸ்.. போலீஸா வரும் நடிகை முகத்தில் கவலைச்சுருக்கங்கள் அப்படியே கண் முன் ... கைதியின் தெனாவெட்டுப்பேச்சு கலக்கல்..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. கில்மா லேடி - போற வர்றவங்க எல்லாம் யூஸ் பண்ண நான் என்ன குப்பைத்தொட்டியா?
2. இங்கே பாருங்க மேடம், போலீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்கன்னா ஒரே பார்வை தான் ( எவன் சொன்னது? யூனிஃபார்ம்ல இருந்தா பம்முவோம் ஹி ஹி )
3. சாஃப்ட்வேர் கம்ப்பெனில ஒர்க் பண்றவன் எதுக்கு போலீஸ் லேடி மேரேஜ் பண்ணனும்னு இருக்கு? அவனுக்கு தோசை சுட்டுப்போடும் மனைவி போதாதா?
4. போலீஸ் - யார்டி அவன், உனக்கு ஹாய் சொல்லிட்டுப்போறான்?
சும்மா. இப்போ ஜெயிலுக்கு போனா வெளில வர எப்படியும் 6 மாசம் ஆகும்.. அதான் அனுபவிக்கலாம்னு..
5. லீஸா இருந்தாலும், திருடியா இருந்தாலும் பெண்களுக்கு இந்த மாதாந்திர வலி பொதுவானது.. எல்லாருக்கும் வலிக்கும்.
6. நான் 1 கேட்பேன், பதில் சொல்லு.. நீ ஏன் திருடி ஆனே?
நீங்க ஏன் போலீஸ் ஆனீங்க?
7. உங்களை அக்கான்னு கூப்பிடவா?
வேணாம்..
சரி ஏட்டம்மான்னு கூப்பிட்டுக்கறேன்..
ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் நல்லா இருந்தது..
சாலமன் - டைட்டில் சரி இல்லை, இன்னும் கிரிப்பா வெச்சிருக்கலாம் ( எப்படி? ஸ்ட்ராங்க் டீ 1 அப்டின்னா? )
விக்ரமன் - மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்துல ஒரு தீம் மியூசிக் வரும்.. படம் முடிஞ்ச பின்னாலும் நம்ம மனசுல தங்கும் இசை அது.. அதே மாதிரி இந்தப்பட தீம் மியூசிக்கும் இருந்துச்சு வெல்டன்.
இந்தப்படம் இந்த வாரத்தின் சிறந்த படமா செலக்ட் ஆச்சு. சிறந்த நடிப்புக்கு 2 ஹீரோயின்ஸ்க்கும் கிடைச்சுது
3. இயக்குநர் பெயர் -செந்தில் , குறும்படத்தின் பெயர் -ரெட்டைக்குழல்
ரிட்டயர் ஆகப்போகும் ஒரு போலீஸ்காரரின் கடைசி பணி நாள் தான் கதை..
எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை..அப்டின்னு மனைவி புலம்பறாங்க.. பொதுவா இந்த சம்சாரங்களே புலம்பல் பார்ட்டிங்க தான்.. போலீஸ்காரர் ஸ்டேஷன் போறாரு./..அவரோட துப்பாக்கியை மிஸ் பண்ணிடறாரு.. கடைசி நாள் எல்லாம் ஒப்படைக்கனும்
யார் எடுத்திருப்பாங்க? அவர் லிஸ்ட் அவுட் பண்ணி பார்க்கறார்.. அவரோட எதிரிகள் யார் எல்லாம் இருக்காங்க.? சமீபத்திய கேஸ்கள்ல மாட்டுனது யார்? ஒவ்வொருவரா விசாரனை பண்றாரு.. யாரும் எடுக்கலை..
கடைசில பார்த்தா ஒரு லேடி கான்ஸ்டபிளே அதை எடுத்து ஒளிச்சு வெச்சு அதுவே கண்டு பிடிச்சுத்தர்ற மாதிரி ஷோ காட்டி நல்ல பேர் வாங்குது.. என்ன ட்விஸ்ட்னா அவர் பையன் இந்த லேடியை லவ்விங்க். மாமனார்ட்ட நல்ல பேர் எடுக்க இப்படி ஒரு டிராமா...
மலைக்கிராமம் அப்படியே கண் முன் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்..
லாஜிக் மிஸ்டேக்கா சாலமன் சொன்னது -நானும் சினி இண்டஸ்ட்ரில பல தடைகளை தாண்டி வந்ததால உங்க மனசை புண்படுத்த விரும்பலை, அதனால . சில குறைகளை சாஃப்ட்டா சொல்றேன்.
1. ஒரு ரைபிளை இப்படி அசால்ட்டா ஒரு போலீஸ் வெச்சுட்டு போக மாட்டார். அதை வைக்க ஒரு லாக்கர் இருக்கு.. அதுல தான் வைப்பாங்க
2. துப்பாக்கியை காணோம்னா ஒரு பதட்டம், பரபரப்பு வேணும்.. எதையும் அந்த போலீஸ் காட்டலை. மெத்தனமா இருந்தா பார்க்கும் ஆடியன்ஸ்க்கு மட்டும் எப்படி ஒரு ஆர்வம் வரும் ?
பாராட்டு பெறும் வசனங்கள்
1. என் 33 வருஷ சர்வீசை வெறும் 7 மணி நேரம் மாத்திடும் போல இருக்கே?
2. எல்லாரும் 5 வருஷத்துல அமோகமா சம்பாதிச்சு செட்டில் ஆகறாங்க.. ஆனா 58 வயசு வரை வேலை பார்த்தும் உருப்படியா ஒண்ணும் சேர்த்து வைக்கலை.
நிகழ்ச்சித்தொகுப்பாளர் கீர்த்தி கிட்டே ஒரு முன்னேற்றம்.. முதல்ல எல்லாம் ரொம்ப கேவலமான நைட்டியை போட்டுட்டு வருவார்.. இப்போ கொஞ்சம் டீசண்ட்டா நைட் கவுன் போட்டுட்டு வர்றார்.. ( ஒரு வேளை ஷூட்டிங்க் நைட்ல நடக்கறதால மேட்சுக்கு மேட்சா நைட் டிரஸ்ல வர்றாரோ?)