ஒரு டப்பா படத்துக்கு போறது கூட பெரிய விஷயம் இல்லை.(பின்னே நமீதாதான்.. பெரிய விஷயமா?)ஆஃபீஸ்ல எப்படி கட் அடிக்கறதும் கூட பழகிடுச்சு.( 7 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஹி ஹி ) தியேட்டர்ல 2 மணி நேரம் பொறுமையா உக்காந்திருக்கறது கூட ஓக்கே.. (பக்கத்து சீட்ல கள்ளக்காதல் ஜோடி #ஓசி சீன் கேலரி)ஆனா படத்துக்கு விமர்சனம் போட்ட பிறகு வருது பாருங்க கேள்விகள்.. அதை சமாளிக்க முடியல... (சம்சாரத்தைக்கூட சமாளிச்சடலாம் போல இருக்கு)
சார்.. இந்தப்படம் ரிலீஸ் ஆச்சா?
உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி குப்பை படம் எல்லாம் கண்ணுக்கு தெரியுது?
ஏன் உங்க டைமை வேஸ்ட் பண்றீங்க?
இப்படி கேள்விகளா வருது....
ஷெரீன் நடிச்ச படம். ஸ்டில்ஸ் எல்லாம் கொஞ்சம் கிளாமரா இருந்தது.. அதனால ஒரு நப்பாசைல ( நப்பாசையா?”சீப்”பாசையா?) போனேன்னு அவங்க கிட்டே சொல்ல முடியுமா? ( அதான் இப்போ சொல்லீட்டியே?)#தவளை
ஷெரீன் ஒரு பேட்டில சொன்னாங்க.. இந்தப்படத்துக்கு பாதி சம்பளம் தான் தந்தாங்கன்னு.. நியாயமாப்பார்த்தா பாப்பாவுக்கு கால்வாசி சம்பளம் தான் குடுத்திருக்கனும்.(வெறும் காலை மட்டும் தான் காமிச்சாங்க அப்போ கால்வாசி ஹி ஹி )
பாப்பா பாதிலயே தகராறு பண்ணிட்டு போயிடுச்சு போல.. வேற ஹீரோயினைப்போட்டு ஒப்பேத்திட்டு கடுப்பைக்கிளப்பறார் யுவர் ஆனர்.
படத்தோட கதை என்ன? (பெரிய உலகப்பட விழாப்படம்..?)ஒரு ஊர்ல ஒரு தாதா - காதல் தண்டபாணி. அவரை எதிர்த்தா அவங்க குடும்பமே க்ளோஸ்.அப்படிப்பட்ட அழகிரி மாதிரி தாதா.அவரையே ஒரு அப்பாவி ( வேற யாரு நம்ம ஹீரோ தான் ) போட்டுத்தள்ளிடறான். இப்போ ஊர் அவன் கட்டுப்பாட்டுல வருது..தாதாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ள க்ளைமாக்ஸில் என்ன நடக்குதுங்கறதை தில் இருக்கறவங்க கடைசி வரை உக்காந்து பாருங்க.. ஹி ஹி .. ( எனக்கு தில் இல்லாததாலும்,ஆஃபீஸ்ல இருந்து அவசர அழைப்பு வந்ததாலும் பாதிலயே கிளம்பிட்டேன். அப்பாடா.. தப்பிச்சேண்டா சாமி.. )
ஹீரோ பஞ்சு மிட்டாய்க்கே வழி இல்லாத பரதேசி ,மாதிரி இருக்கான்.அவனை ஒரு அய்யர் ஆத்துப்பொண்ணு கண்ணை மூடிக்கிட்டு லவ் பண்ணுது..
( கண்ணை திறந்து அந்த முகத்தை பார்த்தா லவ் வராது.. வாமிட் தான் வரும்) ஷெரின் தான் அந்த அய்யர் ஃபிகர்.. ஒரு டூயட் பாடி முடிச்சுட்டு பாப்பா எஸ்கேப். கால்ஷீட் பிரச்சனை போல.. புரொடியூசர் கவலையே படலையே.. சம்பந்தமே இல்லாம இன்னொரு ஃபிகரை ஹீரோயின் ஆக்கி அந்த ஷெரின் பாப்பாவை அம்போன்னு விட்டுட்டாங்க..(ஃபிளாஸ்பேக்ல இதுக்கு ஒரு கேவலமான சமாளிப்பு வேற..)
கேவலமான இந்தப்படத்துல வந்த படு கேவலமான வசனங்கள் - காமெடி கும்மி
1. ஹீரோயின் -நீங்க என்னை தப்பா நினைக்கக்கூடாது.எங்க கொள்ளுத்தாத்தாவுக்கு திதி.. 7 பரதேசிகளுக்கு அன்னதானம் பண்ணனும். 6 பேர்தான் சிக்குனாங்க.. அதான் உங்களை சாப்பிட வர சொல்லிட்டேன்..
( சரி விடம்மா,, பொண்ணுங்கன்னாலே இப்படித்தான்.. நல்ல பசங்களை காய விடுவீங்க..பரதேசியை லவ் பண்ணுவீங்க..)
2. ஹீரோயின் தோழி - ஏய்.. உன் டண்டணக்கா வந்திருக்காண்டி.. ( காதலன் என்பதற்கு இப்படி ஒரு கேவலமான புதுமை(!!!) பெயரா.. அய்யகோ.. )
3. நாளைல இருந்து நீ பாவாடை சட்டை போடாதேம்மா..
ஏன் பாட்டி?
ஆடி மாசம் தொடங்குது... ஆடிக்காத்து அம்மியையே தூக்கும்னு சும்மாவா சொல்லி வெச்சாங்க.... ( இந்த சீன்ல ஆத்தாடி பாவாடை காத்தாட. பாட்டின் ரீ மிக்ஸ் பாட்டு போட்டு கடுப்பேத்துவாங்கனு எக்ஸ்பெக்ட்டட். பட் நாட் டன்)
4. ஏம்மா.. அக்ரஹாரத்துப்பொண்ணு ஆட்டோ டிரைவர் பின்னால ஓடிப்போறது நல்லாவா இருக்கு?.. ( அப்போ லாரி டிரைவர்னா ஓக்கேவா?)
5. கில்மா லேடி - யோவ்.. அப்படி என் கிட்டே என்ன இருக்குன்னு விழுந்து கிடக்கே..?
வில்லன் - உன் கிட்டே நான் என் அம்மாவை பார்க்கறேன்..
கில்மா லேடி -நான் நல்ல பொண்ணுன்னா ஓக்கே.. நானே அந்த மாதிரி பொண்ணு..
வில்லன் - எங்கம்மாவும் உன்னை மாதிரி தான்..
(அடிங்கொய்யால.. குடும்பமே தெள்ளவேரிக்குடும்பம் போல.. பஞ்சணைல படுத்துக்கிட்டு பஞ்ச் டயலாக் பேசு து பாரு.. )
6. என் பொண்டாட்டிக்கு கார் ஓட்டக்கத்துக்குடுத்தது யாரு?
நான் தாங்க...
யோவ்.. அவ பாட்டுக்கு தூக்கத்துல ஃபர்ஸ்ட் கீர், செகண்ட் கீர், தார்டு கீர்னு புலம்பிட்டே இருக்கா.. கனவுல.. இனிமே நீ அவளுக்கு கார் ஓட்டக்கத்துக்குடுத்தே..?
( பார்த்து.. உங்க பொண்டாட்டியையும் ஓட்டிட்டு போயிடப்போறாப்ல..?)
படத்துல கதை, திரைக்கதை,வசனம் தான் ஊத்திக்கிச்சுன்னா பாடல்கள் செம மோசம்.சாம்ப்பிள் லைன் - வட்ட நிலவே வட்ட நிலவே யுத்தம் செய்ய வா.. நித்தம் செய்ய வா.. ( தினமும் அதே வேலையா இருந்தா பாடை தான் செய்யனும் அவனைத்தூக்கிட்டு போக.. )
தீக்கோழி தீக்கோழி தீப்புடிச்சா அந்த இடம் தித்திக்குதடி.. ( அட நாயே.. நெருப்புக்காயம் பட்டா உடனே ஹாஸ்பிடல் போகனும்.. )
படத்துக்கு ரீ ரிக்கார்டிங்க்,இசை, ஒளிப்பதிவு எல்லாம் படு மோசம்..
காது வலி தாங்கலை.. அய்யோ அம்மா டமால் டுமீல்.. ஒரே களேபரம்..
இந்தப்படம் எத்தனை நாள் ஓடும்னா அது மகா கேவலம்.. எத்தனை காட்சிகள் ஓடும்னு கேட்கனும். 10 காட்சிகள் ஓடலாம் எல்லா செண்ட்டர்லயும்..
ஆனந்த விகடனில் இந்தப்படத்துக்கு எல்லாம் விமர்சனம் போடனும்னு அவங்களுக்கு தலை எழுத்தா என்ன?மீறிப்போட்டா மார்க் - 32
குமுதம் ரேங்க்கிங்க் - ம்ஹூம் மோசம்
டிஸ்கி - 2வது ,3 வது ஸ்டில் பார்த்து யாரும் குழம்ப வேணாம்.. ஹீரோ டாக்டராம்.ஷெரீனுக்கு அல்சர் இருக்கா?ன்னு செக் பண்றார். ஹி ஹி
டிஸ்கி - 2வது ,3 வது ஸ்டில் பார்த்து யாரும் குழம்ப வேணாம்.. ஹீரோ டாக்டராம்.ஷெரீனுக்கு அல்சர் இருக்கா?ன்னு செக் பண்றார். ஹி ஹி