முதல் பாகத்துல என்ன நடந்ததுனு ஒரு கிளான்ஸ் பார்த்துடுவோம். ஹீரோயின் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிள் ., அண்டர் கவர் ஆபரேஷன் மூலம் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் இருக்க்ற இடத்துக்கு போக அவருக்கு பயிற்சி தரப்படுது . வில்லனின் நம்பிக்கையை அவர் பெற்று அங்கே ஊடுருவுகிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
மாணிக்கமா இருக்கும் ஹீரோயின் மாணிக் பாட்ஷாவா எப்படி மாறுகிறார் என்பதுதான் இரண்டாம் பாகம் . முதல் பாகம் மாதிரி இதுவும் 7 எபிசோடு.ஆனா முதல் பாகத்தை விட இது நீளம் அதிகம். முதல் பாகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இதை ஜவ்விழுப்பு இழுத்திருங்க என நிர்வாகம் சொல்லி இருக்கும் போல
ஹீரோயின் வில்லனோட இடத்துக்கு அடிக்கடி போவதும் அங்கே இருந்து போலிஸ்க்கு த்கவல் கொடுப்பதும் நடக்குது. இப்போ வில்லனுக்கும் ஹீரோயின் மேல டவுட் வருது போலீஸ் டிபார்ட்மெண்ட்க்கும் ஹீரோயின் மேல டவுட் வருது. இந்த ரெண்டு சைடுல இருந்தும் ஹிரோயின் எப்படி பேலன்ஸ் பண்ணாங்க ? ஹிரோயின் நம்பகத்தன்மையை சோதிக்க ஹீரோய்னோட லவ்வரையும் தங்கையையும் கொலை பண்ணச்சொல்லி வில்லன் சொல்வதை ஹீரோயின் கேட்டாரா? என்பதும் க்ளைமாக்ஸ்ல என்ன ட்விஸ்ட் என்பதற்கும் இதில் விடை இருக்கு
சபாஷ் டைரக்டர்(கள்)
1 ஹீரோயின் தன் தங்கையின் காதலனை தன் வசப்படுத்துவது பின் தங்கையை அடித்தவனை அவன் இடத்துக்கு போய் மிரட்டுவது என் அப்ளாஸ் அள்ளும் காட்சிகள் அமைத்ததற்கு ஒரு சபாஷ்
2 ஹீரோயினின் கணவன் கோர்ட்டில் சொன்ன பொய்யான குற்றச்சாட்டுக்கு மறுப்புத்தெரிவிக்கும் வகையில் ஒரு ஆதாரம் கிடைத்ததும் உடனே கணவன் வீட்டுக்கே போய் அதிரடி காட்டுவது பலே சீன்
3 தனக்கு ட்ரெயினிங் குடுத்த போலீஸ் ஆஃபீசருக்கே சவால் விடுவது அவர் மிரட்டும்போது பஞ்ச் டயலாக் பேசுவது ரசிக்கும்படியும் நம்பும்படியும் இருக்கு
ரசித்த வசனங்கள்:
1 ஃபோர்ஸ் பண்ணினா ட்ரஸ்ட் போய்டும்
2 கற்பு மூளைல இருக்கு உடம்புல இல்லை
3 ஒரு பொண்ணு ஒரு பையன் கிட்டே மட்டும்தான் இருக்கனும்னு அவசியம் இல்லைனு ரூல்ஸ் கொண்டு வந்துட்டா நாட்டுல பல க்ரைம்கள் பிரச்சனைகள் தீர்ந்துடும்
4 ஒரு குடும்பத்துல ஆண் துணை மட்டும் இல்லாம போச்சுன்னா என்ன வேணா நடக்கும் ?
5 எனக்குள்ளே இருக்கும் குழ்ந்தையும், உனக்குள்ளே இருக்கும் குழ்ந்தையும், சந்தோஷமா இருக்காங்க அவங்க ரெண்டு பேரும் சந்திக்கறப்ப ஹேப்பியாகிடறாங்க
6 யாரை நாம வெறுக்கிறமோ அவங்களைக்கொல்றது யார் வேணா செய்யலாம் ஆனா யாரை நாம் அளவுக்கதிகமா நேசிக்கறமோ அவங்களைக்கொல்வதில்தான் மன உறுதி இருக்கு
7 250 கோடியை ஒரே மூச்சா பார்த்திருக்கியா?
ம்க்கும் 2500 ரூபா கூட ஒட்டுக்கா பர்த்ததில்லை
8` பண விஷயத்துல வெட்கப்படக்கூடாது
9 உன்னை மாதிரி நல்லவன் என்னை மாதிரி கெட்டவன் இவங்களால ஆபத்து இல்லை நடுவுல இருக்கான் பாரு நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை அவனாலதான் ஆபத்து
10 யார் முன்னாடி நின்னா குலைச்சா பயப்படுவாங்களோ அவங்க முன்னால தான் குலைக்கனும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லனை யாரும் நேர்ல பார்த்ததே இல்லை போலிஸ் டிபார்ட்மெண்ட்ல அவன் ஃபோட்டோ இல்லை அப்போ ஹீரோயினுக்கு வில்லன் ஃபோட்டோ வாட்சப் பண்ணுனு ஆர்டர் பண்ணனுமே போலிஸ்? ப்ண்ணவே இல்லையே? வீல்லன் வீடல் ஹால்ல மாட்டி இருக்கும் மேப்பை எல்லாம் ஃபோட்டோ எடுத்து அனுப்புது வில்லன் தூங்கறப்ப ஃபோட்டோ எடுக்க முடியாதா?
2 அவ்ளோ பெரிய தாதா வீட்டில் சிசிடிவி கேமரா இருக்காதா? ஹீரோயின் இஷ்டத்துக்கு ஃபோட்டோ எடுக்குது ? வில்லன் டபுள் கேம் ஆடறான் என்பதால்தான் என்றாலும் போலீஸ்க்கு அந்த விஷயத்தில் டவுட் வராதா>
3 ஹீரோயினுக்கு ட்ரெயினிங் கொடுத்த போலீஸ் ஆஃபீசர் ஃபெர்னாண்டஸ் குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனது ஏன்? அவருக்கு டி ப்ரமோஷன் ஏன் தந்தாங்க ? திடீர்னு ட்யுட்டில பழையபடி ஜாயின் பண்றது எப்படி ? 3 வது பாகத்துல விடை இருக்குமோ?
4 சந்திரமுகில கங்கா ச்ந்திரமுகியா தன்னை நினைச்சா சந்த்ர முகியாவே மாறிட்டா என டயலாக் வருமே அது மாதிரி ஹீரோயின் கேரக்டர் ஸ்கெட்ச் புரியாத புதிரா இருக்கு . மேரேஜ் ஆன ஆளோட தொடர்பு , தஙகையின் காதலன் கூட தொடர்பு வில்லன் கூட தொடர்பு போலீஸ் அஃபிச்ர் ஃபெர்னாண்டஸ் மேல அன்பு என அவர் பாட்டுக்கு ஸ்கோர் ஏத்திக்கிட்டே போறாரே?
5 ஹீரோயினுக்கு போலீஸ் இலாகாவில் தரப்படும் விருது வாங்கும் நிகழ்வுக்கு ஹீரோயின் ஏன் வர்லை அதுக்கு அவர் சொல்ற காரணம் நம்பும்படியா இல்லையே?
6 வில்லன் ஹீரோயின் ஃபோன் மூலமா எல்லாத்தையும் ரெக்கார்டு பண்றான்கறதை போலீசால ஏன் கண்டு பிடிக்க முடியலை ? இந்த மாதிரி அண்டர் கவர் ஆஃபீசர் வந்ததும் அவங்களை தரோவா செக் பண்ணுவாங்களே??
7 ஆண்மை இல்லாத ஒருவர் எதுக்காக அடிகக்டி காசு கொடுத்து விலைமகள்களிடம் போய் அவமானப்படுகிறார்? இவரா தான் தன்னைக்காட்டிக்கொடுத்துக்கறார்
8 ஹீரோயினின் தங்கையோட காதலன் தனக்கு ஹீரோயின் கூட் தொடர்பு இருந்தது என்பதை அவனே ஏன் உளறி மாட்டிக்கறான்> ஆம்ப்ளைங்க அவ்ளோ தத்தியா?
சி பிஎ ஸ் ஃபைனல் கமெண்ட் - சுவராஸ்யமாதான் இருக்கு பார்க்கலாம் ஆங்காங்கே அடல்ட் கண்ட்டெண்ட்ஸ் இருப்பதால் குழந்தைகள் சிறியவர்கள் இல்லாதப்ப பார்க்கவும் ரேட்டிங் 2.75 / 5