Showing posts with label SHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி). Show all posts
Showing posts with label SHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி). Show all posts

Monday, February 09, 2015

SHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி)

 

 சின்ன  வயசுலயே  பெரிய  சினிமா  ஹீரோ ஆகனும்கற  லட்சிய  வெறி  உள்ளவர்  ஹீரோ. ஆனா அவருக்கு  பேசும்  திறன் இல்லை. மாற்றுத்திறனாளி.அதனால    சினிமா ல  அவருக்கு  சான்ஸ்  கிடைப்பது  லட்சுமிராய்க்கொம்பா இருக்கு .அப்போதான்   ஒரு  அசிஸ்டெண்ட்  டைரக்டர்  நட்பு  கிடைக்குது.அவர்  தான்  ஹீரோயின்.(  சினிமா ல  மட்டும் எப்படியோ  ஹீரோக்கு   ஹீரோயின் டக் டக்னு மாட்டிடுது)


பெண்  நட்பு  கிடைச்சதும்  தமிழன்  அடுத்து  அந்த  நட்பை  எப்படி டெவலப்  பண்றது ?  அல்லது அந்த   பெண்ணையே எப்படி   பிக்கப்  பண்றது?னு  தான் ( பெரும்பாலும் ) யோசிப்பான். ஆனா  ஹீரோ   ஹீரோயின்  உதவியுடன்   அவருக்கு   குரல்  தர ஒரு ஆள்  ரெடி  பண்றார். 

அதாவது   வேற  ஒருவர்  குரல்  கொடுக்கும்போது   ஹீரோ வாய்  அசைச்சா  போதும் , அவரே  பேசுவது  போல்  தோற்றம்  வரும். அதுக்கு   ஸ்பெசலா   ஃபாரீன்  போய்  பொருத்திட்டு  வர்றார்.


எப்படியோ  புகழ்  பெற்ற  ஹீரோ ஆகிடறார். இப்போ ஒரு  ஈகோ /இளையராஜாவுக்கும்  , வைரமுத்துக்கும்   யார்  பெரியவர்?னு  போட்டி  பொறாமை  ஈகோ வந்தது போல்  இருவருக்கும்   இடையே   ஈகோ  மோதலில்   பிரியறாங்க .


இவங்க   2  பேரும்  சேர்ந்தாங்களா? இல்லையா? ஹீரோ  ஹீரோயினை  கரெக்ட்  பண்ணாரா?  பண்ணலையா?  இதான்  மிச்ச  மீதி  திரைக்கதை .


ஹீரோவா தமிழ்  சினிமா வின்   வி ஐ பி  தனுஷ்.வேலை  இல்லா பட்டதாரி  ஹிட் ஆனங்காட்டிதான்  இவர்  வி ஐ பி  கிடையாது. தமிழ்  சினிமா உலகின்  இரு பெரும்  சூப்பர் ஸ்டார்களான   ரஜினி, கமல்  இருவருக்கும் மாப்ளை  முறை  ஆனதால்.ஓப்பனிங் சீன்ல  இருந்தே  தன்   ஆளுமையை  அசலாட்டா  பதிவு  பண்றார்.ரொமான்சுக்கு அதிக  வாய்ப்பில்லை. மிஸ்டர்  பாரத்  மாதிரி  இரு  ஹீரோக்களுக்கு  உண்டான  கதை  என்பதால் ஹீரோயினை  கரெக்ட்  பண்ற சீன் அதிகம்  இல்லை.பாடிலேங்குவேஜ்  ,  ஃபேஸ்  எக்ஸ்பிரசன்ஸ்  எல்லாவற்றிலும்  கலக்கி   தமிழ்  சினிமா வின்  நம்பிக்கை நட்சத்திரம்  ஆகிறார்


இன்னொரு  ஹீரோவா  ஷோலே  அமிதாப்பச்சன். வயசானாலும்  காட்டுக்கு  ராஜா  யார்?னு  கேட்டா  சிங்கம்னு  தான்  சொல்வாங்க , வயசான  சிங்கம்னு சொல்ல மாட்டாங்க . கலக்கலான நடிப்பு .பல காட்சிகளில்  தனுஷ்க்கு விட்டுக்கொடுத்து  அண்டர் ப்ளே ஆக்டிங்  செய்கிறார். இதில் தான்  கமலை  விட அமிதாப்  முந்துகிறார். கமல்  திரையில்  தன் ஆளுமையை  அழுத்தமாகப்பதிவு  செய்வார். சக  நடிகர்களை  டம்மி  ஆக்கி  விடுவார். ( விதி விலக்கு - அன்பே  சிவம்  மாதவன்)
 



ஹீரோயினா  அக்சரா ஹாசன். ரொம்ப  சின்னப்பையன்  போல் ஒல்லி  உடல் வாகு . பையன்  மாதிரி  பாய்ஸ் கட்டிங். கண்கள்  அச்சு அசல் கமல்  போலவே . ஒரு கமல்  ரசிகனால்  நிம்மதியாக  சைட் அடிக்க  முடியாத   முகத்தோற்றம். உளவியல்  ரீதியாக  யோசித்தால்  நான்  சொல்வது  நிஜம்  எனப்புரியும். 

லோ  கட்  பனியனில்   வந்தாலும்  பெருசா  எந்த  பாதிப்பும்  ஏற்பட்லை . த்ரிஷாவுக்குப்போட்டியா   முதுகில்  தோள்  பட்டையில்   டாட்டு  குத்தி  இருக்கார்.  நடிப்பில் முதல்  படம் என்ற  அளவில்  பாஸ்  மார்க் . அடிப்படையில்  அக்சரா  ஒரு  உதவி இயக்குநர்  என்பதால்  அதே  கேரக்டரில் ஈசியாக  நடிக்க  முடிந்திருக்கிறது. 


 பொதுவாவே  தமிழ்ப்பெண்களின்  தர  வரிசையில்  ஒரு  குடும்பத்தில்  அக்காவை  விட   தங்கை  அழகாகத்தான் இருப்பார் . மனைவியை  விட மச்சினி அழகாக  தெரிவது  இந்த   கான்செப்டில்  தான்.ஆனா   அக்சரா  அக்கா ஸ்ருதியை விட  ஒரு  மார்க்  கம்மியா எடுத்து  [பின்  தங்கி  விடுகிறார்.


இசை ராஜா   இளையராஜா   ஹிந்தியில்  தன்  அழுத்தமான  முத்திரையைப்பதிக்கிறார். பல  காட்சியில்  பிஜி எம்  அசத்தல்   ரகம். சில  முக்கியமான   காட்சிகளில்   நடிகர் கள் தங்கள் பங்களிப்புக்குத்தயார்  ஆகும் முன்பே  இசை  நம்மை  அந்த  சூழலை  நன்கு உணர் த்தி  விடுகிறது


பா   சீனி  கும்  படங்களை  இயக்கிய   பால்கி  தான்  இந்தப்பட  இயக்குநர். 

படத்தின் முதல்  30   நிமிடங்களை  கவிதையாகப்படைத்தவர்  பின்  திரைக்கதையில்   தடுமாறி  விட்டார் . மூன்றே  கதா பாத்திரங்களை  வைத்து  கதை  சொல்ல  வெண்டிய  சூழல்  இருப்பதால்  மெலோ டிராமா போல்  காட்சிகள்  அமைத்தது   துரதிர்ஷ்டமே


ஒளிப்பதிவு  மணிரத்னத்தின்  செல்லப்பிள்ளை பி சி  ஸ்ரீ  ராம். அட்டகாசமான  ஒளிப்பதிவு . இசையும்  , ஒளிப்பதிவும் ,  இரு  கண்களாய்   அமைந்து  விட்டது .

 

மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஒவ்வொரு பெரிய ஸ்டாரும் ஒரு காலத்தில் புதுமுகமே # ஷமிதாப்



என் கிட்டே திறமையை விட ஆசை அதிகம்.ஆசை தான் ஒரு மனிதனை லட்சியத்தை நோக்கி அழைத்துச்செல்லும் #,ஷமிதாப்


யாரும் சுடுகாட்டில் போய் சாவதில்லை.செத்த பின் சுடுகாட்டுக்கு வர்றாங்க. #,ஷமிதாப்


நான் எப்பவும் இறப்புக்கே மரியாதை தருவேன்.வாழ்வதற்கோ வாழ்க்கைக்கோ தருவதை.விட.#,ஷமிதாப்


இந்த தேசத்தில் மனுசனை ஈசியா கொல்லலாம்.தப்பிச்சிடலாம்.ஆனா விலங்குகளை தொட முடியாது # ஷமிதாப் ( சல்மான் கான் அட்டாக்கிங்)


அமிதாப் = நான் விஸ்கி மாதிரி.அவன் தண்ணீர் மாதிரி.ரெண்டையும் மிக்ஸ் பண்ணினா யார் தனியா தெரிவாங்க?,நோ டவுட்.விஸ்கி தான்


7  
வாழ்க்கையில் சாதித்த உண்மையான மனிதனுக்கு யாரும் விருது தருவதில்லை #,ஷமிதாப்



உனக்கான கை தட்டல் ஒலிக்கும்போது அது உனக்கு சொர்க்கத்தில் இருந்து கேட்கும்.#,வாட் எ டயலாக்!!! ஷமிதாப்

9  
அமிதாப் =,என் குரல் உதவி இல்லைன்னா நீ முடிஞ்சிடுவே!


 தனுஷ் =,கண்ணா!,நான் முடிஞ்சேன்னா உன் குரலும் முடிஞ்சிடும்.எப்டி வசதி?,

10
அமிதாப் டூ தனுஷ் =,நீ எனக்கு ஊசி போடறியா? .உனக்கு கடப்பாறை காத்திருக்குடி.இரு



11
பாடறதுக்கு ஏன் ஒத்துக்கிட்டே? எனக்கென்னெ போச்சு? அடி விழப்போறது உனக்குத்தானே? # சமிதாப்


 12 
WHEN NORMAL MAN BECAME BIG HE BECOME AS PIG #,shamithaab (   மேஜர்  சுந்தர் ராஜன் = சாதா ஆள்  பெரிய ஆள் ஆகும்போது அவன்  ஒரு  பன்றியைப்போல்  நடந்துக்குவான்





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1
அடுத்த கமல் ,அடுத்த ரஜினி தனுஷ் ன் ஷமிதாப் ஈரோட்டில் விஎஸ் பி யில்


2
தனுஷ் ன் ஷமிதாப் செம ஹிட்டாம்.இதுவும் நல்லதுக்கே.இனி அவரு மும்பை பக்கம் போய்ட்டா கமல் நிம்மதியா இருப்பாரு # அக்சரா ஸ்ருதி


3  
ீஇளையராஜா இசை பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு ஓப்பனிங்க்லயே ஆளுமையுடன் # ஷமிதாப்


4
அம்மா இறந்துட்டா எப்டி உன் ரீ ஆக்சன் இருக்கும்?நடி ன்னதும் பின்னணி இசை தன் முழு ஆக்ரமிப்புடன் #,ராஜாடா



5
தமிழ் நாட்டில் இருந்து மும்பைக்குப்போய் ஜெயித்த 3,வது தமிழ் ஹீரோ தனுஷ் கலக்கல் நடிப்பு


6
ஒரு படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு உயிரோட்டத்தைத்தரும்? என்பதை இளையராஜா மாதிரி நிரூபித்தவர் எவரும் இல்லை


7  அக்சரா ஓப்பனிங் சீன்லயே ஸ்லீவ்லெஸ் பனியன்.கமல் போல் கண்கள் அசால்டான பாய் கட்டிங் ,ஒல்லி தேகம்

பேச்சுத்திறன் அற்ற மாற்றுத்திறனாளி யா இருக்கும் ஒரு சாதா ஆள் எப்டி சூப்பர் ஸ்டார் ஆகறார் என்பதே கதை #,ஷமிதாப்


ஸ்ருதியைப்பார்க்கும்போது இருந்த (ஓரளவு)கிளுகிளுப்பு அக்சரா கிட்டே இல்லை.கமல் கண்கள்.அப்படியே இருப்பது முதல் காரணம்.சின்னப்பையன் போல் இருப்பது  2 வது  காரணம்


10
அமிதாப்பை தனுஷ் மடக்கும் காட்சியில் அரங்கம் அதிரும் கை தட்டலுக்கு முக்கியக்காரணம் தமிழன் ஜெயிக்கிறான் என்பதே #,ஷமிதாப்


11
அமிதாப் ,தனுஷ் ,அக்சரா காம்போ சீனில் மூவர் எக்ஸ்பிரசனும் கலக்கல் ரகம்.திரையை ஆக்ரமிப்பதில் கமல் வாரிசு அப்பனுக்குப்பிள்ளை தப்பாம


12
மாஸ் படம் எதிர்பார்க்காமல் கிளாஸ் படம் பார்க்கும் மூடில் வரனும்.திரைக்கதை ஒரு நதியின் சமவெளி ஓட்டம் போல் நிதானமாய் #,ஷமிதாப்


13
அக்சரா கெட்டப் &,பாடிலேங்க்வேஜ் ஹென்றி & ஜூன்,ஹாலிவுட் பட நாயகி போல்



14 
தேறுமா?தேறாதா?என்ற விடை தெரியா கேள்வியுடன் ஷமிதாப் - இடைவேளை


15 
இடைவேளை வரை காதல் காட்சியே இல்லாதது தனுஷ்க்கு எப்டியோ எனக்கு பெரிய அதிர்ச்சி -,ஜெர்க் ஜெகன்.


16
அக்சரா டூ தனுஷ் =,சுயநலப்பன்றி( இந்த டயலாக் ஸ்ருதி சொல்லச்சொல்லி இருக்குமோ?)


17 
தனுஷின் ஆக்ரோசமான நடிப்பு ,அமிதாப் பின் அண்டர்ப்ளே ஆக்டிங் கலக்கல் காம்போ # ஷமிதாப் பின் பாதி ராக்கிங்


18
அக்சரா முதுகுல 2 டாட்டு குத்தி இருக்கு.ஏதாவது குறியீடு இருக்குமா?னு தமிழன் யோசிச்ட்டு இருக்கான்


19 
பூனம் பாண்டாவே பேச யோசிக்கும் டயலாக்கை (கில்மா ) அக்சரா அசால்ட்டா பேசுது.அதே ரத்தம்.அப்படித்தான் இருக்கும்


 

 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



அமிதாப் மாதிரி சீனியர்  முன்  தனுஷ்   மாதிரி  ஒரு  தமிழரை  அவருக்கு  இணையாக   சில இடங்களில் அவரை  ஓவர்  டேக்கும்  நடிப்பு வழங்கும்  அளவு  காட்சிகள்  வைத்தது


2  ஹீரோயின்கள் 2  பேர்  இருந்தாலும்  , டூயட் , ரொமான்ஸ்  காட்சிகளில்  அதிக  கவனம்  செலுத்தாமல்   கண்ணியம்  காட்டிய  விதம் 


3  ஃபிளாஸ் பேக்  காட்சியில்  அந்த  சின்னப்பையன்  போர்சனில் தெரியும்  அழகிரிசாமி , சுந்தர  ராமசாமி  சிறுகதையின்  நேர்த்தி



4  அமிதாப்  தனுஷ்க்கு  எதிராக  சதி  செய்து  அதை  அரங்கேற்றும்  பர பரப்பான  காட்சி  


5   அட்டகாசமான   பின்னணி  இசை ,  கண்ணைக்கவரும்  ஒளிப்பதிவு   என  டெக்னிக்கல்  அம்சங்கள் கலக்கல்  ரகம்



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   சினி ஃபீல்டில்     யாருக்குமே  தெரியாமல்  ஒரு  ஹீரோ  தன்  குரல்  ரகசியத்தைப்பாதுகாக்க  முடியுமா? எட்டாவது  மாடி  லிஃப்ட்ல  போகும்போது  ஹீரோயின்  முதுகை  யாராவது  சும்மா  சுரண்டுனாக்கூட  9 வது  மாடி  வர்றக்குள்ளே  சன் டி  வில  அந்த  நியூஸ்  சொல்லும்  காலம்  இது .எப்படி  அந்த   ரகசியம்  பராமரிக்கப்படுது?


2   ஹீரோயின்  பாத்திரப்படைப்புக்கு சம்பந்தமே  இல்லாம  அவரது  இயல்பான கேரக்டர்  படத்தின்  கேரக்டரோடு  திணிக்கப்படுதல்



3   ஹீரோ  ஒரு  பொண்ணு  கூட  கில்மா  பண்ண   ரூமுக்குப்போன  அடுத்த  நிமிசமே  அமிதாப்  அவருக்காக  கில்மா  முனகலை  தருவது  நகைப்புக்கு  உரியது. அந்த   காட்சி    ஃபேம்லியுடன்  படம்  பார்ப்பவருக்கு  தர்ம  சங்கடம்  தரலாம்


4  ஒரு  லேடி அசிஸ்டெண்ட்   டைரக்டர் இப்படித்தான்  ஸ்லீவ்லெஸ்  பனியனோட  சுத்திட்டு  இருப்பாரா? 

5  ஹீரோ -  ஹீரோயின்   இருவருக்கும்  இடையே  உள்ள அட்டாச்மெண்ட்  சரியா  சொல்லப்படலை.


6  பின்   பாதி  திரைக்கதையில்  தொய்வு  , க்ளைமாக்ஸ்  வலிய திணிக்கப்பட்ட  மென் சோகம்




சி  பி  கமெண்ட்  =
SHAMITHAB = புதிய கதைக்கரு,திரைக்கதையில் பலவீனம் .தனுஷ் கலக்கல் நடிப்பு,ராஜ இசை .ரேட்டிங் = 2.75 / 5 ராஞ்சனாவுக்குக்கீழே



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41  ( விகடனில் இதுக்கு  மார்க்  போட மாட்டாங்க. தர  ஒப்பீட்டுக்காக )


குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= ஓக்கே



 ரேட்டிங்  = 2.75 / 5



ஈரோடு  விஸ்பி யில்  படம்  பார்த்தேன்