Showing posts with label SELVARAGAVAN. Show all posts
Showing posts with label SELVARAGAVAN. Show all posts

Monday, November 11, 2013

இரண்டாம் உலகம்

ஆர்யா, அனுஷ்கா நடிப்பில், செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, பி.வி.பி சினிமாஸ் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. நவ. 22ம் தேதி வெளியாகவிருப்பதால் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் படத்தை பற்றி 'இரண்டாம் உலகம்' குழுவினரிடம் விச்சரித்தோம். மது - ரம்யா ரெண்டு பேரும் இந்த பூமியில் அழகான காதலர்கள். அவர்கள் இருவரும் இன்னொரு உலகில் மருவன் - வர்ணா என்கிற பெயரில் இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த இரண்டு பாத்திரங்களாக சந்திக்கிறார்கள், அந்த உலகத்துக்கு எப்படி போனார்கள், அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதுதான் 'இரண்டாம் உலகம்' படத்தில் செல்வராகவன் சொல்லவரும் கதை.


தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்க 'மயக்கம் என்ன' படத்தினை இயக்கினார் செல்வராகவன். அப்படத்தினைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் கையில் எடுத்த கதைத்தான் 'இரண்டாம் உலகம்'.



இப்படத்தில் தனது வேடத்திற்காக உடலமைப்பை எல்லாம் மாற்றியிருக்கிறார் ஆர்யா. அத்துடன் முதன் முறையாக இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜுடன் கூட்டணி அமைத்து புதியதொரு டீமுடன் களம் இறங்குகிறார் செல்வராகவன். ஒளிப்பதிவிற்கு மட்டும் நெருங்கிய நண்பரான ராம்ஜியை ஒப்பந்தம் செய்தார். முதலில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்ய செல்வராகவன் மற்றும் ராம்ஜி பயணம் செய்தார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் காட்டாத இடங்களைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜார்ஜியாவில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.



இதுவரை இந்திய திரையுலகில் எந்தொரு படமும் அங்கு படப்பிடிப்பு நடத்தியதில்லை. ஸ்பாட்டுக்கு போய் சேரவே சில நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவில் முக்கியமானவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சுமார் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கிய காட்சிகளை அங்கு படமாக்கிய பின் அதன் கிராபிக்ஸ் பணிகள் மும்பையில் நடந்துள்ளது.


ஜனவரி 2013ல் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லரை பார்த்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் செல்வராகவன். தெலுங்கில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், "அவதார் மாதிரியான படங்கள் இந்தியாவில் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது" என்று அவர் கூற இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



இப்படத்தின் ஒரு பாடலை உஸ்பெகிஸ்தான் நாட்டில் படமாக்கலாம் என்று விசாவிற்கு அப்ளை செய்தார்கள். ஆனால் விசா குழப்பத்தில் திரும்பி விட்டார்கள். கடைசியில் அங்கு படமாக்க இருந்த காட்சிகள் அனைத்தையுமே சென்னையில் ECR பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கி இருக்கிறார் செல்வராகவன்.



படத்தின் படப்பிடிப்பு அனைத்தையும் முடிப்பதற்குள் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதர படங்களில் பிஸியாகி விட்டார். இதனால், பின்னணி இசையை மட்டும் அனிருத் அமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்று அங்குள்ள இசை கலைஞர்களை பயன்படுத்திருக்கிறார் அனிருத்.



தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்தவுடன், சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.இப்படம் தனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அதன் சிங்கப்பூர், மலேஷியா உரிமை வாங்கியிருக்கிறார் நடிகர் ஆர்யா.


thanx - the tamil hindu

இரண்டாம் உலகம் படத்தில் நடிகை அனுஷ்கா

Friday, November 25, 2011

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்


http://viswaksena.com/wp-content/uploads/2011/10/mayakkam_enna.jpg 

புது வசந்தம் விக்ரமன் கிட்டே குடுத்துருந்தா 4 நிமிஷ பாட்டிலேயே முடிச்சிருக்கற சாதாரண கதைதான்.. நம்ம செல்வராகவன் தன்னோட திறமையை முடிஞ்சவரை  அந்த சாதா கதையை ஸ்பெஷல் சாதாவா சொல்ல முயற்சி பண்ணி இருக்கார்..

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர்.. அவரோட கனவே பெஸ்ட் ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்கறதுதான்.. ஆனா பாருங்க அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இல்ல.. திறமை இருந்தும்  அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலை.. அவரோட திறமையை யூஸ் பண்ணி வேறொரு ஆள் ஜெயிக்கறாரு.. அப்புறம் கஷ்டப்பட்டு முட்டி மோதி ஜெயிச்சு பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் அவார்டு இண்ட்டர்நேஷனல் லெவல்ல வாங்கிடறாரு.. அவ்ளவ் தான் கதை..

தல நடிச்ச முகவரி கதையை திருப்பி சுட்ட தோசை மாதிரி இருக்கேன்னு யாரும் நினைச்சுடக்கூடாதே.. அதனால சில ஜிம்மிக்ஸ் வேலையை எல்லாம் டைரக்டர் காட்றாரு.. அதாவது ஹீரோவுக்கு ஜோடி யார் தெரியுமா? போடா லூசு.. ஹீரோயின் தானே-னு அல்ப சொல்பமா கேட்றாதீங்க.. ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஃபிகரை பொண்ணு பார்க்கறாரு.. டேட்டிங்க் போலாம்னு கூப்பிடறாரு... என்னமோ தெருக்கடைசில இருக்கற பொட்டிக்கடைக்குபோலாம் வான்னு கூப்பிடற மாதிரி.... கூப்பிட்டதும்  ஹீரோயின் பயங்கர அப்பாவி போல கூடவே வந்துடுது.. 

அவன் பாப்பாவை ( அதாங்க ஹீரோயின் ) கட்டிப்பிடிக்கறான்.. அங்கே இங்கே தடவறான் ( எங்கே எங்கே-னு எல்லாம் இண்டீசண்ட்டா கேட்கக்கூடாது).. ஆனா பாப்பா அவன் கையை லைட்டா தட்டி விடறதோட சரி..  ஏன் பளார்னு அறைய வேண்டியது தானே.. ?ன்னு டைரக்டர்க்கு ஃபோன் பண்ணி கேட்டா அவர் சொல்றாரு - தம்பி.. இது அடுத்த தலை முறைக்கான கதை..  அவ்வ்வ்

அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே அவரோட ஆளை இண்ட்ரடியூஸ் பண்றார்.. கொல்லி மலை சேனைக்கிழங்கு மாதிரி இருக்கற ஹீரோயின் , நோய்ப்பூச்சி தாக்குன கரும்பு சல்லை மாதிரி இருக்கற ஹீரோவைப்பார்த்ததும் என்னமோ காணாததை கண்டது போல் பம்முது..  பாவம் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. 


http://tamil.oneindia.in/img/2011/11/15-mayakkam-enna1-300.jpg

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் லவ் ஆகிடுச்சுன்னு அந்த நண்பர்க்கு தெரிஞ்சுடுது.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையா  அவங்க 2 பேரும் கட்டிப்பிடிச்சிட்டிருக்கறதை அந்த நண்பன் பார்த்துடறார்.. இப்போதான் இடைவேளை.. ( சஸ்பென்ஸாம் அடங்கொய்யால)

போய்த்தொலையுது சனியன்னு 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாரு.. அந்த தியாக நண்பர்.. இனி கதையை எப்படி நகர்த்த? இங்கே தான் டைரக்டர் தன்னோட டேலண்ட்டை காட்றார்.. ஹீரோ மாடில இருந்து கீழே விழுந்து தலைல அடிபட்டு லைட்டா சைக்கோ ஆகிடறார்.. கொஞ்சம் மெண்டல் மாதிரி..


அவர் ஹீரோயினை கொடுமைப்படுத்த , டைரக்டர் நம்மை கொடுமைப்படுத்த உஷ் அப்பா போதும்டா சாமி.. எப்படியோ எல்லாம் சரி ஆகி க்ளைமாக்ஸ் எல்லாம் சுபம் ஹி ஹி ஹி

தனுஷ்க்கு வழக்கம் போல நல்ல வாய்ப்பு.. நடிக்க.. அண்ணன் படம் என்பதால் சிரத்தையோட நடிக்கறார்.. டான்ஸ் காட்சிகளில் மனுஷன் செம கலக்கு கலக்கறார்.. 

ஹீரோயின் ரிச்சா கங்கா பாத்பாய்.. 60 மார்க் தரலாம்.. கொஞ்சம் மீனா கொஞ்சம் சங்கவி.....சாயல்  நடிப்பு பாப்பாவுக்கு சுமாராதான் வருது.. அழுற சீன்ல எல்லாம் பார்க்க சகிக்கல.. ஒரு நல்ல நடிகை என்பவர் அழும் காட்சியில் கூட ரசிகர் மனம் கவர வேண்டும்னு கே பாலச்சந்தர் சார் சொல்லி இருக்கார்..

படத்துக்கு முதுகெலும்பே ஒளிப்பதிவும் இசையும் தான்.. படம் பூரா கேமரா விளையாடுது.. 3 பாட்டு செம ஹிட்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG6Hiy2au6p78vzbFfJTukkghVhjuLXYVzOkfHnoS2S4vM5P2ik3rxjJ18azkJhUfliJmD0aZph1JF2lenzxSUClQzT1_2vL5snAvNIQ_9bYC-8njgTlVJFI50CYPYPRxjLgAbLWsW7Y4/s1600/0.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. என்னடா பார்க்கறே.. கொஞ்ச நாள் டேட்டிங்க் பண்ணி பார்க்கலாம்னு தோணுச்சு , அதான் கூட்டிட்டு வந்துட்டேன் , தப்பா?

2.  ஹீரோயின் - ஏதாவது திட்டறதுன்னா திட்டு.. டோண்ட் சைலண்ட்..

ஓ..... திருட்டு மூதேவி..... 

3.  என் ஆள் எப்படிடா?

டேய்.. பிரியாணி எங்கே வாங்குனே..?  பழசு போல.. டேஸ்ட்டே இல்லையே? ( டபுள் மீனிங்க்ல அட்டாக் பண்றாராம் ஹய்யோ அய்யோ)

4.  நீ ஒரு முண்டக்கலப்பை

வாட்?

சரி.. இங்கிலீஷ் தெரிஞ்ச முண்டக்கலப்பை ( தூள் படத்துல ஜோதிகா முண்டக்கண்ணி)

5.  டேய்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்டா.. என் ஆள் எப்படிடா?

உன் அளவுக்கு கொஞ்சம் கம்மிதான்..

6. என் லட்சியமே நல்ல ஃபோட்டோகிராஃபர் ஆகறதுதான்.. 


ஓஹோ.. கலயாண மண்டபடத்துலயா?

ஏய்.. நீ என்ன பெரிய இவளாடி? கவர்மெண்ட் கக்கூஸ்லயா ஒர்க் பண்றே? ( ஏ க்ளாஸ் ரசிகர்களூக்காக  எழுதப்பட்ட வசனமாம் ஹி ஹி )

7.  அவங்கம்மாவை எனக்குத்தெரியும்.. ஹி ஹி அவ யார் தெரியுமா??

8.  ஏய்.. ஹிந்திப்படம் ஓடுதே அதுல வர்ற வசனம் என்ன அர்த்தம்? முஜே கோயி ஃபிரண்ட் நஹி ஹை.. (எனக்கு யாரும் ஃபிரண்ட்ஸ் இல்லை)

நீ எக்கேடோ கெட்டுப்போன்னு அர்த்தம்..

9.  என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 6 லேங்குவேஜ் ஐ நோ.. யூ நோ?

மத்தது எதுவும் உனக்கு வந்திருக்காது.. 

10.  தப்பான இண்ட்ரஸ்ட்டை  தேர்ந்தெடுத்தா ஃபியூச்சர் ரொம்ப சிரமம்



http://www.tamilnewscinema.com/wp-content/uploads/2011/09/richa.jpg

11. தம்பி.. இந்த ஃபோட்டோ 1 எனக்கு ஒரு காப்பி குடுப்பா.. என் மனைவி அழகா இருந்து நான் பார்த்ததே இல்ல.. ( அவனவன் சம்சாரம் அவனவனுக்கு அழகா தெரியாதுய்யா)

12.  வாழ்க்கைல நாம எஞ்சாய் பண்ற வேலையை செய்யனும்.. இல்லைன்னா செத்துடனும்.. 

13.  டேய்// உங்க ஹனிமூன்க்கு நான் எதுக்குடா?

யாமினிக்கு நீ வந்தா ஓக்கேவாம்.. 

14.  எங்கேடா உன் கேர்ள் ஃபிரண்ட்?

உள்ளே பாத்ரூம்ல குளிச்சிட்டு இருக்கா.. 

கதவு திறந்து இருக்கு?

அவளுக்கு பல்லின்னா பயம்.. 

15.. யாமினி.. உங்க ஆள் வெளீல போய் இருக்காரு....

தெரியும்.. பல்லி வந்தா கூப்பிடறேன்...

16.  ஆமா.. நீங்க பாட்டுக்கு பாத்ரூம் கதவை திறந்து வெச்சுட்டு குளீக்கறீங்களே..?நானா இருக்காங்காட்டி ஆச்சு.. வேற யாராவது இருந்தா?

ம்க்கும்.. நீ பார்ப்பேன்னு நினைச்சேன்..

17.  இப்போ எதுக்கு டி என்னை திரும்பி பார்க்கறே..?

18.  ஆமா.. அவன் உன் கூடவே சுத்தறான்..?

ஆனா நான் அவன் கூட சுத்தலையே? ( விளங்கிடுச்சு)

19.  கிரியேட்டிவிட்டி என்பது கடவுளா  குடுக்கற வரம்.. நக்குனாக்கூட உனக்கு அது கிடைக்காது  ( படத்தில் பார்க்கும்போது விரசம் இல்லை)

20.  உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? நீ செய்யற வேலையை ரசிச்சு பண்றே.. நான் கூட என் வேலைல தப்பு செஞ்சிருக்கேன்.. ஆனா அப்போ எல்லாம் எந்த வருத்தமும் பட்டதில்லை.. ஆனா உன் வேலைல ஒரு தப்பு நடந்தா நீ வருத்தப்படறே. 


http://www.lohan.in/blog/gallery/2011/04/Actress-Richa-Gangopadhyay-in-Bridal-Makeup-001.jpg

21.  கண்டக்டர்.. இந்த பஸ் கடைசியா எங்கே போகுது?

மைசூர்..

அப்போ மைசூர்க்கு ஒரு டிக்கெட்.. 

22. உன்னை லவ் பண்றதா சொல்லிட்டு என்னை லவ் பண்றா... நாளையே என்னை லவ் பண்றதா சொல்லிட்டு வேற யாரையாவது லவ் பண்ணமாட்டா-னு என்ன நிச்சயம்?

23.  என் நிலைமை எவ்ளவ் கேவலமா போச்சு பார்த்தியா?

ஆமாடா.. மச்சான் ரொம்ப கேவலமாத்தான் போச்சு.. 

24.  என் கேர்ள் ஃபிரண்டை கரெக்ட் பண்ணிட்டு.. இவன் எல்லாம் ஒரு ஃபிரண்ட்..?

25. எங்கப்பனைப்பாரு.. கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?

26..  நீ ஆம்பளை இல்லையா? அதான்.. வீக்னெஸ்... சீக்கிரம் ஒரு மேரேஜ் பண்ணீக்க. உன் பொண்டாட்டியை நீ தான் தேடிக்கனும்.. அடுத்தவன் பொண்டாட்டியை அல்ல.. 

27.  யோவ்.. எதுக்குய்யா போலீஸ் கம்ப்ளெயிண்ட்டு? என் புருஷன் தான் மெண்டல்தான் ஆனா நல்லவன்.. என்ன கேட்டாரு? ஃபோட்டோவுக்கு போஸ் தானே கேட்டாரு? முடிஞ்சா குடு.. இல்லைன்னா மூடிட்டு போ.. ரொம்ப ஓவரா துள்ளுனே என்னை செக்ஸ் டார்ச்சர் பண்றேன்னு பொய் புகார் குடுத்துடுவேன் 

படம் இடைவேளை வரை ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்புடன் நகர்கிறது.. அப்புறம் 2 பேருக்கும் மேரேஜ் ஆன பிறகு திரைக்கதையை எப்படி கொண்டு போறதுன்னு டைரக்டருக்கு மகா குழப்பம்.. 



http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-red-dress.jpg

இயக்குநருக்கு பாராட்டு தருவிக்கும் இடங்கள்

1. வசனம் தான் படத்துக்கு முதல் பிளஸ்.. ஷார்ப்பான வசனங்கள்.. தேவையான இடங்களீல் நறுக் சுருக். ஆனால்.. எல்லாம் முதல் பாதியில்தான்

2. ஓட ஓட பாட்டுக்கான ஒளீப்பதிவு செம.. சுத்துது சுத்துது பூமி பாட்டுக்கான லீட், நடன அமைப்பு, கேரளா ஃபிகர்களின் ஆடை வடிவமைப்பு அனைத்தும் டாப்.. 

3. யூத்களுக்கான பல மேட்டர்கள் ஆங்காங்கே தெளித்து அப்ளாஸ் அள்ளுகிறது உதவி இயக்குநர் டீம்

4. சிக்கலான திரைக்கதையிலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கும் வாய்ப்பு இருந்தும் கண்ணியமாக காட்சிகளை அமைத்த விதம்

5. ஓட ஓட தூரம் குறையில பாட்டு அருமையான  ஒளிப்பதிவு  உத்தி..  கிராஃபிக்ஸ் கலக்கல் தியேட்டரில் அப்ளாஸ் அடங்கவே 2 நிமிடம் ஆகுது//



http://lh4.ggpht.com/_62XV5GGJjBs/S65hTx56ifI/AAAAAAAAHh0/_qMShB1MJFg/actress.richa-gangopadhyay.richa-gangopadhyay-hot-in-black-010.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , சில ஆலோசனைகள், சந்தேகங்கள்

1. ஹீரோ ஃபோட்டோகிராஃபியில் செம டேலண்ட்.. அவர் ஒரே ஒரு ஆளிடம் மட்டுமே தன் ஃபோட்டோக்களை காட்டி ஏமாந்துடறார். உலகத்துல வேற ஆட்களே இல்லையா? ஏன் மனசு ஒடிஞ்சு போறார்? அவரோட திறமைகள் ஏன் அனைத்து இண்டர்வியூவிலும் மறுக்கப்படுது?

2. இந்தக்கதைல ஹீரோயின் நண்பனின் டாவு என காட்டி இருக்கவே தேவை இல்லையே? எதுக்கு ? சும்மா ஒரு பரபரப்பை கிளப்பவா?

3.  ஏ கிளாஸ் ஆடியன்சின் இயக்குநர் என  உங்களை எல்லோரும் கொண்டாடுறாங்க.. ஏன் சில இடங்களில் வசனம் ரொம்ப லோ கிளாஸா இருக்கு?

4. ஹீரோவின் ஃபோட்டோவை ஒருவர் மிஸ் யூஸ் பண்ணீ தன் படைப்பு என சொல்லி அவார்டு வாங்கறார்.. டெவலப் பண்ணுன ஸ்டூடியோ சாட்சியை வெச்சு தன்னோட சரக்கு என்பதை அவர் தாராளமா நிரூபிக்கலாமே?

5. இந்த ஃபோட்டோக்கள் எல்லாம் வேஸ்ட்-னு அவர் தூக்கி எரிஞ்சதும் ஹீரோ அவைகளை ஏன் கலெக்ட் பண்ணாம வந்துடறார்..?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierB34Lc5grJUXvIKG9XR-qn4V-cS3y0h622MpYgGiTnxB22IunZ73-WNkfTHSauh512Aq05wgiHrMKMsH6nciKDyIukqfrp3ypaNWaygLxsQkRpF_hs-cgBwVmPqlBvtI8KJyqqfT0Qmp/s1600/richa_gangopadhyay_mirapakaya_hot_stills_06.JPG


6. அந்த ஃபோட்டோவை மிஸ் யூஸ் பண்ணனும்னு வில்லன் நினைச்சா தம்பி குடுத்துட்டுப்போ, பார்த்து சொல்றேன்னுதானே சொல்வாங்க?

7. ஹீரோயின் டேட்டிங்க் பண்ண வந்த ஆள் கூட உரசல் புரசலா இருக்காரே, அதுதான் நவ நாகரிகமா?அப்படி இருந்துக்கிட்டே ஹீரோவை வேற லவ் பண்றாரு? அவ்வ்வ்வ்

8. ஹீரோ பாத்ரூம் போறாரு.. 6 ஃபிரண்ட்சும் ஹால்ல இருக்காங்க.. ஹீரோயினை கட்டிக்கப்போறவரும் அங்கே இருக்கார்.. அப்புறம் என்ன தைரியத்துல ஹீரோயின் உள்ளே போய் ஹீரோவை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார்?

9. இந்தக்காலத்துல ஃபிரண்ட்ஸ் மேரேஜ் லைஃப் வேற , பேச்சிலர் லைஃப் வேறன்னு வாழ்றாங்க.. ஆனா உங்க படத்துல மட்டும் அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே ஹீரோயினை தாரை வார்க்காத குறையா கிட்டத்தட்ட கூட்டிக்குடுக்கறாரே? ஏன்?

10. உங்க படங்கள்ல வலுக்கட்டாயமா ஹீரோவை சைக்கோவா காட்றது ஏன்?

11. பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் பார்த்துட்டு அதே மாதிரி பிளட் ப்ளீடிங்க் டூ ஹீரோயின் காட்னது ஏன்?படத்துக்கு அது அவசியமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0zg333eqrIOxx3ZC-su4F77rxy_pYdWhohhP4LSxoEXeq2Ow-BAWIETwTkaMgdxnhqOMw4inJCf-jhXstxgFIAwONDkxWhLmCQR4cmape0UzZStMmtaUT_lIkwaGQR09qbELI6By8kty/s1600/Richa_Gangopadhyay_Hot_12.jpg


சி.பி கமெண்ட் - இடைவேளை வரை டைரக்டர் டச்.. அதுக்குப்பிறகு ம்ச் ப்ச்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

ஈரோடு ஆனூர்- ல் பார்த்தேன்

படம் எல்லா செண்ட்டர்லயும் 10 நாட்கள் கண்டிப்பா ஓடிடும்.. .

Friday, August 12, 2011

செல்வராகவன் கூட படம் பண்றது டேஞ்சரா? அனுஷ்கா பேட்டி காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpg2tD7G0pJ3nKdphBw7UuXbqis_14bRUz7GMWVBhsP-ukGiZ1cjdJh3_q469iBn3Sc2fMbF-6yc23Oxkk4eDY6K0h5JBHQH6V7KlN71uniq3rRpFuJlJ0gvtjwsdoto6hSetqBaP4MmA/s1600/anushka6p51272558401.jpg 

'ஆந்திரக் குதிரை’ அடையாளம் மறந்து 'சிம்பிள் ஏஞ்சல்’ என்று கொண்  டாடத் தோன்றுகிறது அனுஷ்காவை!

சி.பி - பம்மல் கொஞ்சல் போதும், நேரடியா மேட்டர்க்கு வா நைனா!!


1.  ''வாழ்த்துக்கள்... கிளாமரே இல்லாமல், செம ஹோம்லியா 'தெய்வத் திருமகள்’ படத்துல கலக்கிட்டீங்க...''

சி.பி - ஏதோ ஆதங்கமா சொல்ற மாதிரி மைண்ட் வாய்ஸ் சொல்லுதே?


''தேங்க்ஸ்... ஒரு நடிகைனா, எல்லா ரோலும் பண்ணணும். 'அருந்ததி’யும், 'தெய்வத் திருமகள்’ கேரக்டரும் எனக்குப் பயங்கர சவால் கொடுத்தவை. சவால்ல பாதி தாண்டிட்டேன்னு நினைக்கிறேன். ஷூட்டிங்ல நான், விக்ரம், சாரா... நாங்க மூணு பேருமே ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். டெய்லி நான் அவ்ளோ சந்தோஷமா இருந்தேன். ஐ மிஸ் தெம்!''

சி.பி - என்னது? பாதிதான் தாண்டுனீங்களா?விழலை?
2. ''உண்மை சொல்லணும்... 'தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரம், அனுஷ்கா, சாரா... யார் பெர்ஃபார்மன்ஸ் பெஸ்ட்?''

சி.பி -  நோ  டவுட் இன் இட், 100% பாப்பா சாரா தான் பெஸ்ட்


''இதில் உண்மை சொல்ல என்ன யோசிக்கணும்? கண்ணை மூடிட்டு சொல்வேன்... விக்ரம் - சாரா தான் படத்தோட ஸ்டார் பெர்ஃபார்மர்ஸ். அதுவும் அந்த க்யூட் குட்டி சாரா... சான்ஸே இல்லை!


ஒரு ஷாட்டுக்கு அவ்வளவு எக்ஸ்பிரெஷன்ஸ் கொடுப்பா. எல்லார்கிட்டயும் ரொம்ப சீக்கிரமே ஒட்டிப்பா. பிரேக் சமயங்களில் 'ஆன்ட்டி விளையாட வாங்க...’னு என்னை ஒரு வழி பண்ணிடுவா. அழகுக் குட்டிச் செல்லம்!''


சி.பி - உங்களைப்போய் ஆண்ட்டின்னு சொல்லிடுச்சே பாப்பா.. அதான் மனசுக்கு கஷ்டம், அப்போ நாங்க ஆண்ட்டி ஹீரோவா?

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/08/anushka4.jpg


3''விளம்பரப் படங்களில் நிறைய நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?''

சி.பி - ஹா ஹா இது செம ஜோக், பாப்பா முழுப்படத்துலயே நடிக்கறதில்லை ,சும்மா கிளாம்ர் ஒன்லி.. இதுல 3 நிமிஷ 'விளம்பரப் படங்களில் எப்படி நடிக்க முடியும்?


''இந்தக் கேள்விக்கும் உண்மை சொல்லவா? சினிமாவைவிட விளம்பரங்கள் மூலமா நல்ல ரீச் கிடைக்குது. 

 சி.பி - ரீச் (REACH) கிடைக்குதா? ரிச்  (RICH) கிடைக்குதா? டவுட்டு

விளம்பரத்தில் நடிச்சா, தினமும் நாலு தடவையாவது நம்ம முகத்தை மக்கள் பார்த்துதான் ஆகணும். 

சி.பி - என்னது முகத்தையே 4 தடவை பார்க்கறாங்களா? அப்போ!!!!!!!!!!!!!!!!!

ஆனா, சினிமாவில் அப்படி இல்லை. அதைவிட, சில நாள் கால்ஷீட்டுக்கே ரொம்ப நல்ல சம்பளம் தர்றாங்க. யாருக்குத்தான் விளம்பரத்தில் நடிக்கப் பிடிக்காது.ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் விளம்பரத்தில் நான் ரொம்ப அழகா இருக்கேன்னு நிறையப் பேர் சொன்னாங்க. ஒரு நடிகைக்கு வேற என்ன கிரெடிட் வேணும்!''

சி.பி - பார்த்தீங்களா? படுவாப்பசங்க, அப்போக்கூட நடிப்பைப்பற்றி எதுவும் சொல்லலை, அழகு பற்றித்தான் ஜொள்ளி இருக்காங்க .. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_96EyJoC9ZfWZUm9OlHy100aKZGC7J3yPGMLgYlF-Ym_v4Yf2AnCzqUOgq8S0gWIOy_2wNMql5P2zOkp79aET8r2MyYWHHAhClR47HC-JC1-DpqbJj4ZHUikSAwA2ASngtP9z-dKYv8I/s1600/Hot+anushka.jpg
 படத்துல பேண்ட் கிழிஞ்சிருக்கா? கிழிச்சு விட்டிருக்கா?ஃபேஷனுக்காக?டவுட்டு

4.''அனுஷ்காவின் அழகு ரகசியம் ப்ளீஸ்...''


 ''அழகா இருக்கணும்னு நான் என்னிக்குமே மெனக்கெட்டது இல்லை. நிறையத் தண்ணீர், காலையில் யோகா இது மட்டும்தான் நான் ரெகுலரா கடைப்பிடிக்கும் விஷயங்கள். யோகா உடம்பையும் மனசையும் ஃபிட்டா வெச்சுக்க உதவும். தண்ணீர், ஸ்கின்னைப் பளபளப்பா வெச்சுக்கும். இது ரெண்டும் சரியா இருந்தாலே, முக அழகு ஃப்ரீ!''


சி.பி - நிறைய தண்ணீர்னா எந்த தண்ணி?


http://tamil.koodal.com/cinema/gallery/actress/anushka/anushka_24_1126200885125321.jpg

5. ''சினிமா ஸ்டார்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும்போதுதான், உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சதாமே... உண்மையா?''

சி.பி - நாம் படிக்கும் ஒவ்வொரு மொக்கைப்பேட்டிலயும் ஒரு அரிய தகவல் மறைஞ்சு இருக்கும்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. அட!!!யோகா டீச்சரா நீங்க!!! 


''யெஸ்!

நான் அவங்கவங்க வீட்டுக்கே போய் யோகா சொல்லிக் கொடுப்பேன். அப்படி என்னிடம் யோகா கத்துக்கிட்டவர் தெலுங்குப் பட இயக்குநர் பூரி ஜெகன்னாத். அவர் மூலமாத்தான் நாகர்ஜுனாகூட 'சூப்பர்’ பட வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து, பல வாய்ப்புகள். என் ஃபேவரைட் படம் 'லக்ஷயம்’தான். அதில் எதைப்பத்தியும் கவலைப்படாத, செம ஜாலியான கேரக்டரில் நடிச்சிருப்பேன். உண்மையிலேயே என் கேரக்டரும் அதுதான். அப்படி கேரக்டர்கள் கிடைச்சா, ஆசை ஆசையா நடிச்சுட்டே இருப்பேன்!''

சி.பி - உங்க கேரக்டர் எதைப்பற்றியும் கவலைப்படாத கேரக்டரா? ஐ ஜாலி!!!!

http://picworld.files.wordpress.com/2007/07/anushka-0018.jpg


6. '' 'தெய்வத் திருமகள்’, 'அருந்ததி’ இரண்டில் எந்தப் படத்தோட பெர்ஃபார்மன்ஸ் பெர்சனலா உங்களுக்குப் பிடிக்கும்?''  

சி.பி -  யோவ் பர்சனலா பிடிக்கறதை  எல்லாம் பப்ளிக்கா சொல்லிட்டு இருக்க முடியுமா?  ஓ!! படத்துலயா?.. அப்போ சரி..
 
''எனக்கு ரெண்டுமே பிடிக்கும். 

சி.பி - ஆ!!!! உங்களுக்கும் ரெண்டுமே பிடிக்குமா? எங்களுக்கும் அந்த ரெண்டும் தான் பிடிக்கும் மேடம்!!!!!!!!!!!!!!

பொதுவா, என் அம்மா-அப்பா நான் நடிச்ச படம் பார்த்துட்டு எந்த கமென்ட்டும் சொல்ல மாட்டாங்க. 'அருந்ததி’ படம் அவங்களோட சேர்ந்து பார்த்தேன். படம் முடிஞ்சதும் அப்பா, என் தலையில் கைவெச்சு, 'ஸ்வீட்டி... கீப் இட்-அப்’னு சிரிச்சுட்டே பாராட்டினார். சந்தோஷத் தில் உடனே அழுதுட்டேன். நான் நடிச்சதிலேயே என் அப்பா, அம்மா ரெண்டு தடவை பார்த்த படம் 'அருந்ததி’ மட்டும்தான். ஐ லைக் அருந்ததி... ஐ லவ் அருந்ததி!''

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGTK0iwXwbC59ct7hXo7WzVLPa9AJKgHXBiQk0iR06iLJbnH-BvGjimXMdz_1qh-nKvdiezN8IbzxmhDg-QuRHIIJYSn1xmQK0R__1ZsE1_yGuas-U_DQcvOEDknMXPDqvVYKFyutH2cY/s1600/Anushka-Hot-Video_songs_gsvfilms.jpg


7''இனிமேலாவது தமிழ்ல நிறையப் படங்கள் நடிப்பீங்களா?''

''நிச்சயமா! அடுத்து கார்த்தியோட ஒரு படம் கமிட் ஆகி இருக்கேன். ஒரு ரகசியம் சொல்லவா? செல்வராகவனோட ஒரு படம் பண்ணப்போறேன். சீக்கிரமே அறிவிப்பு வரும். அடுத்து, தெலுங்கில் நாகார்ஜுனாகூட ஒரு படம். இன்னும் ரெண்டு வருஷத்துக்கு அனுஷ்கா பிஸி!''


சி.பி -  நீங்க இப்போ கமிட் ஆகி இருக்கற 3 படங்கள்லயுமே டேஞ்சர் தான்.. கிசு கிசுவா வரப்போகுது, பார்த்துக்குங்க,,  3 பேருமே மேரீடுதான் இருந்தாலும் எங்க அண்ணன் செல்வராகவன் கிட்டே மட்டும் ஜாக்கிரதை.. என் திருமணம் பொம்மைக்கல்யாணம், நீங்க தான் நிஜமான பொம்மைன்னு டயலாக் எல்லாம் விடுவார். நம்பி ஏமாந்துடாதீங்க

thanx - vikatan