பொதுவாக வெப் சீரிஸ் என்பது நேரத்தை விழுங்கி விடும் என அதை தவிர்ப்பவன் நான். ஆனால் கலக்கலான மேக்கிங் , அட்டகாசமான நடிப்பு , நாம் கேள்விப்படாத பல டீட்டெய்லிங் என பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார்கள் . சஞ்சய் சிங்க் எழுதிய டெல்கி ஸ்கேம் ரிப்போர்ட்டர்ஸ் கி டைரி என்ற புத்தகத்தைத்தழுவி எடுக்கப்பட்ட வெப் சீரிஸ் இது , ஸ்கேம் 1992 வெப் சீரிசைத்தொடர்ந்து இரண்டாம் சீரிசாக இது வெளி வந்துள்ளது
இந்தியாவையே கலக்கிய முத்திரைத்தாள் மோசடியில் ஒரு தனி நபர் 30,000 கோடி ஊழல் பணம் சம்பாதித்த கதை இது . முதல் பாகத்தில் மொத்தம் ஐந்து எபிசோடுகள் . ஒவ்வொன்றும் 45 நிமிடங்கள் , ஆக மொத்தம் 225 நிமிடங்கள் / 4 ம்ணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம் , ஒரு சீன் கூட போர் அடிக்காத விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ரயிலில் பழ வியாபாரியாக தன் வாழ்க்கையை நடத்தி வருகிறான் அவனது பேச்சுத்திறமையைப்பார்த்து ஒருவர் நீ மும்பை வா.,, உனக்கு நல்ல வேலை காத்திருக்கு என்கிறார். அவர் தந்த அட்ரஸ்க்கு நாயகனும் போகிறான்
அது ஒரு லாட்ஜ் . அதற்கு நாயகன் தான் இனி மேனேஜர் . அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட் , டாக்சி ஸ்டேண்ட் ஆகியவற்றில் டிரைவர்களிடம் விசிட்டிங் கார்ட் கொடுத்து கஸ்டமர்களை அழைத்து வந்தால் கமிசன் உண்டு என சொல்லி வியாபாரத்தை சூடு படுத்துகிறான் .
ஈ ஓட்டிக்கொண்டிருந்த லாட்ஜ் இப்போ ஹவுஸ்ஃபுல் . நாயகனுக்கு டபுள் சம்ப்ளம். ஓனர் வீட்டுக்கு அடிக்கடி போன நாயகன் அங்கே ஓனரின் மகளால் காதலிக்கப்படுகிறான். ஓனரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார்
திருமணம் முடிந்த பின் கல்ஃப் கண்ட்ரிக்கு வேலைக்குப்போய் 7 வருடங்கள் நாயகன் உழைத்து பணம் சம்பாதிக்கிறான், பின் இந்தியா ரிட்டர்ன் வந்த பின் தான் கதை சூடு பிடிக்கிறது
ஷேர் மார்க்கெட்டில் பாண்ட் பேப்பர்சில் ஸ்டாம் பில் சீல் வைத்த பின் தூக்கி எறிந்து விடுவார்கள் , அந்த ஸ்டாம்ப்பில் கெமிக்கல் ஊற்றி ஷீலை அகற்றி புது ஸ்டாம்ப் போல் மாற்றி விற்று வருபவனுடன் நாயகனுக்கு ப்ழக்கம் உண்டாகிறது அந்த பிஸ்னெஸ் நாயகனுக்குப்பிடித்துப்போகவே அதை செய்ய ஆரம்பிக்கிறான்
லோக்கல் பிஸ்னெஸ் காம்ப்பெட்டிஷனால் நாயகன் தாக்கப்படுகிறான். அதற்குப்பின் நாயகன் புது ரூட்டைப்பிடிக்கிறான். டைரக்டாக ஸ்டாம்ப் பேப்பர் மோசடி செய்ய ஆரம்பிக்கிறான்
முத்திரைத்தாள் பிரிண்ட் ஆகும் நாசிக்கில் மிஷினை வாங்கி அதே போல் போலியாக பிரிண்ட் செய்கிறான். அரசியல்வாதிகள் , அதிகாரிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி விடுகிறான். இதற்குப்பின் இவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே மீதி திரைக்கதை
நாயகன் ஆக அப்துல் கரீம் டெல்கி ரோலில் கனதேவ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது உடல் மொழி ,டயலாக் டெலிவரி அனைத்தும் அற்புதம்
டைட்டில் போடும்போது வரும் பிஜிஎம் தெறிக்கிறது , ஆனால் இது ஸ்கேம் 1992 பிஜிஎம் தான். மாற்றாமல் அபப்டியே யூஸ் பண்ணி இருக்காங்க
ஒளிப்பதிவு, லொக்கேஷன் செலக்சன் , ஆர்ட் டைரக்சன் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் தன் கேசுக்கு வாதாட வரும் வக்கீல் போலீஸ் ஆஃபீசருக்கு 15,000 தர வேண்டி இருக்கும் என சொன்னதும் அதை நீங்களே கட்டிடுங்க . உங்களுக்குத்தர வேண்டிய வக்கீல் ஃபீஸ்ல 50% தள்ளுபடி பண்ணிக்குங்க , உங்களுக்கு கஸ்டமர்ஸ் பிடிச்சுத்தர்றேன் என்று டீல் பேசும் இடம்
2 டெட் ஷேர் சர்ட்டிஃபிகேட்களில் இருக்கும் ஸ்டாம்ப்களில் வைக்கப்பட்ட ஷீல்களை கெமிக்கல் ஸ் மூலம் அகற்றி பாதி விலைக்கு விற்கும் ஐடியாவை விவரிக்கும் காட்சி
3 ஆஃபீஸ் ஸ்டாஃப்களின் டிஃபன் பாக்ஸ்களில் பணம் வைத்து பின் காலி டிஃபன் பாக்ஸ்களில் ரெவின்யூ ஸ்டாம்ப்சை கலெக்ட் பண்ணும் ஐடியா
4 ஸ்டாம்ப்களில் மோசடி செய்யும் வேலையில் இருந்து ஸ்டாம்ப் பேப்பர்சில் மோசடி செய்ய துவங்கும் காட்சியும், 33,000 கோடி ஸ்டாம்ப்பேப்பர் விற்பனையில் 80 கோடி ஆட்டையைப்போடும் திட்டமும்
5 நாசிக்கில் டெபுடி மேனேஜர் ஆக பணியாற்றும் மதுசூதனன் மிஸ்ராவுக்கு நாயகன் வாட்ச் லஞ்சமாக தந்தும் அவர் அதை ஏற்காமல் நாயகனை பலர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார். மற்ற ரெகுலர் நாயகன்கள் எனில் அவரைப்பழி வாங்கி இருப்பார்கள், ஆனால் இந்த நாயகன் 25 லட்ச ரூபாய் செலவு செய்து மேனேஜர் ஆக பிரமோஷன் வாங்கித்தரும் சூட்சும புத்தி அபாரம்
ரசித்த வசனங்கள்
1 கனவுகளின் விலை என்ன? நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை விட அது பெருசு
2 அரசியல்வதிகள் தான் பிஸ்னெசின் முதுகெலும்புகள்
3 ஒருத்தன் பெரிய ஆள் ஆகனும்னா அவனுக்கு சாலிட் ஆன லக் வேண்டும்
4 டான்ஸ் பாருக்கும், ஜெயிலுக்கும் என்ன ஒற்றுமைன்னா இங்கே வர்றவங்களை அது ரெண்டாவது டைமும் இழுத்துக்கும்
5 வாழ்க்கைல நாம ஜெயிக்கனும்னா கண்ணை மூடிக்கிட்டு ஏதாவது நல்ல முடிவை எடுத்துத்தான் ஆகனும்
6 எப்பவாவது கிடைக்கும் பொருளை வெச்சுக்கிட்டு ரெகுலரா தொழில் பண்ண முடியாது
7 எனக்கு பணம் சம்பாதிப்பதில் ஆசை இல்லை , பணத்தை உருவாக்கனும்
8 அடுத்தவங்க சொல்றதை எல்லாம் கேட்டா நம்மால முழு நிம்மதியோட வாழ முடியாது
9 ஒழுங்கா வேலை செய்யத்தெரிஞ்சவங்களுக்கு குறுக்கு வழியும் தெரிஞ்சிருக்கும்
10 நான் சும்மா ஓடனும்னு ஆசைப்படலை , சிறுத்தை மாதிரி பாயனும்னு ஆசைப்படறேன்
11 அவன் ரொம்ப நேர்மையானவன், பணத்தை மட்டும் தான் சாப்பிடுவான்
12 ஒரு தொழில் செய்ய தேவைகளை கத்துக்கறது ரொம்ப முக்கியம். யார் யாருக்கு என்ன தேவை என்பதை...
13 நீ உன் தகுதியை வெச்சுக்கிட்டு அறிவை வாங்க முடியாது , ஆனா நான் என் அறிவை வெச்சு தகுதியை வாங்கிக்காட்றேன்
14 சில நேரங்களில் நாங்க அரசாங்கத்தைப்பார்த்துக்குவோம், சில நேரங்களில் அரசாங்கம் எங்களைப்பார்த்துக்கும்,
15 கூட இருக்கறவங்க தப்பு பண்ணும்போது யார் அவங்களை மன்னிக்கறாங்களோ அவங்க மகான் ஆகிடுவாங்களாம், நானும் மகான் ஆக ஆசைப்படறேன்
16 ஆளும் கட்சி , எதிர்கட்சி ரெண்டு தரப்புக்கும் பணம் கொடுக்க வேண்டியதா இருக்கு
17 உங்களுக்கு லோ சுகரா? திடீர்னு அஸ்காவை எடுத்து சாப்பிடறீங்க?
வாழ்க்கை உப்பு , சப்பு இல்லாம போகுதில்ல? அதான் , கொஞ்சம் சர்க்கரையை எடுத்துக்கிட்டேன்
18 நாம இந்த உலகத்துக்கு ஏன் எதுக்காக வந்திருக்கோம்?
அடி வாங்கி சாகத்தான்
இல்லை , இந்த உலகத்துக்கு சம்பாதிக்க வந்திருக்கோம், சிலருக்கு பணம், சிலருக்கு மரியாதை , சிலருக்கு பதவி
அரசியல்வாதிகள் கிட்டே சாவகாசம் வெச்சுக்கிட்டா இதான் கதி , கறந்துக்கிட்டே இருப்பாங்க
17 நாம ரெண்டு பேரும் சேர்ந்தா சிஸ்டத்துல உக்கார்ந்து சிஸ்டத்தையே உருவாக்கலாம்
18 போக வேண்டிய இடம் பக்கத்துல வந்துட்டா மனசோட வேகம் அதிகம் ஆகிடும் . வேகமா நடக்க ஆரம்பிப்போம்
19 பயப்படறவன் தலைல என்னைக்கும் கிரீடம் ஏறாது
20 இந்த உலகத்துலேயே இருக்கும் மிகப்பெரிய உண்மை இறக்கப்போகும் மனிதனின் கண்களில் தெரியும்
21 ஒருத்தன் துணிச்சலா தண்ணீரில் இறங்கும் வரை அது சூடா இருக்கா? குளிர்ச்சியா இருக்கா?னு அவனுக்கே தெரியாது . அதனாலதான் நாமளே இறங்கிப்பார்த்துடனும்
22 நம்ம பக்கம் காத்து வீசும்போதே பல பேர் காத்தை பிடுங்கி விட வேண்டி இருக்கு
23 நம்மை எவனும் நெருங்கவே கூடாது , தொடவும் கூடாது , அதுதான் நம்ம லட்சியம்
24 நேரத்தோட வேல்யூவை நாம புரிஞ்சுக்கிட்டா அது நம்ம வேல்யூவை உயர்த்தும்
25 எவ்வளவு வேணா திருடி சம்பாதிக்கலாம், ஆனா நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது , காவல் காக்கும் வீட்லயே கை வைக்கக்கூடாது சாப்பிட்ட தட்டுலயே எச்சில் துப்பக்கூடாது . திருட்டு வேலைல முக்கியமே விசுவாசம் தான்
26 சிறந்த பொருட்கள் விலை அதிகமாத்தான் இருக்கும்
27 அவன் என்னை எலியாவு, தன்னை சிங்கமாவும் நினைச்சுக்கிட்டு இருக்கான் , உண்மை என்னான்னா எல்லாரும் சிங்கத்தைத்தான் வேட்டையாட நினைப்பாங்க ., எலியை அல்ல
28 சிங்க்த்தின் முன் எப்பவும் நான் எலியாத்தான் நடந்துக்குவேன், அப்படித்தான் நடந்துக்கனும்
29 சிங்கம் எப்பவும் எலியை ஒண்ணும் பண்ணாது , அதே சமயம் எலி சிங்கத்துடன் பார்ட்னர்ஷிப் வெச்சிருக்குன்னு தெரிஞ்சா யாரும் நம்மைத்தொந்தரவு செய்ய மாட்டாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனுக்கு பார்ட்னருடன் கருத்து மோதல் ஏற்பட்டு பிரிகிறார்கள் . பார்ட்னர் நாயகனை மாட்டி விட முய்ற்சி செய்யவே இல்லை , மாட்டி விடுவானோ என தற்காப்பு நடவடிக்கையையும் நாயகன் எடுக்க வில்லை ,
2 எல்லா இடங்களிலும் டைட் செக்யூரிட்டி இருக்கு என ஓடும் ரயிலில் குறிப்பிட்ட இடத்தில் 6 நிமிடங்களில் திருட வேண்டும் என வசனம் வருகிறது , ஆனால் காட்சியாகப்பார்த்தால் அதுக்கு பாசிபிலிட்டியே இல்லை என்றே தோன்றுகிறது . கவர்மெண்ட் அரக்கு சீலை நீக்கி மீண்டும் சீல் வைக்கவே அவ்வளவு நேரம் ஆகுமே?
3 தன்னிடம் வேலை செய்பவன் பைக் வாங்கி படோடபம் காட்டும்போது இப்படி பட்டவர்த்தமாய் செலவு செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று அறீவுறூத்தும் நாயகன் ஈகோ கிளாசில் ஒரு நைட் கிளப்பில் ஒரு பெண்ணுக்கு 90 லட்சம் ரூபாய் அபிஷேகம் பண்ணி மாட்டுவது எப்படி ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ / ஏ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பார்த்தே தீர வேண்டிய பட்டியலில் இதை சேர்த்து விடுங்கள் , ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் , பெண்களும் பார்க்கலாம் ரேட்டிங் 4 / 5
Scam 2003 | |
---|---|
Genre | |
Based on | Sanjay Singh's Telgi Scam: Reporter's ki Diary |
Developed by | Hansal Mehta |
Written by | Karan Vyas Kiran Yadnyopavit Kedar Patankar |
Story by | Sanjay Singh |
Directed by | Tushar Hiranandani |
Creative director | Tanvi Chheda |
Starring |
|
Music by | Ishaan Chhabra |
Country of origin | India |
Original language | Hindi |
No. of seasons | 1 |
No. of episodes | 5 |
Production | |
Executive producers | Kartik R. Iyer Tanvi Chheda Deepak Segal |
Producer | Sameer Nair |
Production location | India |
Cinematography | Stanley Mudda |
Editor | Kunal Walve |
Production companies | Studio NEXT Applause Entertainment |
Original release | |
Network | SonyLIV |
Release | 1 September 2023 |