2021ல் ரிலீஸ் ஆகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ஆபரேஷன் ஜாவா எனும் சைபர் க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் தருண் மூர்த்தியின் இரண்டாவது படம் தான் இது. இது ஒரு கோர்ட் ரூம் டிராமா, சோஷியல் டிராமா , ஃபேமிலி மெலோ டிராமா என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்
சவுதி அரேபியாவில் நடக்கும் கதை அல்ல. கேரளா வில் கொச்சின் ( எர்ணாகுளம்) மாவட்டத்தில் சவுதி எனும் காலனியில் நடக்கும் கதை
spoiler alert
. ஓப்பனிங் ஷாட்டில் ஒரு போலீஸ் வீடு தேடி வந்து சம்மன் கொடுப்பது போல காட்சியைப்பார்த்ததும் ஏதோ ஒரு க்ரைம் த்ரில்லர் கதை என நிமிர்ந்து உட்காருகிறோம், ஆனால் ஒரு பத்து பைசாவுக்கு பிரயோசனம் இல்லாத சாதா கேஸ் என உணரும்போது இரண்டு மணி நேரத்துக்கு மேல் இந்தக்கதையை எப்படிக்கொண்டு போக முடியும் என கேள்வி எழுகிறது , ஆனால் ஆங்காங்கே நகைச்சுவை கலந்து போர் அடிக்காமல் ஒரு யதார்த்தமான படம் தந்திருகிறார்கள்
மாடியில் சின்னப்பசங்க விளையாடிக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே வந்த ஒரு பாட்டியின் தலையில் அவர்கள் வீசிய பந்து பட்டு லேசாக காயம் ஏற்படுகிறது , கோபத்துல அந்த பாட்டி அந்தப்பையனை அடித்து விட அந்தப்பையனின் பல் ஒன்று உடைந்து விடுகிறது. பிள்ளையின் பெற்றொருக்கும் அந்தப்பாட்டிக்கும் ஏற்கனவே சில தகறாரு இருக்கிறது, பாட்டி போலீஸ் கேஸ் கொடுக்கும் முன் நாம் முந்திகொள்வோம் என அவர்கள் பாட்டி மீது கேஸ் போடுகிறார்கள் இந்தக்கேஸ் பல வருடங்களாக நடக்கிறது
பல் விழுந்த பையன் பெரிய பையன் ஆகி வெளிநாடு போய் வேலைக்குப்போக இந்தக்கேஸ் தடையாக இருக்கிறது . அதனால் முதலில் கொடுத்த புகாரை மாற்றி சாட்சிகளை மாற்றி இந்தக்கேசை ஒன்றுமில்லாமல் ஆக்க நினைக்கிறான். இதற்குப்பின் என்ன நடந்தது என்பதே திரைக்கதை
நடித்தவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும் அந்தந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்கள், குறிப்பாக அந்த பாட்டியின் நடிப்பு பிரமாதம், தனக்காக தன் மகனும், மரும்களும் சண்டை போட்டுக்கொ:ள்வதை வருத்தமாகப்பார்ப்பது, தன்னிடமிருந்து பணத்தை கறக்க நினைக்கும் வக்கீலை நக்கலாகப்பார்ப்பது என அவ்ளோ பாந்தமான நடிப்பு
கோர்ட் படி ஏறி விட்டால் நம் வாழ்க்கை எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக மாறி விடும் , அலைக்கழித்து விடும் என யதார்த்தமான உண்மையை காமெடி கலந்து சொன்ன விதத்தில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார்
சரண் வேலாயுதம் நாயர் கச்சிதமான ஒளிப்பதிவு ,பாலிஸ் ஃபிரான்சிஸ் மெல்லிய இசை நிசாத் யூசுப்பின் எடிட்டிங் படத்திற்கு மேலும் வலு கூட்டுகின்றன
ரசித்த வசனங்கள்
1 நான் எல்லாம் படிக்கிற காலத்துல ஒரு பையனைக்கூட காதலிச்சது இல்ல
படிச்சது ஆறாவது வரை , அப்புறம் எப்படி லவ் வரும் ?
2 இது தாலி கட்ற நேரம்
ஓஹோ, கெட்டிமேளம் சீரியலா?
3 மனுசங்களை உன்னால மனசால மட்டும் தான் நேசிக்க முடியும் ( செயலால் அல்ல)
4 மழை இல்லாதப்ப குடை இருக்கறது கூட பாரமாத்தான் தெரியும்
5 சம்மன் வந்திருக்கு
டெட் பாடிக்கா?
புரியல
அவரு செத்துப்போய்ட்டாருங்க
6 வக்கீலைப்பொறுத்தவரை நல்லவன், கெட்டவன்னு யாரும் கிடையாது , விபரமானவனா?னு பார்த்தா போதும்
7 குடும்பத்தோட இருப்பதுதான் பெரிய விஷயம் , சம்பாதனையை விட
8 உங்க மகன் எங்கே போய் இருப்பான் ? ஏன் திரும்பி வரவே இல்லை ?
போன இடம் இதை விட நல்ல இடமா நிம்மதியான இடமா இருந்திருக்கும்
9 இந்த கேஸ் முடியற வரை நான் உயிரோட இருப்பேனா?
10 கேசை நடத்துவதில் இருக்கும் ஆர்வத்தில் கொஞ்சமாவது கேசை முடித்து வைப்பதில் இருக்க வேண்டாமா?
11 டென்ஷனா இருக்கா?
அது ம்ட்டும் தான் இருக்கு
12 வாழ்க்கை அவ்வளவு தானா?னு கேட்டியே? இப்போப்புரிஞ்சிருக்குமே? வாழ்க்கை அதுக்கும் மேல
சபாஷ் டைரக்டர்
1 தன் அம்மாவால் போலீஸ் , கோர்ட் , கேஸ் என அலைய நேரிடுதே என அம்மாவைத்திட்டும் மகன் பின் தனிமையில் அம்மாவிடம் மன்னிப்புக்கேட்கும் சீன் செம டச்சிங்
2 மனைவி , அம்மா இருவரையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் வீட்டை விட்டு ஓடிப்போக மகன் எடுக்கும் முடிவு கண் கலங்க வைக்கிறது
3 அத்தனை வருடங்கள் இழுத்த கேஸ் தீர்ப்பு வரும் நாளில் வரும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்தோடு காணத்தக்க இந்தப்படம் சோனி லைவ் ஓ டி டி தளத்தில் காணக்கிடைக்கிறது ரேட்டிங் 3/ 5
Saudi Vellakka | |
---|---|
Directed by | Tharun Moorthy |
Written by | Tharun Moorthy |
Produced by | Sandip Senan |
Starring |
|
Cinematography | Sharan Velayudhan Nair |
Edited by | Nishadh Yusuf |
Music by | Palee Francis |
Production company | Urvasi Theatres |
Release date |
|
Country | India |
Language | Malayalam |