இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் , பங்களாதேஷ் படமாக இருந்தாலும் ரிலீஸ் ஆகி நான்கு ஆண்டுகள் வரை அங்கே தடை செய்யப்பட்ட படம் . 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த தாக்கா தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம் , இது ஒரு உண்மை சம்பவம். .எல்லா தரப்பு மக்களும் பார்க்கத்தகுந்த ஜனரஞ்சகமான படம் அல்ல . 2019 ஆம் ஆண்டு நடந்த மாஸ்கோ இண்ட்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட்ட பட,ம் . பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு மொத்தம் 5 விருதுகளை வென்ற படம் . இதில் நாயகன் , வில்லன் , நாயகி என யாரும் கிடையாது . ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து காட்சிகள் நகரும்
ஸ்பாய்லர் அலெர்ட்
ரம்ஜான் தினம். சனிக்கிழமை மதியம் . லியோ படத்தில் வருவது போல ஒரு காஃபி ஷாப் கம் ரெஸ்டாரண்ட்டில் தீவிரவாதிகள் புகுந்து விடுகின்றனர். அப்போது அங்கே இருந்த பொதுமக்கள் , க்டை ஊழியர்கள் அனைவரையும் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்கின்றனர்
உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பில்டிங்கை சுற்றிலும் போலீஸ் ஃபோர்ஸ் சூழந்து விடுகிறது . தீவிரவாதக்கும்பலுடன் பேச்சு வார்த்தை ந்டத்துகிறது
உள்ளே இருக்கும் தீவிரவாதி க்ரூப் மாடர்ன் பெண்களுக்கு எதிரானவை . முஸ்லீம் குரூப்.அங்கே இருக்கும் பொதுமக்களில் ஒவ்வொருவராக விசாரித்து அவர்களுக்குப்பிடிக்காதவர்களை சுட்டுத்தள்ளுகிறது
ஒரு கட்டத்தில் மீடியாக்கள் ஆர்வக்கோளாறு ஆர்யமாலா ஆகி பிடிபட்ட பணயக்கைதிகள் எந்த எந்த நாட்டினர் , எந்த மதத்தினர் என ஓப்பன் செய்து தான் ஒரு உதவாக்கறை ஓட்டை வாய் என்பதை நிரூபிக்கிறது
உள்ளே இருப்பவர்களில் ஒருவர் மட்டும் இந்தியர் என்ற தகவல் மீடியா மூல்ம் தீவிரவாதி க்ரூப்புக்குத்தெரிய வருகிறது
அந்த இந்தியன் யார் என்பதைக்கண்டு பிடித்து அவனைக்கொல்வதாக முடிவெடுக்கிறார்கள்
உள்ளே இருக்கும் பணயக்கைதிகளில் ஒரு ரஜினி காந்த்தோ , விஜயகாந்த்தோ இருந்தால் ஃபைட் போட்டு படத்தை முடித்திருப்பார். அனைவரும் சாமான்யர்கள் ., நிஜத்தில் நடந்த சம்பவம்
அந்த புத்திசாலி இந்தியன் தன்னையும் வெளிப்படுத்தாமல் , அங்கே இருப்பவர்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் எப்படி சாமார்த்தியமாக செயல்பட்டுக்காப்பாற்றினார் என்பதே மீதி திரைக்கதை
இதில் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக தங்கள் பங்களிப்பை தந்திருந்தாலும் முஸ்லீம் பெண்ணாக வந்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் தான் நாயகி என வைத்துக்கொள்ளலாம், பிரமாதமான நடிப்பு
வேறு யாருக்கும் அதிக வாய்ப்பு இல்லை . இந்தியன் ஆக யாராக இருப்பார்? என்ற சஸ்பென்ஸ் கடைசி வரை மெயிண்ட்டெயின் செய்தது சிறப்பு
83 நிமிடங்கள் மட்டுமே ஓடுமாறு ஷார்ப் ஆக ட்ரிம் செய்திருக்கிறார் எடிட்டர் .ஒளிப்பதிவு அஜிஸ். ஒரே ஷாட்டில் 83 நிமிடப்படத்தையும் எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதை இரா பார்த்திபனின் இரவின் நிழலில் படம் பார்த்தவர் உணர்ந்திருப்பர்
முஸ்தஃபா சர்வர் ஃபரூகி தான் திரைக்கதை , இயக்கம் எல்லாம்.
சபாஷ் டைரக்டர்
1 தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கிய மக்களை எப்படி பிரிவினை ஏற்ப்டுத்தி பிரிக்க நினைக்கிறார்கள் ? அவர்களை எப்படி டீல் செய்கிறார்கள் என்பதை நன்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்
2 முஸ்லீம் பெண்ணின் உடல் மொழி , டயலாக் டெலிவ்ரி அனைத்தும் அருமை
ரசித்த வசனங்கள்
1 எல்லாரும் ஒரு நாள் அல்லா கிட்டே போக வேண்டியவங்க தான், நாங்க உங்களை முன் கூட்டியே கடவுளைக்காண ட்ரிப் அரேஞ்ச் பண்ணி இருக்கோம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஹோட்டலுக்குள் டி வி இருப்பது அனைவருக்கும் தெரியும் . வாய் பேச முடியாதவர் போல நடித்தவர் பின் வெளியே போய் மீடியாவுக்குப்பேட்டி கொடுப்பது எதற்கு ?
2 முஸ்லீம் லேடிக்கு ஒரு காதலர் இருப்பதும் அவர் பற்றிய தகவலும் வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை . ஏன் ஓப்பன் செய்தார் அந்த ;லேடி?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - டிராமா பார்ப்பது போலத்தான் இருக்கும், உண்மை சம்பவம் எப்படி நடந்திருக்கும் ? என்பதை அறிய ஆவல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், ரேட்டிங் 2.25 / 5
Shonibar Bikel | |
---|---|
Directed by | Mostofa Sarwar Farooki |
Written by | Mostofa Sarwar Farooki |
Produced by | Abdul Aziz Mostofa Sarwar Farooki |
Starring |
|
Cinematography | Aziz Zhambakiev |
Music by | Pavel Areen |
Production companies | |
Release date |
|
Running time | 83 minutes |
Countries | Bangladesh Germany Russia |
Languages | Bengali English |