Showing posts with label SAPTA SAAGARDAACHE ELLO- SIDE A (2023)-கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label SAPTA SAAGARDAACHE ELLO- SIDE A (2023)-கன்னடம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, October 13, 2023

SAPTA SAAGARDAACHE ELLO- SIDE A (2023)-கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா) @ அமேசான் பிரைம்


 ஏழு கடல்களுக்கு   அப்பால்  யாரோ  என்பது  தான்  பட  டைட்டிலுக்கான  அர்த்தம் 10  கோடி பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  26  கோடி  வசூலித்த  படம், ஒரு  ஃபீல் குட் மூவி. கமல் நடித்த மகாநதி  படம் தான்  தமிழ்  சினிமாவில்  அதிக   ஜெயில் காட்சிகள்  கொண்ட  படம், அதை  ஓவர்  டேக்  செய்யு  அளவுக்கு பெரும்பான்மையான  காட்சிகள்  சிறையில்  தான்  படம்  ஆக்கப்பட்டு  உள்ளது. படத்தின்  பெரிய  பிளஸ்  பாயிண் ட்  நாயகி  ருக்மணி யின்  கண்கள் 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  பாடகி. விரைவில்  சினிமாவில்  பிரபல  பாடகி  ஆகவேண்டும்  என் லட்சியமும்  அதற்கான  முனைப்பும், உழைப்பும்  கொண்டவர் . நாயகன்  மிடில்  கிளாஸ். இருவரும்  ஆழமாக  காதலிக்கின்றனர். கட்ற்கரை  ஓரம்  ஒரு  சொந்த  வீடு  வாங்க  வேண்டும்  என்பது  நாயகியின்  லட்சியம் . திருமணத்துக்குப்பின்  இருவரும்  சேர்ந்து  வாழ  ஒரு  நல்ல  வீடு  வேண்டும்  என  தேடிக்கொண்டிருக்கிறார்கள்


அப்போது  நாயகனுக்கு  குறுக்கு  வழியில்  பணம்  சம்பாதிக்க  வாய்ப்பு  கிடைக்கிறது. ஒரு  செல்வந்தனின் மகன்  வேகமாக  கார்  ஓட்டி  ஒரு  விபத்தை  ஏற்படுத்தி  விடுகிறான். காரில்  மோதி ஒரு  ஆள் அவுட் ., இப்போது  கார்  டிரைவராக  ஒரு  ஆள்  செட்டப்  செய்து  ஜெயிலுக்கு  அனுப்ப  செல்வந்தன்  தீர்மானிக்கிறான், அதற்கு  நாயகன்  உடன்படுகிறான். 35  லட்சம்  ரூபாய்  பேசப்பட்டு  ரூ 3  லட்சம்  அட்வான்ஸ்  கொடுக்கபடுகிறது 


 இந்த  விஷயம்  எதுவும்  நாயகிக்குத்தெரியாது . தெரிய  வந்ததும்  மனம்  உடைகிறாள். கேஸ்  நடக்கிறது . இன்னமும்  ஜாமீன்  கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட  சூழலி  அந்த  செல்வந்தன்  மாரடைப்பில்    மரணிக்கிறான். இதனால்  நாயகனுக்கு  பேசபட்ட  பணம்  செட்டில்மெண்ட்  ஆவதில்  சிக்கல் .  கேசிலும்  சிக்கல் . 10  வருட  தண்டனை  கிடைக்கிறது 


இதற்குப்பின்  நாயகன்  நாயகி  இணைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ரக்‌ஷி  ஷெட்டி  இவர்  தான்  தயாரிப்பாளரும்  கூட . தாடி  வைத்த  முகமாய்  சோகமான  நடிப்பு. அனைவரது  இரக்கத்தையும்  சம்பாதிக்கிறார்


 நாயகி  ஆக  ருக்மணி வசந்த், கண்கள்  மூலமாகவே  மொத்தக்கவிதைகளையும் இறக்கி  வைக்கிறார். மிக  எளிமையான அழகான  ஒப்பனை  இல்லாத  ஒப்பனை  தேவைப்படாத  இயற்கை அ ழகு  முகம், பிரமாதமான  நடிப்பு, அடிக்கடி  காதலனை  இடியட்  என  திட்டும்  அழகு  செம 


142  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் . சரண்  ராஜ்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம், பிஜிஎம்  பக்கா . அத்வைதா  குருமூர்த்தியின்  ஒளிப்பதிவில்  நாயகிக்கான  க்ளோசப்  ஷாட்களில்  ,முத்திரை  பதிக்கிறது 


 ஹேமந்த்  எம்  ராவ்  தான்  இயக்குநர். இரண்டு  பாகங்களாக  படம்  வெளி  வரும்  என  தீர்மானித்த  விதம்  துணிச்சலின்  அடையாளம் 

சபாஷ்  டைரக்டர்


1  ஜெயிலுக்குப்போனவன்  இனி  10  வருசம்  கழிச்சு  வரும்  வரை  உன்  வாழ்க்கை ?  அவனை  மற  என  அம்மா  சொல்லும்போது  நாயகி  அப்பா  இறந்ததும்  ஏன்  நீ  இன்னொரு  கல்யாணம்  பண்ணிக்காம  அப்பா  நினைவாகவே  இருந்தே? என  மடக்குவது  குட்  ஒன் 


2  ஜெயில்  காட்சிகள், தத்ரூபமான  வில்லன்  நடிப்பு 


3 செல்வந்தன்  இறந்ததும்  எதிர்பாரத  திருப்பம்  நிகழ்வது 


4  ஜெயிலில்  ஒரு  கைதி  என்  மனைவி  என்னைப்பார்க்க  வரும்போது  விசிட்டிங்  டைம்  முடிந்தபின்  போய்  விடுவாள், ஆனால்  உன்  காதலி  உன்னைப்பிரிய  மனம்  இல்லாமல்  திரும்பித்திரும்பிப்பார்த்தபடி  செல்வாள்  என  நாயகனிடம்  சொல்வது 


  ரசித்த  வசனங்கள் 


1  டியர் ,உன்னை  காரில்  வீட்ல  டிராப்  செஞ்சதுக்கு  நீ  டாக்ஸ்  கட்டனும்

 வாட்?

 ஸ்பெஷல் டாக்ஸ்

 ஓ, கிஸ்சா?


2  நான் பெங்களூர்  வர  மாட்டேன், அங்கே  கடல்  இல்லையே?

  வலம்புரி  சங்கு  காதுல  வெச்சுக்கேட்டா  கடல்  அலை  சத்தம்  கேட்கும், அது  மாதிரி  உன்  நினைவுகளில்  கடல்  அலைகள்  கலந்திருக்கு 

3  மக்கள்  வாழ்நாள்  பூரா  உழைக்கறாங்க , ஆனா  ஒரு  பிட்  நிலம்  கூட  வாங்கறதில்லை


4  ஜெயில்ல  இருப்பது  பெரிய  தண்டனை  இல்லை, குற்ற  உணர்வுடன்  வெளில  சுத்திட்டு  இருந்தாதான்  அது  தண்டனை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  செய்யாத  விபத்தை  செய்ததாக  பழி  ஏற்றுக்கொள்ள 35  லட்ச  ரூபாய்  பேரம்  பேசி  டீல்  ஓக்கே  ஆன  பின்  ரூ 3  லட்சம்  மட்டும்  அட்வான்ஸ்  தரும்  ஓனரிடம்  நாயகன்  மீதி  பணத்துக்கு  போஸ்ட்  டேட்டட்  செக்  தந்து  விடுங்கள்  என  ஏன்  சொல்லவில்லை ?


2  ஓனர்  ஹார்ட்  அட்டாக்கில்  இறந்ததும்  நாயகனின்  மனைவி  ஓனரின்  மனைவி, மகனை  சந்தித்து  இப்போது  செட்டில்மெண்ட்  செய்யவில்லை  எனில்  கோர்ட்டில்  நடந்த  உண்மைகளை  சொல்லி  மாட்டி  விடுவோம்  என  ஏன்  மிரட்டவில்லை ? 


3 நாயகி  ஓனரின்  பி ஏ  வை  சந்திக்கிறார், ஓக்கே,  ஓனரின்  மனைவி , மகனை  ஏன் சந்திக்கவில்லை ? 


4  கேஸ்  இன்னும்  முடியவில்லை , தீர்ப்பு  வரவில்லை . பின்  என்ன  தைரியத்தில்  ஓனரின்  மனைவி , மகன், பி  ஏ  மூவரும்  நாயகனை நட்டாற்றில்  விட  துணிகின்றனர். திடீர்  என  நாயகன்  தன்னிலை  விளக்கம்  அளித்தால்  மாட்டிக்கொள்வோம் என்ற  பயம் இருக்காதா? 


5  நாயகன்  தான்  கார்  ஓட்டினார்  என்பதற்கு  சாட்சி  இல்லை . அந்த  காருக்கும் நாயகனுக்கும்  தொடர்பு  இல்லை . நாயகன்  அந்த  செல்வந்தனிடம்  டிரைவராகப்பணி  ஆற்றவில்லை . இந்த  மூன்று  பாயிண்ட்ஸ்  போதுமே  தீர்ப்பு  நாயகனுக்கு  சாதகமாக  வர, ஆனால்....... 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மகாநதி , குணா  மாதிரி  மெலோ  டிராமா  பார்த்து  ரசித்தவர்களுக்குப்படம்  பிடிக்கும் .    ரேட்டிங் 3 / 5 


Sapta Saagaradaache Ello – Side A
Theatrical release poster
Directed byHemanth M. Rao
Written byGundu Shetty
Hemanth M. Rao
Produced byRakshit Shetty
StarringRakshit Shetty
Rukmini Vasanth
CinematographyAdvaitha Gurumurthy
Edited bySunil S. Bharadwaj
Hemanth M. Rao
Music byCharan Raj
Production
company
Distributed byKVN Productions
Release date
1 September 2023
Running time
142 minutes
CountryIndia
LanguageKannada
Budget10 cr[1]
Box office25.5 cr[2]