ஹீரோ காலேஜ் லைஃப்ல ஜாலியா ஃபிகர்ங்க கூட கடலை போட்ட கடலை மன்னன் கந்த சாமி.. கட்டதுர மாதிரி அவர் சும்மா கடலை தான் போட்டாரே தவிர சாகுபடி ஏதும் செய்யலை.. அதுல ஃபோன் மூலமா அறிமுகம் ஆகி சண்டைல பிரிஞ்ச ஒரு ஃபிகர் தான் ஹீரோயின்.. ஆளை நேர்ல பார்க்காமயே பிரிஞ்சாச்சு..
இப்போ ஹீரோ கம்ப்யூட்டர் எஞ்சினியர்.. அவரோட கேர்ள் ஃபிரண்ட்க்கு ஃபோன் போடறப்ப அந்த கேர்ள் ஃபிரண்ட் ஆஃபீஸ்ல வேலை செய்யற மலர்ங்கற ஃபிகர்தான் தன் முன்னாள் ஃபோன் மேட்னு கண்டு பிடிக்கறார்.. ஒன் சைடு லவ்.. கார்த்திக்ங்கற தன் உண்மை பேரை மறைச்சு சுந்தர்ங்கர பேர்ல அறிமுகம் ஆகி மலரை மயங்க வைக்கிறார்.. இப்போ அந்த மலர் சுந்தரை லவ்விங்க்..
ஹீரோ கார்த்திக்கா மலருக்கு அப்பப்ப ஃபோனை போட்டு வெறுப்பேத்துறார். அப்போதான் சுந்தரை அவர் விரும்புவார்னு.. அந்த லூஸ் ஹீரோயின் கார்த்திக், சுந்தர் 2ம் ஒரே ஆள் தான்கறது தெரியாம லவ்வுது..
இவங்க 2 பேருக்கும் பப்ளிக் ஃபிரண்ட் அதாவது பொதுவான ஃபிரண்ட் ஒருத்தி இருக்கா.. அவ ஹீரோட்ட சொல்லிடறா.. ஹீரோயின் கிட்டே உண்மையை சொல்லிடு இல்லீன்னா நானே சொல்லிடுவேன்னு.. இவ எதுக்கு இந்த சுப்ரமணியம் சாமி வேலை செய்யனும்னு ஹீரோ எரிச்சல் ஆகி அப்படி எல்லாம் உடனே சொல்ல முடியாது டைம் வேணும்னு கேட்கறான்..
திடீர்னு ஹீரோ ஹீரோயின் கிட்டே நான் உன் கிட்டே ஒரு உண்மையை மறைச்சுட்டேன்.. ஆனா அது என்ன?னு கேட்காதே.. நாம பிரிஞ்சுடலாம்கறான் ..அதுக்குப்பிறகு என்ன ஆச்சு? 2பேரும் சேர்ந்தாங்களா? ஆடியன்ஸ் சோர்ந்தாங்களா? என்பதே மீதிக்கதை..
எங்கியோ கேள்விப்பட்ட கதை மாதிரி இருக்கா? எண்ட மூரி வீரெந்திர நாத் எழுதுன காதல் சதுரங்கம் தெலுங்கு நாவல் தான் இது.. ஆல்ரெடி குள்ள நரிக்கூட்டம்னு ஒரு படம் வந்ததே அந்தப்படமும் கிட்டத்தட்ட இந்தக்கதை தான்.அதுல ஹீரோ போலீஸ் ட்ரெயினர்.. இதுல கம்ப்யூட்டர் எஞ்சினியர். ஆனா லீலை படம் 4 வருடங்களுக்கு முன்பே ரெடி ஆன படம்.. ஏன் போணி ஆகலை.. ஏன் ரிலீஸ் ஆகாம இழுத்தடிச்சுதுன்னு யாருக்கும் தெரியலை.. கம்ப்பெனி சீக்ரெட்..
ஹீரோ பேரு ஷிவ் பண்டித்.. கொஞ்சம் மாதவன் கொஞ்சம் ஷாம் .. மீசை இல்லாத ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஈசியா வரத்தொடங்கிட்டாங்க.. லவ் சப்ஜெக்ட் ஸ்டோரில ஹீரோக்கள் அதிகமா மெனக்கெட தேவை இல்லை என்பதால் சமாளீக்கிறார்.. காமெடி காட்சிகளீல் கொஞ்சம் பம்முகிறார்.. ஹீரோயின் உடன் பாடி கெமிஸ்ட்ரி குட்.. அதானே பார்த்தேன்.. அதுல மட்டும் கரெக்ட்டா இருப்பாங்களே//,
ஹீரோயின் பேரு மனசி பரேக் கோகில்.. என்னமோ கன்னட பட டைட்டில் மாதிரி இருக்கு.. பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா.. லிப்ஸ்டிக் கொஞ்சமா போட்ட மாநிற பலா .. க்ளிப்போ, ரப்பர் பேண்டோ போட்டு கட்டி வைக்காத கர்லிங்க் ஹேர் அழகி .. 50 மார்க் ஃபிகர் .. தேறிடுவார்னு தோணுது.. பாடல் காட்சிகளீல் தடுமாற்றம்.. காதல் காட்சிகளீல் கனகச்சிதம்..
ஹீரோயின் ஃபிரண்டா வர்றவர் பேரு சுஹாசினி ராஜு.. த்ரிஷா அம்மா சாயல் முக ஜாடைல மற்றபடி யூத்தான்.. ஹீரோயினை விட 4 இஞ் உயரம்.. எனக்குத்தெரிஞ்சு ஹீரோயினை விட ஹீரோயின் தோழி இவ்ளவ் உயரம் இருந்து இப்போ தான் பார்க்கறேன்.. உயரத்துல தான் ஹீரோயினை இவர் முந்தறார்.. மற்றபடி எல்லாத்துலயும் ஹீரோயின் தான் முன்னிலை..
சந்தானம் காமெடிக்கு தனி டிராக் போட்டது தெரியாத மாதிரி பார்த்துக்கொண்டது சாமார்த்தியம்.. இதில் சந்தானம் சொந்த வசனம் பேச வாய்ப்பு அதிகம் இல்லை.. ஸ்க்ரிப்டில் என்ன இருக்கோ அதைத்தான் பேசறார். ஆனாலும் ரசிக்கலாம்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்.
1. ஹீரோ சந்தானம் வீட்டுக்கு வந்து நான் ஒருத்திக்கிட்டே இருந்து தப்பிக்கத்தான் இங்கே வந்திருக்கேன்.. ஒளிஞ்சுக்கறேன் என சொல்லும்போது யார் இடம் இருந்து தப்பிக்க நினைத்தாரோ அதே ஆள் ஆல்ரெடி அங்கே இருக்கும் போது செம காமெடி சிச்சுவெஷன்.. அந்த காட்சியில் மூவர் நடிப்பும் ஓக்கே
2. அதே போல் ஹோட்டலில் ஹீரோ, ஹீரோயின், ஃபிரண்ட் மூவரும் சந்திக்கும் காட்சி ரசிக்க வைக்கும் காமெடி
3. படத்தில் கவர்ச்சிக்கு வாய்ப்பிருந்தும் மிக கண்ணியமாக காதலை, ஹீரோயினை காட்டிய விதம் ( நற நற வட போச்சே.. )
4. சில்லென்ற ஒரு கனவு, பொன் மாலைப்பொழுதே, உன்னைப்பார்த்த பின்பே என 3 பாடல்கள் தேறுது.. எல்லாமே மெலோடி தான்...
5. சந்தானம் காமெடி படத்துக்கு எந்த அளவு தேவையோ கதையோடு வர்ற மாதிரி கனக்ச்சிதமா தேவையான அளவு மட்டும் யூஸ் பண்ணிய விதம்.
6. பட போஸ்டர் டிசைனும், பேப்பர் விளம்பரங்களும் நீட்..
7. ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஹீரோயின் பொட்டு வெச்சு அழகா வர்றார். படம் பூராவே அப்படி வந்திருக்கலாம்
7. ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஹீரோயின் பொட்டு வெச்சு அழகா வர்றார். படம் பூராவே அப்படி வந்திருக்கலாம்
இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. தமிழ் அகராதியில் லீலை என்பதற்கு 1000 அர்த்தங்கள் இருந்தாலும் தமிழனின் அகராதியில் லீலை என்பதற்கு ஒரே அர்த்தம் கில்மா தான்.. ஒரு நல்ல காதல் கதைக்கு ஏன் லீலை என்ற நெகடிவ் டைட்டில்?
2. ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணுன பிறகு அவன் ஃபேமிலி பேக் கிரவுண்ட், வீடு எது? அப்டி எதுவும்னே தெரியாம அல்லது தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லாமலா இருப்பாங்க?
3. ஹீரோ என்னமோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி ஃபீல் ஓவரா விடறார். தன் பேரை மட்டும் மாத்தி சொல்றார்.. அவ்லவ் தானே.. ஒரு முழுப்படத்தையும் உட்கார்ந்து பார்க்க வைக்க அந்த ஒரே ஒரு KNOT பத்தலையே.. இதெல்லாம் ஜூஜுபி மேட்டர் ஆச்சே?
4. ஹீரோ ஹீரோயின் எப்படியும் சேர்வாங்க அப்டிங்கறது உள்ளங்கை நெல்லிக்கனி போல , அல்லக்கை தாமரைக்கனி போல தெரிஞ்சுடுதே எப்படி ஆடியன்ஸ்க்கு சுவராஸ்யம் வரும் திரைக்கதைல?
5. ஹீரோயினோட அப்பா உன் காதலனை வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன்னியே? என்னாச்சு? என ஃபிரண்ட்லியாக அப்பா கேட்கரப்ப அப்பா எனக்கும் அவருக்கும் சின்ன ஊடல்... இப்போ வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்னு ஏன் ஹீரோயின் சொல்லலை? பூசி மெழுகறா.. தேங்காய் உடைச்ச மாதிரி சொல்றதுக்கென்ன?
மனதில் நின்ற வசனங்கள்
1. என்னை விட்டுட்டு போனது கூட எனக்கு பெரிசா தெரியலைடி.. போறப்ப உனக்கு மோனாவே பெட்டர்னு சொல்லிட்டு போய்ட்டான்.. அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை
2. கலையாத முடி, காட்டன் சுடி,கைல பேக் இண்டர்வியூக்கு வராம காபரே டான்ஸ் ஆடவா வந்திருப்பீங்க?
3. என்னா ஆச்சு? வேலை கிடைச்சுதா?
பேடு லக்
அடடா..
அதாவது கம்ப்பெனிக்கு பேடு லக்.. ஹா ஹா எனகு வேலை கிடைச்சுச்சு
4. அடடா.. பில்டப் பண்ண விடமாட்டெங்கறாங்களே..
5. மேனேஜர் இருக்காரா? நான் அவரை இண்டர்வியூ பண்னனும்./.
வாட்?
சாரி ? அவர் என்னை இண்டர்வியூ பண்ணனும்
6. மிஸ்.. அடிக்கடி நாம் மீட் பண்ணப்போறோம்.. ஒவ்வொரு முறையும் ஹலோன்னு சொன்னா நல்லாருக்காது.. அதனால பேரு சொல்லுங்க ஹி ஹி
7. ஆல் த பெஸ்ட்..
எனக்கு ஏன் சொல்றீங்க..
சாரி எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்
8. நான் ஒரு ரஃப்ஃபான சாஃப்ட் வேர் இஞ்சினியர்
9. டேய்.. நிஜமாவே கருணை மலர் அழகா இருப்பாளா?
தேன் கூடு மாதிரி தலையை வெச்சிருக்காளே, இவ மேல சத்தியமா சொல்றேன் அவ செம அழகுடா..
10. இங்கே என்ன பண்ணிட்டு இருக்கே?
உண்மையை சொன்னா எப்படியும் நீ நம்ப மாட்டே.. சைட் அடிச்சுட்டு இருக்கறதா நினைச்சுக்கோ.
11. நான் சொன்ன படி அவ அழகா இல்லைன்னா இதோ இவளுக்கு மொட்டை அடிச்சுடறேன்
12. நீங்க கேட்கறதால இந்த சிடியை கொடுக்கறேன்.. ஆனா பொண்ணுங்கறதாலதான் கொடுத்ததா என்னை தப்பா நினைக்கக்கூடாது
13. ரொம்ப நல்லவனாவே இருக்கட்டும், ஆனா பேரைக்கூட கேட்காத தத்தியாவா இருப்பாங்க?
14. அடுத்தவன் ஃபிகருக்கு ஏண்டா இப்படி அலையறீங்க?
15. கிஸ்னா வாய்ல தரனும் அவ வெச்சிருக்கறதுக்குப்பேரு வாயா? கோடாலி.. பல் பட்டு உதடு கிழிஞ்சிருச்சு..
16. பார்ட்டி வெச்சே ஓக்கே யார் பாக்கெட்ல கையை வெச்சே?
17. சார்.. கார் எடுக்கனும்
லோனா?.. ஏன் சார் பெட்ரோல்விக்கற விலைல கார் வாங்க ஆசை?
நீங்க உங்க காரை எடுத்தா அதுக்குப்பின்னால நிக்க வெச்சிருக்கற என் சைக்கிளை நான் எடுத்துக்குவேன்
18. இனிமே புரியாத மாதிரி எவனாவது மொட்டையா பேசுனா எவனுக்குமே கொ சாரி சட்டை இருக்காது..
19. அந்தக்கால பொண்ணுங்க புருஷன் பேரை சொல்லமாட்டாங்க, இந்தக்கால பொண்ணுங்க புருஷன் இருக்கறதையே சொல்றதில்லை.
20. நாங்க எல்லாம் பீச் காத்துலயே பீடி பத்தவைக்கறவங்க டா..
21. உங்களை மாதிரி குடும்பத்து குத்து விளக்கை ஏத்தத்தான் அவன் வெயிட்டிங்க் ஹி ஹி ஐ மீன் உங்களுக்கு அவன் தான் ஏத்தவன்
22. என்னது அந்தப்பொண்ணு சிலாய்க்கு மலாய்க்காவா? ( டிக்கெட்டா?)
அப்புறம் ஏன் பாவாடை தாவணில வருது?
23. ஏ டி எம் = ஏ டைம் மேட்டர்
24. மிஸ் ,3 நைட், 2 பகல்..
ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் - 2500 ரூபா ஆகும்..
ஹலோ, ஹோட்டல்ல தங்க..
ஓ சாரி.. நான் என் கூட தங்கறதுக்குனு நினைச்சுக்கிட்டேன் ஹி ஹி
25. ஆளாளுக்கு டேக் ஓவர் பண்ண அது அம்பாசிடர் காரா? அத்தை பொண்ணா?
26. அங்கே சப்பி சப்பி சாப்பிடுதே அந்த சப்பிதாதான் உன் பப்பிதாவா?
27. அஸ் பர் ஆலமர பஞ்சாயத்து தீர்ப்பு அவனவன் அத்தை பொண்ணை அவனவனே தான் ஓட்டிட்டு போகனுமாம்
28. ஏன்? ஹிந்தி ஃபிகரை லவ் பண்ணக்கூடாதா? ஹிந்திப்படத்தை டப் பண்ணா பார்க்கறீங்க? ஹிர்ந்தி ஆண்டியை ( சேட்டு பொண்ணை ) சைட் அடிக்கறீங்க.. லவ் பண்ணா ஒத்துக்கிட மாட்டீங்களே..
29. என்ன மேடம் கண்டிஷன்? மேரேஜ்க்கு முன்னே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடனுமா? ஐ ஆம் ரெடி ஹி ஹி
30. இப்படிக்கு ரோஸ்..
அவனா நீ..
31. . தன் கண்ணுக்கு அழகா தெரியற பெண்ணை பசங்க காதலிக்க நினைப்பாங்க, அல்லது கை வைக்க நினைப்பாங்க . இந்த விஷயத்துல எல்லா பசங்களும் ஒண்ணுதான்
32. மனசுக்குள்ள என்ன நினைக்கறானோ அதை வெளீல சொல்லாம பசங்களால இருக்கவே முடியாது
33. நீ என் கிட்டே டீசன்சியா இருக்கே.. நல்ல ரிலேஷன்ஷிப் வெச்சிருக்கே.. ஆனா டிஸ்டென்ஸ் மெயிண்ட்டெயின் பண்றே.. அது ஏன்?
34. பொண்ணுங்க லவ் பண்றாங்களா? இல்லையா?ங்கற மேட்டர் தெரியற வரை பசங்க ரிஸ்க் எடுக்க மாட்டாங்க
35. ஃபிகரு , கம்ப்யூட்டர் 2ம் ஒண்ணுதான்
1. இரண்டுக்கும் விரல் முக்கியம்
2. மடிச்சுதான் லேப்டாப்பை வெளில எடுத்துட்டு போக முடியும், ஃபிகரையும் மடிஞ்ச பின் தான் வெளில கூட்டிட்டு போக முடியும்..
3. அடிக்கடி 2ம் ஹேங்க் ஆகிடும்
36. கூகுள்ள என்ன தேடறே?
எங்கே ஒரு பெக்குக்கு ஒரு ரூபா கம்மின்னு தேடறேன்
37. சாரி.. நான் அங்கே வந்து தண்ணீ அடிக்க மாட்டேன்.. பேரு கெட்டுடும்..
குடல், கெட்டாச்சு, பாடி கெட்டாச்சு ஈரல் கெட்டாச்சு ஏண்டா நாயே பேரு கெட்டா என்ன? கெடாட்டி என்ன?
38. பிராப்ளம் இல்லாத லவ்வே இல்லை
39. லவ்ல நாம விட்டுட்டு வர்றதை விட நம்மளை ஒருத்தர் விட்டுட்டு வர்றதுதான் ரொம்ப கொடுமையானது
40. ரெண்டு பேருக்குள்ள ஒரு பிரச்சனைன்னா அதை 3 வதா ஒரு நபர் பேசித்தீர்ப்பது நல்லது
41. நீ எத்தனையோ தப்பு பண்றே.. அதை நீ மன்னிச்சுடறே.. ஆனா அவன் ஒரு தப்பு பண்ணுனா அதை தாங்கிக்க முடியலை, உன்னால மன்னிக்க முடியலை.
இந்தப்படம் பி ,சி செண்ட்டர்களில் சுமாராத்தான் போகும், ஏ செண்டர்களீல் 30 நாட்கள் ஓடும்
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் -40
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் -ஓக்கே
சி.பி கமெண்ட் - காதலர்கள், பெண்கள் பார்க்கலாம்
ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்
டிஸ்கி -
hotlinksin.com
சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. துவங்கிய வேகத்திலேயே ஏராளமான வாசகர்களை பெற்றுள்ளது. பதிவர்களே உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
சமீபத்தில் துவக்கப்பட்டுள்ளது. துவங்கிய வேகத்திலேயே ஏராளமான வாசகர்களை பெற்றுள்ளது. பதிவர்களே உங்கள் பதிவுகளை இணைத்துவிட்டீர்களா...
உங்கள் பதிவுகளை இங்கேயும் இணைக்கலாமே
மேலும் ஒரு திரட்டி உங்களுக்காக...