Showing posts with label SAMRAT PRITHVIRAJ -சாம்ராட் பிருத்விராஜ் 2022 - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label SAMRAT PRITHVIRAJ -சாம்ராட் பிருத்விராஜ் 2022 - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, July 28, 2022

SAMRAT PRITHVIRAJ ( ஹிந்தி) -சாம்ராட் பிருத்விராஜ் 2022 - சினிமா விமர்சனம் ( அமேசான் பிரைம் )


 இந்தப்படத்துல சில வரலாற்றுப்பிழைகள்  இருக்கறதா  படிச்சவங்க  சொல்றாங்க . நான் ஸ்கூல்ல  படிக்கும்போது  ஹிஸ்டரி  டீச்சரா  இருந்த  வனசுதா  டீச்சர்  மேல  சத்தியமா  சொல்றேன், எனக்கு   இந்த மன்னர்  வரலாறு சரியாத்தெரியாது . குத்துமதிப்பா  பட  இயக்குநர்  திரைக்கதைல  என்ன  அடிச்சு  விட்டிருக்காரோ  அதுக்கான  விமர்சனம்தான்  இது . எதுக்காக  இந்த  முன்  ஜாமீன்னா  விமர்சனம்  படிச்ட்டு  யாரும்  உனக்கு  வரலாறு  தெரியுமா? சரித்திரம்  தெரியாத  தரித்திரமே!  அப்டினு  எல்லாம்  வசை  பாட  வேண்டாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


எனக்குத்தெரிந்த  பிருத்விராஜ்னா  ஒரு  தாயின்  சபதம்  படத்துல  டி ஆரால்  அறிமுகப்படுத்தப்பட்ட  பப்லு  எனும்  பிருத்விராஜ்தான். அம்மாடியோவ்  ஆத்தாடியோவ்  அவ  மேனிதான்  கண்ணாடியோவ் (  அது  எதுக்கு  ஒவ்வொரு வார்த்தைக்கடைசிலயும்  யோவ்  வருது? )  பாட்டுக்கு  டான்ஸ்  ஆடுனவர் .மன்னர் பிருத்விராஜ். அந்தக்காலத்துலயே  லவ்  மேரேஜ்  பண்ணுனவர்னு  வேணா  அரசல்  புரசலா  தெரியும்.  மணப்பெண்ணைக்கடத்திட்டுப்போய்  மேரேஜ்  பண்றவங்களை  இவரு  பெரிய   பிருத்விராஜ்  அப்டினு  சொல்வோம்


 12ம்  நூற்றாண்டில்  வாழ்ந்த  மன்னர்  இவர் . இவரோட  வாழ்க்கையை  அடிப்படையா  வெச்சு  கொஞ்சம்  பட்டி  டிங்கர்ங்  பண்ணி  சொந்த  சரக்கை  அள்ளி  விட்டு  எடுத்த  படம்  தான்  இது . 


பிருத்விராஜ்  டெல்லிக்கு  ராஜா .  கன்னூஜின்  ராஜா  மகள்   சம்யுக்தாவுக்கும்  இவ்ருக்கும்  லவ்வு  இது  சம்யுக்தா வோட  அப்பாவுக்குப்பிடிக்கலை ,  எந்த  அப்பாவுக்குதான்  மகளோட  காதல் பிடிச்சிருக்கு ? 


அப்பாவோட  தடையை  மீறி  சம்யுக்தா பிருத்விராஜ்  மேரேஜ்  நடக்குது. இதனால  கடுப்பான  மாமனார்   மாப்ளை  பிருத்விராஜ்  உடைய  எதிரியான  முகமது  கோரியுடன்  இணைந்து  அவரை  வீழ்த்தப்பார்க்கிறார். அவரோட  எண்ணம்  நிறைவேறுச்சா?   இல்லையா? என்பதே  கதை 


ஹீரோவா  பிருத்விராஜா  நடிகர்  அக்சய் குமார்  , இவரு  போலீஸா  மிலிட்ரி  ஆஃபீசரா  நடிக்கத் தகுதியான  உயரமான  ஆள்தான்  ஆனா  மன்னரா  நடிக்க  கெத்து  பத்தலை . குறிப்பா  அந்த  ஒட்டு  மீசை  எடுபடலை 


ஹீரோயினா  சம்யுக்தாவா   மனுஷி  சில்லர் . இவர் 2017 ஆம்  ஆண்டின்  உலக  அழகியாம் .  1000ம்தான்  இருந்தாலும்  ஐஸ்வர்யாராய்  மாதிரி    வருமா? நம்மால  சுஷ்மிதா  சென்னையே  ஏத்துக்க  முடியல, ஆனா  நடிப்பைப்பொறுத்தவரை  ஓக்கே 


  சோனு சூட்  சமூக  வலைத்தளமான  ட்விட்டரில்  ஏராளமான  ரசிகர்களைப்பெற்றவர்  காரணம்  அவரது  நல்ல  உள்ளம் . நற்பணிகள்  இதுல அவரு  அரசவைக்கவிஞர்  கம்  ஜோதிடராக  வருகிறார்.  வர்ற  நேரத்துல  பாதி நேரம்  ஜால்ரா  அடிக்கற  வேலைதான்  ஓவரா  புகழ்ந்துட்டே  இருக்காரு  ஹீரோவை  முடியலை 


சஞ்சய் தத்  ஒரு  கேரக்டரில்  வர்றார்  கம்பீரமான  நடிப்பு , 

பாடல்கள்  இசை  பரவாயில்லை  ஒளிப்பதிவு  ஆர்ட்  டைரக்சன்  அருமை . லொக்கேஷன்கள்  எல்லாமே  நல்லாருக்கு 


  லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1   பொதுவா  மன்னர்னா  மக்கள்  நன்மைக்காக  சண்டை  போடனும்.,  போர்னு  வந்தா  ஏதாவது  தகுந்த  காரணம்  இருக்கனும்.,  ஏதோ  ராஜாவோட  13  வது  சம்சாரத்தை  இன்னொரு  ராஜ்யத்தில்  இருக்கும்  சிற்றரசன்  சின்ன  வீடா  வெச்சுக்க  ஆசைப்பட்டான்  அவன்  அடைக்கலம்  புகுந்தான்  என்பதற்காக  நாடுகளுக்கிடையே  போர்  புரிவது  லூஸ்  தனமா  இருக்கு  , அதுக்கு  ஒரு  வியாக்கியானம்  வேற  ஹீரோ  பேசறாரு . என்னை  அடைக்கலமா  நாடி  வந்தவரை  விட்டுக்கொடுக்க  மாட்டேன்   அப்டினு  பஞ்ச்  டயலாக்  வேற  கடுப்பா  இருக்கு 


2   பிருத்விராஜை  நேர்மையான    முறையில்  போர்  புரிந்து  ஜெயிக்க  முடியாத  வில்லன்  நைட் எல்லாரும்  தூங்கிட்டு  இருக்கும்போது  ஊடுருவி  தாக்கறாங்க,  எந்த  மன்னராவது  நைட்  செக்யூரிட்டி  இல்லாம  போர்க்களத்தில்  தூங்கிட்டு  இருப்பாரா?  அந்தப்புரத்துக்கே  ஆறடுக்கு  பாதுகாப்பு  இருக்கும் 


3  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  ஹீரோவான  பிருத்விராஜ்  மன்னர்  தன்  மனைவி  ராணிக்கும்   அதிகாரம்  தர்றதா  சொல்றார். ஆனா  ராணி  அதை  ஏற்க  மறுக்கிறார்  (  12ம்  நூற்றாண்டிலேயே  பொண்ணுங்க  அது  ராணியா  இருந்தாலும்   ரத்னமா  இருந்தாலும்  புருசன்  பேச்சைக்கேட்பதில்லை  என்ற    தகவல்  மனசுக்கு  திருப்தியா  இருக்கு  ஏன்னா  நம்ம  சம்சாரம்  மட்டும்  தான்  நம்ம  பேச்சைக்கேட்பதில்லைனு  நாம  வருத்தப்படவேண்டியதில்லை ) அப்படி  அதிகாரம்  பெற்ற  ராணி  ஒரு   போரில்  ராஜா  சிறை  பிடிக்கப்பட்டதும் அக்னி  குண்டம்  மூட்டி அதில்  தீக்குளிக்க  ரெடி  ஆகறார். எப்படியும்  போகப்போற  உயிர்  போர்க்களம்  இறங்கி  10  பேரைக்கொன்னுட்டு  போலாமில்ல? அவரு  சாகறதும்  இல்லாம  அந்த  நாட்டு  வீரர்கள்  மனைவிகள்  எல்லாரும்  அப்படியே  வீணா  சாகறாங்க 


4  க்ளைமாக்ஸ்  மகா  சொதப்பல் . கைதியா  இருக்கும்  ஹீரோ  எதிரி  மன்னரைப்பார்த்து  ஒத்தைக்கு  ஒத்தை  வர்றியா?னு  கேட்க  அவரும்  லூஸ்  மாதிரி  போய்  மாட்டிக்கறார்.  தெலுங்கு  டப்பிங்  படம்  பார்த்த  ராஜ  வம்சம்  போல 


5  க்ளைமாக்ஸ்ல  சிங்கங்களை  கொன்னுட்டு  ஹீரோ  எதிரியைப்பார்த்து  அப்பாவி  சிங்கத்தை  கொல்ல  வெச்சுட்டியே  பாவினு  டயலாக்  பேசறாரு . ஏன்  இவரு  கொல்லாம  நான்  அப்பாவி  சிங்கத்தைக்கொல்ல  மாட்டேன்னு  சொல்லலாமில்ல? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  வசூல்  ரீதியா  தோல்விப்படம்  ஆனா  விமர்சன  ரீதியா  வட  இந்தியாவில்  பாராட்டுப்பெற்ற  பட,ம்  அதனால  சும்மா  பொழுது  போகலைனா  அமேசான்  பிரைம்ல  கணக்கு  இருந்தா  பார்க்கலாம். ஹிந்திப்படம்  தான்  ஆனா  தமிழ்  வெர்சனும்  இருக்கு   ரேட்டிங்  2/.25  5  இது  வார்  டிராமாதான்  ஆனா  கொஞ்சம்  போர் (அடிக்கும்)  டிராமா