உதயம் தெலுங்கு டப்பிங்க் ரிலீஸ் ஆனப்போ நாகார்ஜூன்க்கு சிரிக்கவே தெரியாதா? எப்பவும் முகத்தை உர்னு வெச்சுட்டு இருக்காரே.. அப்படின்னு ஒரு டாக்..(TALK) அவர் நடிச்ச மணிரத்னம் படமான இதயத்தை திருடாதே ( தெலுங்கில் கீதாஞ்சலி) படத்திலும் அதே விமர்சனம் தான்.. இப்போ அவர் பையன் நாக சைதன்யா ஹீரோ ஆகிட்டார்.. அப்பாவுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கார்.. தெலுங்குல இவர் சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரோன்னு பயமா இருக்கு ..
வில்லன் ஒரு லேடீஸ் புரோக்கர்.. அதாவது இங்கே உள்நாட்ல இருக்கற பெண்களை கடத்தி வெளிநாட்டுக்கு பெண்களை விற்கற ஆள்.. ஒரு பெண்ணுக்கு ஒரு கோடி.. கையில் ஒரு லேடி, கிவ் மீ எ கோடி , மீ எ கேடி.. இதுதான் வில்லனோட தாரக மந்திரம்.. இவரோட கேவலமான பிஸ்னெஸ்ல ஒரு சறுக்கல்.. தெரிஞ்சோ தெரியாமயோ ஹீரோ வில்லனோட பிஸ்னெஸ்ல ஒரு டைம் கிராஸ் ஆகி அவருக்கு ஒரு லாஸை ஏற்படுத்திடறாரு..
வில்லன் ஹீரோவைப்போட்டுத்தள்ள ஐவர் குழுவை அமைக்கறாரு.. ஹீரோ வெட்டாஃபீஸ்.. ஹீரோயின் பயங்கர செல்வச்சீமாட்டி.. ஹீரோயின்க்கு அவங்கப்பா ஒரு ஃபாரீன் மாப்பிள்ளையை நிச்சயம் பண்றாரு.. அந்த மாப்பிள்லை ஆள் படா ஷோக்காத்தான் இருக்காரு.. ஆனா பாருங்க, ஹீரோயினுக்கு அவனை பிடிக்கலை..
அவருக்கு தெரு பொறுக்கும் ஹீரோ தான் பிடிச்சிருக்கு.. ( இந்த மாதிரி கேவலமான கதைகளை படிச்சுட்டு, படம் பார்த்துட்டு யாரும் இதுவரை பார்த்துட்டு இருக்கற நல்ல வேலையை ரிசைன் பண்ணிட்டு ஊர் சுத்த ஆசைப்பட்டதில்லை, நல்ல வேளை )2 பேரும் லவ்வறாங்க.. ஹீரோவுக்கு ஒரு அண்ணன்.. அவர் வில்லனோட கேங்க்ல தான் இருக்கார் அப்டிங்கறது இடைவேளை ட்விஸ்ட்ல தான் டைரக்டர்க்கு தெரியுது.. ஆனா பாருங்க படம் போட்ட 20 வது நிமிஷமே நமக்கு புரிஞ்சுடுது..
வில்லன் ஹீரோவை கொலை செஞ்சானா? ஹீரோ ஹீரொயினை மேரேஜ் செஞ்சாரா? என்பதுதான் மிச்ச சொச்ச கதை..
ஹீரோ நாக சைதன்யா ஆள் தலையே சீவாம , தாடியோட முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டாம நடிச்சிருக்கார்.. தேறுவது ரொம்ப கஷ்டம்.. ஆனா தெலுங்குல ஹிட் அடிச்சுடுவார்னு தோணுது..
ஹீரோயின் காஜல் அகர்வால்.. சமீபத்துல இவ்ளவ் கேவலமா ஒரு ஹீரோயினை வேஸ்ட் செஞ்ச டைரக்டரை பார்க்கலை.. ஹீரோயின் ஹேர் ஸ்டைல் மகா மட்டம்.. பாப் கட்டிங்க்காம்.. சகிக்கலை.. மாவீரன் படத்துல அவர் என்னா கலக்கு கலக்குனாரு? அதுவும் ஹீரோயின் ஓப்பனிங்க் ஷாட் கற்பனை வறட்சி.. இருட்டுக்கடை அல்வா அரைக்கிலோவை கைல கொடுத்தும் அதை டேஸ்ட் பண்ணாம வேடிக்கை பார்த்தவன் கதையா இயக்குநர் வேஸ்ட் பண்ணது வன்மையா கண்டிக்கத்தக்கது..
ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் தான் ஹீரோவுக்கு அண்ணன்.. ஆள் செம பர்சனாலிட்டி.. அவர் அருகே நிற்கும்போது ஹீரோ படு கேவலமாக இருக்கார்.. தமிழனுக்கு பெருமை..
அவருக்கு ஜோடி சமீக்ஷா.. வந்தவரை ஓக்கே.. ஆனா அவருக்கு திறமை காட்ட சந்தர்ப்பம் இல்லை.. சோ சேடு..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. பூவிழி வாசலிலே படத்துல வர்ற ரகுவரன் செஞ்ச ஒரு கால் ஊனம் உற்ற கேரக்டரை நைஸா சுட்டு இந்தப்பட வில்லன் கேரக்டர் ஆக்குனது..
2. படத்தை ஆந்திராவில் சாதாரண இடத்துல எடுக்க வேண்டிய ஷூட்டிங்கை படம் கிராண்டா வரனும்னு தயாரிப்பாளரை பிரெயின் வாஸ் பண்ணி உலகம் பூரா சுற்றி பல லொக்கேஷன்ஸை ஓ சில பார்த்துக்கிட்டது
3. ஹீரோ, ஸ்ரீகாந்த், வில்லன் , சமீக்ஷா இவங்க 4 பேருக்குமான ஆடை வடிவமைப்பு அருமை... செம டீசண்ட்..
4. கதைக்கு சம்பந்தமே இல்லாமல் போனாலும் பிரம்மானந்தம் காமெடியை சாமார்த்தியமா புகுத்தியது
5. பாடல் காட்சிகளில் காட்டிய பிரம்மாண்டம்.. தொடவா? தொடவா? உன் நெஞ்சை பாடல் படமாக்கப்பட்ட விதம் அழகுக்கவிதை
இயக்குநரிடம் சில கேள்விகள்,லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. வில்லன் ஒரு அரைக்கேனமா? அடிக்கடி யார் கிட்டேயாவது தன் கால் எப்படி ஊனம் ஆச்சு?ன்னு ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு விதமா சொல்றது மகா எரிச்சல்..
2. மேரேஜ் ஆகாத ஒரு பொண்ணு நிச்சயம் செய்யப்போற மாப்பிள்ளையுடனான முதல் சந்திப்பில் அப்படித்தான் லோ கட், லோ ஹிப் டிரஸ்ல வருமா? ஃபேமிலி கேர்ள் மாதிரியே ஃபீல் வர்லை.. பக்கா அயிட்டம் மாதிரி இருக்கு..
3. ஹீரோயினுக்கு பேரண்ட்ஸ் பார்த்த மாப்ளைக்கு எந்த குறையும் இல்லை,ஆளும் பர்சனாலிட்டிதான், அவர் வில்லனும் அல்ல (க்ளைமாக்ஸ்ல வில்லனா வலியனா காட்டறது தவிர)அப்புறம் ஏன் அவரை ஹீரோயினுக்கு பிடிக்கலை?
4. ஹீரோ என்னதான் பண்றார்? பூவாவுக்கு என்ன பண்றார்? வேலைக்கும் போறதே இல்லை.. எப்போ பாரு ஹீரோயின் பின்னாலயே சுத்திட்டு இருக்கார்..
மனம் கவர்ந்த வசனங்கள்
1. கோபம் உன் வீக்னஸ்.. எனக்கு வீகன்ஸ் ஆகாது
2. வெளிநாடு போகும் வேலை வேணாம்ணே... ஜாப்பை ரிசைன் பண்ணிடுங்க..
அவங்க விடமாட்டாங்க
அப்போ ஏதாவது தப்பு பண்ணுங்க.. அவங்களே தூக்கிடுவாங்க
3. பிரம்மானந்தம் - சிட்டிங்க், சீட்டிங்க்,கிஸ்ஸிங்க்.... இதுக்கெல்லாம் நீ ஓக்கே சொன்னா நீ தான் என் செக்ரட்டரி..
உங்களுக்கு வயசான மாதிரி தெரியுதே?
பார்க்கத்தான் அப்படித்தெரியும்.. ஆனா எனக்கு 25 வயசு தான் ஆகுது
4. அட, இது அழகான பொண்ணுதான், உங்க ஒயிஃபா?
யோவ்,ஒயிஃப் இந்த மாதிரி டிரெஸ் பண்ணா குடும்பம் உருப்படுமா?
5. எதுக்கு இங்கேயே வேடிக்கை பார்த்துட்டு இருக்கே?நீ ஒண்ணு பண்ணு, ஒரு சேர் எடுத்து எங்க எதிர்ல போட்டுக்க வேடிக்கை பாரு.. ரொம்ப ஈசியா இருக்கும்.. லைவ் ஷோ
6,இவ ஏன் இவ்ளவ் வேகமா கார்ல போறா? சாகடிக்கவா? சாகவா?
7. ஆஹா.. பியூட்டிஃபுல்.. இதுக்கே பார்ட்டி வைக்கறேன்..
ரொம்ப தாங்க்ஸ்டா..
ஆனா பில் பே பண்றது நீதான்..
ம்க்கும்
8. டியர்.. உனக்கு 2 ஆப்ஷன்ஸ் தர்றேன்..
1. எனக்கு போர் அடிக்கற வரை நீ என் கூட இருக்கனும்
2. உனக்கு போர் அடிக்கற வரை நான் உன் கூட இருக்கனும்
9. ஸாரி.. நான் கிளம்பறேன், என்னைக்காணோம்னு தேடுவாங்க..
அப்படி தேடற ஆளுங்களோ, உன் மேல அக்கறை உள்ள ஆளுங்களோ இருந்தா நீ இங்கே வந்திருக்க மாட்டே..
10அவன் டெக்னிக்கல் ஃபைட்டர், நான் எமோஷனல் ஃபைட்டர்,அவன் ஃபைட் பண்றது என்னை தோற்கடிக்க, நான் ஃபைட் பண்றது அவனை ஜெயிக்க.. அவன் ஃபைட் போடறது பணத்துக்காக , நான் ஃபைட் பண்றது உனக்காக
11. அவ பேரு தெரியும், அட்ரஸ் இனிதான் தெரிஞ்சுக்கனும்..
மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சா?
12. அவ கிட்டே லவ்வை எப்படி சொல்றதுன்னு தயக்கமா, பயமா இருக்கு.
அவளோட பிரச்சனை என்ன?ன்னு தெரிஞ்சுக்கிட்டு அவ கேட்காமலேயே அதை நீ சால்வ் பண்ணு.. அப்புறம் உன் லவ்வை சொல்லத்தேவையே இருக்காது.. அவளே தெரிஞ்சுக்குவா..
13. ஒவ்வொரு நாளும் அவனோட உடல் பார்ட்ஸ் ஒவ்வொண்ணா வேலை செய்யாம போனா அவன் எப்போ சாவான்? அவன் சாவு அவ்ளவ் குரூரமா இருக்கனும்..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 39 (தெலுங்குப்படத்துக்கு மார்க் போடமாட்டாங்க, சும்மா ஒரு ஒப்பீட்டுக்காக, தர நிர்ணயத்துக்காக )
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - டி வி ல போட்டாக்கூட பார்க்கத்தேவை இல்லை
ஈரோடு அன்னபூரணில படம் பார்த்தேன்.. ஸ்டில்ஸ் எல்லாம் காஜலின் ஃபேஸ் புக்கில் இருந்து எடுக்கப்பட்டவை.. பட ஸ்டில்ஸ் எதுவும் சகிக்கலை