Showing posts with label SAARAA. Show all posts
Showing posts with label SAARAA. Show all posts

Tuesday, February 26, 2013

MURDER 3 - சினிமா விமர்சனம்



மல்லிகா ஷெராவத் கிளாமரை நம்பி  ஹாலிவுட் கில்மா கம் சஸ்பென்ஸ் படமான UNFAITHFULL  படத்தை ரீமேக்கி மர்டர் பாகம் 1 எடுத்தாங்க , THE CHASER என்ற கொரியன் மூவியை  உல்டா பண்ணி மர்டர் 2 எடுத்தாங்க , இப்போ  The Hidden face   படத்தை ( கொலம்பியா) உல்டா பண்ணி  மர்டர் 3 எடுத்திருக்காங்க . மற்ற இரு பாகங்களை விட இது சஸ்பென்ஸ் , த்ரில்லிங்க் ஜாஸ்தி .

  ஹீரோ ஒரு ஃபேமஸ் ஆன ஃபோட்டோ கிராஃபர். அவரோட காதலி அவரை விட்டுப்போன சோகம் தாங்காம சரக்கு சங்கர லிங்கம் ஆகிடறாரு  .தண்ணி அடிக்க ரெகுலரா வர்ற பார்ல ஒரு ஃபிகரைப்பார்க்கறாரு, பார்ல ஒர்க் பண்ணுது . 


 ஹீரோ   கட்டதுர மாதிரி கடலை போட்டே  தன் சொந்தக்கதையை அள்ளி விட்டே அதை கரெக்ட் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து மேட்டரை முடிச்சிடறாரு .

இப்போ புதுக்காதலி ஹீரோ வீட்ல யாரோ பேய் அல்லது ஒரு தீய சக்தி நடமாட்டம் இருப்பதா உணர்றா. ஆனா போலீஸ் ஹீரோ மேல சந்தேகப்படுது. அவரோட முதல் காதலி காணாம போனதுக்கு காரணமே அவர் தான்னு நினைக்குது , கொலை பண்ணிட்டாரோன்னு சந்தேகப்படுது 


ஆனா சஸ்பென்ஸ் முடிச்சுகள் அவிழ அவிழ திரைக்கதை பட்டாசைக்கிளப்புது . எதிர்பார்க்காத திருப்பங்கள் படத்தின் பின்பாதியில் அசர வைக்குது .


 




 ஹீரோவா  ரன் தீப் , அண்ணனுக்கு முக்கிய வேலையே 2 ஃபிகர்களையும் கரெக்ட் பண்றதுதான். இதுக்கு லட்சக்கணக்குல சம்ப்ளம் வேற . கரும்பு தின்னக்கூலி . ஸ்டொமக் பர்னிங்க் . நடிக்க வெல்லாம் தேவை இல்லை, சும்மா வந்து நின்னாலே போதும்.


 ஹீரோயின்கள் 2 பேரு . 2 வது காதலியா வர சாரா லோரன்  தேங்காய் பர்பி மாதிரி இருக்குது . கடிச்சுப்பார்த்தியா?ன்னு எல்லாம் லாஜிக் கேள்வி கேட்கக்கூடாது . வழு வழுன்னு வெண்ணெய் தடவிய தேகம் . செம கலர் , லக்கி நெம்பர் 38.படத்தின் முன் பாதி பூரா இவர் ராஜ்ஜியம் தான் . பேய் இருக்கோன்னு நம்மையே நம்ப வைக்கும் அளவு இவர் ரீ ஆக்‌ஷன் இருக்கு. நல்லா வருவாங்க பிற்காலத்துல


 அடுத்த ஹீரோயின்அதிதிராவ் .ஒல்லியா இருக்கும் தர்பூசணிப்பழம் மாதிரி கலரு,பால்கோவா மாதிரி உடம்பு .( சரியான சாப்பாட்டு ராமண்டா நீ) இவர் நடிப்புதான் படத்தின் ஆணிவேர். படத்தின் மெயின் கேரக்டரே இவர் தான் ,அறைக்குள் மாட்டிக்கொண்டு துடிக்கும் துடிப்பென்ன? தன் கண் முன்னே காதலன் வேறொரு பெண்ணுடன் கில்மா பண்ணும்போது அடையும் வலி ,  என  அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம் . தமிழ் சினிமா இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்






இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. படத்தின் பின் பாதியில் பிரமாதமான சஸ்பென்ஸ் காட்சிகள் இருக்கு என்ற தைரியத்தில் முன் பாதியில் அசால்ட்டாக கதை சொல்லாமல் ஏதோ கில்மாப்படம் போல் காட்சிகள் வைத்தது . ஒரிஜினல் அளவுக்கு இல்லைன்னாலும் ஹிந்திக்கு இது நெம்ப ஓவருங்கோ


2. ஹீரோயின்  செலக்‌ஷன்ஸ் பிரமாதம் , தொப்பை இல்லாம , அதே சமயம் ஒல்லிப்பிச்சானாக இல்லாம நச் ஃபிகர் 2 பேரை புக் பண்ணி  முடிஞ்சவரை இருவரையும் பேலன்ஸ் பண்ணி ஐ மீன் காட்சிகளில்  பிரமாதப்படுத்தி இருப்பது


3.  படத்தின் பின்னணி இசை எனப்படும் பி ஜி எம்  பின் பாதியில் கலக்கல் ரகம் , ஒளிப்பதிவும் பக்கா


4. கதைக்களம் சவுத் ஆஃப்ரிக்கா அப்டினு சொல்லிக்கிட்டாலும்  படம் முழுக்க ஒரே வீட்டில் முடிச்சது லோ பட்ஜெட்டுக்கான இலக்கணம் , குறைந்த முதலீடு , நிறைந்த லாபம்


5. திகில் , சஸ்பென்ஸ் படங்கள் என்றால் பி ஜி எம் டொம் டொம்னு  அடிக்கனும் என்றில்லாமல் தேவையான இடங்களில் மட்டும் அதை யூஸ் பண்ணி பெரும்பாலான இடங்களில் அமைதியாய் அப்படியே விட்டது . அமைதியும் ஒரு இசையே என உணர்த்தியது


6. பாலிவுட்டின் டாப் 10 சஸ்பென்ஸ் த்ரில்லர் என ஒரு லிஸ்ட்  எப்போ எடுத்தாலும் இந்தப்படத்துக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு


 



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. என்னோட முத கேள்வியே என்னோட ஜி கே வை வளர்த்துக்க , சும்மா தெரிஞ்சு வெச்சுக்க.. அதாவது முதன் முதலா அப்போதான் மீட் பண்ணும் ஒரு ஃபேமிலி ஃபிகரை பேசியே கரெக்ட் பண்ணி அன்னைக்கு  நைட்டே மேட்டரை முடிக்க முடியுமா?



2. அறையில் மாட்டிய ஃபிகர் கண்ணாடி வழியே எல்லாத்தையும் பார்க்க முடியுது , ஆனா அவங்க கூப்பிடும் குரல் வெளில கேட்காது என்ற வரை ஓக்கே , அந்த கண்னாடியை உடைக்கக்கூட முடியாதா?  ரூம்ல சேர் டேபிள் இருக்கு . உடைக்க முடியாத கண்ணாடி என்பதை காட்டிக்கவாவது ஹீரோயின் முயற்சி பண்ணி தோற்பது போல் ஒரு காட்சி வெச்சிருக்கலாம் .


3. ஹீரோ மேல சந்தேகப்படும் போலீஸ்  ஹீரோ வீட்டை தரோவா செக் பண்ணி இருந்தா அந்த ரகசிய அறையை கண்டு பிடிசிருக்கலாமே?  அட்லீஸ்ட் வீட்டை செக் பண்ற மாதிரி கூட சீன் வெக்கலையே?


4. அறையில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் சாப்பிட , குடிக்க ஏதும் இல்லாம  எப்படி அத்தனை நாள் உயிரோட இருக்க முடிஞ்சுது?



5. பல நாட்கள் பட்டினி கிடந்த ஹீரோயின் நெம்பர் 1  கொழுக் மொழுக் ஹீரோயின் நெம்பர் 2 வை திடீர்னு அவ்வளவு ஆவேசமா எப்படி தாக்கி வீழ்த்த முடியும் ? அவளே சொங்கிப்போய் இப்பவோ அப்பவோன்னு கிடக்கா


6. நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பாதாள அறைக்கு முதன் முறையா ஹீரோயின் 1 போகும்போது  சுத்தமா ரூம் இருக்கு , சிலந்தி வலை கட்டி  தூசும்  குப்பையும் இருக்கற மாதிரி காட்டி இருக்க வேணாமா?



 


 மனம் கவர்ந்த வசனங்கள் 


 படத்துல வசனத்துக்கு வேலையே இல்லை , கொஞ்ச நஞ்ச வசனமும் ம் ம் ஹா ஹேய் அப்படி முக்கல் முனகல் வசனம் தான்




 ரேட்டிங்க் - 7 /10


 சி பி கமெண்ட் - சஸ்பென்ஸ் , திகில்  ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய பிரமாதமான திருப்பம் உள்ள படம், இந்தப்படத்துக்கு தமிழ் நாட்டில் சரியான ஓப்பனிங்க் இல்லாததுக்குக்காரணம் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததே.. இந்தப்படம் கண்டிப்பா தமிழ்ல யாராவது ரீ மேக்குவாங்க ..

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் படம் பார்த்தேன்





Film: Murder 3

Cast: Randeep Hooda, Aditi Rao Hyadri, Sara Loren, Rajesh Shringapure, Shekhar Shukla, Bugs Bhargava



Director: Vishesh Bhatt



Producer: Vishesh Films, Fox Star Studios


Writer: Mahesh


 

Monday, July 25, 2011

தெய்வத் திருமகள் ஸ்மார்ட் பேபி சாரா துறு துறு பேட்டி

http://blog.unchal.com/wp-content/uploads/2011/07/sara-11.jpg
ள்ளங்கை மடக்கி விரல்களில் முகம்வைத்து, 'நிலா வந்தாச்சு... நிலா வந்தாச்சு!’ என்றபடியே வந்து அமர்கிறாள் சாரா அர்ஜுன். தெய்வத் திருமகளாக மும்பையில் இருந்து முகம் காட்டியிருக்கும் 'நிலா’!


 கண்கள், உதடு, உடல்மொழி... அனைத்திலும் குறும்பு கொப்பளிக்கிறது. அவள் உயரத்தில் பாதிக்கு வளர்ந்திருக்கிறது கூந்தல். முழுதாக ஒரு நிமிடம் அவளை ஒரு இடத்தில் அமரவைப்பது அம்மா சானியாவுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. ''பையா பையா... ('இந்தியில் அண்ணா’) கேட் அண்ட் மவுஸ் விளையாடுவோமா? நான்தான் மவுஸ்... என்னை நீங்க கேட்ச் பண்றீங்களா?''- அம்மா பக்கம்பார்த்துக் கொண்டே ரகசியமாகக் கேட்கிறாள் சாரா! (முடியாது என்று சொல்லவே முடியவில்லை. சில நிமிட 'ஓடிப் பிடிச்சு’ விளையாட்டுக்குப் பிறகுதான் பேட்டி துவங்கியது!)    


''ஐ யம் சாரா அர்ஜுன். ஐ யம் சிக்ஸ் இயர்ஸ் ஓல்டு. மும்பை லே ஃபெஸ் ஸ்கூல்ல ஃப்ர்ஸ்ட் கிளாஸ் படிக்கிறேன். எங்க ஃபேமிலியில், நான், அப்பா அர்ஜுன், தம்பி சுஹான் மூணு பேரும் ஆக்டர்ஸ். 

அம்மா சானியா, ஒரு டான்ஸர். ஸோ... நாங்க ஒரு ஆர்ட்டிஸ்ட் ஃபேமிலி. 'தெய்வத் திருமகள்’ ஃபிலிம்ல குட்டிப் பாப்பா நிலாவா நடிச்சிருக்குமே ஒரு பாப்பா... அது என் தம்பி சுஹான். 

நான் ரெண்டு வயசுல இருந்தே, அமீர் கான், ராணி முகர்ஜிகூட எல்லாம் விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். அடுத்து, ஷாரூக் அங்கிளோட நடிக்கப்போறேன். ஏற்கெனவே, விஜய் அண்ணா டைரக்ட் பண்ண விளம்பரங்களில் நடிச்சிருக்கேன். 'தெய்வத் திருமகள்’ பிலிம் நல்லா இருந்துச்சா?''
 http://www.viduppu.com/photos/full/actresses/others/amala_paul20.jpg

1. ''சூப்பர்ப்! எப்படி இப்படிலாம் நடிச்ச... க்ளைமாக்ஸ்ல அழவெச்சுட்ட தெரியுமா?''


''ஹைய்யோ... நீங்களும் அழுதீங்களா? நானும் தான். அப்பா அழுதுட்டே நடிக்கிறதைப் பார்க்க வும் நானும் அழுதுட்டேன். படத்துல யாராவது அப்பாவை அடிக்கிறப்போலாம் நானும் அழுதுரு வேன். அந்த ஸீன்லாம் பார்க்கவே மாட்டேன். அப்பா ரொம்ப சூப்பரா நடிச்சிருந்தார்ல! ஐ லவ் அப்பா!''


2. ''அப்பாவா... யாரு? விக்ரம் அங்கிளைச் சொல்றியா?''


''ஏய் அடி.... விக்ரம் அங்கிள் இல்லை... அப்பா! அவரை நான் அப்பான்னுதான் சொல்வேன். இன்னொண்ணு தெரியுமா... என் டாடி அர்ஜுனும் நல்லா நடிப்பாரு. ராம்கோபால் வர்மா அங்கிளோட 'கம்பெனி’, 'டி’, 'கயாம்’ படங்களில் நடிச்சிருக்கார். அவரு டாடி... விக்ரம் அப்பா. விக்ரம் அப்பா என்னை எவ்ளோ நல்லாப் பார்த்துக்கிட்டாரு தெரியுமா? எனக்கு மேக்கப் போடுவார், ஸ்நாக்ஸ் ஊட்டுவார், ஷூ லேஸ் கட்டுவார், நிறையக் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்வார். வெரிகுட் அப்பா... ஐ லவ் ஹிம் ஸோ மச்!''



3. ''ஓ... விஜய் அண்ணா, விக்ரம் அப்பா... யாரை ரொம்பப் பிடிக்கும் சாராவுக்கு?''

(மூக்கின் மீது குட்டி விரல் தட்டி யோசிக்கிறாள்) ''ரெண்டு பேருமே பிடிக்குமே... ஏன் இப்படிலாம் கேக்குறீங்க?''


4. ''சும்மா... யாருக்கு நம்பர்-1 ப்ளேஸ் கொடுப்ப?''


''ம்ம்ம்... விக்ரம் அப்பாவுக்கு நம்பர்-1. விஜய் அண்ணாவுக்கு... ம்ம்ம்ம்... விஜய் அண்ணாவுக்கும் நம்பர் 1. சூப்பர்ல!''


5. ''நீ ரொம்ப உஷார் சாரா... அப்போ நம்பர்-2 ப்ளேஸ் யாருக்குக் கொடுப்ப... அனுஷ்காவா, அமலா பாலா?''


''ரெண்டு பேருக்கும் கிடையாது... மார்ட்டினா தீதி!''


6. ''அவங்க யாரு?''


''விஜய் அண்ணா அசிஸ்டென்ட். ரொம்ப லவ்லி தீதி. எனக்கு ஸீன்லாம் சொல்லித் தந்து ரொம்பப் பத்திரமாப் பார்த்துக்கிட்டாங்க!''


7. ''சூப்பர்... படத்துல எந்த ஸீன் நடிக்க ரொம்பக் கஷ்டப்பட்ட நீ?''


''எந்த ஸீனுமே இல்லையே... நானும் என் தம்பி சுஹானும் 'ஒன் டேக் ஓ.கே.’ ஆர்ட்டிஸ்ட் தெரியுமா. க்ளைமாக்ஸ் ஸீன் லாம் ஒரே ஷாட்ல ஓ.கே. பண்ணிட்டேன். பட்... வெரைட்டிக்காக வேற வேற மாதிரி ஷூட் பண்ணாங்க!
எனக்கு நடிக்க ரொம்பப் பிடிக்கும். டூ டேஸ் மேல ஸ்கூல் லீவ் இருந்தா, போர் அடிக்கும். ஆனா, ஸ்கூல்லயும் நான் குட் கேர்ள். எப்பவும் 'டிஸ்டிங்ஷன்’தான் வாங்குவேன். பையா பையா... இப்போ ஹைட் அண்ட் சீக் விளையாடலாமா? ஒன்லி டூ மினிட்ஸ்... ஓ.கே!''


(டூ மினிட்ஸ் 'ஹைட் அண்ட் சீக்’ விளையாட்டுக்குப் பிறகு...)


8. ''தமிழ் கத்துக்கிட்டீங்களா... தமிழ்ல என்னலாம் தெரியும் சாராவுக்கு?''  


''வணக்கம்... உக்காருங்க... காக்கா ஏம்ப்பா கறுப்பா இருக்கு? யானை ஏன் குண்டா இருக்கு? அப்ப நாம நல்லவங்க இல்லையாப்பா? ஷூட்டிங் ஆரம்பிக்கிற ரெண்டு மாசம் முன்னாடியே தமிழ் கத்துக்கிட்டேன். படத்தோட எல்லா டயலாக்கும்பேசுவேன். ஆனா, மீனிங் தெரியாது. ஆங்... ஆங்... ஒண்ணு மறந்துட்டேனே... 'டீ... காபேய்... டீ காபேய்... டீ... டீ... டீ... காபேய்’ இதுவும் தெரியும் எனக்கு.சந்தானம் அங்கிள் நடிச்ச அந்த ஸீன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆ... டீ... காபேய்... டீ... காபேய்!''


(எழுந்து காபிக் கோப்பை தட்டுகளை ஏந்தி இருப்பதுபோலக் கைகளை வைத்துக்கொண்டு  ரயில்வே ஜங்ஷன் நடை நடந்து காட்டுகிறாள்!)
 சாரா

9. ''கமான் சாரா... உக்காரு கொஞ்ச நேரம்... இன்னும் டூ மினிட்ஸ்தான். அனுஷ்கா ஆன்ட்டி என்ன சொன்னாங்க?''


''ஓ வாவ்... என்னா ஒரு பியூட்டி தெரியுமா அவங்க! நான் அடிக்கடி அவங்க கன்னத்தைத் தொட்டுத் தொட்டு விளையாடிட்டே இருப்பேன். செம சாஃப்ட்டா இருக்கும் அவங்க ஸ்கின்.அவங்களை மாதிரி எனக்கும் ஸ்கின்இருக் கணும்னா, ஆய்லி ஃபுட்ஸ் சாப்பிடக் கூடாதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. 

ஆனா, நான் இஷ்டத்துக்குச் சாப்பிட்டுட்டு இருப் பேன். திட்டித் திட்டி அப்புறம் அவங்களே எனக்கு டயட்டீஷியன் ஆகிட்டாங்க. நானும் அனுஷ்கா தீதி மாதிரி அழகா வரணும். அப்புறம் நான் அவங்களை மாதிரியே  உயரமா வரணும்!''
(சட்டென்று சோபாவில் இருந்து துள்ளிக் குதித்து குதிகால்களை உயர்த்தி அனுஷ்கா போல நடந்து, நடித்துக் காட்டுகிறாள்!)


10. ''இவ்வளவு சேட்டைக்காரியா இருக்கே... உன்னை யாரும் ஷூட்டிங் ஸ்பாட்ல அதட்ட மாட்டாங்களா?''


''ம்ஹும்... நான்தான் எல்லாரையும் நைஸ் பண்ணிருவேனே! மும்பை ஸ்கூல்ல எனக்கு சப்னா, புஷ்பா, சோனியான்னு மூணு மிஸ் இருக்காங்க. அவங்களை நான் விக்ரம் அப்பா, விஜய் அண்ணா, கேமரா மேன் நீரவ் ஷா அங்கிளுக்கு இன்ட்ரோ பண்ணிக் கொடுக்குறேன்னு சொல்லிட்டேன். 

அதனால, நான் என்ன சேட்டை பண்ணாலும் திட்ட மாட்டாங்க. ஆனா, அந்த தியாகராஜன்தான் என்னைப் பயமுறுத்திட்டே இருப்பார். அவர்தான் நிஜமாவே பெரிய டைனோசர். இல்லை இல்லை, பெரிய அனகோண்டா!''     

     
11. 'யார் தியாகராஜன்..?'

'
''படத்துல அப்பாவுக்கு ஃப்ரெண்டா ரொம்ப ஹைட்டா ஒரு அங்கிள் நடிச்சி இருப்பாரே... அவர்தான். ரொம்பப் பய முறுத்திட்டே இருப்பாரு. பேட் பாய்!''


12. ''சாராவுக்கு வேற என்ன பிடிக்கும்?''


''சாக்லேட் பிடிக்காது, ஐஸ்க்ரீம் பிடிக்கும். கேம்ஸ் பிடிக்கும், டி.வி. பிடிக்காது. அமீர் கான் பிடிக்கும். சல்மான் கான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அப்புறம், இப்போலாம் நிலா பிடிக்குது. மும்பையில இருந்து ஃப்ளைட்ல வந்தப்போ நிலாவும் என் கூடவே வந்தது. 


சாரா
நான் அதுகூட பேசிட்டே வந்தேன். வீட்ல எனக்குச் செல்லப் பேரு முன்னி. அப்டின்னா, ரொம்பக் குட்டின்னு அர்த்தம். நிலாவும் என்னை அப்படித்தான் கூப்பிட்டது. ஐ லவ் நிலா. ஓ.கே... போதும் பையா... போலீஸ் தீவ்ஸ் விளையாடலாமா... நான்தான் தீஃப். நீங்களும் சுஹானும் போலீஸ். என்னை கேட்ச் பண்ணுங்க பார்ப்போம்!''


கால் முளைத்து தத்தித் தாவி ஓடுகிறது நிலா!

நன்றி - விகடன்