மு.க அழகிரி , மு க ஸ்டாலின் மாதிரி 2 அண்ணன் தம்பிங்க. 2 பேரும் எப்பவும் அடிச்சுக்குவாங்க. பரஸ்பரம் ஒருவர் காலை ஒருவர் வாரிக்கிட்டே இருப்பாங்க . ( இந்தக்கதைக்கு பேட்டர்ன் ரைட்ஸ் கலைஞர்க்கு தான் தரனும் ) இதுல அண்ணன் பொறுப்பாப்படிச்சு அசிஸ்டெண்ட் கமிசனர் ஆகிடறார். தம்பி வெட்டாஃபீசா இருக்கார் ( அப்டியே உல்டா . யாருக்கும் மேட்டர் தெரிஞ்சுடக்கூடாதுன்னு பொதுவா உல்டா பண்றவங்க இப்படி மாத்தித்தான் திரைக்கதை அமைப்பாங்க )
அண்ணனுக்கு ஒரு பிரச்சனை . இந்த மாதிரி பிரச்சனை வரும்போது ஹீரோ என்ன செய்வாரு? அண்ணனுக்கு உதவி அவரைக்காப்பாத்துவாரு . எல்லாரும் சேர்ந்தாச்சு , சுபம் .
என்ன பொசுக்குனு இருக்கேன்னு பார்க்கறீங்களா? இது ஒன் லைன் கதை தான்., திரைக்கதைல ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இருக்கு .
படத்துல குறிப்பிட்டுச்சொல்லவேண்டியது ஹீரோயின் ஸ்ருதி கேரக்டர் தான் . சந்தோஷ் சுப்ரமணியில் ஜெயம் ரவி கேரக்டரை பால் மாத்தினா அதான் இவர் கேரக்டர். அதாவது அப்பா ஓவர் கண்டிப்பா வளர்த்ததால எந்த உணர்ச்சியையும் காட்டாம சின்ன வயசுல இருந்தே வளர்த்திட்டார் . ( ரசிகர்கள் யாரும் சுணக்கம் காட்ட வேண்டாம். ஸ்ருதி உணர்ச்சியை மட்டும் தான் காட்டலை )
அதாவது தலைல இடியே விழுந்தாலும் கண்டுக்காத கேரக்டர். உள்ளுக்குள்ளே ரணகளமாய் அதிமுக அமைச்சர் மாதிரி நடு நடுங்கினாலும் வெளீல கேப்டன் மாதிரி தில்லா இருப்பார் . இந்த கேரக்டர்ல ஸ்ருதி புகுந்து விளையாடி இருக்கார் . பிரமாதம் ./ அவர் ஐ ப்ரோ ( புருவம்) வுக்காக எடுத்துக்கொள்ளும் கவன சிரத்தை ஒண்ணு போதும் ., 3 ரீலுக்கு ஒரு மாதிரி புருவ ஸ்டைல் . ஆனா பவுடர் தான் ஓவர் கோட்டிங்க் .
ஒரு காட்சியில் ஹீரோ விஜய் மாதிரி ( அழகிய தமிழ் மகன் போஸ்) ஒரு டான்ஸ் ஸ்டெப்பில் இருக்க ஹீரோயின் மடி மீது ( பார்க்க முத ஸ்டில் ) ( ஏன்னா தமிழன் படம் வரைந்து பாகங்களைக்குறிச்சா தான் தெளிவா புரிஞ்சுக்குவான் ) அமர்ந்து இருக்கும் காட்சியில் அவர் உடம்பு பிரமாதம். அம்பு விடும் போட்டியில் முதல் பரிசு பெறும் வீரன் வில்லில் அம்பை ஏற்றி நாணை பின்னுக்கு இழுத்திருக்கும் கடைசி எல்லையில் எப்படி விண் என நாண் தெறித்து நிக்குமோ அப்படி ஒரு வில் போன்ற தேக அமைப்பு ஸ்ருதி கமல்க்கு
இவரது கிளாமர் படத்துக்கு பெரிய பிளஸ் . கூடவே ஹீரோவுக்கு நிகராக டான்ஸ் மூவ்மெண்ட்லயும் கலக்கறார் . வாழ்க ஸ்ருதி ( அடுத்து மச்சினி சாரி தங்கச்சி அக்சரா வேற வருதாம் . வாம்மா மின்னல் )
ஹீரோ அல்லு அர்ஜூன் . இளமைத்துள்ளல் நிறைந்த நடிப்பு . ஹேர் ஸ்டைல் சுமார் தான் . டான்ஸ் காட்சிகளீல் வழக்கம் போல் அசத்தல் . சந்தானம் காமெடி வரும்போது எப்படி ஹீரோ டம்மி ஆவாரோ அப்படி பிரம்மானந்தம் காமெடி வந்ததும் இவர் டம்மி ஆகிறார்
ஷாம் ஒட்டு மீசை பாதி சீன்ஸ் , நிஜ மீசை பாதி சீன் வந்து கண்ட்டிநியூட்டி மிஸ் பண்றார் . இவர் கோபத்தில் கர்ஜிக்கும்போது செம காமெடி
படத்தின் கடைசி 30 நிமிடங்கள் வந்தாலும் பிரம்மானந்தம் கலக்கல் காமெடி . பின்னிப்[பிடல் எடுக்கிறார் மனுஷன் . இவரது பாடி லேங்குவேஜ் வடிவேலுக்கு இணை , டைமிங்க் டயலாக் டெலிவரி சந்தானத்துக்கு நிகர் .
பாடல் காட்சிகள் எல்லாம் செம . செட் போட்டு ஆர்ட் டைரக்டர் அமர்க்களப்படுத்திட்டார்
பிரகாஷ் ராஜ் வசூல் ராஜா எம் பி பிஎஸ் கேரக்டரை கொஞ்சம் உல்டா அடிச்சு சமாளிச்சுட்டார்
பின் பாதி திரைக்கதையில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் . முதல்வன் படத்தில் வருவது போல் ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் போலீஸ் ஆஃபீசர் ஐடியாவில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்
படம் பார்க்கும் போது போட்ட ட்வீட்ஸ்
1.குறுகிய காலத்திலேயே ஸ்ருதிஹாசனின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும்படி இருக்கு #Race gurram. பந்தய குதிரை.(தெலுங்கு)
2 ஒரு பக்கா பொரி,100 கிராம் நிலக்கடலை,250 கிராம் காரா மிக்சர்,வேகவைத்த
பட்டாணி ஒரு டிஃபன் பாக்சுடன்சினிமாவுக்கு குடும்பத்துடன் கிளம்பியாச்
3
ஈரோட்டின் நெ 1,தியேட்டர் அபிராமி காம்ப்
படம் போட்டு1 மணி யில் ஏசி .fan off பண்ணி மின்சாரத்தை சேமிக்கும் புத்திசாலி pic.twitter.com/1TQYwN1i1y
a
ஈரோட்டின் நெ 1,தியேட்டர் அபிராமி காம்ப்
படம் போட்டு1 மணி யில் ஏசி .fan off பண்ணி மின்சாரத்தை சேமிக்கும் புத்திசாலி pic.twitter.com/1TQYwN1i1y
3 காதலன் பாட்டுக்கு சிவனேனு சீட்ல உக்காந்து சைட் அடிச்ட்டு இருக்கான்.காதலி
" டேய்.படம் போட்ட பின் சில்மிசம் செஞ்சே கொன்றுவேன்" கறா.# அழைப்பு
4 ஓப்பனிங் சீன் ல 13 குதிரை கூட போட்டி போட்டு ஓடி முதல் ல வர்றார் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் # ரேஸ் குர்ரம்
5 தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவி வகிடு எடுத்து சீவி இருந்தா அவன் சாதாரணன்.ஆயிலே ஆயுசு பூரா காட்டாம தலையே சீவாம இருந்தா ஹீரோ
6 அழகிரி ,ஸ்டாலின் மாதிரி ஒரே வீட்டில் இருக்கும் அண்ணன் ,தம்பி ஒருவரை ஒருவர் கவுக்க பிளானிங் # ரேஸ் குர்ரம்
7 படம் போட்டு 23 நிமிசம் கழிச்சு ஹீரோயின் இன்ட்ரோ.டூ லேட்.ஓப்பன்
யுனிவர்சிட்டி குட்டி பவுடர் ஓவராய்ப்போடும் பரு வ நிலா ஸ்ருதி ஹாசன்
8 அண்ணன் ஷாம் போலீஸ் ஆபீசராம்.ஒட்டு மீசை வெச்சுக்கிட்டு விரைப்பா வர்றாரு.செம காமெடி\
9 மோதிர விரல் காலியா இருக்கு
.ஆள் காட்டி விரல் ல மோதிரம் இருக்கு ஸ்ருதிக்கு.இதுல ஏதாவது குறியீடு இருக்கா?
10 அக்னி நட்சத்திரம் ல பிரபு போலீஸ்.இதுல ஷாம் போலீஸ்.அதுல கார்த்திக்கை போலீஸ் பிரபு கலாய்ப்பது போல் இதிலும்
11 நளினத்தை மூட்டை கட்டு .சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் லுங்கி எடுத்துக்கட்டு .முக்கா வாசித்திறமையைக்காட்டு !ஸ்ருதி செம குத்து டான்ஸ்
12 இடைவேளை விடப்போறாங்க.இதை எப்படிக்கண்டுபிடிச்சேன்னா தியேட்டர் ல இருக்கும்
13 லவ் ஜோடியும் விலகி உக்காந்து டிரசை சரி பண்ணிக்கிட்டாங்க
13 பிகரு டூ லவ்வர் - டேய்.தனியாப்போக பயமா இருக்கு.பாத்ரூம் கேட் வரை வாடா # போம்மா போ.ஆபத்தே அவனாலதான் வரப்போகு
14 தேவைக்கும் அதிகமான அமைதியுடன் சன்னமாப்பேசினா அது மணிரத்னம் படம்.தேவை யே
இல்லாம எல்லாரும் எல்லா சீனிலும் "கத்தி" கத்திப்பேசுனா தெலுங்குபடம்
15 போ போ போ நீ எங்கே வேணா போ பாட்டு மெட்டை சுட்டுட்டாங்க # ஓப்பனிங் சாங்
16 படத்தோட முதல் பாதி ல மட்டும் சந்தானம் வந்தா அது தமிழ்ப்படம்.பின் பாதில மட்டும் பிரம்மானந்தம் வந்தா தெலுங்குப்படம் # ரேஸ் குர்ரம்
17 ரேஸ் குர்ரம் படத்துல நீங்க எதிர்பார்க்கும் எந்த சீனும் பெரிசா இல்லை.எனவே தமிழர்களே! தமிழர்களே! உஷார் !
மனம் கவர்ந்த வசனங்கள் ( ஒரு உத்தேசமான மொழி பெயர்ப்பு )
1 ஸ்ருதி - எனக்குள்ளே பயம் இருந்தாலும் அதை நான் வெளில காட்டிக்க மாட்டேன் #, அதான் காட்டிட்டியேம்மா
2 பிரகாஷ் ராஜ் - லவ்வரைப்பார்க்கப்போறேன்னு என் கிட்டேயே சொல்றியே என்ன
தைரியம்?,
ஸ்ருதி - டாடி.எங்கே போனாலும் சொல்லிட்டு போ - ன்னீங்க்ளே?
3 எதிரிக்கு யோசிக்க அவகாசம் குடுக்காம ஜெயிக்கனும் #,ரேஸ் குர்ரம்
சி பி கமெண்ட் - RACE KURRAM - மாமூல் மசாலா அண்ணன் தம்பி கதை.ஸ்ருதி மிதமான கிளாமர் ,பிரம்மானந்தம் காமெடி குட் - டைம் பாஸ் ஆகும் . ஆந்திராவில் செம ஹிட் ஆகும் . போட்ட முதலீட்டை விட 2 மடங்கு லாபம் சம்பாதிச்சுக்குடுக்கும்
ரேட்டிங் =2.25 / 5