Showing posts with label REVADHI. Show all posts
Showing posts with label REVADHI. Show all posts

Tuesday, September 11, 2012

மவுன ராகம் - சினிமா விமர்சனம்

http://img.filmlinks4u.net/2010/06/Mouna-Ragam-1986-Telugu-Movie-Watch-Online.jpg

சர்வதேச கமர்ஷியல் சினிமா, சென்சேஷனல் மேட்டர், இதிகாச உல்டா  எனும் நிர்ப்பந்தங்களுக்கு சிக்குவதற்குமுன்  மணிரத்னம் எடுத்த மணியான படம். பிரிந்து வாழும் தம்பதியர் பார்க்க வேண்டிய மென்மையான, மேன்மையான இசை பயணிக்கும் படம் என பல பிளஸ்கள் உண்டு. 


படத்தோட  முக்கியமான பிளஸ் -1.தனக்கு வரப்போகும் கணவர் மவுனராகம் மோகன் மாதிரி  ஜெண்டில்மேனா, அண்டர்ஸ்டேண்டிங்க் பர்சனா,மற்றவர் உணர்வுக்கு மதிப்புத்தருபவரா இருக்கனும்னு எல்லா பொண்ணுங்களையும் நினைக்க வைக்கும். 2. தனக்கு வந்து சேர்ந்த மனைவி நல்ல வேளை ரேவதி மாதிரி இல்லை என  கணவர்களை மகிழ வைக்கும் ( ஏன்னா தான் எத்தனை பேரை லவ் பண்ணி இருந்தாலும் தனக்கு வரப்போகும் மனைவி இதுக்கு முன் யாரையும் லவ் பண்ணி இருக்கக்கூடாது என்ற உயர்ந்த கொள்கையுடன் வாழ்பவர்கள் தான் ஆண்கள் ( பெரும்பாலும்)


படத்தோட கதை ஹீரோயின் பார்வையில் செல்லுது. ஹீரோயின் துடுக்கான, குறும்புத்தனம் மிக்க பெண். தன்னை பெண் பார்க்க மாப்ளை வீட்ல இருந்து வந்திருக்காங்கன்னு தெரிஞ்சும்  வேணும்னே வீட்டுக்கு லேட்டா வர்ற அளவு லொள் கேரக்டர். 

 மிக மென்மையான குணம் உள்ள ஹீரோ மேரேஜ்க்கு ஓக்கே சொல்றார்.ஹீரோயினுக்கு மேரேஜ்ல இஷ்டம் இல்லை. ஆனா நல்ல வரன் தட்டிப்போகக்கூடாதுங்கற கவலைல ஹீரோயின் அப்பா வாக்குவாதத்தில் ஹார்ட் அட்டாக்.. அவருக்காக ஹீரோயின் மேரேஜ்க்கு ஓக்கே சொல்ல மேரேஜ் நடக்குது.. 


 மேரேஜ் மட்டும் தான் நடக்குது. மத்த மேட்டர் எதுவும் நடக்கலை. ஹீரோயினுக்கு ஆல்ரெடி ஒரு லவ் மேட்டர் இருந்ததும், காதல் கை கூடாம போனதும் ஹீரோவுக்கு தெரிய வருது.ஹீரோயின் டைவர்ஸ் கேட்கறா. ஆனா சட்டம் மினிமம் 1 வருஷம் கழிச்சுத்தான் டைவர்ஸ்னு சொல்லுது.



http://i.ytimg.com/vi/ibiiglNYR44/0.jpg


 அந்த 1 வருஷத்துல என்ன நடக்குது? ஒரே வீட்டில் குடி இருந்தாலும் அவங்க லவ்விங்க் டுகெதரா அப்பப்ப இருந்தாலும் லிவ்விங்க் டுகெதரா இல்லை.. என்ன ஆகுது என்பதே க்ளைமாக்ஸ்.. 


படத்தோட முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான்.. 5 சூப்பர்ஹிட் பாடல்கள்.. ஆல் மெலோடீஸ்.. அது போக பின்னணி இசைல புகுந்து விளையாடி இருக்கார்.. படத்தோட திரைக்கதையில் கேரக்டர்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இசை பாதி வேலையை செஞ்சுடுது. 


படத்தின் 2 வது ஹீரோ திரைக்கதை மற்றும் இயக்கம். நேர்த்தியா திரைக்கதை எழுதி பள்ளிபாளையம் காவேரி ஆறு மாதிரி சலனம் இல்லாம அமைதியா பயணிக்கும் கதை.. மார்வலஸ் இயக்கம். 


3 வது ஹீரோ ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம். கேமரா ஆங்கிள் , லைட்டிங்க் எல்லாம் பர்ஃபெக்ட். மோகனை மிக அழகாக காட்டிய படம் மவுன ராகம் ( மிக கோரமாக காட்டியது உருவம் )


மதர்லேண்ட் பிக்சர்சின் ராசியான ஹீரோவாக அறியப்பட்ட மோகன் இதில் கண்ணியமான கணவராக  செமயா நடிச்சிருக்கார். இவர் பாடி லேங்குவேஜ், வாய்ஸ் மாடுலேஷன் ( சுரேந்தர் ) எல்லாம் கன கச்சிதம்


ஹீரோயின் ரேவதி துடுக்குத்தனம், அமைதி , அழிச்சியாட்டியம் , பக்குவம் என நவரசங்களையும் காட்டி அசத்தும் கேரக்டர்..  சின்ன சின்ன முக பாவனைகளில் சிக்சர் அடிக்கிறார்.. 


 மொத்தம் 146 நிமிடங்கள் ( கிட்டத்தட்ட  2 1/2 மணி நேரம்) ஓடும் படத்தில் 24 நிமிடங்களே வந்தாலும் கார்த்திக் இளமைத்துள்ளலுடன் நடிச்சிருக்கார். பின்னாளில் வந்த பல காதல் படங்களின் ஹீரோக்களுக்கு இந்த கேரக்டர் ஒரு முன்மாதிரியா இருந்தது என்றால் அது மிகை அல்ல..




http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/9/9e/Mouna_Raagam2.jpg/220px-Mouna_Raagam2.jpg
இயக்குநர்  பாராட்டு பெறும்  இடங்கள்



1. கார்த்திக் - ரேவதி காதல் எபிசோடில் டூயட் காட்சியே வைக்காதது... ஏன்னா கதை ஒரு தம்பதியை பற்றியது என்பதால் ஆடியன்சின் கவனம் திசை திரும்பி விடக்கூடாது என்பதில் கவனமா டூயட் சீனை சேர்க்காம விட்டிருக்கார்.. வெல்டன்.. 


2. கார்த்திக்கிடம் கோபத்தில் ரேவதி “ ஊரைக்கூட்டி மைக் போட்டு சொல்லு, அப்போ வேணா உன் காதலை ஏத்துக்கறேன்” என்றதும்  உடனே காலேஜ் பிரின்ஸ் ரூமில் இருந்து மைக்கில் கார்த்திக் காதலை அறிவிப்பது செம கலாட்டா சீன். ( இந்த சீன் பின் கோபுர வாசலிலே, இதயதாமரை உட்பட பல படங்களில் சுடப்பட்டது )



3. மோகன் தன் மாமனார் முன் கோபமாக இருப்பது போல் காட்டிக்கொள்வதும் அதற்கான காரணமாய் “ நாளைக்கு நீ டைவர்ஸ் வாங்கி ஊருக்கு போறப்ப உன் மேல எந்த குறையும் இல்லை, மாப்ளை மேல தான் குறை” என அவங்க மனசுல தோணட்டும்னு தான் என சொல்லும் டச்சிங்கான காட்சி..


4. க்ளைமேக்சில் தண்டவாளங்கள் இணைவதை தம்பதிகள் மனம் இணைவதாய் சிம்பாலிக்காக காட்டியது.. படம் முழுக்க ஆங்காங்கே மழை பெய்வதை , சாரலை சில்லிப்பாய் உணர வைத்த லாவகம்..



5. மழையில் ஹீரோயின் நனையும் பாடல் காட்சி வைத்தும் அதை கிளாமர்க்கு யூஸ் பண்ணாம அவர் சுட்டி என்பதை உணர்த்த மட்டுமே யூஸ் பண்ணிக்கிட்ட கண்ணியம் ( இதே போல் புன்னகை மன்னனில் கே பி  - வான் மேகம் பூப்பூவாய் தூவும் தேகம் என்ன ஆகும் )


6. ஹீரோ தான் மனைவிக்கு வாங்கி வந்த கொலுசு, அவள் கேட்ட விவாகரத்து பத்திரம் 2 டையும் அவள் முன் வைக்கும்போது வரும் இளையராஜாவின் பின்னணி இசை..


7. மனம் மாறிய ஹீரோயின் ஹீரோ வாங்கித்தந்த கொலுசை அணிந்து ஆவலுடன் அவனிடம் காட்ட வரும்போது அவன் நரசிம்மராவ் போல் முகத்தை வைத்துக்கொண்டு  எரிந்து விழுந்ததும் அவள் முகம் சுருங்குவது 



8. கார்த்திக் - ரேவதி காதல் காட்சிகளில் இளமை கொப்புளிக்கும் குறும்புக்காட்சிகள், குறிப்பா போலீஸில் செம அடி வாங்கியும் கார்த்திக் ரேவதியை பார்த்து கண் அடிக்கும் காட்சி;;



http://satyambloggers.files.wordpress.com/2010/03/2wp770j.jpg



 மனம் கவர்ந்த ஷார்ட் & ஸ்வீட் வசனங்கள்




1. வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படியா பொய் சொல்வாங்க?


வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படியா கேள்வி  கேட்பாங்க?



2. நான் உங்களுக்கு நல்ல மனைவியா இருப்பேன்னு எனக்குத்தோணலை.. நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா? 

 எனக்கு உன்னை பிடிச்சிருக்கு 



3. சின்னக்குழந்தை மாதிரி அடம் பிடிக்காதே.. 

 அய்யோ , என்னை சின்னக்குழந்தை மாதிரி நடத்தாதீங்க 



4. முதல் இரவில்


 ஏய்! ஏன் அழறே?

 நான் தூங்கனும்


 சரி தூங்கு.. அதை முதல்லியே சொல்லி இருக்கலாமே? 

 அதான் இப்போ சொல்றேனே?


5. மேரேஜ்க்கு முன்னால  எனக்கு 2 லவ் இருந்துச்சு 1. புக் 2 இசை



6. இது செங்கல்லாலும், மணலாலும் கட்டப்பட்ட வீடு , இதை வீடா மாத்த வேண்டியது உன் கைல இருக்கு 



7. ஹலோ! என்ன ? உங்க பி ஏ அரைகுறையா டிரஸ் பண்ணி இருக்காளா?


 வி கே ராமசாமி  - அவ டிரஸ்சே பண்ணலையே? 



8. ஒரு புருஷன் தன் மனைவிக்கு வாங்கித்தரும் முதல் பரிசை அவ  வாழ்நாள் பூராவும் மறக்க மாட்டா.. 


9. மனைவி கிட்டே கணவன் எப்படிப்பேசனும் தெரியுமா? வாய் கூசாம நீ தான் உலக அழகின்னு பொய் சொல்லனும் 


10. உனக்கு என்ன வேணும்?

 நான் எது கேட்டாலும் வாங்கித்தருவீங்களா? 


 ம்

 எனக்கு விவாக ரத்து வேணும்..





11. நான் தொடுவது உனக்கு பிடிக்கலை?

 ம்ஹூம், கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு 


12.  வேறுபாடுன்னு எதுவும் இல்லை. ஆனா பெரிசா ஈடுபாடு இல்லை.. அதுனாலதான் இந்த விவாகரத்து”


13. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட வருத்தமோ, கோபமோ இல்லையா?


 குட் நைட்




14. மேரேஜ்க்கு முன்னாலயே  அவனவன் சேர்ந்து வாழறான்.. மேரேஜ் ஆகியும் நீங்க ஒரே வீட்ல பிரிஞ்சு வாழறீங்க.. ஹூம்..



15. ஒரு புருஷன் காலைல எந்திரிச்சதும் ஏதாவது சண்டை போட்டா அது சகஜம், ஆனா படுக்கையே 2 பேருக்கும் தனித்தனியா இருந்தா அது சகஜம் இல்லை.



16. எதைக்கேட்டாலும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றீங்களே?உங்களுக்கும்
 எனக்குமாவது சம்பந்தம் இருக்கா?



தெரில.. தாலி கட்னா மட்டும்  போதுமா?னு நீ தானே சொன்னே?



17. நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லிட்டேன், நீங்க சொல்ல வேண்டியது ஏதாவது இருக்கா?


 4 மணிக்கு ட்ரெயின், நான் 2 மணிக்கு கூட்டிட்டு  போக வர்றேன்


18.உங்களுக்கு பிடிச்சிருக்கு! ஒத்துக்கத் தான் மனசில்ல! ஆனா நான் ஒத்துக்கறேன்! வெட்கத்தை விட்டு ஒத்துக்கறேன்!"



19. கட்டுப்படச்சொல்லலை, கன்சிடர் பண்ணச்சொல்றேன்






சில சுவராஸ்ய தகவல்கள்


1. பனி விழும் இரவு பாடலில் நடனமாடுவது சிறுவயது ஜான்பாபுவும் அந்த மானாட மயிலாட நீபா அம்மா வாமன் மாலினியும் 

2.சோக மியூசிக்குக்கு ராஜா சார் யூஸ் பண்ற இந்த இன்ஸ்ட்ரூமென்ட்க்கு பேர் 'தில்ரூபா'ன்னு கேள்வி. 


3.  கார்த்திக் மணிரத்னம் படத்துல மவுனராகம்,அக்னிநட்சத்திரம்,இப்ப ராவணன்னு எல்லாம் ரெண்டு ஹீரோ சப்ஜக்டாதான் நடிச்சிருக்கார்


4.மெளனராகம் பட்ஜெட்ல பெரிய செலவுன்னா, அது அந்த பத்மினி கார் வாடகை மட்டுந்தான் #மணி”ரத்னசுருக்க”பட்ஜெட் 




5. இந்தப்படத்துக்கு இன்ஸ்பிரேஷனே மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ தான்.


6. தேசிய விருது பெற்ற படம், ஃபிலிம்ஃபேர் அவார்டு ஃபார் பெஸ்ட் டைரக்‌ஷன் வாங்கின படம். ரிலீஸ் ஆன ஆண்டு 1986 ஆகஸ்ட் 15




 மென்மையான மயில் இறகு பாடல்கள் 


1. ஓஹோ! மேக பந்தலோ.. 2. நிலாவே வா  செல்லாதே வா" 3. பனிவிழும் இரவு நனைந்தது நிலவு 4. சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா" 5.  மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா? அன்பே! என் அன்பே!  இயக்குநரிடம் சில கேள்விகள் 1. பொதுவா ஆண் தன் காதலி இறந்துட்டா குறைந்த பட்சம் 2 வருஷமும், பெண் தன் காதலன் இறந்துட்டா குறைந்த பட்சம் 4  வருஷமும் மீளாத சோகத்தில் இருப்பாங்கன்னு மனவியல் நிபுணர்கள் சொல்றாங்க.. ( உண்மைக்காதலில்). ஆனா ரேவதி தன் லவ்வர் கார்த்திக் இறந்த சோகத்தை எல்லாம் காட்டிக்காம ஜாலியா  குறும்பு பண்ணிட்டு மழைல நனைஞ்சுட்டு இருக்காரே? முரணா இல்லை? 2. பெண் வீட்டில் முதல் இரவு நடக்குது, ஆனா மேட்டர் ஏதும் நடக்கலை. பெண் வீட்டில் சொந்தக்காரங்க அதாவது அம்மா, பெரியம்மா , அத்தை யாராவது பெண் கிட்டே கில்மா நடந்துச்சா? ஒண்ணும் பிரச்சனை இல்லையே?ன்னு கேட்பாங்க.. ஆனா ஹீரோயின் தரப்புல யாரும் அப்டி கேட்ட மாதிரி தெரியலை.. கேட்டிருந்தா அப்போவே அம்மாவுக்கு உண்மை நிலவரம் தெரிஞ்சிருக்குமே? டெல்லி வந்த பின் அந்த கேள்வியை கேட்கும் அம்மா ஏன் தன் வீட்ல கேட்கலை? 3. கார்த்திக்  ரேவதி படிக்கும் காலேஜ்ல ரேவதி அமர்ந்திருக்கும் க்ளாஸ் ரூம்லயே வந்து அப்பாவுக்கு ஆக்சிடெண்ட்னு சொல்றார். எந்த லேடீஸ் காலேஜ்ல அப்படி உள்ளே விடுவாங்க? பிரின்ஸ் ரூம்ல தகவல் சொல்லி காத்திருக்கனும், வாட்ச்மேன்  அல்லது பியூன் போய்  கூட்டிட்டு வருவான்.. இதானே வழக்கம்? 4. கார்த்திக்கை போலீஸ் தவறுதலா சுடுவது டிராமா மாதிரி இருக்கு. பல கார்களிடையே தடுமாறி வரும் கார்த்திக் ஏதோ ஒரு விபத்தில் இறப்பது போல் காட்டி இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும் 5. மிக மென்மையானவரா காட்டப்படும் மோகன் கடைசி காட்சிகளில் எரிந்து எரிந்து விழுவது போல் காட்சிகள் எதுக்கு? மாமனார் இருக்கும்போது அவர் சொல்ற காரணம் ஓக்கே, தனிமையில் இருக்கும்போது  ஏன் எரிஞ்சு விழறார்? 6. பெண் பார்க்கும் படலம் நடக்கும்போது ரேவதி ரொம்ப யோக்கியர் மாதிரி நான் குறும்பு, சுட்டி உங்களுக்கு ஒத்து வராதுன்னு சொல்லி மேரேஜை வேணாம்னு சொல்ல ட்ரை பண்றவர் ஏன் தனக்கு ஒரு காதல் இருந்தது என்ற உண்மையை சொல்லலை? நான் ஆல்ரெடி ஒருத்தனை லவ்வி இருக்கேன் சாரி அப்டின்னா மாப்ளை துணடை காணோம் துணியை காணோம்னு ஓடி இருப்பானே? 7. அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் ஏன் ஹிப்பித்தலையோட வர்றார்? உங்க பட போலீஸ் எல்லாம் ஷார்ட் ஹேர் கட்ல தானே வருவாங்க? 8. காமெடிக்கும் உங்களுக்கும் காத தூரம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் காமெடி டிராக்குக்கு தனி ஆள் போடக்கூடாது அந்த ஹிந்தி பேசும் ஆள் தமிழ் டியூஷனில் போடா டேய் என்பது மட்டுமே டோட்டல் படத்துல இருக்கும் ஒரே காமெடி. வி கே ராமசாமி கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கார்.. இறுக்கமா போகும் திரைக்கதையில் காமெடி நல்லா டெவலப் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே? சி.பி கமெண்ட் - பிரமாதமான இந்தப்படத்தை நேத்து நைட் சன் டி வில பார்த்தேன். டோண்ட் மிஸ் இட்.. தமிழ் சினிமாவின் முக்கியமான படம். அனைவரும் பார்க்கலாம்..  டிஸ்கி - நேத்து படம் ஓடிட்டு இருக்கும்போது இந்தப்படம் பற்றிய தகவல்களை அள்ளி விட்ட மாமே, ஷேக் ,பிரதீஸ்,பறவை போன்ற ட்விட்டர்களுக்கு நன்றி.! மற்றும் கானா ப்ரபாவுக்கு ஸ்பெஷல் நன்றி!யூ டியூப் லிங்க் - புலவர் தருமி
அ இந்தப்படத்தின் அபாரமான பின்னணி இசை பற்றிய நுட்பங்கள்,  கலெக்‌ஷன் கேட்க - http://radiospathy.blogspot.in/2011/08/blog-post_09.html