21/3/2024ல் அர்ஜ்ண்ட்டீனா திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் இப்போது நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி யில் 27/3/2024 முதல் ஒளிபரப்பாகிறது.1994 ல் நடைபெற்ற ஒரு வெடிகுண்டு விபத்து சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நாவலின் திரை வடிவம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தன் மனைவி , 10 வயது மகள் , மகன் உடன் இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறான்..திடீர் என அவனுக்கு பண நெருக்கடி வருகிறது .கம்பெனியில் பணியாளர்களுக்கு சம்பளம் தரக்கூட பணம் இல்லை .வியாபாரத்தில் நட்டம் மகளின் ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணம் இல்லை .இந்த நெருக்கடியை சமாளிக்க நாயகன் வில்லனிடம் பண உதவி கேட்கிறான்
ஆனால் ஏற்கனவே நாயகனின் வீட்டை அடமானமாக வைத்து வாங்கிய கடனுக்கே இன்னும் வட்டி , அசல் கட்டாமல் இருப்பதால் வில்லன் புதிதாகக்கடன் தர மறுப்பதோடு பழைய கடனுக்கான கால அவகாசமாக ஒரு வாரம் காலக்கெடு விதிக்கிறான். அந்த ஒரு வாரத்துக்குள் அசல், வட்டி அடைக்காவிட்டால் நடப்பதே வேறு என்கிறான்
இதன் பின் நாயகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.மனைவி நாயகனை சமாதானப்படுத்தினாலும் அவளுக்கும் கடனை நினைத்துக்கவலையாக இருக்கிறது
இப்படி இருக்கும்போது நாயகன் ஒரு இடத்துக்குப்போகும்போது அங்கே ஒரு வெடிகுண்டு வெடிக்கிறது . அதில் மாட்டிக்கொண்ட நாயகனுக்கு லேசான காயம் தான் . ஆனால் நாயகனின் சூட்கேஸ் தூக்கி எறியப்பட்டு போலீசால் கைப்பற்றப்பெற்று நாயகியிடம் ஒப்படைக்கப்படுகிறது
வெடி விபத்தில் நாயகன் இறந்திருக்கலாம், என போலீஸ் கருதுகிறது . ஆனால் டெட் பாடி கிடைக்காததால் நாயகி அதை நம்பவில்லை
இந்த சம்பவத்தை சாக்காக வைத்து நாயகன் தற்காலிகமாக எல்லாப்பிரச்சனைகளிலிருந்தும் தப்பிக்க வேறு ஊருக்கு சென்று விடுகிறான்
அந்த ஊரில் வேறு பெயர் , வேறு ஐ டி கார்டு ரெடி பண்ணி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்சில் , ரெஸ்டாரண்ட்டில் பணி புரிகிறான். ஓனரின் மனைவி நாயகனை அன்புடன் நடத்துகிறாள் . ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஓனர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட சில நாட்களில் நாயகன் ஓனர் மனைவியுடன் நெருக்கமாகி இருவரும் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறார்கள்
நாயகி இப்போது வில்லனுடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறாள் . ஏற்கனவே நாயகன் மூலம் பிறந்த இரு குழந்தைகளுடன் இப்போது வில்லன் மூலம் பிறந்த ஒரு குழந்தையும் உண்டு
15 வருடங்கள் கழிகின்றன . ஃபேஸ் புக் மூலம் நாயகன் தன் மகளுக்கு திருமணம் என்பதை அறிகிறான். அவர்களை நேரில் பார்க்க கிளம்புகிறான்.
இதற்குப்பின் திரைக்கதையில் நிகழும் திருப்பங்கள் தான் மீதிக்கதை
நாயகன் ஆக ஜாக்கிங் ஃபரியல் பிரமாதமாக நடித்திருக்கிறார். பின் பாதியில் வரும் வயதான கெட்ட்ப்பில் அசப்பில் அஜித் குமார் போலவே சாயல் ( காட் ஃபாதர் எ வரலாறு கெட்டப் ) இளவயது கெட்ட்ப்பில் செமயான நடிப்பு ,வயதான கெட்டப்பில்சராசரி நடிப்பு அவருடையது
வில்லன் ஆக கேப்ரியல் கொயட்டி கச்சிதமாக நடித்திருக்கிறார்,குள்ளநரித்தனம், வில்லத்தனைம் இரண்டையும் சரி சமமாக வெளிப்படுத்துகிறார்
நாயகி ஆக கிரிசெல்டா சிசிலியானி கலக்கி இருக்கிறார். முதல் பாதியில் நாயகனுடன் இருக்கும்போதும், பின் பாதியில் வில்லனுடன் இருக்கும்போதும் பேலன்ஸ் பண்ணி நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் நடிப்பு அருமை
மகனாக , மகளாக வருபவர்களுக்கு அதிக காட்சிகள் இல்லை வந்தவரை ஓக்கே ரகம்
ஃபெடரிகா ஜசிட் தான் இசை . பின்னணி இசை நல்ல விறுவிறுப்பு ரோட்ரிக்கோ வின் ஒளிப்பதிவு சிறப்பு
ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும்படி க்ரிஸ்ப் ஆக கட் செய்திருக்கிறார் எடிட்டர்
மார்க்கோ ஒசாரியா விடோய் , செபாஸ்டியன் போரன்ஸ்டின் ஆகிய இருவரும் திரைக்கதை எழுத செபாஸ்டியன் போரன்ஸ்டின் இயக்கி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 முதல் காட்சியிலேயே கதை அரம்பம் ஆகி விடுவது சிறப்பு , செம விறுவிறுப்பாக காட்சிகள் நகர்கின்றன
2 கடன் நெருக்கடியால் நாயகன் கஷ்டப்படும் காட்சிகள் மனதுக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது . எல்லோருக்குமே கடன் இருக்கும் என்பதால் ஈசியாக கனெக்ட் ஆகி விடுகிறது
3 க்ளைமாக்ஸ் காட்சியில் நாயகன் , நாயகி நடிப்பு அருமை
4 நாயகன் தன் மகன் வில்லனை அப்பா என அழைப்பது கண்டு மருகுவது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் தன் ஓனரின் மனைவியோடு நெருக்கம் ஆவது எப்படி? என்பதை டீட்டெய்லாகக்காட்டிய இயக்குநர் நாயகி வில்லனுடன் இணைந்தது எப்படி என்பதை விஷூவகாலக்காட்டவில்லை . இது பின்னடைவு
2 வில்லன் பணத்துக்காக நாயகனை அவ்ளோ தூரம் நெருககடி தருபவன் நாயகன் காணாமல் போனதும் நாயகியிடம் நீங்க கடனைக்கட்ட வேண்டியதில்லை எனக்கூலாக சொல்வது எப்படி ?
3 வில்லன் நாயகியை எப்படி வீழ்த்தினார் என்பது சொல்லப்படவில்லை .பண நெருக்கடிதான் காரணமா? இல்லை வில்லனின் செல்வாக்காலா?என்பது சொல்லப்பட்டிருக்க வேண்டும்
4 நாயகன் கடந்த 15 வருடங்களாக தன் மனைவி என்ன ஆனாள் என்பது ப்ற்றிக்கவலைப்படாமல் இருப்பது எப்படி ?
5 நாயகன் கடைசி வரை தன் மகன் , மகளை சந்திக்காமல் இருப்பது ஏன் ?
6 நாயகன் தான் மட்டும் இன்னொருத்தியுடன் வாழலாம், ஆனால் தன் மனைவி தனிமையாக இருப்பாள் என்று எதிர்பார்க்கலாமா? வில்லனுடன் இணைந்து மனைவியைக்கண்டு ஜெர்க் ஆவது ஏன்?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - இது ஒரு ஃபேமிலி டிராமா என்பதால் பெண்களுக்குப்பிடிக்கும்,த்ரில்லர் மோடில் சொல்லப்பட்டிருப்பதால் ஆண்களுக்கும் பிடிக்கலாம் , ரேட்டிங் 2.5 / 5
Rest in Peace | |
---|---|
Spanish | Descansar en paz |
Directed by | Sebastián Borensztein |
Screenplay by |
|
Based on | Descansar en paz: ¿nunca soñaste con dejar todo y empezar de nuevo? by Martín Baintrub |
Produced by |
|
Starring | |
Cinematography | Rodrigo Pulpeiro |
Edited by | Alejandro Carrillo Penovi |
Music by | Federico Jusid |
Production companies |
|
Distributed by | Netflix |
Release dates |
|
Country | Argentina |
Language | Spanish |