விஷால்க்கு கதை எழுதனும்னா டைரக்டர்கள் யாரும் சிரமமே படத்தேவை இல்லை.. இடைவேளை வரை காமெடியனை வெச்சு மொக்கை காமெடி போட வேண்டியது, ஹீரோயின் கிளாமரை வெச்சு 2 டூயட் பாட வேண்டியது.. ஹீரோ ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு வருவாரு.. வந்த ஊர்ல ஒரு ரவுடி கும்பலோ, தாதா கும்பலோ அந்த ஊரை ஆட்சி செய்யும், அண்ணன் அவங்க அட்டூழியத்தை, கொட்டத்தை அடக்குவாரு.. டேய்.. திருந்துங்கடா டா டா...
படத்தை ஓரளவுக்காவது தியேட்டர்ல உக்காந்து பார்க்க முடியுதுன்னா சமீராரெட்டியின் கிளாமரும், விவேக்கின் சுமாரான காமெடியும் தான்...
சமீராரெட்டியை ஸ்விம்மிங்க் பூலில் தள்ளி விட்டதும், நனைந்த பனியனோடு அவர் எழுந்து நிற்கும்போது ஒரு பய தியேட்டர்ல கண் இமைக்கலையே... வழக்கமா டூயட் வந்தா தம் அடிக்க போற பசங்க கூட இருடா.. ஏதாவது சீன் இருக்கும்னு நம்பிக்கையா உள்ளேயே இருந்தாங்க.. ஹீரோவுக்கு தங்கையா ஒரு ஃபிகரு ஹீரோயினை விட நல்லாருக்கு... பாப்பாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டுன்னு தோணுது. ஆனா பாப்பா சிரிக்கறப்ப அழகா இருக்கு.. அழும்போது பார்க்க சகிக்கலை.. நல்ல நடிகைன்னா அழும்போது கூட ரசிக்க வைக்கனும்..
விவேக் ஏற்கனவே வடிவேல் பண்ணுன காமெடி கேரக்டரான வெட்டி பயில்வான் கேரக்டர்.. அதாவது பலூனை அவர் டிரஸ்ஸுக்குள்ள மறைச்சு வெச்சு பாடி பில்டர்னு ஃபிகர்ங்க கிட்டே பீத்திக்குவாராம், சகிக்கலை, ஆனா தியேட்டர்ல சிரிக்கறாங்க..
சமீராரெட்டி ஏனோ வயசான மாதிரி நல்லாவே இல்ல.. முகத்தை தவிர மற்றதெல்லாம் ரசிக்கும்படி இருக்கு.. அவரது ஹேர் ஸ்டைல் சகிக்கலை..
அண்ணன் புரட்டாசித்தளபதி ஒரே மாதிரி முக பாவம்... உணர்ச்சியே இல்லாம வசனம் பேசறது.. மாடுலேஷன்னா என்னன்னு அண்ணன் கமல்ட்ட இருந்து கத்துக்கனும், அவன் இவன் பார்த்துட்டு இதைப்பார்க்கறப்ப கடுப்பா இருக்கு..
படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்
1. மை மதராஸ் சே ஆயா ஹூங்க்...
விவேக் - எங்காயா கல்கத்தா.
2. ஒரு நாளுக்கு நான் 25 மணி நேரம் எக்சசைஸ் பண்றேன்..
அதெப்பிடி? 24 மணி நேரம் தானே?
3. எனக்கு ஹிந்தி தெரியாதுன்னு உனக்கு எப்படி தெரியும்?
நீயும் என்னை மாதிரியே தப்பு தப்பா ஹிந்தி பேசுனியே?
4. மாஸ்டர்.. நட்ட நடுராத்திரில மொட்டை மாடில என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
மூன் பாத் டேக்கிங்க்..
உங்க பை செப்ஸை காண்பிங்க..
வேணாம்.. அது கிளார் அடிச்சு நிலால இருக்கற பாட்டிக்கு கண் கூசும்..
5. ரீமா சென் - நான் உன்னை ரேப் பண்ணப்போறேன், நீ கதறிக்கதறி அழப்போறே..
அவன் ஏன் அழறான்..? ஒன்ஸ்மோர் தான் கேட்பான். ( அதானே?)
6. என் பொண்ணு பூஜைல இருக்கா..
மணி ஓசை கேட்டுதுங்க்..
அவ ரொம்ப பக்திங்க..
பார்த்தேன்..!!!
7. நீங்க வீட்டுக்கு வந்திருக்கற விருந்தாளி , காபி சாப்பிட்டுட்டுதான் போகனும்..
அது சரி.. ஏன் வீட்டுக்குள்ள இருந்து டம்ளர் மட்டும் பறந்து வருது?
அது வந்து... விருந்தாளிங்க காத்திருக்கறது என் மனைவிக்கு பிடிக்காது.. நீங்க டம்ளரை பிடிங்க.. நான் காபியை எடுத்துட்டு வர்றேன்..
8. இந்த உலகத்துல எப்பவும் ஒர்க் அவுட் ஆகறது செண்டிமெண்ட்ஸ் தான்..
9. டேய்.. பேட்டைப்பார்த்து பால் போட வேண்டியதுதானே.....
எஸ்.. அப்டித்தான் போட்டேன்..
டேய்.. என் உயிரோட விளையாடிட்டே டா....
என்ன ஆச்சு மாஸ்டர்....?
ம் .. குச் குச் ஹோத்தா ஹை..
10. மாஸ்டர்.. நான் பாலு பேசறேன்,...
நான் பலூன் பேசறேன்..
11. ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹதா தா
அப்டின்னா?
ஒரு குகைல ஒரு சிங்கம் தான் இருக்க முடியும்..
12. இந்த பலூன் மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும், வெளில யார் கிட்டேயும் சொல்லிடாதே.. மீறி வெளில சொன்னே.. அநாவசியமா நான் உன் கால்ல விழ வேண்டி இருக்கும்..
13. ரீமா சென் - நாந்தான் மன்னிப்புக்கேட்டுட்டேனே.. ஏன் முறைக்கறே..
ஃபோனைக்குடு,,,
ம்.. அதை வெச்ச இடத்துல தேடு..
உன் சர்ட்டுக்குள்ள வெச்சே.. எடுத்துக்கவா?
14. ஏண்டி.. அவன் நம்மளைப்பற்றிதானே பேசறான்?
இல்ல.. உன்னைப்பற்றி..
15. ஹீட்டரை சரி பண்ணனும்...
யோவ்.. முதல்ல என்னை சரி பண்ணுய்யா..
16. கடைசில பொண்ணுங்க அடிக்கறது மொட்டை தானேடி.. அது காதலனா இருந்தாலும் சரி.. கழட்டி விட்டவனா இருந்தாலும் சரி..
17. முள் படுக்கைல குப்புற படுங்க , இந்த 5 பேரும் உங்க மேல ஏறி நடப்பாங்க. வேண்டுதல் முடிஞ்சிடும்..
ம்க்கும், எனக்கு எல்லாம் கிழிஞ்சிடும்..
18. எல்லாரையும் நாம கொல்ல வேண்டியதில்லை.. நம்ம மேல இருக்கற பயமே அவங்களை சாகடிச்சுடும்..
19. என் தங்கச்சி மேல எவன் கை வெச்சாலும் நான் அவனை அடிப்பேண்டா அடிப்பேண்டா அடிப்பேண்டா டா டா டா . # புரட்டாசித்தளபதி விஷால் பஞ்ச டயலாக் @வெடி
20. என் மேல கேஸ் போட நான் அல்ப சொல்ப இல்லடா # வில்லன் பஞ்ச் டயலாக்
21. போலீஸ்னா பயம் இருக்கக்கூடாது, பயம் இருந்தா போலீஸா இருக்கக்கூடாது..
22. அங்கே ஒரு கேனம் இருப்பான், அவன் கிட்டே ஃபோனைக்குடுங்க..
இங்கே கேனம் யாரு?
அய்யாதான்
23. டாக்டர்.. விளையாடறீங்களா? உங்களை தூக்கிடுவேன்..
உங்க வலது கையையே உங்களால இப்போ தூக்க முடியாது..
24. டீ வாங்கிட்டு வான்னு சொல்லி இருந்தாக்கூட பரவால்ல.. கழுவிட்டு வாங்கிவாண்ட்டாங்களே..
25. சீக்கிரமா வந்தா உன் பொணத்தை உன் தங்கை பார்ப்பா, லேட்டா வந்தா உன் தங்கை பொணத்தை நீ பார்ப்பே,,
26.. டாக்டர்.. வலி பயங்கரமா இருக்கு..
கவலைப்படாதே.. நின்னுடும்..
எப்போ?
உயிர் போனதும்...
27. பயம் எப்படி ஸ்டார்ட் ஆகுது?
எப்படி வரும்கற டவுட்லயே ஸ்டார்ட் ஆகும்..
28. நான் செத்தாலும் நீ சொல்றதை செய்ய மாட்டேண்டா...
உல்டாவா பேசாதே.. நான் சொல்றதை செய்யலைன்னாத்தான் நீ சாவே,,
29. டாக்டர், இஞ்செக்ஷன் போட்டாச்சா?
ம், நீங்க என்கவுண்ட்டர்ல போட்ருங்க
30. சின்ன வயசுல இருந்தே பயம்னா என்னன்னே தெரியாம வளர்ந்துட்டேன்.. பயம்னா என்னன்னு காட்றா.. பாக்கனும்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. காதலிக்கப்பெண்ணொருத்தி, என்ன ஆச்சு? எனக்கு என்ன ஆச்சு?, இப்படி மழி அடித்து, மேலே மேலே , இச் குடு என 5 பாடல்களையும் ஓரளவு பார்க்கும்படி படம் ஆக்கியது..
2. ஹீரோயின் தங்கை கேரக்டருக்கு அழகு ஃபிகரை புக் செய்தது
3. குப்பை படத்தில் கூட ரசிக்க வைக்கும் ஊர்வசி காமெடி காட்சிகள்
4. ஒரு சீனில் கூட பிரபுதேவா தலையை காட்டாமல் விட்டது
இயக்குநர் பிரபுதேவாவிடம் சில கேள்விகள்
1. வில்லனின் உடம்பில் ஸ்லோபாய்சன் ஊசி போட்டு பின் அவனை ஹீரோ மிரட்டி எல்லா பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கும் சீனை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பது?
2. விஷால் எப்படி ஒவ்வொரு சீனிலும் 34 பேரை அடித்து துவைக்கிறார்?
3. பாத்ரூமில் ஹீரோவை டர்க்கி டவல் மட்டும் கட்டிக்கொண்டு ஹீரோயின் கட்டிப்பிடித்தால்தான் காதல் வருமா?
4. ஃபிளாஸ்பேக்கில் விஷாலின் தங்கையாக வருபவர் ஒரு பேட்டை ரவுடியின் மகள்.. அதற்குத்தகுந்தபடி ஆளை செலக்ட் செய்திருக்கலாம்..அவர் பணக்காரப்பொண்ணு போல அதுவும் சேட் வீட்டு பொண்ணு போல இருக்கிறார்..
5. அநாதை இல்லத்தில் தங்கையை மட்டும் தனியாக ஏன் விட வேண்டும்? அதே அநாதை இல்லத்தில் விஷாலும் வளரலாமே?வாட் லாஜிக்? அண்ணன், தங்கை இருவரும் வளர அநாதை இல்லத்தில் ரூல்ஸ் கிடையாதா?
6.. போலீஸ் ஆஃபீசராக வரும் விஷால் ஏன் எப்போதும் லை தாடியோடவே இருக்கார்?
7. கொல்கத்தா வந்த பின் விஷால் என்ன தொழில் செய்யறார்? ஹீரோயின் பின்னால் சுற்றுவது தவிர....
ஏ செண்ட்டர்களில் 20 நாட்கள், பி செண்ட்டர்களில் 15 நாட்கள், சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 37
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - அய்யய்யோ வேணாம், உங்களுக்கென்ன தலையெழுத்தா?
டிஸ்கி 1 -
முரண் - த்ரில்லிங்க் , ட்விஸ்ட்,மர்டர் - சினிமா விமர்சனம்
\