படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் ? என்பதை படம் பார்த்த சரக்கு சங்கரலிங்கங்கள் யாராவது சொன்னால் தான் தெரியும். மோகன் லால் , ஃபகத் ஃபாசில் , ஆசீஃப் அலி போன்ற முக்கிய நாயகர்கள் இருந்தாலும் மோகன் லால் , ஃபக்த் காம்பினெஷன் ஷாட்ஸ் எதுவும் இல்லாதது ஒரு குறையே!. இது த்ரில்லர் மூவி என பிரமோட் செய்யப்பட்டாலும் மெதுவாகச்செல்லும் திரைக்கதை தான் . லாஜ் ஜோஸிடம் உதவியாளராகப்பணியாற்றிய சலாப் பாப்பு இயக்கி உள்ளார். இந்தப்பட,ம் இதே டைட்டிலில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது . ராகுல் காந்தியின் சொந்தத்தொகுதியான வய்யநாடு மற்றும் கோழிக்கோட் ப்குதிகளில் ஷூட்டிங் நடந்த படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரூ கட்சியில் தீவிரமாக இயங்கி வருபவர், ஆனால் அனைத்துக்கட்சி ஆட்களிடமும் நட்பு பாராட்டுபவர். பார்ட் டைம் ஆக சோசியல் சர்வீசும் செய்து வ்ருகிறார். . இது போக நாடக நடிகரும் கூட ., இவருக்கு எதிரிகள் என யாரும் இல்லை . இவர் ஃபேஸ் புக்கில் காம்ரேடு என புனை பெயரில் இயங்கி வரும் ஒரு பெண் ஐடி யிடம் கண்ணியமான சேட்டிங் செய்து வருகிறார் அது போக ஒரு முஸ்லீம் பெண்ணை காதலித்து வருகிறார்
நாயகன் ஒரு சாதா லாட்ஜில் ரூம் எடுத்துத்தங்கி இருந்த போது கொலை செய்யபப்டுகிறார். போலீஸ் ஆஃபீசர் அந்தக்கொலையை துப்பு துலக்குகிறார்
நாயகனின் கூடவே இருந்த நண்பன் , நாயகனின் காதலி , சேட்டிங் செய்த பெண் ஐடி , கட்சி ஆள் , சோஷியல் சர்விஈஸ் செய்ததால் பாதிப்புக்கு ஆளான நபர் இவர்களில் யார் கொலையாளி என்பதுதான் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
நாயகன் ஆக ஃபகத் ஃபாசில் எந்த வித ஆர்ப்பாட்டமான பில்டப் இல்லாமல் எதார்த்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். எல்லோரிடமும் சிரித்த முகமாகப்பழகும் இவரை யார் கொலை செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழுவதுதான் இவரது கேரக்டர் டிசைனுக்குக்கிடைத்த வெற்றி
போலிஸ் ஆஃபீசர் ஆக மோகன் லால் .வழக்கம் போல கம்பீரமான நடிப்பு
ஆசீஃப் அலி கர்ப்பம் ஆன காதல் மனைவியை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லையே என கலங்கும் இடத்தில் செம நடிப்பு
நாயகனின் நெருங்கிய நண்பனாக சைஜூ க்ரூப் கச்சிதம் இவரது மனைவியாக வரும் அனுஸ்ரீ நாயகனுக்கும், இவருக்கும் காலேஜ் மேட் என்பதில் ஒரு ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்.
நாயகனின் ஃபேஸ் புக் ஃபிரண்டாகவும், ஆர் டி ஓ ஆஃபீசர் ஆகவும் வரும் மேக்னா ராஜ் கேரக்டர் டிசைனில் இன்னும் எதிர்பார்த்தேன் . நாடக நடிகையான மீராநந்தன் கச்சிதமான நடிப்பு .
சுராஜ் வெஞ்சார,மூட் கெஸ்ட் ரோல்
146 நிமிடங்கள் ஒடும்படி எடிட்டர் ட்ரிம் பண்ணி இருக்கிறார். இன்வெஸ்டிகேஷன் , ஃபிளாஸ்பேக் என மாறி மாறி வருவ்து கொஞ்சம் குழப்பமான திரைக்கதையாக தோன்றுகிறது
பிஜிபால் இசை , பின்னணி இசை கச்சிதம் , மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவு தெளிவு
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் கொலை ஆன செய்தியை சுவரொட்டி மூலமாக ஆடியன்சுக்கு ஓப்பன் பண்ணும் ஷாட் சூப்பர் . ஒரு முறை கூட டெட் பாடியைக்காட்டாத ஐடியா செம .
2 பொதுவாக பெண்ணால் தான் குற்றங்கள் நடக்கும் என்பதால் அர் டி ஓ ஆஃபீசர் கம் ஃபேஸ் புக் தோழி அல்லது நாடக நடிகை , அல்லது காதலி இவர்கள் மூவரில் ஒருவர் தான் கொலையாளி என்பது போல காட்சிகள் நகர்வது குட்
3 வங்கித்துறையில் நடக்கும் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய விதம்
ரசித்த வசனங்கள்
1 நாம இப்போ ரீ சார்ஜ் பண்ணிக்கலாமா?
சரக்கு அடிக்கக்கூப்பிடறியா? ரைட்டு
2 ஒரு ஆளுக்கு எப்பவும் இரண்டு முகம், இரண்டு மனசு இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பேங்க் மேனேஜரை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதாக போலீஸ் ஆஃபீசர் சொன்னதும் ஒரு கலெக்சன் எக்ஸ்க்யூட்டிவ் வாரண்ட் இருக்கா?னு கேட்கறார். உடனே பளார் என அடிக்கிறார் அவனை .. இருக்குதுன்னு சொல்லனும் அல்லது இல்லைனு சொல்லனும், ஹீரோ வேல்யூ காட்ட காரணமே இல்லாமல் எதுக்கு அடிக்கனும் ?
2 ஒரு கொலையை செய்தால் லோன் க்ளியரன்ஸ் பண்ணிடறோம் என பேங்க் மேனேஜர் சொல்வது ஓக்கே , ஆனால் கொலையாளி அதற்கு உடன்படாத போது கொலை செய்வதற்கு முன்பே லோன் க்ளியரன்ஸ் சர்ட்டிஃபிகேட் கொடுப்பது ஏன்? அதை வைத்துக்கொண்டு அவன் கொலையே செய்யவில்லை என்றாலும் லோன் க்ளியர் பண்ணி விட்டதாய்த்தானே அர்த்தம் ? பிடி பேங்க் கையில் இருக்காதே?
3 கொலை செய்வதற்கு முன் லோன் க்ளியரன்ஸ் சர்ட்டிஃபிகேட்டின் ஜெராக்ஸ் காபியை தர்றோம், கொலை வேலை முடிந்த பின் ஒரிஜினலைத்தர்றோம் என்கிறார்கள். இது ரிஸ்க் ஆச்சே? அவன் கொலையே செய்யாமல் லோன் க்ளியர் பண்ணிட்டேன் . ஜெராக்ஸ் காபி இது . ஒரிஜினல் மிஸ் ஆகிடுச்சு என கோர்ட்டில் வாதிடலாமே?
4 பேங்க்கில் லோன் கிளியர் பண்ண அக்கவுண்ட்டில் பணம் போட வேண்டும், லோன் க்ளியரன்ஸ் சர்ட்டிஃபிகேட் கொலை செய்யும் முன் தந்தது . தேதி முந்தையது , செட்டில்மெண்ட் பணம் இட்டது கொலை நடந்த பின் . பிந்தைய தேதி . இதை வைத்து ஈசியாக போலீசிடம் மாட்டிக்கொள்வோம் என்பதை பேங்க் மேனேஜர் ஏன் யூகிக்க வில்லை ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மிக மெதுவாக நகரும் திரைகக்தை , ஃபைட் சீன்ஸ் , சேசிங் சீன் இல்லை ., இதெல்லாம் ஓக்கே எனில் பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5
Red Wine | |
---|---|
Directed by | Salam Bappu |
Screenplay by | Mammen K. Rajan |
Produced by | A. S. Gireesh Lal |
Starring | |
Cinematography | Manoj Pillai |
Edited by | Ranjan Abraham |
Music by | Bijibal |
Production company | Gowri Meenakshi Movies |
Distributed by |
|
Release date |
|
Running time | 146 minutes |
Country | India |
Language | Malayalam |