Showing posts with label RAMAYANAM. Show all posts
Showing posts with label RAMAYANAM. Show all posts

Wednesday, May 23, 2012

ஸ்ரீராமராஜ்யம் - தெலுங்கு சினிமா விமர்சனம்

http://www.tollywoodandhra.in/wp-content/uploads/2012/02/Sri-rama-rajyam-movie-download.jpg

எல்லாருக்கும் தெரிஞ்ச ராமாயணக்கதைதான்.. ஆனா சம்பூர்ண ராமாயணம்னு தமிழ்ல டீட்டெயிலா வந்ததே அந்த மாதிரி இல்லை.. ஆஃப்டர் வனவாசம் சீதை ரிட்டர்ன் டூ அயோத்தி என்ன ஆச்சு, லவ குசா எப்படி வளர்ந்தாங்க? இதுதான் டாபிக்.. நயன் தாரா சீதையா நடிச்சதால தான் இந்தப்படத்துக்கு இவ்ளவ் செல்வாக்கு..


வனவாசம் முடிஞ்சு ராமர் சீதையோட  நாட்டுக்கு வர்றார்.. 2 பேரும் ஜாலியா அந்தப்புரத்துல  டூயட் பாடறாங்க.. அப்போ யாரோ மக்கள்ல ஒருத்தரு “ சீதை ராவணன் ப்ளேஸ்ல இருந்திருக்கா.. என்ன நடந்துச்சோ என்னவோ? அப்டின்னு நாக்கு மேல பல்லைப்போட்டு பேசிடறாரு.. உடனே ராமர் சீதையை  அதுவும் நிறைமாசமா இருக்கற சீதையை லட்சுமணன் கிட்டே சொல்லி  காட்டுக்குள்ளே கொண்டு போய் விட்டுட்டு வந்துடறாரு.. 

 தக்காளி, அதைக்கூட அவரா செய்ய மாட்டாரா? மன்னர் இல்லையா? அதான்.. எல்லாத்துக்கும் ஆள் வேணும் போல..காட்டுல சீதைக்கு ரெட்டைக்குழந்தை பிறக்குது. லவன், குசன்னு பேர் வைக்கறாங்க.. ராமர் நிஜமாவே பொண்டாட்டி மேல அக்கறையா இருந்தா  போய் குழந்தையை, மனைவியை பார்த்துட்டு வந்திருக்கனும்.. ஆனா 8 வருஷமா போகவே இல்லை..

 அந்த பசங்க 8 வயசு ஆன பின் அரண்மனைக்கே வந்து பஜனை பாடறாங்க.. அப்புறமா ராமர் காட்டுக்கு போய் சீதையை அரண்மனைக்கு வான்னு கூப்பிடறார்.. ஆனா பூமா தேவி வந்து சீதையை தன்னோட கூட்டிட்டு போயிடறாங்க.. ராமர் உள்ளதும் போச்சுடுடா க்ரீன் கண்ணா அப்டினு ரிட்டர்ன் ஆகறாரு.. இதுதான் கதை..


சீதையா நடிச்சிருக்கற நயன் தாராவை சும்மா சொல்லக்கூடாது. வாழ்க்கைலயே முதல் முறையா  குடும்பப்பாங்கா, கண்ணியமா முழு உடம்பையும் சேலையால மறைச்சு குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்காங்க .. தேடிதேடிப்பார்த்தும் ஒண்ணும் தெரியல ..

மற்றபடி ராமர், லவன், குசன் எல்லார் நடிப்பும் சுமார் தான் நாடகம் பார்ப்பது போல் இருக்கு .. செட்டிங்க்ஸ், ஆடை வடிவமைப்பு அசத்தல் . இளையராஜா  இசை பிரமாதம்.. 2 பாட்டு நல்லாருக்கு. மொத்தம் 15 பாட்டு அவ்வ்வ்வ்வ்.. இளையராஜாவின் இசையில் தெய்வங்கள் தித்திக்க நாமெல்லாம் சிந்திக்க  அந்தப்பாட்டும், ராமாயணமே, ஸ்ரீராமாயணமே பாட்டு 2ம் கலக்கல் ரகம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPpr-IYDUn2dJ6p7pKnI2uscleExHIQww_MTNRZQwPJOXl_f4gYAkZXt0QmDAxMObWpPQsoEHjDb01wZ_khd4qivcWMiXASQ8BmAc3PVUjD4IRR4yy0qR7eJDqKrjoJfKx2ksuWXr-VbI/s1600/sri_rama_jayam20.jpg
 ராமாயணத்தை இயற்றிய வால்மீகியிடம் சில கேள்விகள்


1. தன் அப்பாவின் ஆணையை மதித்து ராமர் காட்டுக்குப்போனார், அவர் கூட அவர் சம்சாரம் போச்சு ஓக்கே. லக்‌ஷ்மணன் ஏன் போகனும்? அப்படியே அவர் போனாலும் ராமர் என்ன சொல்லி இருக்கனும்? ஒண்ணா நீ அரண்மனைலயே இரு. அல்லது உன் சம்சாரம் ஊர்மிளாவையும் உன் கூட கூட்டிட்டு வந்துடுன்னுதானே சொல்லி இருக்கனும்?


2. ஊர்மிளா ஏதும் சாப்பிடாமல் பட்டினி இருந்து எலும்புக்கூடாய் அவர் படுக்கை அறையில் இருந்ததாய் சம்பவம் வருது.. அதுவரை யாருமே அவரை கவனிக்கலையா?


3. ராமர் பாட்டுக்கு அவர் சம்சாரம் சீதை கூட குஜாலா காட்டுல சுத்திட்டு இருந்திருக்காரு.. லக்‌ஷ்மணன் என்ன பாவம் பண்ணாரு?தனியே விட்டுட்டீங்க?


4. ராமர் சீதை நினைவா சீதை உருவத்தில் தங்கச்சிலை செஞ்சு அரண்மனைல வெச்சு டெயிலி அதை பார்த்துட்டு இருக்கார் , ஓக்கே ஏன் அவரை காட்டில் போய் பார்க்கலை?


5. மக்கள் தான் சீதையை தப்பா பேசி காட்டுக்கு அனுப்பக்காரணம் ஆனாங்க. அதே மக்கள் தங்கள் நகைகளை கொடுத்து சிலை செய்ய சொன்னதுக்கு சீதையை போய் கூட்டிட்டு வான்னு ஒரு பயலும் சொல்லலையே?ஏன்?


6. அனுமார் உலகம் பூரா பறக்கறவர்.. சீதை அந்த காட்டுல தனியா இருக்கும்போது மட்டும் ஏன் தூது விடலை?


7. அசோக வனத்தில் சீதை கற்பு போய் இருக்குமோன்னு சந்தேகப்படற மக்கள் பேச்சை ராமர் கேட்டு அவரை தனியே காட்டுக்கு அனுப்பிட்டாரு , ஓக்கே அங்கே காட்டுல அவர் தனியா இருந்தப்ப யாராவது ரேப் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சாரா?


8. பூமா தேவி வந்து சீதையை தன்னோட பாதாள லோகத்துக்கு கூட்டிட்டு போயிடுது.. எந்த தப்புமே பண்ணாத சீதையை கூட்டிட்டு போறப்ப மனைவியை பரிதவிக்க விட்ட ராமரை ஏன் கூட்டிட்டு போகலை.. தக்காளி, வண்டில ஏர்றான்னு சொல்லி அவரையும் கூட்டிட்டு போறதுக்கென்ன?


9. லவன், குசன் 2 பேரும் பயங்கர புத்திசாலியா வளர்றாங்க, மந்திர வித்தை எல்லாம் தெரியுது. ராமர் பற்றி தெரியுது.. ஆனா ராமர் தான் தன் அப்பான்னு தெரியலை. அப்போ சீதை அவங்க கிட்டே மிஸ்டர் எக்ஸ் தான் உங்கப்பான்னு சொல்லி வளர்த்திருப்பாரா?


10. இவ்ளவ் துரோகம் ராமர் செஞ்சும் சீதைக்கு அவர் மேல கோபமே வர்லையே ஏன்?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiVKjoenQMVngLd9k5wtYcLo0WzhDizqqeH4UnzOekdTCi9jZSHVeUeKlk_mdnl-5D5sLU074iJWaTTrqQIsuGva4OaWQcQgzBzKIvQvmIKFniogM1Bk8apxA-kQZBt8tW52MqaCJL2QU/s1600/Nayanatara_New_Photo_Stills_Sri_Rama_Rajyam+%25281%2529.jpg
 இயக்குநருக்கு சில கேள்விகள்


1. ராமர் தன்னிலை விளக்கம் அளிக்கறப்போ “ ஊரே பேசுது, அதனால தான் அப்படி செஞ்சேன்”கறார். ஆனா பூமாதேவி “ ஒரே ஒரு ஆள் பேச்சைக்கேட்டுட்டு உன்னை நிர்க்கதியா விட்ட ராமன்” கறார்,. ஒய் திஸ் குழப்பம்?


2. தலைவன் எவ்வழி? மக்கள் அவ்வழின்னு சொல்வாங்க.. ராமர் மகா உத்தமர், அப்படி இருக்கும்போது அவர் ஆட்சி புரியும் நாடும் அவரை மாதிரி தானே இருக்கனும்? ஏன் சீதையை சந்தேகப்படற அளவு கேவலமா இருக்கு?

3. ஒரு நாட்டின் மன்னன் போருக்காக போர்க்களம் போனா 6 மாசம் கழிச்சுத்தான் நாடு திரும்பறான்.. அப்போ அவன் என்ன எல்லாம் கில்மா பண்ணானோ? அவன் தீக்குளிக்க வேண்டியது இல்லையா?


4. பூமா தேவி பற்றி ராமாயணத்தில் வர்ணிக்கையில் கம்பர் பச்சை வண்ண ஆடை அணிந்தவள் அப்டிங்கறார்.. ஆனா படத்துல சிவப்புக்கலர் பட்டுப்புடவை, சிவப்புக்கலர்ல வெள்ளை கட்டம் போட்ட ஜாக்கெட் போட்டுட்டு வர்றாங்களே?


5. பட்டாபிஷேகம் செய்யும்போது நாட்டை காப்பாற்றுவேன் என உறுதி அளித்ததால் தான் நாட்டு நலன் கருதி சீதையை காட்டில் விட சம்மதித்தேன்னு ராமர் சொல்றாரு.. ஏன்? மெரேஜ் நடக்கும்போது கூட மனைவியை எந்நிலையிலும் கை விட மாட்டேன்னு சொன்னாரே? அதை காத்துல பறக்க விடலாமா?

6. புருஷன் இல்லாம தனிமையில் இருக்கும் பெண்கள் அந்தக்காலத்துல பூவே தலைல வைக்க மாட்டாங்க, ஆனா நயன் தாரா ஐ மீன் சீதை எப்பவும் 8 முழம் மல்லிகைப்பூ வெச்சுட்டு இருக்காரே?


7. சீதையை பார்க்க குடிலுக்குள் வர்ற முனிவர் ஏன் கதவை சாத்தறார்? ஹய்யோ அய்யோ ..


8. மத்தவங்க கண்ணுக்குத்தெரியாத இன்விசிபிள் விமனா சீதை அரண்மனைக்குள்ள வர்றப்போ ராமர் வந்ததும் அவரை பார்த்து சீதை ஏன் ஒளியனும்? அவர் தான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாரே/


9. நயன் தாரா கைல ரத்தச்சிவப்புல மருதாணி இருக்கு.. கானகத்துக்கு வந்த பின் 8 வருஷமா அவர் 3 மாசத்துக்கு ஒரு டைம் மருதாணி வெச்சுட்டே இருப்பாரா?அவர் தான் எந்த விதமான அலங்காரத்துலயும் மனம் லயிக்காம இருப்பவர் ஆச்சே?

10. பூமா தேவி க்ளைமாக்ஸ்ல 12 நிமிஷம் வசனம் பேசுது.. அப்போ ராமர் அவர் வாயையே ஆன்னு பார்த்துட்டு அவங்க கிளம்பறப்ப லபோ திபோன்னு அடிச்சுக்கறாரே.. அதை அவர் இருக்கறப்பவே செஞ்சிருக்கலாமே?


http://www.andhrabulletin.com/admin/images/Nayanathara%20stills%20from%20Sri%20Rama%20Rajyam%20(9).jpg
மனம் கவர்ந்த வசனங்கள்


1. மக்களுக்கு நல்வாழ்க்கை வழங்கி நாட்டை ரட்சிப்பவனே ராஜன் ( லீக்ஸ்?)


2. கஷ்டங்கள் இல்லை என்றால் கதைகள் இல்லை..


 அப்போ எந்த கதையும் சொல்ல வேணாம்.. கஷ்டம் எதும் வராம இருக்கட்டும்.


3. சூரிய கிரகத்தில் பிறந்தவர் சந்திர வடிவ பொட்டை இடலாமா?.

4. ராமர் இன் ரொமான்ஸ் மூடு - வளர்வது பிறை மட்டுமா? உன் இடையும் தான் ( நல்ல வேளை.. )


5. வரம் என்றாலே எனக்கு பயம் நாதா .. வரம் நமக்கு சரி வராது..

6.  ஆபத்து வேளை தெரிந்து வருவது இல்லை


7. நாளைக்கேவா? அது இயலாது.. பிறந்த மான் எழுந்ததும் ஓட நினைக்குமா?


8. தாம்பத்யம் முக்கியம் அல்ல, ராஜகாரியம் அழைக்கையில்.. வருகிறேன்.. ( இந்த ராமர் சம்சாரத்தை எப்பவும் சரியாவே கவனிக்கலை  போல )


9. சந்தேகித்தது ஒருவர் என்றால் வெட்டலாம். ஆனால் ஊரே சந்தேகப்பட்டால் நான் என்ன செய்வது? ( ஊர் உன்னை சந்தேகிச்சா நீ தீக்குளிப்பியா ங்கொய்யால)


10. கீர்த்திக்கு ( புகழ்)ஆசைப்பட்டு ராஜ தர்மத்துக்கு துரோகம் செய்ய மாட்டேன்..

11. யக்ஞ யாகம் மனைவி இல்லாத போது கணவன் தனித்து செய்ய முடியுமா?


12. கற்பது என்பது வேறு.. தெரிந்து கொள்வது என்பது வேறு


13. எதிரியின் பலத்தை அறிந்து கொள்வது போர் வித்தையின்  முதல் படி ( வால்மீகி சாணக்கியர்ல இருந்து சுட்டுட்டாரா? சாணக்கியர் வால்மீகிட்ட சுட்டாரா?)


14. பிரம்மாஸ்திரத்தை மிஞ்சியது, தோல்வி என்ற ஒன்றையே அறியாதது ராமனின் அஸ்திரம்


 ஆந்திராவில இந்தப்படம் படு குப்பை ஆகிடுச்சு.. தமிழ்ல கேட்கவே வேணாம்.. படு குப்பை.. 5 நாள் தான் ஈரோட்ல ஓடும்.. டி வி லபோட்டாக்கூட போயிடாதீங்க சாரி பார்த்துடாதீங்க.. ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்

http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/function-photos/sri-rama-rajyam-audio-launch/sri-rama-rajyam-movie-audio-launch-86.jpg