Showing posts with label RAJIVGANTHI. Show all posts
Showing posts with label RAJIVGANTHI. Show all posts

Sunday, September 30, 2012

ராஜீவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளன் தன்னிலை விளக்க கடிதம்

http://www.newsreporter.in/wp-content/uploads/2011/08/perarivalan.jpg 
பேரறிவாளன், ராஜிவ் கொலைக் குற்றவாளி
"அனைவருமே எதிர்த்து நின்றாலும்

சரியானவை சரியானவையே!

அனைவருமே ஆதரித்து நின்றாலும்

பிழையானவை பிழையானவையே'' 

உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்த சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.




அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்துகொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என கருத்தூட்டி வளர்த்த தாயின் தவப்புதல்வன் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ்காந்தி கொலை வழக்கின் தூக்குத்தண்டனைக் கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.



20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போல் சாதாரண மனிதனாக வீதிகளில் அலைந்துகொண்டிருந்த மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக்கூட அல்ல, ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.



உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ்காந்தியை மட்டுமல்ல எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதி பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்திரிக்க ஆதிக்க சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள்கொடி உறவாம் ஈழத்தழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.



மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்து 2005ம் ஆண்டு ஓய்வுபெற்ற நடுவண் புலனாய்வுத்துறையின் துணைக்காவல் கண்காணிப்பாளர் (ஞிஷிறி/சிஙிமி) கே. ரகோத்தமன்.



ராஜிவ்கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு 'தடா' சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993ம் ஆண்டு நடந்த அபயா கொலையினை 'தற்கொலை'  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.




20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்துவருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவிலும் சரி இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டுவரப்பட்ட தடா எனும் கொடூர சட்டத்தை துணைகொண்டு ஒரு பெருங்கதை என்போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ்காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவிற்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு 'மாமூல்' தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதியென அறிவித்து 'தடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.




சாதாரண பெட்டிக்கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான 'ஐ' வோல்ட் பேட்டரி செல் இரண்டு வாங்கி தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில் அரண்மனைக் கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்துகிடக்கிறேன்.



எனது வழக்கில் மூடிமறைக்கப்பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் "தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்" என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு இதுவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழியில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிகத் தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.




உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர் எனது குற்றமற்ற தன்மையை புரிந்துகொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.



எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ்காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல, அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ்காந்தியின் உயிர்ப்பலிக்கு ஈடாக அக்குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனிதநேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.




அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளை திருப்புங்கள். "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்" என்ற முன்னோர் வாக்கு உண்மையெனில் என் தரப்பு உண்மைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில் அப்போது எனது விடுதலைக்காக உங்கள் வலிமையான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக்குமுறலை உலகம் புரிந்துகொண்டது என வரலாறு குறிக்கட்டும். நீதி வெல்லட்டும். 


நன்றி - த சண்டே இந்தியன்


http://www.news24online.com/images/NewsImage/Rajiv-Gandhi-291x21817456.jpg

Monday, July 09, 2012

குப்பி -ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி நிமிடங்கள் -சினிமா விமர்சனம்

http://stat.homeshop18.com/homeshop18/images/product/radical/05Sep11-Mov-1240.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையமா வெச்சு ஆர் கே செல்வமணி எடுத்த  குற்றப்பத்திரிக்கை 14 வருடங்கள் தடை செய்யப்பட்டு பின் வந்தும் வெற்றி பெறாத நிலையில் அந்த கொலை வழக்கில் தேடப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் கடைசி 21 நாட்கள் பற்றிய 2 மணி நேர படத்தை இப்போதான் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது.. 2007இல் ரிலீஸ் ஆன இந்தப்படம் செய் நேர்த்தி,நெறி ஆள்கை என பல விதத்தில் உலகப்படத்துக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கு.. டோண்ட் மிஸ் இட்.. 

21.5.1991 இந்தியாவுக்கு கறுப்பு தினம்.. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட நாள்.. அந்த கொலை பற்றிய விசாரணைல சிறப்பு புலனாய்வுக்குழு இயங்குது.. வழக்கில் தேடப்படும் முக்கியக்குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசன்,சுபா இருவரும் தங்கள் ஆட்களுடன் எங்கே பதுங்கி இருந்தாங்க. எவ்வளவு சிரமங்களை அனுபவிச்சாங்க.. ஒரு வாடகை வீட்டில் தங்கக்கூட முடியாம எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்பட்டாங்க.இதுதான் படத்தோட கதைக்கரு.. 


படத்தோட டைட்டிலா குப்பி என வைக்காம வாடகை வீட்டிற்கான தீவிரத்தேடல்னு வெச்சிருக்கலாம் போல.. அவ்வளவு நுணுக்கமா வாடகை வீட்டின் தேடல் பற்றி சொல்லி இருக்காங்க.. 

 ரங்க நாத் ஒரு வீடு புரோக்கர்.. அவர் 1985ல விடுதலைப்புலிகளுக்கான நிதி உதவி அளித்தவர்.. அவங்க மேல  பாசமும், பரிதாபமும் கொண்டவர்.. அவருக்கு ஒரு மனைவி.. பயந்த சுபாவம்.. அவரு சிவராசன் & கோவுக்கு தன் வீட்டில் அடைக்கலம் அளிக்கிறார்,.. இது அவர் சம்சாரத்துக்கு பிடிக்கலை.. அவங்களை சீக்கிரம் அனுப்பிட துடிக்கிறார்.. 

 சிவராசன் இதையே துருப்புச்சீட்டா வெச்சுக்கிட்டு என் ஆளுங்களுக்கு ஒரு வீடு பிடிச்சுக்கொடுத்துட்டா நாங்க இங்கே இருந்து கிளம்பிடுவோம்னு சொல்றான்,.. உடனே ரங்கநாத் அதே போல அலைஞ்சு வீடு பிடிச்சு தர்றான்.. ஆனால் அவங்க அங்கே குடி போகலை. அவங்க ஆட்கள் கொஞ்சம் பேர் தான் அந்த வீட்டுக்கு குடி போறாங்க..


http://www.hindu.com/fr/2007/04/13/images/2007041300200201.jpg


சிவராசனின் நினைப்பு என்னான்னா ஃபேமிலியோட இருக்கற இந்த வீட்லயே குடி இருந்துட்டா  யாருக்கும் டவுட் வராது.. தனியா குடி போனா யாராவது கேள்வி கேப்பாங்க.. இதான் அவன் எண்ணம்.. ஆனா ரங்க நாத்தின் மனைவி அவங்களை துரத்துறதுல குறியா இருக்கா,.

 எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பங்களா டைப் வீட்ல சிவராசன் -சுபா குடி போறாங்க.. போலீஸ்க்கு இந்த தகவல் எப்படியோ தெரிஞ்சுடுது.. அந்த பங்களாவை ரவுண்ட் அப் பண்ணிடுது.. அப்போ சிவராசன் நடவடிக்கை என்ன? என்ன நடந்தது? என்பதை நேரடி ரிப்போர்ட்டை படிக்கற மாதிரி டீட்டெயிலா படமா எடுத்திருக்கார் டைரக்டர்.. 


படத்தோட முதல் ஹீரோ திரைக்கதை , காட்சி அமைப்பு தான்..  சினிமா பார்க்கற உணர்வே இல்லை.. என்னமோ நேர்ல அந்த சம்பவம் நம் கண் முன் நடக்குதுங்கற மாதிரி பிரமை.. ஹாட்ஸ் ஆஃப் டைரக்டர்.. 


 2 வது ஹீரோ ஒற்றைக்கண் சிவராசன்.. இவர் டி வி சீரியலில் நடிச்சவர்னு நினைக்கறேன்.. நல்ல நடிப்பு. படம் பூரா ஒரு கண்ணை மட்டும் இவர் மூடி நடிச்சது அவன் இவன்ல விஷால் மாறுகண்ணாளரா நடிக்க சிரமப்பட்டதுக்கு எந்த விதத்திலும் குறை இல்லாத அளவு சிரமப்பட்டு நடிச்சிருக்காரு.. வெல்டன்.. அவர் பாடி லேங்குவேஜ் அபாரம்.. எதாவது சத்தம் கேட்டா அவர் ஒரு நாயைப்போல, பூனையைப்போல உஷார் ஆகி மற்றவரை வழி நடத்துவது அபாரம்.. 


அடுத்து ரங்கநாத்தின் மனைவியாக வருபவர்.. இவர் நடிகை தாரா .. இங்கேயும் ஒரு கங்கை என்ற பட நாயகி ( சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்). படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. சராசரி மனைவிக்குள்ள பயம், துடிப்பு, ஆத்திரம் என கலந்து கட்டி, உணர்வுகளை முகத்தில் கொட்டி நடித்திருக்கிறார்.


வீடு புரோக்கராக வரும் இவர் நடிப்பு யதார்த்தம்.சிவரசனிடம் மாஸ்டர் மாஸ்டர் என பம்மும்போதும் சரி, மனைவியின் மிரட்டலுக்கு அடி பணியும் போதும் சரி சபாஷ் போட வைக்கும் நடிப்பு..

 உண்மைச்சம்பவத்தில் இந்த ரங்க நாத் கேரக்டரின் நெருங்கிய உறவினர் தான் இந்தப்படத்தின் இயக்குநராம்.. அதனால் தானோ என்னவோ படத்தின் திரைக்கதை பக்காவாக உண்மைசம்பவத்தை அப்படியே கண் முன் நிறுத்துவதாக இருக்கு.. 

 சுபாவாக மாளவிகா .  குறை சொல்ல முடியாத நடிப்பு.. சிற்சில இடங்களில் செயற்கை தட்டுகிறது.. என்னை கேட்டா இந்த கேரக்டருக்கு உண்மையான இலங்கை  அகதிப்பெண்ணை தேடி பிடித்து நடிக்க வைத்திருக்கலாம்./. 

 போலீஸ் ஆஃபீசர்ஸ், சி பி ஐ ஆஃபீசர் அனைவரின் நடிப்பும் ஓக்கே.. நாசர் கூட 2 சீன் ஸ் வர்றார்.. 


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_15.jpg



மனதில் நின்ற வசனங்களில் நினைவில் நின்றவை





1. அரசாங்கத்துல வேலை செய்யறீங்க, அரசாங்க சம்பளம் வாங்கறீங்க, ஆனா அரசாங்கத்தோட கண்ல மண்ணைத்தூவறீங்க.. 


2. சுபா - உங்களை அக்கான்னு கூப்பிடலாமா?

 ஏன்? உன் அக்கா என்ன ஆனா?


 அவளை கொன்னுட்டாங்க.. என் கண் எதிரே... 



3. பதவில இல்லைன்னாலும் எனக்கு 3 லிங்க் இருக்கு 1. பொலிட்டிகல் லிங்க், 2. போலீஸ் லிங்க், 3. இண்டெலிஜெண்ஸ் ஆஃபீஸ் லிங்க்..


4. நாம ஏதாவது சேஃபான இடத்துக்கு போயிடலாமே?

 இந்த பூமில பாதுகாப்பான இடமே எங்கேயும் இல்லை. 



5. போலீஸ் - வண்டியை ஏன் விட்டுட்டு வந்துட்டீங்க. வீதில அநாதையா நிக்குது. டெரரிஸ்ட் யாராவது எடுத்து யூஸ் பண்ணுனா என்ன செய்வீங்க? என்னசார்? கதவைதட்டுனதும் கதவை டக்னு திறந்தீங்க, ஆனா வாயைத்திறக்க மாட்டேங்கறீங்க?


6.  குட் நைட்


 மிட் நைட்ல என்ன குட் நைட் வேண்டிக்கிடக்கு?


7. யார் இவங்க? புதுசா இருக்காங்க?


 இவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்.. அவர் என் வீட்டுக்காரருக்கு வேண்டியவர்னு சொன்னேனே அவரோட உறவினர். ... அவரோட உறவினர்க்கு இவர் உறவினர்.. 



8. இந்த எலி அடிக்கடி கீச் கீச்னு கத்தி எனக்கு தொந்தரவு தருது.. இதைக்கொன்னுடவா?


 வேணாம்.. அது இருக்கறதால தான் நீ அலர்ட்டா இருக்கே..


9. இது என்ன தெரியுமா? சயனைடு.. இந்த குப்பியை ஒரு கடி கடிச்சா போதும். தொடர்ந்து 7 பிறப்புக்கும் பர்த் சர்ட்டிஃபிகேட்  வாங்க வேண்டியதிருக்காது. 



10. உங்களுக்கு வாழ ஆசை இல்லையா?

எண்டைக்கு எங்கட நாடும் மக்களும் சுகமா இருக்கிறனமோ அண்டைக்குத்தான் ஓய்வு, வாழ்வு எல்லாம்


11.   நான் அமரனா இருக்கனும், அதுதான் என்  கடைசி ஆசை



12.  சிவராசன் எங்கே இருக்கான்னு எனக்குத்தெரியும்.. 10 லட்சமும் எனக்குத்தான்.. 


 டீக்குடிச்சுட்டு காசை வெச்சுட்டு கிளம்பு.. உனக்கு எல்லாம் அந்த வல்லமை பத்தாது.. 


13. டெல்லிக்கு ஐ பி எஸ் ட்ரெயினிங்க் போனப்ப  என்னையே செக் பண்ணுனாங்க.. செக்கிங்க் என்பது அவமானப்படுத்தும் செயல் அல்ல.. 


14. வெளில போன பிசாசு புதுப்புது பேய்களோட உள்ளே வந்த மாதிரி இவனுங்க என்ன புது புது ஆள்ங்களோட வந்துட்டே இருக்காங்க?


15. சுபா -வீட்டுக்குள்ளே வாழை மர நிழல்  விழுந்தா எங்களை மாதிரி சோல்ஜர்ஸ்க்கு நல்ல சகுனம் இல்லை ( வீட்டுக்குள்ள வாழமர நிழல் வளர்ந்தா எங்கள மாதிரி ராணுவக்காரங்களுக்கு சகுனம் சரியில்ல)


16. எங்க நாட்டுல வந்து எங்க பி எம்மை கொன்னது தப்புதானே?


 ஆமா, எங்க மேல மக்கள் வெச்சிருந்த மரியாதை, சிம்ப்பதி எல்லாம் போச்சு..


17. நாங்க இந்த மண்ணில் வந்து மீண்டும் பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம், கண்ணீர் சிந்தலாமா? ( நாங்க திரும்பவும் இந்த மண்ணுல வந்து பிறப்போம்.. வீரர்கள் ரத்தம் சிந்தலாம்.. கண்ணீர் வடிக்கக்கலாமோ?)


18. முதல் தடவையா நம்ம வீடு நம்மளுது இல்லையோன்னு தோணுது.. அவங்க போன பின்பும் அவங்க நிழல் நம்ம கூடவே இருக்கறது மாதிரி தோணுது.. இங்கேயே சுத்திட்டு இருக்கற மாதிரி தோணுது.. ஏன்னா அவங்க வீட்டை விட்டுத்தான் போனாங்க, ஊரை விட்டுப்போகலையே?


சரி, அதனால நமக்கு என்ன இழப்பு?


 நிம்மதி, சந்தோஷம்..  எல்லாம் இழந்தோமே?


19. உண்மையான நண்பன் நீ தான், அடுத்த பிறப்பில் நீ எங்களுடன், எங்க நாட்டில் பிறக்கப்போகிறாய்(என்ட உண்மையான நண்பன் நீதான்.. அடுத்த பிறவில நீ எங்கட நாட்டில தான் பிறக்கப்போறாய்..)


20. உயிரோட அவங்களை பிடிக்கனும், போலீஸோட பவர் என்ன?ன்னு அவங்களுக்கு நாம காட்டனும்


21. சரண்டர் ஆனா தூக்கிலே தானே போடுவாங்க, அதுக்கு குப்பி சாப்பிட்டு மரணிக்கலாம்


22. என்னை நீ சரண்டர் ஆகச்சொல்றியா? உன் முதுகை காட்டாம அப்படியே போய்ட்டா நீ உயிர் தப்பிக்கலாம்


23. நம்ம கிட்டே இருக்கற ஒரே ஆயுதம் சயனைடு தான்.. நம்ம மரணம் சரித்திரத்தில் இடம் பெறனும்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjogl7ebFTOGz7WeKB_yy11C0Hx90-5MtFPTx13rbTYNk4OSeuSfp7cxK7xuswkqzvBIjEwwljqE1Y0SMrvi3Or9KjT-OqbOeYJxgPny6nrovyDI8-1mZD_BCwgztvJbixdUs_C79Us7ovM/s400/kuppi.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. வாடகைக்கு வீடு பிடிச்சு கொடுக்கும் புரோக்கர் ஒரு பெரிய மனுஷன் பேரை ஒரு சீட்ல எழுதி தர்றார்.. அதை விடுதலைப்புலிகள் சர்ட் பாக்கெட்ல வெச்சுக்கறாங்க.. அது ஒரு முக்கியமான தடயமா போலீஸ் கைல சிக்குது.. அவ்வளவு  அசால்ட்டாவா ஆதாரத்தை வெச்சுக்குவாங்க.. படிச்சுட்டு அழிச்சுட மாட்டாங்களா?


2.  வீடு பார்ப்பது, குடி போறது எல்லாம் ஓக்கே.. அவங்களூக்கு பணம் எப்படி வருது? அதை பற்றி காட்டவே இல்லையே?


3.  ஒரு சீன்ல அதாவது க்ளைமாக்ஸ் சீன்ல சிவராசன் பங்களாவை   போலீஸ் ரவுண்ட் அப் பண்ணினதை பார்த்து பொது மக்கள் கூட்டம் கூடுவது போல் சீன்.. அப்போ ஒரு வசனம்.. கூட்டத்தை முதல்ல விரட்டுங்க.. உடனே 12 பேர் உள்ள கூட்டத்தை காட்டறாங்க.. சிரிப்பா இருக்கு.. அந்த சீன்ல அட்லீஸ்ட் 100 பேரையாவது காட்டி இருக்க வேணாமா?


4. ரவுண்ட் அப் பண்ணுன போலீஸ் மயக்க மருந்து , கண்ணீர்ப்புகை இதை எல்லாம் யூஸ் பண்ணவே இல்லையே? அவங்க கிட்டே பணயக்கைதி யாரும் இல்லை.. அப்புறம் என்ன தயக்கம்?உயிரோட பிடிக்க ஆசைப்படறவங்க மாஸ்க் அணிஞ்சு மயக்க மருந்தை அந்த வீட்டில் விட்டிருக்கலாமே?

5. சிவராசன் ஜோக் அடிச்சுக்கிட்டு அங்கங்கே காமெடி பண்ணீட்டு இருக்கற மாதிரி சீன்கள் நிறைய வெச்சிருக்காங்க.. உண்மையில் அவன் சீரியஸ் டைப் என்று படித்த மாதிரி ஞாபகம்./.


6. சுபாவாக வரும் கேரக்டர் ஒரு  ரிசர்வ் டைப் என்று படிச்சிருக்கேன். ஆனா படத்துல தாரா கிட்டே அவங்க தொண தொணன்னு பேசிட்டு இருக்காங்க.. அந்த அக்கா செண்ட்டிமெண்ட் எடுபடலை..


7. அடிக்கடி வீட்டுக்குள் சூரியனின் கிரணங்கள் படுவது போல் செயற்கையான மஞ்சள் லைட்டை உபயோகப்படுத்தி இருக்க வேணாம்././ 


8. ஏகப்பட்ட பேருக்கு வீடு பிடிச்சு தர்றாரே சிவராசன்.. அவங்க எல்லாம் விடுதலைப்புலிகள் போல தோணலை.. அகதிகள் மாதிரியும் காட்டலை.. இன்னும் தெளிவு வேணும்..

9.  இலங்கைத்தமிழ் சரியா பதிவு செய்யப்படலை.. இங்கே இருக்கற ஆள்ங்க பேசற தமிழ் போலவே இருக்கு,..


http://mimg.sulekha.com/tamil/kuppi/stills/kupppii_10.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் ( ramesh)

1. ரங்கநாத்தாக வரும் ஜெகன் நல்லா நடிச்சிருக்கார்.. அவரது பாத்திர படைப்பு கன கச்சிதம்.. அதே போல் சிவராசன்.. பாராட்ட வைக்கும் நடிப்பு தாராவின் பண் பட்ட நடிப்பு


2. படத்தில் தொய்வைத்தரும் சீன்கள் என எதுவுமே இல்லை.. செம விறு விறுப்பு.


3. மொத்த படத்திலும் ஒரு சீனில் கூட ராஜீவ் காந்தி, விடுதலைப்புலி , இலங்கை போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏதும் வராமல் பார்த்துக்கொண்டது.


4. இயக்குநரின் நோக்கம் விடுதலைப்புலிக்கு ஆதரவாகவோ,  போலீஸ்க்கு ஆதரவாகவோ இல்லாமல் என்ன நடந்ததோ அதை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்தும் திரைக்கதை வடிவமைப்பு


இந்தப்படம் ரிலீஸ் ஆனப்போ ஈரோடு பாரதி தியேட்டரில் ஓடுச்சு.. ஆனா அப்போ பார்க்கலை.. நேற்றுத்தான் பார்த்தேன்.. டி வி டியில்


http://tamil.galatta.com/entertainment/wallpaper/tamil/movies/Kuppi/bigimage/12_Kuppi2.jpg




சி.பி கமெண்ட் -  பரபரப்பான  செய்திகளை ஆர்வமாகப்பார்ப்பவர்கள், விறு விறுப்பான படம் பார்க்க ஆசைப்படுபவர்கள் பார்க்கலாம்.. பெண்களும் பார்க்கும்படி வன்முறைக்காட்சிகள், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாம தான் இருக்கு.. மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் பார்ப்பதை தவிர்க்கவும்

நன்றி - ,,தாமரைக்குட்டி @Thamaraikkutty ( இலங்கைத்தமிழ் மொழி பெயர்ப்புக்கு )